Corflo PEG குழாய்

G tubes: Corflo PEG tube [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

Corflo PEG குழாய் என்பது ஒரு வகை உணவூட்டல் குழாயாகும். உங்கள் குழந்தையின் Corflo PEG குழாயை எவ்வாறு பராமரிப்பது மற்றும் தற்செயலாக அது வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்பதனைக் கண்டறியவும்.

முக்கிய குறிப்புகள்

  • Corflo PEG குழாயானது திரவ ஊட்டச்சத்து, மருந்து, திரவங்கள் அல்லது உணவுக் கலவையை நேரடியாக வயிற்றுக்குள் வழங்குகின்றது.
  • இக்குழாய் ஒரு நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியலாளரால் வைக்கப்படும். குழாய் செருகும் நடைமுறைக்கு முன்னர் உங்கள் பிள்ளைக்கு பொது மயக்க மருந்து வழங்கப்படும்.
  • உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயின் முடிவில் இணைக்கப்பட்டுள்ள Corlock Corport Y-அடாப்டர், குழாய் மூலம் உணவூட்டல், திரவங்கள், மருந்து மற்றும் உணவுக்கலவையை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான அணுகலை அனுமதிக்கிறது.
  • தேவைப்பட்டால் அதனை மாற்றலாம்.
  • உங்கள் குழந்தையின் குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும், உங்கள் குழந்தையின் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) என்பவை திரவ ஊட்டச்சத்து, மருந்துகள் மற்றும் பிற திரவங்களை நேரடியாக வயிற்றுக்குள் வழங்கும் சாதனங்கள் ஆகும். G குழாய்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் (வயிறு) ஸ்டோமா எனப்படும் ஒரு அறுவைச் சிகிச்சைத் துளை மூலம் வைக்கப்படுகின்றன.

ஒரு Corflo PEG குழாய் என்பது ஒரு வகை G குழாயாகும்.

Corflo PEG குழாயை உட்செலுத்தல்

Elbow சரிசெய்தல் சாதனம்
T-bar/crossbar சரிசெய்தல் சாதனம்

பட வழிகாட்டலைப் பயன்படுத்தி ஒரு நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியலாளரால் Corflo PEG குழாய் வைக்கப்படுகிறது. வயிற்றின் உட்புறத்தில் ஒரு வட்டமான மேடு உள்ளது, இது குழாய் வெளியே இழுக்கப்படுவதைத் தவிர்க்க உதவுகின்றது.

வயிற்றின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு சரிசெய்தல் (fixation) சாதனம் குழாய் வயிற்றுக்குள் செல்வதைத் தடுக்க உதவுகின்றது.

சரிசெய்யும் சாதனம் T-bar/crossbar அல்லது white elbow fixation ஆகும்.

Corflo PEG குழாயைப் பராமரித்தல்

ஒரு Corflo PEG குழாய் புகுத்தப்பட்ட பிறகு, உங்கள் குழந்தையின் ஸ்டோமா, உலர்வதற்காகக் காற்றுப் படுமாறு திறந்து வைக்கப்படும். காயக்கட்டுப் போடவேண்டிய தேவையில்லை. சில வேளைகளில், குழாய் வைத்த நவீன தொழில்நுட்பக் கதிரியக்கவியலாளர், அவசியம் என்று நினைத்தால், அந்த இடத்தில் ஒரு சிறிய சல்லடைத்துணி வலையைப் (gauze) பயன்படுத்தக் கூடும். கசிவு அல்லது வெளிப்போக்கு இல்லை என்றால், சல்லடைத்துணி வலையை அகற்றி விடலாம்.

உங்கள் குழந்தையின் Corflo PEG குழாயைப் பராமரிக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • குழாய் வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, சோப்பு மற்றும் நீரால் ஸ்டோமாவைத் தினமும் கழுவவும்.
  • குழாய் வைக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்துக்கு உங்கள் பிள்ளை குளிக்கவோ நீந்தவோ கூடாது.
  • குழாய் வயிற்றில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒட்டுநாடாவை உபயோகிக்க நீங்கள் விரும்பலாம், எனினும் இது தேவையற்றது.
  • குழாய் வைக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு, T-bar/crossbar அல்லது elbow fixation சாதனத்தைச் சரிசெய்ய வேண்டாம். cross bar அல்லது elbow fixation சாதனத்தின் இடத்தைப் பற்றி உங்களுக்குக் கரிசனைகள் இருந்தால், G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் (SickKids இல், இவர் G குழாய் வளத் தாதி ஆவார்). உதாரணத்துக்கு, உங்கள் குழந்தையின் வயிற்றுக்கு எதிராக மிகவும் தளர்வாக அல்லது மிகவும் இறுக்கமாக அது அமைந்திருப்பதாகத் தோன்றலாம்.
  • இரண்டு வாரங்களுக்குப் பின்னர், T-bar/crossbar மிகவும் இறுக்கமாக அல்லது மிகவும் தளர்வானதாக இருந்தால் அதை நீங்கள் வீட்டிலேயே சரிசெய்யலாம் (கீழே உள்ள வழிமுறைகளைப் பார்க்கவும்). உங்கள் பிள்ளை தொடர்ந்தும் மருத்துவமனையில் இருந்தால், சாதனத்தைச் சரிசெய்ய ஒரு மருத்துவத் தாதியால் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் பிள்ளைக்கு white elbow fixation சாதனம் இருந்தால், இதை நீங்கள் வீட்டில் சரிசெய்ய முடியாது. உங்கள் குழந்தையின் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.
  • உங்கள் பிள்ளை, கடுமையான வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்காது நன்றாக இருப்பதாக உணர்ந்தால், அவர் தனது வழக்கமான நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
  • தொற்று,ஹைப்பர்கிரானுலேஷன் திசு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசு) மற்றும்கசிவு உள்ளிட்ட குழாய் அல்லது ஸ்டோமாவின் எதுவித பிரச்சினைகளுக்கும் G குழாய் நிபுணரை அழைக்கவும்.

T-bar/crossbar ஐச் சரிசெய்வது எப்படி

T-bar/crossbar உங்கள் பிள்ளையின் ஸ்டோமாவுக்கு அருகில் இருக்க வேண்டும், ஆனால் அது மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக்கூடாது. Corflo PEG குழாய் வைத்து இரண்டு வாரங்களுக்கும் கூடுதலான நாட்களாகியதன் பின்னர் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் T-bar/crossbar ஐச் சரிசெய்யலாம். T-bar/crossbar நன்கு பொருந்துவதனைச் சரிசெய்ய, வட்டத் துண்டினை T-bar/crossbar க்கு மேலாக மெதுவாகச் சரிக்கவும், அப்போது T-bar/crossbar சுயமாகவே குழாயை மேலாகவோ அல்லது கீழாகவோ அசைக்கும் உணவுப்பாதை மற்றும் ஸ்டோமாவிலிருந்து தற்செயலாக குழாய் வெளியே இழுக்கப்படக் கூடுமாகையால், குழாயைப் பிடித்து இழுக்க வேண்டாம்.

கவ்வியை (clamp) மாற்றுவது எப்படி

  • வயிற்றின் உள்ளடக்கங்கள் வெளியே வராமல் தடுப்பதற்குக் குழாயை இறுகப் பற்றிப் பிடிக்கவும்
  • Y-அடாப்டரிலிருந்து அதன் மேலிருக்கும் பிளாஸ்டிக் மூடியைத் திருகித் தளர்த்தவும்
  • Y- அடாப்டரைக் கழற்றவும்
  • பிளாஸ்டிக் மூடியைக் கழற்றவும்
  • கவ்வியைத் திறந்து அதனைக் கழற்றவும்
  • குழாயின் முனையைச் சுத்தம் செய்யவும்
  • புதிய கவ்வி ஒன்றைப் புதிதாகப் போடவும்
  • பிளாஸ்டிக் மூடியைப் புதிதாக மாற்றவும், பிளாஸ்டிக் மூடியின் குறுகிய முனை கவ்விக்கு மிக அருகாமையில் இருப்பதனை உறுதிசெய்து கொள்ளவும்
  • Y- அடாப்டரை மாற்றவும், அதனை மீண்டும் குழாயினுள் உட்செலுத்தவும்
  • இறுக்கமாக இருக்கும் வரை பிளாஸ்டிக் மூடியை அடாப்டரில் திருகிப் பூட்டவும்

Corlock Corport Y-அடாப்டர்

Corlock Corport Y-அடாப்டர்

Corflo PEG குழாய், Y- அடாப்டர் ஒன்றினைப் பயன்படுத்துகின்றது. Corlock Corport Y-அடாப்டர் ஆனது, குழாய் மூலம் உணவூட்டல், திரவங்கள், மருந்து மற்றும் உணவுக்கலவை ஆகியவற்றை உட்செலுத்துவதனை அணுகக்கூடிய விதத்தில் அனுமதிக்கின்றது. Y-அடாப்டர் உங்கள் குழந்தையின் உணவுக் குழாயின் முடிவிடத்தில் இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் தேவைப்பட்டால் (அதாவது உடைந்துவிட்டால்) அதை மாற்றலாம்.

உங்கள் குழந்தையின் Y-அடாப்டரை மாற்ற, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • வயிற்றின் உள்ளடக்கங்கள் வெளியே வராமல் தடுப்பதற்குக் குழாயை இறுகப் பற்றிப் பிடிக்கவும்
  • Y-அடாப்டரிலிருந்து அதன் மேலிருக்கும் பிளாஸ்டிக் மூடியைத் திருகித் தளர்த்தவும்
  • Y- அடாப்டரைக் கழற்றவும்
  • குழாயின் முனையைச் சுத்தம் செய்யவும்
  • Y- அடாப்டரை மாற்றவும், அதனை மீண்டும் குழாயினுள் உட்செலுத்தவும்
  • இறுக்கமாக இருக்கும் வரை பிளாஸ்டிக் மூடியை அடாப்டரில் திருகிப் பூட்டவும்

உங்கள் பிள்ளையின் Corflo PEG குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

இது மிகவும் சாத்தியமற்ற நிகழ்வு என்றாலும், உங்கள் பிள்ளையின் Corflo PEG குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்படக்கூடும். உங்கள் பிள்ளையின் G குழாய் தற்செயலாக முழுமையாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்று அறிய, தயவுசெய்து உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாய் வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

குழாய் ஓரளவு மட்டுமே வெளியே இழுக்கப்பட்டால், குழாயின் முடிவில் உள்ள மேடு உணவுப் பாதையில் சிக்கிக்கொள்ளக்கூடும். இது நடந்திருந்தால், பின்வருவனவற்றை நீங்கள் அவதானிக்கலாம்.

  • G குழாய்ப் பகுதியில் குறிப்பிடத்தக்களவு வலி
  • நீங்கள் குழாயை நகர்த்தும்போது காணக்கூடியதாக இருக்கும் ஒரு கடினமான பிளாஸ்டிக் வீக்கம் (மேடான பகுதி) அசையாமல் இருக்கும்.
  • உணவுப் பாதை அல்லது ஸ்டோமாவில் நீங்கள் ஒரு கடினமான வீக்கத்தை (மேடாக இருப்பதனை) உணர முடியும்
  • ஸ்டோமாவிலிருந்து திரவ உணவு கசிதல்

குழாய் ஓரளவு வெளியே இழுக்கப்பட்டுப் பிளாஸ்டிக் பகுதி சிக்கியிருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், உடனடியாக உங்கள் G குழாய் நிபுணரை அழைக்கவும். வார இறுதியில்/அலுவலக நேரங்களுக்குப் பிற்பாடு எனில், அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

Corflo PEG குழாயை மாற்றுதல்

வெளியேற்றப்பட்ட, உடைந்த அல்லது அடைபட்ட குழாயை மாற்றுவதற்கு, அல்லது அதை குறுகிய-முனையுள்ள குழாய்க்கு மாற்றிக்கொள்ள:

  • குழாயை மாற்றுவதற்கு அல்லது வேறு தயாரிப்பைப் பயன்படுத்துவதற்குரிய சந்திப்பை மேற்கொள்ள உங்கள் பிள்ளையின் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.
  • அடைபட்ட அல்லது உடைந்த Corflo PEG குழாயை அகற்றுவதற்கு அல்லது குறுகிய-முனையுள்ள குழாய்க்கு மாற்றிக்கொள்ளப் பொது மயக்க மருந்து அல்லது உணர்ச்சியற்ற நிலை தேவைப்படலாம்.
  • முதன்முதல் உங்கள் பிள்ளையின் Corflo PEG குழாய் உட்செலுத்தப்பட்ட திகதிக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னராக, அதனைக் குறுகிய-முனையுள்ள குழாய்க்கு மாற்றிக் கொள்ளலாம்.
Last updated: ذو القعدة 07 1440