பீடீயஸோல் (Pediazole)

Pediazole [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்காக பீடீயஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பீடீயஸோல் மருந்து என்ன செய்கிறது மற்றும் இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என இந்தத் தகவல் தாள் விபரிக்கிறது. உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள

உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்காக பீடீயஸோல்® என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பீடீயஸோல் மருந்து என்ன செய்கிறது மற்றும் இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என இந்தத் தகவல் தாள் விபரிக்கிறது. உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பனவற்றைப் பற்றியும் இது விபரிக்கிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

பீடீயஸோல் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளினால் ஏற்படும் குறிப்பிட்ட சில வகையான தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக அன்டிபையோடிக் மருந்துகள் உபயோகப்படுகின்றன.

பீடீயஸோல் மருந்து, எரித்ரோமைசின் மற்றும் சல்ஃபிஸொக்ஸசோல் ஆகிய 2 மருந்துகளால் உண்டாக்கப்பட்டது.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடும் காலம் வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, பீடீயஸோல் மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
  • ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில், உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்ட சரியான நேரத்தில் இந்த மருந்தைக் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.
  • உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை ஒரு முழு கிளாஸ் தண்ணீருடன் அல்லது வேறு திரவத்துடன் கொடுக்கவும்.
  • போத்தலை நன்கு குலுக்கியபின்னர் இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
  • மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாய் (ஸ்ரிஞ்) மூலம் இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தின் ஒரு வேளைமருந்தைத் தவறவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
  • அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
  • ஒரே சமயத்தில் ஒரு வேளைமருந்தை மாத்திரம் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தை உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பெரும்பாலும் அதற்காக உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளையின் உடல் பீடீயஸோல் மருந்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது இந்தப் பக்கவிளைவுகள் மறைந்துவிடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • மலம் தண்ணீர்போல கழிதல்
  • தலைவலிகள்
  • வயிற்றுக் குழப்பம் அல்லது வாந்தி
  • தலை கிறுகிறுப்பு

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • வயிற்றில் கடுமையான தசைப்பிடிப்பு அல்லது வலி
  • தோற்படை, தோல் அரிப்பு, அல்லது ஹைவ்ஸ் ( தோலில் மேடான, சிவந்த, அரிப்புள்ள பகுதி)
  • கொப்பளங்கள் அல்லது தோல் உரிதல்
  • மஞ்சள் நிறத் தோல் அல்லது கண்கள்
  • மாறாத தொண்டை வலி அல்லது தொண்டைக் கரகரப்பு
  • வீங்கிய முகம்
  • வாய் புண்கள்
  • ஒரு புதிய காய்ச்சல் அல்லது நிவாரணமடையாத ஒரு காய்ச்சல்
  • குளிர் நடுக்கம்
  • அசாதாரண இரத்தக் கசிவு அல்லது நசுக்குக் காயம்
  • அசாதாரண பலவீனம் அல்லது களைப்பு
  • உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை உணர்தல்
  • சிறுநீரில் இரத்தம் அல்லது கரு நிறமான சிறுநீர்
  • சுவாசித்தலில் சிரமம்

உங்கள் பிள்ளை 2 நாட்களுக்குள் நிவாரணமடையாவிட்டால், அல்லது உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமானாலும் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளைக்கு சல்ஃபா மருந்துகள் அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு ஏதாவது அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் கூட, அல்லது அவசரநிலை சிகிச்சைக்கு முன்னர், உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தை உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள், மருத்துவரின் கட்டளை(மருந்துக் குறிப்பு) இல்லாது வாங்கக்கூடிய மருந்துகளாக இருந்தாலும் கூட, அவற்றைக் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

பீடீயஸோல் மருந்து உங்கள் பிள்ளையின் தோலில் சூரிய எரிவை அதிகமாக ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளை வெளியே போகும்போது அவன(ள)து தோல் மற்றும் தலையைத் துணி மற்றும் ஒரு தொப்பியால் மூடிக்கொள்வதற்கு நிச்சயமாயிருக்கவும். உங்கள் பிள்ளை சன்ஸ்கிறீன் (சூரிய ஒளியிலிருந்து தோலைப் பாதுகாக்கும் ஒரு கிறீம்) கீறீமையும் உபயோகிக்கவேண்டும். UVA மற்றும் UVB என்றழைக்கப்படும், சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கும் எனச் சொல்லப்படும் சன்ஸ்கிறீன் கிறீமை உபயோகிக்கவும். சன்ஸ்கிறீனுக்கு, குறைந்தது 15 அளவு உள்ள SPF என்றழைக்கப்படும் ஒரு சூரிய பாதுகாப்புக் காரணி இருக்கவேண்டும். சரியான சன்ஸ்கிறீனைத் தெரிவு செய்ய உதவும்படி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

பீடீயஸோல் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது பீடீயஸோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. பீடீயஸோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: March 13 2010