குடலிறக்கம் (ஹெர்னியா)

Hernia [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

குடலிறக்கம் என்றால் என்ன?

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு. புடைப்பானது பொதுவாக அது இருக்கும் உடல்ப்பாகத்தின் பலவீனமான பகுதியினூடாகத் தள்ளுகிறது. மிகவும் பொதுவாக, குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும்.

பிள்ளைகளில் காணப்படும் இரண்டு மிகவும் பொதுவான குடலிறக்க வகைகள் பின்வருமாறு:

  • குடலின் ஒரு பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாகத் தொப்புளினூடாக தள்ளப்படும்போது தொப்புள் சார்ந்த குடலிறக்கம் ஏற்படும்.
  • குடலின் பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாக கவட்டினுள் அல்லது கவட்டைச் சுற்றி தள்ளும்போது அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் ஏற்படுகிறது. அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் 100 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

குடலிறக்க நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம் பெரும்பாலும் பிறந்த ஒரு சில வாரங்களில் காணப்படும். பெரும்பாலும் இது தொப்புள்க்கொடி விழுந்த பின்னர் சம்பவிக்கும். பொதுவாக, இது 2 வயதுக்கு முன்பாக சிகிச்சை செய்யப்படாமலே நிவாரணமாகிவிடும்.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • தொப்புளைச் சுற்றி ஒரு மென்மையான வீக்கம்
  • வீக்கம் நாளின் பிற்பகுதியில் தோன்றலாம்
  • உங்கள் பிள்ளை இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

தொப்பூழுக்குரிய குடலிறக்கம் குழந்தையின் அடிவயிற்றில் உள்ள தசைச் சுவர்த் துவாரத்தின் ஊடாக வெளித்தள்ளும் சிறுகுடல் பற்றிய விளக்கப்படம்
இது தொப்பூழைச் சூழவுள்ள வயிற்றுச் சுவரின் தசைகளில் ஏற்படும் ஒரு பிளவு ஆகும்.  குழந்தை அழும்போது அல்லது கடும்முயற்சி செய்யும்போது சிலவேளைகளில் குடலின் ஒரு சிறுபகுதி இந்தப் பிளவினூடாக வெளிப்பிதுங்கக்கூடும்.  

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • கவட்டுக்கு மேல் அல்லது விதைப்பைக்கு மேல் ஒரு மென்மையான வீக்கம்
  • வீக்கம் நாளின் பிற்பகுதியில் தோன்றலாம்
  • உங்கள் பிள்ளை இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்

குடலிறக்கத்துக்கான காரணங்கள்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறியளவான தசையைத்தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி. ஒரு குழந்தை அழுதால் அல்லது தனது வயிற்றைத் தள்ளினால், அழுத்தம் சில சமயங்களில் உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளினூடாகத் தள்ளும்.

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

இந்த வகையான குடலிறக்கம் பெரும்பாலும் ஆண்பிள்ளைகளுக்குச் சம்பவிக்கும். அடிவயிறு சார்ந்த கால்வாய் தான், விதை விதைப்பைக்குள் இறங்கும் பாதை. வழக்கமாக பிறந்த சிறிது காலத்திற்குள் இந்தக் கால்வாய் மூடப்பட்டுவிடும். அது முழுமையாக மூடப்படாவிட்டால், கவடு அல்லது விதைப்பைக்குள் குடலின் ஒரு பகுதி இறங்கக்கூடிய அளவுள்ள துவாரம் ஒன்றை விட்டுவிடும். இது தோலின் கீழ் ஒரு புடைப்பை உருவாக்கும். இது ஒரு அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் எனப்படும்.

சிக்கல்கள்

குடலின் ஒரு பகுதி அல்லது வேறொரு உறுப்பு அல்லது திசு இந்தத் துவாரத்தில் சிக்கிக்கொண்டால், அதனுடைய இரத்த விநியோகம் அடைக்கப்பட்டுவிடலாம். இது நசுங்கிய குடலிறக்கம் என அழைக்கப்படும். இது சம்பவிக்கும்போது, அந்தப் பகுதி நிறம் மாறுபட்டதாகவும் வலியுள்ளதாகவும் மாறும். உங்கள் பிள்ளை வாந்தியெடுக்கலாம். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும், அல்லது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனே செல்லவும்.

குடலிறக்கமுள்ள உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் குடலிறக்கத்தைப் பரிசோதிப்பார். உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

சிகிச்சைகள்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

பெரும்பாலான பிள்ளைகளுக்கு தொப்புள் சார்ந்த குடலிறக்கத்துக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. அது மிகவும் பெரிதாகவிருந்தால் அல்லது தானாகவே மறைந்துவிடாவிட்டால் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் அது ஒரு சிறிய அறுவைச் சிகிச்சையாக இருக்கும். அறுவைச் சிகிச்சையின்போது, குடல் திரும்பவும் அதனிடத்தில் வைக்கப்படும். அடிவயிற்றுச் சுவர்த் தசைகள் தைக்கப்படும். [ii] பெரும்பாலும், அறுவைச் சிகிச்சை 3 வயதுக்குப் பின்பு தான் செய்யப்படும். தொப்புள் சார்ந்த குடலிறக்கம் நசுங்கிப் போவது மிகவும் அரிதானது.

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

குடலிறக்கம் நசுங்கிப்போயிருக்கலாம் என்பதால் அடிவயிறு சார்ந்த குடலிறக்கமுள்ள பிள்ளைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். வழக்கமாக, அறுவைச்சிகிச்சை முன்கூட்டியே பதிவு செய்யப்படும். ஆயினும், குடலிறக்கம் அதிக வலியுள்ளதானால், உங்கள் பிள்ளைக்கு அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவைச் சிகிச்சையின்போது, சிறு குடல், அல்லது வேறு உறுப்பு அல்லது திசு, அதன் சரியான இடத்துக்குத் தள்ளி வைக்கப்படும். குடலிறக்கத்துக்குக் காரணமாக இருக்கும் துவாரம் அல்லது இடைவெளியை அறுவை மருத்துவர் சரி செய்வார். வேறொரு குடலிறக்கம் அல்லது பலவீனத்திற்காக, அறுவை மருத்துவர் கவட்டின் மறுபக்கத்தையும் பரிசோதிப்பார்.

பொதுவாக, உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நடைபெற்ற அன்றே வீடு திரும்பலாம். ஒரு சில நாட்களில் அவன் சுறுசுறுப்புள்ளவனாகிவிடுவான்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

நீங்கள் ஒரு மென்மையான புடைப்பை அவதானித்தால் அல்லது ஒரு குடலிறக்கம் இருப்பதாகச் சந்தேகித்தால், உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரிட ம் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

பின்வரும் நிலைமைகளின் போது, உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும், அல்லது தேவைப்பட்டால் 911ஐ அழைக்கவும்:

  • வீக்கத்தில் கடும் வலி
  • குடலிறக்கம் பெரிதாக மற்றும் கடினமாக இருக்கிறது
  • உங்கள் பிள்ளை வாந்தியெடுக்கிறான்
  • குடிலிறக்கம் சிவப்பு நிறமாக அல்லது நிறம்மாறியதாகத் தோன்றுகிறது

முக்கிய குறிப்புகள்

  • அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் 100 குழந்தைகளுள் 5 குழந்தைகளுக்கு ஏற்படும். அவை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யப்படும்.
  • தொப்புள் சார்ந்த குடலிறக்கம் தானாகவே பொருந்திக்கொள்ளும். அவற்றிற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது.
  • உங்கள் பிள்ளை வாந்தியெடுத்தால் அல்லது வீக்கத்தில் வலி அல்லது நிறமாற்றம் இருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடவும்.
  • சிகிச்சையளிப்பதற்கு ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதில், குடலைத் திரும்பவும் அதன் சரியான இடத்தில் வைத்து, அடிவயிற்றுச் சுவரில் தையல்கள் போடப்படும்.
​​​​
Last updated: ربيع الأول 19 1431