தொண்டை வலி (ஃபரிஞ்ஜைடிஸ்)

Sore throat and tonsillitis [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளின் தொண்டை அழற்சி என்பது பொதுவாக ஒரு நோயின் அறிகுறி. அடித் தொண்டை அழற்சியின் காரணங்கள், அடித் தொண்டை அழற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தொண்டை வலி என்பது என்ன?

உங்கள் பிள்ளை தொண்டை வலிக்கிறது என்று முறையிடும்போது அவனுக்கு தொண்டை வலி வியாதி இருக்கலாம். உங்கள் பிள்ளை தொண்டையில் வறட்சியை , அரிப்பை, கடியை அல்லது வலியை உணரலாம்.

தொண்டை வலிக்கு பல காரணங்கள் அல்லது தூண்டுதல்கள் இருக்கலாம்.

  • தடிமல் அல்லது ஃப்ளூ போன்ற நோய்கள் பெரும்பாலும் தொண்டை வலிக்குக் காரணமாக இருக்கிறது.
  • சிலவேளைகளில் பிள்ளைகள் தங்கள் வாயை திறந்து கொண்டு நித்திரை செய்து பின் உலர்ந்த வாயுடன் விழிப்பதும் தொண்டை வலிக்குக் காரணமாகலாம்.
  • உள் மூக்கில் சளி ஒழுகும் பிள்ளைகளுக்கு அவர்கள் தொண்டையைத் தெளிவாகும்போது அல்லது இரவில் இருமும்போது தொண்டை வலி உண்டாகலாம்.
  • குறிப்பிட்ட சில வைரஸ்கள் வாயையோ அல்லது தொண்டையையோ சேதப்படுத்தியிருக்கலாம்(லீஷன்ஸ்) அல்லது புண்ணாக்கியிருக்கலாம்.
  • ஸ்றெப்டோகோகஸ் என்றழைக்கப்படும் ஒரு பக்ரீரியாக் குடும்பம், 10 இல் 1 வரையான தொண்டை வலி நோய் தொற்றக் காரணமாக இருக்கிறது. இது தொண்டை அழற்சி(ஸ்றெப் துரோட்) நோய் என்று அறியப்படுகிறது. இந்தக் குடும்பதில், பிரிவு A பீற்றா-ஹெமோலிற்றிக் ஸ்றெப்ற்றோகோகஸ் (GABS) ஆனது சிக்கலுடன் கூடிய மிகக் கடுமையான தொற்று நோயை உண்டாக்கும். பிரிவுC மற்றும் பிரிவுG உம் கூட தொண்டை அழற்சி நோய்க்குக் காரணமாகலாம். ஆனால் நேரிடக்கூடியGABS சிக்கல் இருக்காது
  • தொண்டையிலுள்ள உள்நாக்கில் நோய் தொற்றிக்கொள்ளலாம். இது உள்நாக்கு அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்படும்போது, உள்நாக்கு புண்ணாகலாம், பெரிதாகலாம், மற்றும் வழக்கத்துக்கு மாறாக பளபளக்கும் சிவப்பு நிறமாக மாறலாம்.

தொண்டை வலிக்கான அடயாளங்களும் அறிகுறிகளும்

  • உங்கள் பிள்ளை தொண்டை அல்லது கழுத்து வலிக்கிறது என்று சொல்லலாம்.
  • உங்கள் பிள்ளை விழுங்கும்போது, பானங்கள் பருகும்போது, அல்லது உணவு உண்ணும்போது வலிக்கிறது என்று சொல்லலாம்.
  • சிறு பிள்ளைகள் உணவு உண்ணவோ அல்லது பானங்கள் குடிக்கவோ மறுக்கலாம், வழமையைவிட சிறிய அளவுகளையே உட்கொள்ளலாம் அல்லது பாலூட்டும்போதும் விழுங்கும்போதும் அழலாம்.

உங்கள் பிள்ளைக்கு வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.

  • சில பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல்,மற்றும் தொண்டைக் கரகரப்பு இருக்கலாம்.
  • சில பிள்ளைகளுக்கு குமட்டல் மற்றும் வயிற்று வலி இருக்கலாம். அவர்கள் தொண்டை வழக்கத்தை விட அதிக சிவந்ததாக இருக்கலாம். அங்கு சீழும் இருக்கலாம். இந்த அறிகுறிகளெல்லாம் தொண்டை அழற்சி நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையை உங்கள் வாடிக்கையான மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள் :

  • உங்கள் பிள்ளைக்கு 24 மணி நேரத்துக்கு மேலாக (1நாள்) தொண்டை எரிச்சல் நோய் இருந்தால், விசேஷமாக காய்ச்சலும் இருந்தால்
  • உங்கள் பிள்ளை தொண்டை அழற்சி நோய் உள்ள எவருடனாவது தொடர்பு வைத்திருந்திருந்தால்
  • உங்கள் பிள்ளைக்கு கடந்த காலங்களில் தொண்டை அழற்சி நோய் இருந்திருந்தால்
  • உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், தொண்டையொற்றி சோதனை செய்வார். அதாவது, மருத்துவர் ஒரு நீண்ட மருந்திட்ட பஞ்சுறையை உபயோகித்து உங்கள் பிள்ளையின் தொண்டையின் பக்கங்களில் கசியும் திரவத்தில் கொஞ்சத்தை சோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைப்பார். இது தான் உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய் இருப்பதை உறுதிசெய்யும் ஒரே ஒரு வழியாகும். ஆயினும் பெரும்பாலான தொண்டை வலி நோய்க்கு தொண்டையொற்றி சோதனை தேவையில்லை.
  • தொண்டையொற்றி சோதனை உங்கள் பிள்ளைக்கு பிரிவு A தொண்டை அழற்சி நோயிருப்பதாகக் காண்பித்தால் மருத்துவர் அன்டிபையோட்டிக் மருந்தை எழுதிக் கொடுப்பார். ஆனால் தொண்டை எரிச்சல் வைரஸ் அல்லது வேறு காரணங்களால் உண்டாயிருந்தால் அன்டிபையோட்டிக் மருந்து பயன்படாது.

மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து தொண்டை அழற்சி பற்றி வாசிக்கவும்

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

தொண்டை வலியை பெரும்பாலும் வீட்டில் வைத்துப் பராமரிக்கலாம். உங்கள் பிள்ளையை மேலும் சௌகரியமாக வைக்க, பின்வரும் காரியங்களை முயற்சி செய்யுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு உணவை விழுங்குவதில் கஷ்டமிருந்தால், விழுங்குவதற்கு இலகுவாக இருக்கும்
  • அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை 1 வயதிற்கு மேற்பட்டதாயிருந்தால்,தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும், பாஸ்சுரைஸ்ட் செய்யப்பட்ட தேனை கொடுத்து முயற்சி செய்து பார்க்கவும்.
  • வளர்ந்த பிள்ளைகள் சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும்.

வாயைத் திறந்தபடி வைத்து உறங்குவதால் உண்டாகும் தொண்டை வலி

  • உங்கள் பிள்ளையின் தொன்டையில் புண்ணிருந்தால் ஏதாவது பானம் குடிக்கக் கொடுக்கவும்.
  • அதிக ஈரமான காற்று இருப்பதற்காக, இரவில் ஈரப்பதமூட்டியை உபயோகிக்கவும். இது தொண்டை வலியைத் தடுக்க உதவலாம்.

இது தொடர்ந்திருக்கும் ஒரு பிரச்சினையாக இருந்தால், அல்லது குறட்டை விடுதல், சுவாசிப்பதில் கஷ்டம், அல்லது பகல் நேரங்களில் மேலதிக உறக்கம் போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தால் உங்கள் வழக்கமான உடல் நலப் பராமரிப்பளிப்பவரை ஒழுங்காக சந்திப்பின்போது கலந்து பேசுங்கள்.

உள் மூக்கில் சளி ஒழுகுதல் காரணமாக ஏற்பட்ட தொண்டை வலி

  • மூக்கு சுவாசப் பாதையை சேலைன் கரைசலால் கழுவுவதன் மூலம் தொண்டைக் கரகரப்பை அல்லது இருமலைக் குறைக்க முடியும்.

வைரஸால் உண்டாகும் தொண்டை வலி

அன்டிபையோட்டிக் வைரஸை சரி செய்யாது. உங்கள் பிள்ளைக்கு சௌகரியமான நடவடிக்கைகள் மாத்திரம் தேவைப்படுகிறது.

  • காய்ச்சல் மற்றும் வலிக்காக உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது மற்ற பிரான்டுகள்) அல்லது ஐபியூப்ரோஃபென் (அட்வில், மோட்ரின், அல்லது மற்ற பிரான்டுகள்). லேபிளிலுள்ள அறிவுரைகளை பின் பற்றவும்.
  • உங்கள் பிள்ளையின் தொண்டை மாத்திரை விழுங்கமுடியாதபடி அதிக புண்ணாக இருந்தால், ஒரு கரைசல் தயாரிப்பையோ அல்லது மல வாசல் உள்வைப்பு மருந்தையோ உபயோகிக்கவும்.

வைரஸினால் உண்டான தொண்டை வலி 7 நாட்களுக்குள் மாற வேண்டும்.

தொண்டை அழற்சி நோயினால் உண்டாகும் தொண்டை வலி

பெரும்பாலான தொண்டை அழற்சி நோய் அன்டிபையோட்டிக் மருந்துகள் எடுக்காமலேயே 3 முதல் 7 நாட்களில் குணமாகும்.

அன்டிபையோட்டிக் சிகிச்சை மற்றவர்களுக்கும் நோய் தொற்றிக்கொள்ளும் ஆபத்தைக் குறைக்கிறது. பிரிவு A ஸ்றெப் சம்பந்தப்பட்ட சிக்கல்களையும் குறைக்கிறது.

  • உங்கள் பிள்ளைக்கு பிரிவு A ஸ்றெப் தொண்டை அழற்சி நோய் இருந்தால் (தொண்டையொற்றி சோதனையால் அல்லது விரைவுச் சோதனையால் உறுதி செய்யப்பட்டிருந்தால்), உங்கள் மருத்துவர் அன்டிபையோட்டிக் மருந்தை எழுதிக்கொடுப்பார். உங்கள் பிள்ளை குணமாகிக் கொண்டுவந்தாலும் கூட, மருந்து முழுவதையும் குடித்துமுடித்துவிடுவதில் உறுதியாயிருங்கள்.

அன்டிபயோட்டிக் எடுத்து 3 நாட்களிலேயே உங்கள் பிள்ளை குணமடைவதை உணரவேண்டும்.

தொண்டை வலியைக் குணமாக்குவதில் உதவி செய்ய முடியாதவை

மருந்துக்குறிப்பு இல்லாமல் பெறப்படும் தொண்டைத் தெளிப்பானை உபயோகிக்க வேண்டாம். அது தொண்டை வலியைக் குணமாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. சில தொண்டைத் தெளிப்பான்கள் ஒவ்வாமையை அல்லது வேறு பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடிய உட்பொருட்களை(பென்சோகைன்) கொன்டிருக்கிறது.

உங்கள்சிறிய பிள்ளைகளுக்கு தொண்டைக்கு இதமளிக்கும் என்று சொல்லப்படும் மிட்டாய்கள் அல்லது கடினமான இனிப்புகளை கொடுக்காத்தீர்கள். அவை தொண்டையில் சிக்கிக் கொள்ளக்கூடும்.

குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ உபயோகித்துவிட்டு மீதியாக் வைத்திருக்கும் மருந்துகளை உபயோகிக்காதீர்கள். அது சரியான மருந்தாகவோ அல்லது வேளைமருந்தளவாகவோ இருக்காது. அறியாமலேயே உங்கள் பிள்ளைக்கு நீங்கள் தீங்கு செய்யகூடும்.

அன்டிபையோட்டிக் மருந்து பிரிவு A ஸ்றெப் தொண்டை அழற்சி நோயைக் குணமாக்கும், ஆனால் இது வைரஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உங்கள் பிள்ளை தேவையில்லாத சமயங்களில் அன்டிபையோட்டிக் உட்கொண்டால், பிற்காலங்களில் அதே சிகிச்சை பயனற்றதாகிவிடும், அல்லது உங்கள் பிள்ளை வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டாதாவாறு மூடி மறைத்துவிடும்.

கிருமிகள் பரவுவதை தடை செய்யுங்கள்

உங்கள் கைகளையும் உங்கள் பிள்ளையின் கைகளையும் கழுவுங்கள். இது கிருமிகள் பரவுவதை தடை செய்ய உதவும்.

தொண்டை வலியினால் ஏற்படும் சிக்கல்கள்

சிக்கல்கள் என்பது உங்கள் பிள்ளைக்கு ஏற்படும் தேவையற்ற பாதிப்புகள் அல்லது பிரச்சினைகளாகும்.

வைரஸுகளால் ஏற்படும் தொண்டை வலி, தொண்டையை சுத்தம் செய்தல், தொண்டை உலர்ந்து போதல், அல்லது தொண்டையில் உறுத்தல்கள் என்பனவற்றால் உண்டான தொண்டை வலி எந்தச் சிக்கலையும் உடையதல்ல.

பிரிவு A ஸ்றெப்பினால் ஏற்படும், சிகிச்சையளிக்கப்படாத தொண்டை நோய்கள் நரம்புத் தொகுதி, இருதயம்(வாதக்காய்ச்சல்), அல்லது சிறு நீரகங்கள்(போஸ்ட்-ஸ்றெப்ரோகோக்கல் க்ளோமெறுலோனஃபைரிடிஸ்) ஆகியவற்றை தாக்கும் நோய்களுக்கு வழி நடத்தலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின் வரும் நிலமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு 24 மணி நேரத்துக்கு மேலாக தொண்டை வலி இருந்தால், விசேஷமாக காய்ச்சலும் இருந்தால்.
  • உங்கள் பிள்ளை ஸ்றெப் தொண்டை அழற்சி நோயுள்ள எவருடனாவது தொடர்பு வைத்திருந்திருந்தால், அல்லாது கடந்த காலங்களில் உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய் இருந்திருந்தால்

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகாமையிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள், அல்லது தேவையேற்பட்டால் 911 ஐ அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது.
  • உங்கள் பிள்ளை உமிழ்நீர் வடித்தால் அல்லது விழுங்குவதில் அதிக சிரமப்பட்டால்.
  • உங்கள் பிள்ளை அதிக சுகவீனமானதுபோல் நடந்து கொள்கின்றது.

முக்கிய குறிப்புகள்

  • தொண்டை வலிக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.
  • பெரும்பாலான தொண்டை வலிகளுக்கு அன்டிபையோடிக்ஸ் அவசியமில்லை.
  • உங்கள் பிள்ளைக்கு 24 மணிநேரத்திற்கும் மேலாக தொண்டை வலி அல்லது தொண்டை அழற்சி நோய் இருந்தால், பிள்ளையை மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு அதிகளவு திரவ உணவுகள், மென்மையான உணவுகள், மற்றும் தேவைப்பட்டால், அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூபுரோஃபேன் போன்ற வலி மருந்துகள் கொடுப்பதன் மூலம் அவனை மேலும் சௌகரியமான நிலையில் வைக்க முடியும்.
Last updated: octubre 16 2009