கண் காயங்கள்: முதலுதவி

Eye injuries: First aid [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு கண் காயம் உங்களுடைய பிள்ளைக்கு வேதனையளிப்பதாக இருக்கலாம். இந்தத் தகவல்களினால், உங்களுடைய பிள்ளையின் கண் காயத்தைத் தகுந்த முறையில் பராமரித்து எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

கண் காயம் என்றால் என்ன?

கண் காயங்கள் பிள்ளைகளில் சர்வ சாதாரணமானது. சிறிய பொருட்கள் அல்லது திரவங்கள் உங்களுடைய பிள்ளையின் கண்ணுக்குட் சென்று சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். பெரும்பாலான நிலைமைகளில், காயப்பட்ட கண் சிவப்பு நிறமாகி, உறுத்தத் தொடங்கும்.

கண் காயங்களுக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

பொதுவாக, உங்களுடைய பிள்ளை கண்ணில் வலி அல்லது அசௌகரியம் இருப்பதாக முறையிடுவாள். அவளுடைய கண் சிவப்பு நிறமாகத் தோன்றலாம், அல்லது அவளுடைய கண்ணைத் திறப்பதில் பிரச்சினை இருக்கலாம். சிலவேளைகளில், சிறிய பொருட்கள் கண்மடலின் கீழாக நழுவலாம். ஆயினும், பெரும்பாலான நிலைமைகளில், உங்களுடைய பிள்ளையின் கண்ணில் அந்தப் பொருளை நீங்கள் பார்க்கமுடியும்.

காரணங்கள்

கண் காயங்களுக்கான பொதுவான காரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • கைவிரல் நகம் ஒன்றிலிருந்து ஒரு கீறல் அல்லது வேறு ஏதாவது பொருள் குத்துதல்
  • உலோகம், கண்ணாடி, கல், மரம் அல்லது கைவினைப் பொருட்களின் துகள்கள்
  • மண் அல்லது அழுக்குத் துகள்கள்
  • இரசானயப் பொருட்கள் தெறித்தல்
  • ஒரு எறிபொருள் உடைந்து கண்ணுக்குள் ஊடுருவுதல்

ஒரு கண் காயம் வலியுள்ளதாகவும் அச்சுறுத்தும் அனுபவமாகவும் இருக்கலாம். அமைதலாக உட்கார்ந்திருக்கும்படி உங்களுடைய பிள்ளையை உற்சாகப்படுத்தவும். ஏதாவது திடீர் கண் அசைவுகள் காயத்துக்கான ஆபத்தை அதிகரிக்கும். நேராக முன்னோக்கிப் பார்க்கும்படி அல்லது கண் மடல்களை மூடும்படி உங்களுடைய பிள்ளையிடம் சொல்லவும். இது அவள் அனுபவிக்கும் வலியைக் குறைக்கலாம். கண் காயத்தின் மேல் நீங்கள் பன்டேஜ் போடும்போது உங்களுடைய பிள்ளையின் தலையை அசையாது பிடித்திருக்கவும்.

சிகிச்சை

சிகிச்சை காயத்தின் வகையைப் பொறுத்ததாக இருக்கும்.

சிறிய துகள்கள்

பெரும்பாலும், மணல் அல்லது அழுக்கு போன்ற சிறிய துகள்களை தண்ணீர் ஊற்றி வெளியேற்றலாம். காயமடைந்த கண்ணை, 10 நிமிடங்களுக்குக் குளிர்ந்த நீரால் மென்மையாக கழுவயும். உங்களுடைய பிள்ளையின் முகத்திலும் பாதிக்கப்படாத கண்ணுக்குள்ளும் தண்ணீரை விசிறியடிப்பதைத் தவிர்க்கவும்.

விடாப்பிடியான உறுத்துதல்

உங்களுடைய பிள்ளை வலிக்கிறது என முறையிட்டால், ஆனால் காயப்பட்ட கண் தெளிவாகத் தோன்றினால், உடனே மருத்துவக் கவனிப்பை நாடவும். உங்களுடைய பிள்ளையின் மருத்துவர், கீறல் போன்ற ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதைச் சோதிப்பதற்காக ஒரு விசேஷ கரைசலைக் கண்ணுக்குள் ஊற்றுவார். நிவாரணமடைவதற்காகவும் தொற்றுநோயைத் தடுப்பதற்காகவும், உங்களுடைய பிள்ளையின் மருத்துவர் மருந்தை மருந்துக் குறிப்பெழுதித் தரலாம்.

உட்பொதிந்திருக்கும் பொருட்கள்

உங்களுடைய பிள்ளையின் கண்ணுக்குள், உட்பொதிந்திருக்கும் ஒரு பொருள் இருந்தால், அதை மேலும் கண்ணுக்குட் தள்ளாதிருக்க நிச்சயமாயிருக்கவும். இது நிரந்தரக் காயத்துக்கான ஆபத்தை அதிகரிக்கும். அவளின் கண்மடல்களை மூடி வைக்கவும். காயப்பட்ட கண்ணை ஒரு கண்கவசம் அல்லது சுத்தமான சல்லடைத் துணியினால் மெதுவாக மூடி விடவும். சல்லடைத் துணியின் ஓரங்களை இலேசாகக் கீழ்நோக்கித் தட்டுவதன் மூலம் அதைச் சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும். அவளுடைய கண்களில் எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்க வேண்டாம். முடிந்தால், இரு கண்களும் அசையாதிருப்பதைத் தடுப்பதற்காக இரு கண்களையும் மூடிவிடவும். இரு கண்களையும் மூடுவது அவளைத் தொந்தரவுபடுத்தும் என்பதால் அவளை அமைதியாக வைத்திருப்பதற்கு நிச்சயமாக இருக்கவும். மருத்துவக் கவனிப்பை உடனே நாடவும்.

இராசாயனப் பொருட்கள் தெறித்தல்

உங்களுடைய பிள்ளையின் கண்களில் இரசாயனப் பொருள் அல்லது நச்சுப் பொருள் தெறித்தால், விரைவாகக் காயப்பட்ட கண்ணைப் 10 நிமிடங்களுக்கு ஓடும் தண்ணீரால் கழுவவும். உங்களுடைய பிள்ளையின் முகத்திலும் பாதிக்கப்படாத கண்ணுக்குள்ளும் தண்ணீரை விசிறியடிப்பதைத் தவிர்க்கவும். காயப்பட்ட கண்ணை ஒரு சுத்தமான சல்லடைத் துணியினால் மூடிக் கட்டி, உடனே மருத்துவக் கவனிப்பை நாடவும். முடிந்தால், மருத்துவரால் அடையாளம் காணப்பட்டுப் பரிசோதிக்கப்படுவதற்காக அந்தப் பொருளை, அதனுடைய கொள்கலனுடன் (அல்லது கொள்கலன் கொண்டுவரமுடியாதபடி அதிகளவு பெரிதாக இருந்தால் அந்தப் பொருளின் ஒரு மாதிரியை) கொண்டுவரவும்.

தடுத்தல்

பொருள்களை அல்லது துகள்களை உங்களுடைய பிள்ளையின் கண்களை நோக்கி அள்ளி வீசக்கூடிய புல் வெட்டி, புல் சீராக்கி போன்ற கருவிகளையும் இயந்திரங்களையும் உபயோகிக்கும்போது தகுந்த கண் பாதுகாப்புகளை அணிந்திருக்கும்படி அவளை உற்சாகப்படுத்தவும். உங்களுடைய பிள்ளை ஹொக்கி அல்லது கூடைப்பந்து விளையாடுபவளாக இருந்தால், பாதுகாப்பு முகக்கவசம் அல்லது பாதுகாப்புக் கண்ணாடியை அணியும்படி கேட்கவும். அத்துடன், உங்களுடைய பிள்ளை இராசயன அல்லது நச்சுப் பொருளைக் கைகளால் தொட்டால் அவற்றுடன் கண்களைத் தொடக்கூடாது என்பதில் நிச்சயமாக இருக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • கண் காயங்கள் பிள்ளைகளில் சாதாரணமானது.
  • தூசி, அழுக்கு, அல்லது இரசாயனப் பொருட்கள் போன்ற சிறு துகள்கள் கண் காயங்களை ஏற்படுத்தலாம்.
  • கண் காயங்கள் பிள்ளைகளை அச்சுறுத்தலாம். அமைதலாக உட்கார்ந்திருக்கும்படி உங்களுடைய பிள்ளையை உற்சாகப்படுத்தவும்.
  • உங்களுடைய பிள்ளையின் கண்ணுக்குள் ஒரு பொருள் புதைந்துவிட்டால், கண்ணை ஒரு சல்லடைத் துணியினால் மூடிக்கட்டி, உடனே மருத்துவக் கவனிப்பை நாடவும்.
  • உங்களுடைய பிள்ளையின் கண்களில் இரசாயனப் பொருள் அல்லது நச்சுப் பொருள் தெறித்தால், காயப்பட்ட கண்ணைப் 10 நிமிடங்களுக்கு ஒடும் தண்ணீரால் கழுவவும். கண்ணை கழுவிய பின்னர் காயப்பட்ட கண்ணை ஒரு சுத்தமான சல்லடைத் துணியினால் மூடிக் கட்டி, உடனே மருத்துவக் கவனிப்பை நாடவும்.
Last updated: diciembre 03 2010