கார்பமஸெப்பீன்

Carbamazepine [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். கார்பமஸெப்பீன் மருந்து என்ன செய்கிறது

உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். கார்பமஸெப்பீன் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

கார்பமஸெப்பீன் மருந்து என்பது குறிப்பிட்ட சில வகையான வலிப்புகளைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இது வேறு நிலைமைகளுக்கும் உபயோகிக்கப்படலாம். கார்பமஸெப்பீன் மருந்து, டெக்ரெட்டோல் என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். கார்பமஸெப்பீன் மருந்து திரவம், மெல்லும் மாத்திரைகள், வழக்கமான மாத்திரைகள், மற்றும் நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகள் போன்ற அநேக வடிவங்களில் கிடைக்கும்.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு கார்பமஸெப்பீன் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு ஒழுங்காக, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்ட சரியாக கார்பமஸெப்பீன் மருந்தைக் கொடுக்கவும். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் மருந்தைக் கொடுப்பதன் மூலம் வேளைமருந்தைத் தவறவிடாதிருக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, இந்த மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக கார்பமஸெப்பீன் மருந்தை உணவுடன் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக் கார்பமஸெப்பீன் மருந்தை திரவ வடிவில் உட்கொள்வதாக இருந்தால் , மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, அல்லது பீச்சாங்குழாயினால்(ஸ்ரிஞ்) கொடுக்கவும். ஒவ்வொரு வேளைமருந்து கொடுப்பதற்கு முன்னரும் போத்தலை நன்கு குலுக்குவதில் நிச்சயமாக இருக்கவும்.
  • உங்கள் பிள்ளை நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகள் உட்கொள்வதாக இருந்தால், கார்பமஸெப்பீன் மருந்து முழுமையாக விழுங்கப்பட வேண்டும். நசுக்கப்படவோ அல்லது மெல்லப்படவோ கூடாது. நீண்ட காலம் செயற்படும் மாத்திரைகள் பாதியாக வெட்டப்படலாம்.

எனது பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை ஒரு வேளைமருந்தைத் தவற விட்டால்:

  • முடிந்தளவு விரைவாகத் தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
  • அடுத்த வேளைமருந்தை வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு சமயத்தில் ஒரு வேளைமருந்தை மாத்திரம் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை சிகிச்சையின் தொடக்கத்தில் பின்வரும் பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். சிறிது காலத்தில் இந்தப் பக்கவிளைவுகள் குறையலாம் அல்லது மறைந்து விடலாம். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் தொடர்ந்திருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும்:

  • மயக்க உணர்வு, தலை கிறுகிறுப்பு
  • சோர்வு
  • வயிற்றுக் குழப்பம், வாந்தி
  • ஒழுங்கின்மை
  • சிறுநீர் கழிப்பதில் அதிகரிப்பு அல்லது குறைவுபடுதல்
  • வாய் உலர்தல
  • தண்ணீர் போல மலம் கழித்தல் (வயிற்றுப்போக்கு)
  • பசியின்மை
  • மலம் கழிப்பதில் சிரமம் (மலச்சிக்கல்)

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

  • கறுப்பு நிற, தார் போன்ற மலம்
  • அடர் நிற சிறுநீர்
  • வழக்கத்துக்கு மாறான இரத்தக் கசிவு அல்லது நசுக்குக் காயம்
  • மங்கிய கண் பார்வை
  • தோல் அரிப்பு, படை
  • இருமல்
  • விபரிக்கமுடியாத தொண்டைவலி
  • மென்மையற்ற குரல்
  • சுரப்பிகளில் வீக்கம் அல்லது வலி
  • நடத்தையில் மாற்றம்
  • வழக்கத்துக்கு மாறான களைப்பு அல்லது பெலவீனம்
  • மஞ்சள் நிறக் கண்கள் அல்லது தோல்
  • எலும்பு அல்லது மூட்டு வலி

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

கார்பமஸெப்பீன் மருந்து உங்கள் பிள்ளையில் சூரிய எரிவை (சன்பெர்ன்) ஏற்படுத்தலாம். வெளியே போகும்போது, உங்கள் பிள்ளையைத் துணி மற்றும் ஒரு தொப்பியால் மூடவும் அல்லது சன்ஸ்கிறீனை அணியவும். சூரியனின் UVA மற்றும் UVB கதிர்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிக்கும், குறைந்த பட்சம் 15 SPF உள்ள ஒரு சன்ஸ்கிறீனை உபயோகிக்கவும். சரியான சன்ஸ்கிறீனைத் தெரிவு செய்வதற்கு உங்கள் மருந்தாளரிடம் உதவி கேட்கவும்.

கார்பமஸெப்பீன் மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்கம், மந்த நிலை, அல்லது வழக்கத்துக்கு மாறான விழிப்புணர்வின்மை என்பனவற்றை ஏற்படுத்தலாம். விசேஷமாக சிகிச்சையின் தொடக்கத்தில் அவ்வாறிருக்கலாம். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை அவன(ள)து ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.

இந்த மருந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைப் பாதிக்கலாம். உங்கள் பிள்ளைக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்தம் அல்லது சிறுநீரில் சக்கரையின் அளவுப் பரிசோதனையில் ஏதாவது மாற்றத்தை நீங்கள் அவதானித்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

மருத்துவமனையில் அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா மருத்துவமனைச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் மருத்துவர், உங்கள் பிள்ளையின் கார்பமஸெப்பீன் மருந்துக்கான பிரதிபலிப்பைப் பரிசோதிக்கமுடியும்.

பல் அறுவைச் சிகிச்சை அல்லது ஒரு அவசர நிலைச் சிகிச்சை உட்பட, உங்கள் பிள்ளைக்கு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக, உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடன் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள அல்லது மருந்துக் குறிப்பில்லாத) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும். உங்கள் பிள்ளை கார்பமஸெப்பீன் மருந்தை உட்கொள்கிறான் என்பதை மருத்துவர் அல்லது மருந்தாளர் தெரிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். அதன் மூலம் சாத்தியமாகக்கூடிய மருந்துகளின் இடைத்தாக்குதல்கள் தவிர்க்கப்படலாம்.

இந்த மருந்தை இறுக்கமாக மூடப்பட்ட கொள்கலனில் வைத்து உலர்வான இடத்தில் வைக்கவும். வெப்பமும் ஈரலிப்பும் மருந்தைப் பழுதடையச் செய்து அதன் பயனைக் குறைத்துவிடும். நீங்கள் உபயோகிக்காத கார்பமஸெப்பீன் மருந்துகளை எறிந்துவிடவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது கார்பமஸெப்பீன் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. கார்பமஸெப்பீன் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: جمادى الأولى 22 1429