அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி

Shock wave lithotripsy [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி என்பது சிறுநீரகக் கற்களை உடைக்கும் ஒரு சிகிச்சை முறையாகும்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி (ளுறுடு) என்றால் என்ன?

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி(ளுறுடு) என்பது சிறுநீரகக் கற்களை அகற்றும் ஒரு சிகிச்சை முறையாகும். சிறுநீரகக் கற்களை மணல் போன்ற, “கல் தூசி” என்று சில நேரங்களில் அழைக்கப்படும் நுண் துகள்களாக உடைப்பதற்கு அவற்றின்மீது உயர்-சக்தி அதிர்ச்சி அலைகளை இது குவியச்செய்கின்;றது. இத் துகள்கள் போதுமான அளவு சிறியதாக வந்ததும், உங்கள் குழந்தையின் உடலிலிருந்து அவை சிறுநீருடன் வெளியேற முடியும்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சியின் முழுப் பெயர் நஒவசயஉழசிழசநயட ளாழஉம றயஎந டiவாழவசipளல (நுளுறுடு) ஆகும். இதன் அர்த்தம் அதிர்ச்சி அலை, உடலின் வெளியிலிருந்து வருவதுடன் அது உங்கள் பிள்ளையின் சிறுநீரகத்தை நோக்கிச் செலுத்தப்படுகின்றது என்பதாகும்.

​​​​

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன?

வழமையாக சிறுநீரில் காணப்படும் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாகும் திடமான துண்டுகள் சிறுநீரகக் கற்களாகும். இப்பதார்த்தங்கள் கல்சியத்தையும் பொஸ்பரசையும் உள்ளடக்குகின்றன. சிறுநீரகங்கள்; வழமையாக இப்பதார்த்தங்களை வடிகட்டுகின்றன. ஆனால் அவற்றை வெளியேற்றுவதற்குப் போதிய திரவம் இல்லாதிருந்தால் அவை மிகவும் அடர்த்தியாகவும் படலமாகவும் ஒன்றுசேரலாம்.

ஒரு சிறுநீரகக் கல் சிறிதாக அல்லது பெரிதாக இருக்கலாம் அத்துடன் அது சிறுநீரகத்தில் தேங்கியிருக்கலாம் அல்லது சிறுநீர்க் குழாய்க்குக் கடத்தப்படலாம். சிறிய சிறுநீரகக் கல் ஒன்று வழமையாக சிறிதளவு நோவுடன் அல்லது நோவின்றி உடலிலிருந்து வெளியேறலாம். ஆனால் பெரிய கல் ஒன்று சிக்கிவிடக்;கூடும். இது சிறுநீர் ஓட்டத்தைத் தடைசெய்து கடுமையான வலியை ஏற்படுத்தலாம் அல்லது சிறுநீர்க் குழாயைச் சேதமாக்கி சிறுநீரில் இரத்தத்துக்கு வழிவகுக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் பொதுவாகத் தோன்றுவதில்லை ஆயினும் அவை கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் இளம்பராயத்தினரில் தோன்றலாம்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி
(1) சில சிறுநீரகக் கற்கள் உடலிலிருந்து சிறுநீர் ஊடாக வெளியேற்றப்பட முடியாத அளவுக்குப் பெரிதாக வரலாம். (2) அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி, சிறுநீரகக் கற்களை நுண் துகள்களாக உடைப்பதற்காக அவற்றின்மீது உயர்-சக்தி அதிர்ச்சி அலைகளைச் செலுத்துகின்றது. (3) இந்நுண் துகள்கள் பின்னர் உடலிலிருந்து சிறுநீர் மூலம் வெளியேறலாம்.

சிறுநீரகக் கற்களுக்கான காரணங்கள்

பின்வருவன போன்ற பல்வகையான காரணங்களினால் ஒரு பிள்ளையில் சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்:

  • சிறுநீரகங்கள் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதுடன்கூடிய பிரச்சினைகள்
  • சிறுநீரகக் கற்கள் உள்ள ஒரு குடும்ப வரலாறு
  • சிறுநீர்க் குழாய் தொற்றுநோய்(கள்)
  • ஒரு அனுசேபக் கோளாறு (உணவு ஒழுங்காகச் சமிபாடடைவதிலிருந்து உடலைத் தடுக்கும் ஒரு மருத்துவ நிலை)
  • ஆரோக்கியமற்ற உணவு, உதாரணமாக மிகக் குறைந்தளவு நீர் அருந்துதல் அல்லது கூடிய அளவில் சோடியம் உட்கொள்ளுதல்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்குத் தயார்செய்வது எப்படி

உங்களுடைய குழந்தை அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி பெறுவதற்கு முன்னர் சில பரிசோதனைகள் செய்யவேண்டியது அவசியம். அத்துடன் சிகிச்சைக்கு முன்னர் சில மருந்துகள் உட்கொள்வதை அவர்கள் நிறுத்தவேண்டும்.

பரிசோதனைகள்

  • அடிவயிற்றின் (வயிறு) ஊடுகதிர்ப்படம் (ஒ-சயல) (முருடீ): இது சிகிக்சைக்கு முன்னர் ஆகக்கூடியது நான்கு வாரங்களுக்கு முன்னர் சிறுநீரகக் கல்(கற்கள்) இன் அளவையும் அவை இருக்கும் இடத்தையும் உறுதிப்படுத்துவதற்காகச் செய்யப்படுகின்றது
  • சிறுநீரில் கிருமி வளர்ச்சிப் பரிசோதனை (உரடவரசந) மற்றும் உணர்திறன் பரிசோதனை: அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்கு முன்னர் உங்கள் குழந்தைக்கு சிறுநீர்க் குழாய் நோய்த்தொற்றுதலுக்;காக ஏதாவது சிகிச்சை தேவைப்படுகின்றதா என்பதை இது கண்டறியும்
  • இரத்தப் பரிசோதனை: உங்களுடைய குழந்தைக்கு இது தேவையென உங்களது குழந்தையின் மருத்துவர் கருதினால் மட்டுமே இது செய்யப்படுகின்றது.

உங்கள் குழந்தையின் மருத்துவர் வேறு பரிசோதனைகள் தேவையெனக் கருதினால், அவற்றிற்கு உத்தரவிடலாம், உதாரணமாக ஒரு ஊவு ளஉயn .

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி வழங்குவதற்கு முன்னர் உங்கள் குழந்தையின் மருத்துவப் பராமரிப்புக் குழு உங்கள் குழந்தைக்குத் தேவையான பரிசோதனைகளை விளக்கிக் கூறுவார்கள்.

மருந்துகள்

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி சிகிச்சைக்கு பத்து நாட்கள் முன்னராக, உங்களுடைய குழந்தை யஉநவலடளயடiஉலடiஉ யஉனை (யுளுயு)இ iடிரிசழகநn அல்லது இரத்த நிலைமைகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகைகள் (யவெi-உழயபரடயவெளஇ யவெi-pடயவநடநவள மற்றும்ஃஅல்லது வாinநெசள முதலியவை) எடுப்பதை நிறுத்தவேண்டும்.

உங்களுடைய குழந்தை எப்போது மருந்துகளை நிறுத்தவேண்டும் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து உங்களுடைய குழந்தையின் மருத்துவருடன் அல்லது தாதியுடன் கதையுங்கள்.

சிகிச்சை நாளில் நடப்பது என்ன?

முழுமையான மயக்க மருந்து

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி, சத்திரசிகிச்சை எதனையும் உள்ளடக்கவில்லை எனினும், உங்களுடைய குழந்தைக்கு முழுமையான மயக்கமருந்து கொடுக்கப்படும். சிகிச்சையின்போது எந்த நோவையும் உணரமுடியாதவாறு உங்கள் குழந்தை தூங்குவதை மயக்கமருந்து உறுதிப்படுத்தும். அத்துடன் உங்கள் குழந்தை அசையாது இருக்கவும் உதவுவதால் அது கற்கள் உடைக்கப்படுவதை மேம்படுத்தும்.

உங்கள் குழந்தைக்கு மயக்கமருந்து கொடுப்பதற்கு முன்னர், குழந்தையின் வயிறு வெறுமையாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக கீழுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

  • சிகிச்சைக்கு முதல் நாள் நள்ளிரவு: திடமான உணவுப்பொருட்களை நிறுத்தவும்
  • சிகிச்சைக்கு ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர்: குழந்தைக்கான பால்மா அல்லது குழாய் மூலமாகக் கொடுக்கப்படும் உணவுகளை நிறுத்தவும்
  • சிகிச்சைக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர்: தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவும், பொருத்தமாயின்
  • சிகிச்சைக்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர்: அப்பிள் ஜுஸ் அல்லது தண்ணீர் போன்ற தெளிவான பானங்கள் கொடுப்பதை நிறுத்தவும்

சிகிச்சைக்கு முன்னர் உங்கள் குழந்தையின் வயிறு வெறுமையாக இருப்பது மிக முக்கியமாகும். மயக்கமருந்தில் உங்கள் குழந்தை உறங்கும்போது குழந்தையின் வயிற்றிலிருக்கும் உணவு அல்லது திரவம் எதுவாயினும் அவருடைய வாய் வழியே வந்து அவருடைய சுவாசப்பையைச் சென்றடையலாம். இது உங்கள் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது.

சிகிச்சை

இந்த நடைமுறையின்போது உங்கள் குழந்தை முதுகுப்புறமாக முற்றாகப் படுத்திருப்பார் அல்லது 45 பாகை கோணத்தில் தாங்கி வைத்திருக்கப்படுவார்.

அதிர்வு அலைகள் துல்லியமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு ஊடுகதிர் இயந்திரம் சிறுநீரகக் கல்(கற்கள்) கடைசியாக இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும். அதன் பின்னர், லிதோட்றிப்ரர் (டiவாழவசipவநச) என்று அழைக்கப்படும் ஒரு விசேட இயந்திரம், கற்களை உடைப்பதற்கும் அவற்றை உங்கள் குழந்தை சிறுநீருடன் வெளியேற்றுவதைச் சுலபமாக்குவதற்கும் அதிர்வு அலைகளைச் செலுத்தும். இந்த இயந்திரம் உங்கள் குழந்தைக்கு மேலாக அல்லது பக்கத்தில் இருக்கக்கூடும்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்கு எவ்வளவு நேரமெடுக்கும்?

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி பொதுவாக 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை எடுக்கும். வழமையாக, சிகிச்சையளிக்கப்பட்ட அதே நாளில் உங்கள் குழந்தை மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்.

எனது குழந்தைக்கு எத்தனை சிகிச்சைகள் தேவைப்படும்?

கண்டுபிடிக்கப்பட்ட சிறுநீரகக் கற்களைப் பொதுவாக ஒரு சிகிச்சையில் உடைத்துவிடலாம். உங்கள் குழந்தையின் கற்கள் பெரிதாக இருந்தால் அல்லது முற்றாக உடைக்கப்படாவிடின், உங்கள் குழந்தைக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படலாம்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்குப் பின்பு எதை எதிர்பார்க்கலாம்

வலி

உங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் உதாரணமாக முதுகில் அல்லது அடிவயிற்றில் வலி இருப்பது வழமையாகும். குழந்தையின் உடலிலிருந்து சிறுநீரகக் கற்களின் துகள்கள் வெளியேறும்வரை வயிற்று வலி (தசைப்பிடிப்பு) பல நாட்களுக்கு நீடிக்கலாம்.

வளர்ந்த பிள்ளைகள் தமது வலியை உங்களிடம் விளக்கிக் கூறலாம். சிறு குழந்தைகளில் வலியின் அறிகுறிகள் உள்ளடக்குபவை:

  • வலியால் துடித்தல் அல்லது வயிற்றைப் பிடித்தல்
  • அதிகமான சிணுக்கம்
  • நடக்க மறுத்தல் அல்லது நடப்பதில் சிரமம்
  • வழமைக்கு மாறான அமைதியான சுபாவம்

போன்ற வாயால் எடுக்கும் வலி மருந்துகளைக் கொடுப்பதன் மூலமும் நிறையத் தண்ணீர் குடிப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலமும் உங்கள் குழந்தையின் வலியைக் குறைப்பதற்கு நீங்கள் உதவலாம்.

குமட்டல்

முழுமையான மயக்க மருந்து மற்றும் அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்குப் பின்னர் முதல் 24 மணித்தியாலங்கள் வரை உங்கள் குழந்தைக்குக் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுதல் சாதாரணமாகும். பொதுவாக ஓரிரு தினங்களில் குமட்டல் குறைந்துவிடும்.

உங்கள் குழந்தையின் உடல்நலப் பராமரிப்புக் குழு, சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் குமட்டல்களை வீட்டில் சமாளிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவார்கள்.

தழும்பு

உங்கள் பிள்ளையின் முதுகில் அநேகமாகச் சில நாட்களுக்கு தழும்பு காணப்படும்.

இரத்தப்போக்கு

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி சிறுநீரகங்களில் இரத்தப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனால் சிகிச்சைக்குப் பின்னர் சில நாட்களுக்கு உங்கள் குழந்தையின் சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கு இடமளிக்கும்.

தடைப்பட்ட சிறுநீர்க் குழாய்

சில நேரங்களில் சிறுநீரகக் கற்துகள்கள் உடலிலிருந்து வெளியேறும்போது சிறுநீர்க் குழாயைத் தடைசெய்யலாம். இதனால் காய்ச்சல் ஏற்படுவதுடன் வலியும் அதிகரிக்கலாம். உங்கள் குழந்தையின் சிறுநீர்க் குழாய் தடைசெய்யப்பட்டால், உங்கள் குழந்தையின் சிறுநீர் அந்த அடைப்பை மேவுவதற்காக ஒரு தற்காலிக ஸ்ரென்ற்(குழாய்) உட்புகுத்த வேண்டுமென்று உங்கள் குழந்தையின் சத்திரசிகிச்சை நிபுணர் முடிவுசெய்யலாம்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்குப் பின்னர் உங்கள் குழந்தையை எப்படிப் பராமரிப்பது

சிகிச்சைக்குப் பின்னர் வீட்டில் உங்கள் குழந்தையைப் பராமரிப்பதற்கு உங்களுடைய குழந்தையின் மருத்துவர் மற்றும் தாதியினது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

அவர்கள் பொதுவாக உங்கள் குழந்தைக்கான பின்வரும் அறிவுறுத்தல்களைக் கொடுப்பார்கள்:

  • அதிகளவு பானங்கள், விசேடமாக தண்ணீர் அருந்துதல்
  • தேவையேற்படின், அவர்களது உணவை மாற்றுதல்
  • வலி மற்றும் குமட்டலைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்து உட்கொள்ளுதல்
  • அதிகளவு ஓய்வெடுத்தல்.

உங்கள் குழந்தைக்கு கழிப்பறைப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது தாதி உங்கள் குழந்தையின் சிறுநீரைப் பலநாட்களுக்கு வடிகட்டுமாறு அறிவுறுத்துவதுடன் இதை எப்படிச் செய்வதென்று விளக்கப்படுத்துவார்கள்.

சிறுநீர்க் கற்துகள்களை ஒரு ஆய்வுகூடத்தில் பகுப்பாய்வு செய்யப்படுவதற்காக அவற்றை நீங்கள் சேகரிப்பதற்கு சிறுநீர் வடிகட்டல் உதவும். உங்கள் குழந்தையின் மருத்துவர், உங்கள் குழந்தையைக் கண்காணிப்பதற்கும் சிறுநீர்க் கற்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும்பொருட்டு பரிந்துரைப்புகள் (உணவில் மாற்றங்கள் போன்றவை) வழங்குவதற்காகவும் கல்லின் அமைப்புப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துவார்.

வழமையான நடவடிக்கைகளுக்கு எப்போது எனது குழந்தை திரும்ப முடியும்?

சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு தினங்களில் வலி அல்லது அசௌகரியம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் உங்கள் குழந்தை, குழந்தைப் பராமரிப்பு அல்லது பாடசாலை உள்ளடங்கலான வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். வலி கையாளப்படுதல் போதுமானது என்பதை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் குழந்தைக்கு வலிக்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

சிகிச்சைக்குப் பின்னர் உடனடியாக வழமைபோல உங்கள் குழந்தை முழுகலாம் அல்லது குளிக்கலாம்.

அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்குப் பின்னர் எப்போது ஒரு மருத்துவரைப் பார்க்கவேண்டும்

பொதுவாக, உங்கள் குழந்தையின் மருத்துவர் அதிர்ச்சி அலை லிதோட்றிப்சிக்கு பின்னர் கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறு மாதங்களின் பின்பு உங்களின் குழந்தைக்காக மீள்-நியமனம் ஒன்றை அட்டவணைப்படுத்துவார்.

அதற்கு முன்னர் உங்களுடைய குழந்தைக்கு கீழுள்ள அறிகுறிகள் ஏற்பட்டால் குழந்தையின் மருத்துவரை அழையுங்கள்:

  • சிறுநீர் கழிக்கவேண்டும் போல இருக்;கின்றது ஆனால் அப்படிச் செய்ய முடியாதிருக்கின்றது
  • 38.5°ஊ (101.5°கு) க்கு மேற்பட்ட காய்ச்சல் ஏற்படுதல்
  • உங்களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுதல்
  • குழந்தையின் சிறுநீரில் அளவுக்கதிகமான இரத்தம் காணப்படுதல் (உதாரணமாக, சிறுநீர் அதிகளவில் சிவப்பாக இருத்தல் அல்லது நாள் முழுவதும் இரத்தத் தடயங்கள் காணப்படுதல்)
  • தொடர்ச்சியான இருமல்
  • மூச்செடுப்பதில் சிரமம் அல்லது நெஞ்சு நோ
  • தாங்கமுடியாத வயிற்று வலி அல்லது முதுகு நோ.

முக்கிய குறிப்புகள்

  • அதிர்ச்சி அலை லிதோட்றிப்சி(ளுறுடு) என்பது சிறுநீர்க் கற்களை உடைத்துச் சிறுநீருடன் வெளியேற்றுவதற்காக உயர்-சக்தி அதிர்ச்சி அலைகளைப் பயன்படுத்தும் ஒரு அறுவைச் சிகிச்சை அற்ற ஒரு சிகிச்சை முறையாகும்.
  • ஒரு முழுமையான மயக்க மருந்துடன் செய்யப்படும் இச் சிகிச்சை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை நீடிக்கும். சிறுநீர்க் கற்கள் பெரிதாக இருந்தால் அல்லது முற்றாக உடைக்கப்படாவிட்டால் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படலாம். சிகிச்சைக்குப் பின்னர் வலி, குமட்டல், தழும்பு மற்றும் ஓரளவு இரத்தப்போக்கு இருப்பது சாதாரணமாகும். எந்த ஒரு வலியையோ அல்லது அசௌகரியத்தையோ கட்டுப்படுத்துவதற்கும், சிறுநீரகக் கற்துகள்களை வெளியேற்றும்பொருட்டு உங்களுடைய குழந்தைக்கு உதவுவதற்கும், உங்களுடைய குழந்தையின் உடல் நலப் பராமரிப்புக் குழுவின் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுங்கள்.
  • சிகிச்சைக்குப் பின்னர் வலி அல்லது குமட்டல் கட்டுப்படுத்தப்பட்டதும் இரண்டொரு தினங்களில் உங்கள் குழந்தை வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம்.
  • உங்களுடைய குழந்தைக்கு நோய் தொற்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்தல் இருந்தால்; அல்லது சிறுநீர் கழிக்கமுடியாதிருந்தால்;, மருந்து எடுக்கும்போதும் குமட்டுவது போலிருந்தால், சிறுநீரில் அதிகளவு இரத்தம் காணப்பட்டால் அல்லது மூச்செடுப்பதில் பிரச்சினைகள் இருந்தால் உங்களது குழந்தையின் மருத்துவரை அழையுங்கள்.
Dernières mises à jour: décembre 03 2014