செஃபிக்ஸீம் (Cefixime)

Cefixime [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை சிப்றொஃப்ளொக்ஸசின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். செஃபிக்ஸீம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

செஃபிக்ஸீம் என்பது ஒரு அன்டிபையோடிக் என்றழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு செஃபிக்ஸீம் மருந்து கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு செஃபிக்ஸீம் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிடுவது போல சரியாக, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, செஃபிக்ஸீம் மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
  • உங்கள் பிள்ளைக்கு செஃபிக்ஸீம் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கவும். செஃபிக்ஸீம் மருந்து உங்கள் பிள்ளையின் வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தினால், இந்த மருந்தை உணவுடன் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுப்பதற்கு முன்பு போத்தலை நன்கு குலுக்கவும்
  • உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், ஒவ்வொரு வேளைமருந்தையும் மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி, அல்லது பீச்சாங்குழாயினால்(ஸ்ரிஞ்) அளக்கவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் மருந்தில் ஒரு வேளைமருந்தைத் தவற விட்டால்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடன் முடிந்தளவு விரைவாகத் தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
  • அடுத்த வேளைமருந்தை வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு சமயத்தில் ஒரு வேளைமருந்தை மாத்திரம் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்ககூடும். பெரும்பாலும் அவற்றிற்காக உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிள்ளையின் உடல் சீஃபக்லோர் மருந்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது, இந்தப் பக்க விளைவுகள் மறைந்துவிடும்.

உங்கள் பிள்ளை செஃபிக்ஸீம் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் இருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • மலம் தண்ணீர் போல கழிதல் (வயிற்றுப்போக்கு)
  • வயிற்றில் இலேசான தசைப்பிடிப்பு
  • வயிற்றுக் குழப்பம், வாந்தி
  • வயிற்றில் அல்லது நாக்கில் புண்வலி
  • பெண்ணுறுப்பில் அரிப்பு அல்லது பெண்ணுறுப்பிலிருந்து திரவம் வடிதல்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • ​ஒரு புதிய காய்ச்சல் அல்லது நிவாரணமடையாத ஒரு காய்ச்சல்
  • வயிறு அல்லது வயிற்றைச் சுற்றித் தசைப் பிடிப்பு அல்லது கடுமையான வலி
  • இரத்தத்தைக் கொண்டிருக்கும் கடுமையான நீர் போன்ற வயிற்றுப்போக்கு
  • தோற்படை, தோலரிப்பு அல்லது ஹைவ்ஸ் ( தோலில் மேடான சிவப்பு நிற அரிப்புள்ள பகுதிகள்)
  • கொப்பளங்கள், தோலுரிதல்
  • சுவாசிப்பதில் கஷ்டங்கள்
  • மயக்க உணர்வு
  • வலிப்பு
  • முழங்கால்கள், தோள்பட்டைகள், அல்லது மொளிகள் போன்ற மூட்டுக்களில் வலி
  • மிகவும் குறைவாக சிறுநீர் கழித்தல்
  • பசியின்மை
  • மஞ்சள் நிறக் கண்கள் அல்லது தோல்
  • அசாதாரணமான களைப்பு அல்லது பலவீனம்

அத்துடன், உங்கள் பிள்ளை 2 நாட்களில் நிவாரணமடையாவிட்டால், அல்லது நிலைமை மோசமாகிக்கொண்டே போனால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளைக்கு செஃபிக்ஸீம் மருந்து அல்லது வேறு ஏதாவது மருந்துக்கு,எப்போதாவது அசாதாரணமான எதிர்விளைவுகள் இருந்திருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

செஃபிக்ஸீம் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவேண்டாம்.

நீங்கள் உபயோகிக்காத செஃபிக்ஸீம் மருந்துகளை எறிந்துவிடவும். காலாவதியான எந்த செஃபிக்ஸீம் மருந்தையும் எறிந்துவிடவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை எந்த மருந்தையாவது அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது செஃபிக்ஸீம் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. செஃபிக்ஸீம் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: abril 23 2008