உங்களுடைய பிள்ளையின் கீமோத்தெரபிச் சிகிச்சையின் வேளைமருந்து, ஒரு குளிகையின் ஒரு பாகமாக இருந்தால் அல்லது குளிகையை முழுமையாக அவளால் விழுங்க முடியாதிருந்தால், பின்வரும் அறிவுரைகளைக் கவனமாக மீளாய்வு செய்யவும்:
கீமோத்தெரபி சிகிச்சைக்கான பின்வரும் குளிகைகள் போன்றவற்றிற்கு இந்த அறிவுரைகள் உபயோகிக்கப்படலாம்:
- மெர்கப்டோபூரைன் (6-எம்பி)
- மெத்தொட்ரெக்ஸேட் (எம்டிஎக்ஸ்)
- தியோகுவனைன்(6-டிஜி)
ஏதாவது கீமோத்தெரபி சிகிச்சை கொடுப்பதற்கு முன்பாக, வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் ஐத் தயவு செய்து பார்க்கவும்.
கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகளை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்னர்
- கையுறைகள், ஒரு நீளமான மேலாடை, ஒரு முகமூடி என்பனவற்றை அணிந்து கொள்ள வும்.
- அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாராக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.

கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகளை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுத்தல்
- குளிகைகளை நசுக்க வேண்டாம்.
- உங்களுடைய பிள்ளையின் சரியான வேளைமருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக க் குளிகையை நீங்கள் பாதியாக வெட்டவேண்டியிருக்கலாம். இதைச் செய்வதற்கு ஒரு குளிகை பிரிப்பானை உபயோகிக்கவும். குளிகைப் பிரிப்பானில் வைப்பதற்கும் வெட்டப்பட்ட துண்டை எடுப்பதற்கும் இடுக்கியை உபயோகிக்கவும். இந்தக் குளிகை பிரிப்பானையும் இடுக்கியையும் கீமோத்தெரபி சிகிச்சைக்காக மாத்திரம் உபயோகிக்கவும். வேறு மருந்துகளுக்காக இவற்றை உபயோகிக்கவேண்டாம்.

- குளிகைகளின் மீதியான துண்டுகளை மூல மருந்துப் போத்தலிலேயே திரும்பவும் வைத்துவிடவும். அல்லது கீமோத்தெரபிச் சிகிச்சை வீட்டில்: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்தூசி ஏற்றுதலும்என்பதில் அப்புறப்படுத்துதல் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளபடி தகுந்த முறையில் அப்புறப்படுத்தவும்.
- ஒவ்வொரு முறையும் உபயோகித்தபின்னர் குளிகை பிரிப்பானை சோப் கலந்த வெந்நீரினால் கழுவவும்.
உங்களுடைய பிள்ளையினால் குளிகையை விழுங்க முடியாவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:
காலியான 10மிலி வாய்வழி மருந்தூசிக் குழலில் குளிகையை தண்ணீர் சேர்த்துப் பின்வருமாறு கலக்கவும்:
- மருந்தூசிக் குழற் தண்டை அகற்றவும்
- வாய்வழி மருந்தூசிக் குழலினுள் தேவைப்படும் எண்ணிக்கைக் குளிகைகளை வைக்கவும்.
- தண்டைத் திரும்பவும் வைத்து 5 மிலி தொடக்கம் 7.5 மிலி வரையாக குழாய்நீரை (வெந்நீர் அல்ல) இழுத்தெடுக்கவும். வாய்வழி மருந்தூசியின் முனையை மூடி விடவும்.
- மருந்தூசியை முன்னும் பின்னுமாக மெதுவாக அசைக்கவும்.

- குளிகை உடைக்கப்பட்டவுடனேயே (2 தொடக்கம் 5 நிமிடங்கள்) வேளைமருந்து கொடுக்கப்படவேண்டும். வேளைமருந்தைத் தண்ணீருடன் மாத்திரம் கலக்கவும். பழரசம் அல்லது கோலா போன்ற வேறு எந்த பானங்களையும் உபயோகிக்க வேண்டாம்.
- கீமோத்தெரபிச் சிகிச்சைக் குளிகைகள் முற்றிலுமாகக் கரைந்து விடாது. சிறிய வெள்ளைத் துகள்கள் தண்ணீரில் மிதப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த நிலையில் மருந்துகளை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுப்பது சரியானதே.
- வேளைமருந்து கொடுக்கப்பட்ட பின்னர், அதே மருந்தூசியில் வேறு 5 மிலி குழாய் நீரை இழுத்தெடுக்கவும். மருந்தூசியில் மருந்து எதுவும் விடப்படவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக இதை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுக்கவும்.
- கீமோத்தெரபி என்பது புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகளின் ஒரு தொகுதி ஆகும். அவை குளிகை வடிவில் கிடைக்கும்.
- உங்களுடைய பிள்ளைக்கு குளிகைகள் கொடுப்பதற்கு முன்பாக கையுறைகள், ஒரு நீளமான மேலாடை, ஒர் முகமூடி என்பனவற்றை அணியவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
- குளிகைகளை உடைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு குளிகை பிரிப்பானையும் ஒரு இடுக்கியையும் உபயோகிக்கவும்.
- உங்களுடைய பிள்ளைக்கு குளிகை விழுங்குவதில் சிரமம் இருந்தால், ஒரு காலியான 10 மிலி மருந்தூசிக் குழலை உபயோகித்து அதனை தண்ணீரில் கலக்கலாம். கலவை தயாரிப்பதற்கு வேறு எந்தப் பானங்களையும் உபயோகிக்க வேண்டாம் .