செலுலைடிஸ்

Cellulitis [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

செலுசைடிஸ் என்பது தோல் மற்றும் ஆழ்ந்த திசுக்கள் மீது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும். பிள்ளைகளின் செலுசைடிஸிற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் செலுசைடிஸிற்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.

செலுலைடிஸ் (உயிரணு அழற்சி) என்பது என்ன?

செலுலைடிஸ்  என்பது பக்டீரியாவால் அல்லது கிருமிகளால் தோலில் ஏற்படும் ஒரு பொதுவான தொற்றுநோயாகும். இந்த நோய் வீங்கியதாக சிகப்பு நிறமுடையதாகத் தென்படுவதோடு அந்தப் பகுதி சூடானதாகவும் வலியுள்ளதாகவும் இருக்கும். செலுலைடிஸ் உடலின் எந்தப்பகுதியிலும் ஏற்படலாம். இது ஒரு சிறிய பகுதியில் ஆரம்பித்து பிறகு பெரிதாகலாம். பராமரிக்கப்படாமல் விடப்பட்டால், தசைகள் அல்லது மூட்டுகள் போன்ற உடலின் ஏனைய பகுதிகளுக்கு இந்த நோய் பரவலாம், அல்லது பிள்ளையின் நிணநீர்த்தொகுதியினூடாக (லிம்∴பான்ஜைடிஸ்) அல்லது இரத்த ஓட்டத்தினூடாக (பக்டீரேமியா) விரிவான முறையில் பரவலாம்.

இந்தத் தொற்றுநோய்க்கு நீங்கள் சிகிச்சை செய்யாவிட்டால் அது தசைகள் அல்லது மூட்டுக்களுக்குப் பரவி நிலைமையை மோசமாக்கும். செலுலைடிஸ் நோய் உங்கள் பிள்ளையின் நிணநீர்த்தொகுதி (லிம்∴பான்ஜைடிஸ்) அல்லது இரத்த ஓட்டத்தைப் (பக்டீரேமியா) பாதிக்கலாம்.

வீங்கிய கன்னங்களுடன் குழந்தை

அடையாளங்களும் அறிகுறிகளும்

தோலின் பாதிக்கப்பட்ட பகுதி கீழ்க்கண்டவாறு இருக்குமானால் உங்கள் பிள்ளைக்கு செலுலைடிஸ் இருக்கக்கூடும்:

  • வீக்கம்
  • வலி
  • சிகப்பு நிறம்
  • செதில்கள்
  • சூடாகவும் மென்மையாகவும் இருத்தல்
  • அளவில் பெரியதாகிக்கொண்டே போதல்

ஏனைய அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • 2 மணி நேரங்களுக்கு மேலாகத் தலைவலி மற்றும் காய்ச்சல்
  • பிள்ளை நலமற்றதாக தோற்றமளிக்கின்றது
  • பிள்ளை மிகவும் தூக்கக் கலக்கம் கொண்டதாக இருக்கின்றது
  • வாந்தியெடுத்தல்
  • சுபாவம், பேச்சு, அல்லது நடவடிக்கைகளில் மாற்றம்
  • எடை குறைதல்
  • நடப்பதில் சிரமம்
  • கை அல்லது கால் பலவீனம்
  • வலிப்பு (நிறுத்த முடியாதபடி உடல் துடிப்பு)
  • கழுத்து விறைப்பு
  • நித்திரை சம்பந்தமான தலைவலி
  • கண்பார்வையில் பிரச்சினை

செலுலைடிஸிற்கான காரணங்கள்

செலுலைடிஸ் நோய், ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மற்றும் ஸ்டெஃபிலோகோக்கஸ் போன்ற பக்டீரியாவால் (கிருமிகள்) ஏற்படுகின்றது. பக்டீரியா ஒரு உராய்வு, வெட்டு அல்லது தோலில் வெடிப்பு போன்றவற்றினூடாக உங்கள் பிள்ளையின் உடலுக்குட் செல்லுகிறது. பக்டீரியா எந்த வழியாக உட்செல்லுகிறது என்பதை உங்களால் பார்க்க முடியாது.

கீழ்க்காண்பன இருந்தால் இந்த நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் உங்கள் பிள்ளைக்கு அதிகமாக இருக்கும்:

  • உலர்ந்த அல்லது செதில் போன்ற தோல்
  • எரிகாயம், கீறல்கள், பிளவுகள், வெட்டுகள், அல்லது சுறண்டல்கள்
  • தோலைப் பாதிக்கும் வேறுவகையான தொற்றுநோய்கள்
  • சிலந்தி அல்லது பூச்சிக்கடி
  • அண்மைக்கால சத்திரசிகிச்சை

இந்தத் தொற்றுநோய் உங்கள் பிள்ளையின் தோலுக்குள் சென்றவுடனே, உடலின் மற்றப் பாகங்களுக்கும் பரவலாம். கைகள் மற்றும் கால்கள் தான், பக்டீரியா உடலுற்குள் செல்வதற்குப் பொதுவான பகுதிகள். கைகள் அல்லது கால்கள் பாதிக்கப்பட்டால் உங்கள் பிள்ளைக்கு இவற்றைப் உபயோகிப்பதில் சிரமம் இருக்கலாம்.

செலுலைடிஸிற்கு உங்கள் மருத்துவர் என்ன செய்யலாம்

உடல் பரிசோதனை

உங்கள் பிள்ளைக்கு செலுலைடிஸ் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு உடற்பரிசோதனையை முழுமையாகச் செய்துமுடிப்பார். உங்கள் பிள்ளைக்கு ஒரு இரத்தப் பரிசோதனை தேவைப்படலாம்.

இந்தத் தொற்றுநோய் பரவுகிறதா என்பதைக் கவனிப்பதற்காக, மருத்துவர் அல்லது தாதி பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி பேனாவால் கோடிடுவார்.

அன்டிபையோடிக்ஸ்

இந்தத் தொற்றுநோய்க்குச் சிகிச்சை செய்வதற்காக உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு அன்டிபையோடிக் மருந்தை எழுதிக் கொடுப்பார். பெரும்பாலும் உங்கள் பிள்ளை இதை வாய் வழியாக உட்கொள்ளலாம். உங்கள் பிள்ளைக்கு மிகவும் வீரியம் குறைந்த தொற்றுநோய் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு அன்டிபையோடிக் கிறீமைப் பரிந்துரை செய்யக்கூடும்.

உங்கள் பிள்ளையின் தொற்றுநோய் கடுமையானதாக அல்லது மோசமடைந்துகொண்டே போனால், அவனுக்கு நேரடியாக நரம்பு மூலம் உட்செலுத்தப்படும் அன்டிபையோடிக் மருந்து தேவைப்படலாம். ஒரு மருத்துவர் அல்லது தாதி இதை நேரடியாக உங்கள் பிள்ளையின் நரம்புகளுக்குட் செலுத்துவார்.

ஒரு சில நாட் சிகிச்சையின் பின்னர் தொற்றுநோய் நிவாரணமடைந்துவிடும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் உபயோகிக்கவும்

பிள்ளையின் நிலைமை முன்னேறி வரும்போதும்கூட மருந்துக் குறிப்பிலுள்ள அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் கொடுத்து முடிக்கவும். தொற்றுநோய் திரும்பவும் வரலாம். விசேஷமாக சிகிச்சையைத் தகுந்த முறையில் பூர்த்தி செய்யாவிட்டால் அவ்வாறு சம்பவிக்கலாம்.

காய்ச்சலையும் வலியையும் பராமரித்தல்

காய்ச்சல் அல்லது வலிக்குச் சிகிச்சையளிப்பதற்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின் அல்லது அட்வில்) என்பனவற்றை உபயோகிக்கவும். உங்கள் பிள்ளைக்கு ASA ( அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்.

வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்க உதவியாகப்பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளிர்ப் பைகளை வைக்கவும்.

காயத்திற்கு சிகிச்சையளித்தல்

குளிக்கும்போது அன்டிபக்டீரியல் சவர்காரம் மற்றும் தண்ணீரை உபயோகித்துப் பாதிக்கப்பட்ட இடத்தைச் சுத்தம் செய்யவும்.

உங்கள் பிள்ளையின் தோல் மிக மெருதுவானதாகவும் வலியுடையதாகவும் இருக்கும். பாஸிட்ரேசின் மற்றும் போலிஸ்போரின் போன்ற அன்டிபையோடிக் கிறீம்களை மென்மையாகத் தடவுவது, தோலை நிவாரணமடைந்ததுபோலத் தோன்றச் செய்ய உதவும்.

குளிக்கும்போது அன்டிபக்டீரியல் சவர்காரத்தை உபயோகித்து உங்கள் பிள்ளையை சுத்தம் செய்யலாம்.

காயத்தை பான்டேஜால் மூடுங்கள்

ஒரு சுத்தமான உலர்ந்த பன்டேஜ் துணியால் காயத்தைச் சுற்றிக் கட்டவும். இது காயத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்.

பிள்ளையின் உடலை நீர்த்தன்மைகொண்டதாக வைத்திருங்கள்

உங்கள் பிள்ளைக்கு அதிகளவு தண்ணீர் மற்றும் நீராகாரங்களைக் கொடுக்கவும். கோப்பி போன்ற கஃபேன் உள்ள பானங்கள், தேநீர், மற்றும் கோலா போன்றவற்றைத் தவிர்க்கவும்.

கூல் மிஸ்ட் அதாவது குளிர் நீராவி

உலர்ந்த, வெடிப்புள்ள தோலைத் தவிர்க்க உதவியாக உங்கள் பிள்ளையை, குளிர் நீராவி சாதனம் ஒன்றிற்கு அருகில் வைக்கவும்.

தொற்றும் தன்மை

தொற்றுநோயுள்ள ஒருவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தொற்றுநோயைப் பரவச் செய்யாது.

ஆயினும், ஒரு வெட்டுக்காயம் அல்லது புண் போன்ற காரணங்களினால் திறக்கப்பட்டிருக்கும் உங்கள் பிள்ளையின் தோல், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் திறந்த புண்ணுடன் நேரடித் தொடர்பு கொள்ளும்போது பக்டீரியா உங்கள் பிள்ளையின் தோலினுட் செல்லலாம். அதன்மூலம் உங்கள் பிள்ளைக்கு செலுலைடிஸ் நோய் ஏற்படலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

ஆயினும், ஒரு வெட்டுக்காயம் அல்லது புண் போன்ற காரணங்களினால் திறக்கப்பட்டிருக்கும் உங்கள் பிள்ளையின் தோல், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் திறந்த புண்ணுடன் நேரடித் தொடர்பு கொள்ளும்போது பக்டீரியா உங்கள் பிள்ளையின் தோலினுட் செல்லலாம். அதன்மூலம் உங்கள் பிள்ளைக்கு செலுலைடிஸ் நோய் ஏற்படலாம்.

  • செலுலைடிஸ் நோய்க்கான அறிகுறிகளை உங்கள் பிள்ளை காட்டுகின்றது

பின்வரும் நிலைமைகள் உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்டால் மீண்டும் மருத்துவரைப் பார்க்கச் செல்லவும்:

  • அடிக்கடி வாந்தி எடுப்பதால் மருந்துக் குறிப்பிலுள்ள அன்டிபையோடிக் மருந்தை எடுக்க முடியவில்லை
  • நலமற்ற தோற்றம் அல்லது அதிகமான தூக்கக்கலக்கம்
  • அன்டிபையோடிக் மருந்தை எடுத்ததிலிருந்து 72 மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல்
  • அதிகரித்துவரும் வீக்கம், சிகப்பு நிறம் அல்லது அன்டிபையோடிக் பராமரிப்பிலிருந்து 24 தொடங்கி 48 மணி நேரங்களுக்குப் பிறகு வலி
  • தோலில் சிகப்புக் கோடுகள் உண்டாகின்றது, நோய் ஆரம்பித்த இடத்திலிருந்து ஆரம்பித்துச் செல்கின்றது
  • அன்டிபையோடிக் சிகிச்சையின் 24 தொடங்கி 48 மணி நேரங்களுக்குப் பின், முன்னேற்றமில்லாத வண்ணம் கண்களைச் சூழ செலுலைடிஸ் உள்ளது.
  • உங்கள் குழந்தை 3 மாதங்களை விட குறைந்த வயதுள்ளதாயின், 38°C (100.4°F) குதவழி உடல் வெப்பநிலை கொண்ட காய்ச்சல் குழந்தைக்கு இருக்குமாயின் மருத்துவரை அழையுங்கள்.

முக்கிய குறிப்புகள்

  • செலுலைடிஸ் என்பது உடலின் உட்பகுதியில் பரவக்கூடிய ஒரு தோல் தொற்றுநோய் ஆகும்.
  • உங்கள் பிள்ளையில் செலுலைடிஸின் அறிகுறிகள் காணப்பட்டால் உங்கள் மருத்துவருடன் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
  • பிள்ளையின் நிலைமை முன்னேறி வரும்போதும்கூட மருந்துக் குறிப்பிலுள்ள அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் உபயோகித்து முடிக்கவும்.
  • மேலதிகமாக அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் , காயம் திறந்தபடி இருந்தால் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காகவும் உங்கள் பிள்ளையின் காயங்களை மூடிவிடவும்.
Dernières mises à jour: mars 05 2010