வளர்ச்சியடைதலில் பின்னடைவு

Poor weight gain in infants and young children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சில நேரங்களில் குழந்தைகள் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியின் அளவுகோல்களை ஈடு செய்வதில்லை, மேலும் அவர்கள் காலத்திற்கேற்ற வளர்ச்சியை அடைவதில்லை

ஒரு பிள்ளை காலத்திற்கேற்றவாறு போதிய வளர்சியடையாமலிருக்கும்போது வளர்ச்சியடைதலில் பின்னடைவு ஏற்படுகிறது. வளர்ச்சியடைதலில் பின்னடைவுள்ள பிள்ளைகளுக்குச் சிசிச்சையளிக்காமல் விடும்போது அவர்களுக்கு குள்ளமான தோற்றம், நடத்தை மற்றும் உணர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகள், மற்றும் முன்னேற்றமடைவதில் தாமதம் என்பன ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன.

வளர்ச்சியடைவதில் பின்னடைவு ஏற்படுவதற்கான காரணங்கள்

ஒரு பிள்ளை தனது வயதை விடச் சிறிய உருவமுடையவனாயிருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அது அவன் வளர்ச்சியடைவதில் பின்னடைகிறான் என்பதை அர்த்தப்படுத்தத் தேவையில்லை. உதாரணமாக, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பகாலத்தில் மனித இயல்புக்கு மாறான வளர்ச்சிக் கட்டுப்பாடுள்ள குழந்தைகள், வளர்ச்சிக்கான அட்டவணை வரைபடத்தில் ஐந்தாவது சதவீத இடத்தில் இருக்கிறார்கள். வழக்கமாக எதிர்பார்க்கப்படும் வீதத்தில் ஒரு குழந்தை வளரும்போது அவன் வளர்ச்சியில் பின்னடைந்தவனாகக் கருதப்படமாட்டான்.

எப்போதாவது தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் போதியளவு தாய்ப்பால் கிடைக்காமல் இருப்பதால் அல்லது தாய்ப்பால் ஊட்டும் திறமையில் பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக மெதுவாகத்தான் எடையில் அதிகரிக்கிறார்கள். இந்த நிலைமையில் ஒரு தாய்ப்பாலூட்டும் ஆலோசகர் மிகவும் பிரயோசனமாக இருப்பார்.  

வளர்ச்சியடைதலில் பின்னடைவு ஏற்படுவதற்கு பல வகையான நிலைமைகள் காரணமாக அல்லது பங்களிப்பதாக இருக்கலாம். மன உளைச்சல் பெரும்பாலும் பங்களிக்கும் ஒரு காரணம் ஆகும். உதாரணமாக, மனச்சோர்வடைந்த ஒரு தாய்க்குத் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதில் கஷ்டங்கள் இருக்கலாம். குழந்தை பால் குடிப்பதிலிருந்து பின்வாங்குவதன் மூலம் தன் தாயின் மனச்சோர்வுக்குப் பிரதிபலிக்கலாம். இது அவனைக் குறைந்தளவு தாய்ப்பால் குடிக்கச் செய்யும். அத்துடன், பெற்றோர்கள் தாய்ப்பாலூட்டுவதைக் குறித்து அளவுக்கதிகமாகக் கவலைப்பட்டு தங்கள் குழந்தையை உணவு உண்ணும்படி வற்புறுத்தினால் இது தாய்ப்பாலூட்டும் பிரச்சினைகளுக்கும் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படவும் வழிநடத்தும்.

ஒரு குழந்தைக்கு மிகவும் நீர்த்தன்மையான ஃபொர்மூலா கொடுக்கப்பட்டால், அது அவன் உட்கொள்ளும் கலோரியின் அளவைப் பாதிக்கும் மற்றும் இது வளர்ச்சியடைதலில் பின்னடைவுக்கு வழிநடத்தும். அத்துடன் பசுப்பாலுக்கு ஒவ்வாமையுள்ள குழந்தைகளுக்கு வழக்கமான ஃபொர்மூலாவிலிருந்து ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி எடுப்பதிலும் பிரச்சினைகள் இருக்கலாம். சில பிள்ளைகளுக்கு, கடுமையான இரப்பை உணவுக்குழாய் எதிர்த் தாக்கம் அல்லது போதியளவு கலோரிகள் உட்கொள்ளும் ஆற்றலில் குறுக்கிடும் பிறவிக் குறைபாடு போன்ற குறிப்பிட்ட தாய்ப்பாலூட்டும் கஷ்டங்கள் இருக்கலாம்.

சில பிள்ளைகள் சரியான முறையில் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சும் ஆற்றலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிலைமைகளைக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமைகளின் உதாரணங்கள் ஊட்டச் சத்தை உறிஞ்சமுடியாத குடல் நோய், சிறுநீர்ப்பை வீக்கம், ஈரல் நோய், மற்றும் குறிப்பிட்ட இரப்பைக்குடல் பிரச்சினைகள் போன்றவையாகும்.

வளர்ச்சியடைவதில் பின்னடைவு நோயைக் கண்டுபிடித்தல்

வளர்ச்சியடைதலில் பின்னடைவு நோயைச் சாதாரணமாகக் குடும்ப மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களால் பார்க்கமுடியும். ஊட்டச்சத்துக் குறைவையும் முன்னேற்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் தடுப்பதற்குக் காலந்தவறாது நோயைக் கண்டுபிடித்தலும் சிகிச்சை செய்தலும் தேவைப்படுகிறது. குழந்தையின் எடை, உயரம், மற்றும் தலையின் சுற்றளவை அவ்வப்போது கவனமாக அளந்து அட்டவணை வரைவுப் படம் தயாரித்து, தரப்படுத்தப்பட்ட வளர்ச்சி அட்டவணை வரைவுப் படத்தின் அளவுகளுடன் ஒப்பிடுவது வளர்ச்சியடைதலில் பின்னடைவு நோயைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

உலக சுகாதார சங்கத்திலிருந்து, பெண்பிள்ளைகளுக்கான சில பெறப்பட்ட எடை மற்றும் வளர்ச்சிக்கான அட்டவணைகளில் சில பின்வருமாறு (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்):

உலக சுகாதார சங்கத்திலிருந்து, ஆண்பிள்ளைகளுக்கான சில பெறப்பட்ட எடை மற்றும் வளர்ச்சிக்கான அட்டவணைகளில் சில பின்வருமாறு (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்):

உங்கள் பிரதேசத்தில் உபயோகிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையை உங்கள் குழந்தையின் மருத்துவர் உபயோகிப்பார்.

உடல்நலத்துக்கான தேசீய நிறுவனங்கள் வளர்ச்சியடைதலில் பின்னடைவுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகிறார்கள்:

  • தரப்படுத்தப்பட்ட வளர்ச்சி அட்டவணையை விட, மூன்று சதவீதம் குறைவான எடை
  • உயரத்துக்கான சிறந்த எடையைவிட 20% குறைவான எடை, அல்லது
  • முன்பு நிலைநாட்டப்பட்ட வளர்ச்சி வரைவில், வளைவு வரைகோட்டில் குறைவுபடுதல்

மறுபட்சத்தில், அநேக குடும்ப மருத்துவர்கள், ஒரு பிள்ளை வயதுக்கான எடை அட்டவணையில் ஐந்து சதவீதம் குறைவுபடும்போது, அல்லது அவனது வயதுக்கான எடை அட்டவணையில் இரண்டு சதவீதக் கோட்டைத் தாண்டும்போது அவன் வளர்ச்சியடைதலில் பின்னடைவுள்ளவனாகக் கண்டறிகிறார்கள். வேறு குடும்ப மருத்துவர்கள், பிள்ளை வயதுக்கான உயரம் அல்லது உயரத்துக்கான எடையில் பத்து சதவீதத்துக்குக் கீழ் குறைவுபடும்போது அவன் வளர்ச்சியடைதலில் பின்னடைவுள்ளவனாகக் கண்டறிகிறார்கள்.

உங்கள் மருத்துவர் உங்கள் பிள்ளை வளர்ச்சியடைதலில் பின்னடைவுள்ளவன் எனத் தீர்மானித்தால், ஒரு கவனமான மதிப்பீடு செய்வார் மற்றும் பின்வருவனவற்றைப்பற்றி உங்களிடம் கேட்பார்:

  • உணவு மற்றும் தாய்ப்பாலூட்டுதல் நடவடிக்கைகள்: ஒரு நாளில் உட்கொள்ளப்படும் உணவு மற்றும் தாய்ப்பால்/ஃபொர்மூலா என்பனவற்றின் அளவு, ஃபொர்மூலா எப்படித் தயாரிக்கப்படுகிறது, மற்றும் உங்கள் பிள்ளையுடன் உங்களுக்கு "உணவூட்டும் போராட்டம்" எதாவது இருக்கிறதா
  • மருத்துவ வரலாறு: உங்கள் குழந்தையின் பிறப்பு; சமீப கால நோய்கள் அல்லது நீடித்த மருத்துவ நிலமைகள்; கடந்த காலத்தில் மருத்துவமனை அனுமதிப்புகள்; காயங்கள்; அல்லது விபத்துக்கள்; எதாவது இரப்பைகுடல் சம்பந்தமான பிரச்சினைகள்
  • கடந்தகால மற்றும் தற்போதய மருந்துகள்
  • சமூக வரலாறு: பராமரிப்பாளர்களின் மதிப்பீடு, புறக்கணிக்கப்பட்டதாக ஏதாவது வரலாறு இருக்கிறதா, மற்றும் குடும்பத்தில் ஏதாவது மன உளைச்சல் ஏற்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றனவா
  • குடும்ப வரலாறு: பிள்ளையின் சகோதரர்களுக்கு மருத்துவ நிலைமைகள்கள் அல்லது வளர்ச்சியடைதலில் பின்னடைவு இருக்கிறதா என மதிப்பீடு செய்தல்

உங்கள் பிள்ளையில் எதாவது முன்னேற்றப் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்காக மருத்துவர் அவனை மதிப்பீடு செய்வார். ஏனென்றால் இவை வளர்ச்சியடைதலில் பின்னடைவுள்ள பிள்ளைகளில் எழலாம்.

பின்பு மருத்துவர் உங்கள் பிள்ளையில் ஒரு உடற்பரிசோதனை செய்வார். உங்கள் பிள்ளையின் வளர்ச்சிக் குறைவுக்கு, குறைந்த ஊட்டச்சத்து தான் காரணமா என்பதை அவர் மதிப்பீடு செய்வார். பிறப்பியல் ஒழுங்கின்மை அல்லது உங்கள் பிள்ளையின் வளர்ச்சியைக் கெடுக்கக்கூடிய அடிப்படை நோய்களின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என மருத்துவர் ஆராய்வார். பிள்ளைத் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு என்பனவற்றை அறிவுறுத்தக்கூடிய அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்றும் அவர் ஆராய்வார்.

மருத்துவர் உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்குமிடையிலுள்ள பரஸ்பர ஒற்றுமையையும் அவதானிப்பார். உங்கள் பிள்ளக்குத் தாய்ப்பாலூட்டும்படி அல்லது அவனுக்காக ஒரு சிற்றுண்டியைக் கொண்டுவரும்படியும் கேட்கப்படலாம். மதிப்பீடு உங்கள் பிள்ளை பசியாயிருக்கும்போது செய்யப்படவேண்டும். மருத்துவர் உங்கள் பிள்ளையின் மனப்போக்கு மற்றும் அவனது சைகைகளுக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள் என்பதையும் மதிப்பீடு செய்வார். இந்தத் தகவல்கள், உங்கள் பிள்ளைக்குச் சிகிச்சையளிக்க மிகச் சிறந்த செயல்முறைத் திட்டம் எது என்பதைத் தீர்மானிக்க மருத்துவருக்கு உதவலாம்.

உங்கள் பிள்ளைக்கு குறிப்பிட்ட நிலைமைகள் அல்லது ஒழுங்கற்ற தன்மை இருப்பதாக மருத்துவர் சந்தேகிக்காவிட்டால், இந்த நிலைமையில் ஏதாவது ஆய்வுகூடப் பரிசோதனைகள் செய்யும்படி பெரும்பாலும் உங்கள் மருத்துவர் உங்களைக் கேட்கமாட்டார். ஆயினும், உங்கள் பிள்ளையின் உணவுமுறையில் மாற்றங்கள் செய்த பின்னரும் உங்கள் பிள்ளை வளர்ச்சியில் குறைவுபட்டால், மருத்துவர் சில இரத்தப் பரிசோதனைகள் அல்லது ஒரு சிறுநீர்ப் பரிசோதனை செய்யும்படி கேட்கலாம்.

வளர்ச்சியடைவதில் பின்னடைவு நோயைச் சமாளித்தல்

வளர்ச்சியடைவதில் பின்னடைவு நோயைச் சமாளிப்பதற்கு முதற்படி, அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை செய்வதாகும். இது ஆரம்பித்தவுடனே, வளர்ச்சியடைவதில் பின்னடைவு நோய், பிள்ளையின் உணவு முறை மற்றும் தாய்ப்பாலூட்டும் நடவடிக்கைகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலம் சமாளிக்கப்படும். வளர்ச்சியடைவதில் பின்னடைவு நோயுள்ள எல்லாப் பிள்ளைகளுக்கும் அவர்களின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க, அதிக-கலோரியுள்ள உணவுகள் தேவைப்படும். அவர்களுக்கிருக்கவேண்டிய எடையை எட்டும்வரை மாத்திரமல்ல, காலப்போக்கில் எடையைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும், குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை வைத்திருக்கவேண்டும்.

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஒரு கிலோகிராமுக்கு மூன்று மடங்கான கலோரிகள் தேவைப்படும். ஆகவே ஒரு குழந்தை வளர்ச்சியில் பின்தங்கும் நிலை எற்படுவதை புரிந்துகொள்வது சுலபம். உங்கள் பிள்ளை உட்கொள்ளும் உணவின் அளவைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டால், அவனது உணவு முறையைப் பற்றிய மூன்று-நாள் நாட்குறிப்பேட்டை வைத்திருக்க முயற்சி செய்யவும். மூன்று-நாட் காலப்பகுதியில் உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா உணவுகளையும் அவற்றின் அளவுகளையும் எழுதி வைக்கவும். இந்தப் பட்டியலை உங்கள் மருத்துவரிடம் கொண்டுவாருங்கள். அதன்மூலம் உங்கள் பிள்ளையின் உணவுமுறை மற்றும் உட்கொள்ளப்பட்ட சக்தியின் அளவு என்பனவற்றை உங்கள் மருத்துவரால் மதிப்பீடு செய்யமுடியும்.

உங்கள் பிள்ளை வளர்ச்சியடைவதில் பின்னடைவுள்ளவனாக இருக்கிறான் என உங்கள் மருத்துவர் தீர்மானித்தால், உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் உணவிலுள்ள கலோரிகளின் அளவை அதிகரிக்கவேண்டியிருக்கும். வளர்ச்சியடைவதில் பின்னடைவுள்ள பிள்ளைகள், அவர்களுக்காக எதிர்பார்க்கப்பட்ட எடையின் அடிப்படையில், அவர்களுக்கு உட்கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்ட தினசரி கலோரிகளைவிட 50% அதிகமானா கலோரிகள் உட்கொள்ளவேண்டும். உதாரணமாக, 10 நாட்கள் முதல் ஒரு மாத வயதுவரையிலான ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு ஒரு நாளைக்கு 120 கலோரி/கிலோகிராம் தேவைப்படும். ஆனால் அதே வயதுள்ள, வளர்ச்சியடைவதில் பின்னடைவுள்ள குழந்தைக்கு 50% அதிகமான கலோரிகள், அல்லது 180 கலோரி/கிலோகிராம் தேவைப்படும்.

உங்கள் குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கிறான் அல்லது புட்டிப்பால் மாத்திரம் குடிக்கிறான் மற்றும் இன்னும் திட உணவு உண்ண ஆரம்பிக்கவில்லை, மற்றும் உங்கள் குடும்ப மருத்துவர் உங்கள் குழந்தை உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என உணருகிறார் என்றால் அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி அவர் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவார்.

உங்கள் குழந்தை ஏற்கனவே திட உணவு உட்கொள்ளுகிறான் என்றால் அவனது மற்ற மசிக்கப்பட்ட உணவுகளுடன் றைஸ் சீரியலைச் சேர்ப்பதன் மூலம் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்கலாம். அதிக-கலோரிகளுள்ள சில பால் திரவ உணவுகளும் கூடக் கிடைக்கப்பெறலாம். இவற்றை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கமுடியுமா என உங்கள் மருத்துவருடன் கலந்து பேசவும்.

வளர்ந்த குழந்தைகள் மற்றும் நடைபயிலும் குழந்தைகள் உட்கொள்ளும் கலோரியின் அளவுகளை அதிகரிப்பதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் பிள்ளையின் மற்ற உணவுகளுடன் விரும்பத்தக்க சுவைகள், சீஸ், சவர் கிறீம், மற்றும் பட்டர் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் பிள்ளைக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் கனிப்பொருட்களைப் அவன் பெற்றுக்கொள்ளுகிறான் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள பலவகைப்பட்ட விட்டமின்களின் சேர்க்கை உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் உங்கள் சிறிய குழந்தைக்கு இவை பொருத்தமானவையா என உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு வளர்ச்சியடைவதில் பின்னடைவு இருக்கின்றதனால் நீங்கள் கவலையடைவீர்கள் என்றாலும், உங்கள் பிள்ளையை உணவு உட்கொள்ளும்படி வற்புறுத்தாமலிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வது முக்கியம். உணவு நேரத்தை இன்பகரமானதாக்க முயற்சி செய்யவும், ஒழுங்காக அட்டவணையிடவும். அவசரப்படுத்த வேண்டாம். உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து நீங்களும் உணவு உண்ணவும். உங்கள் பிள்ளை திட உணவுகளை உட்கொள்பவனாக இருந்தால், அவனது உயர்ந்த இருக்கையில் வசதியாக உட்கார்ந்திருந்து தன் தலையை உயர்த்திவைத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவனை அடக்கிவிடாதபடி, சிறிய உணவுப் பகுதியில் தொடங்குங்கள். பின்பு படிப்படியாக அளவை அதிகரியுங்கள். பல விதமான உணவுகளை உண்பதற்கு அவனை உற்சாகப்படுத்துங்கள். அவனுக்கு எல்லா நாலு உணவுப் பிரிவுகளும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், ஒவ்வொரு உணவு நேரத்தின்போதும் ஒவ்வொரு உணவுப்பிரிவிலிருந்தும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள நிச்சயமாயிருங்கள்.

இந்த ஆரம்பப் படிகளை எடுத்ததன் பின்னர், இன்னும் உங்கள் பிள்ளை போதியளவு எடையை அடையாவிட்டால், ஒரு மருத்துவ நிபுணர் அல்லது ஒரு மருத்துவ நிபுணர் குழுவிடம் அவனுக்காக ஆலோசனை கேட்க வேண்டும். மருத்துவர்கள், தாதிகள், நல உணவு வல்லுனர்கள், சமூக சேவகர்கள், மற்றும் உளவியலாளர்கள் என்பவர்களை உபயோகித்து ஒரு கூட்டு அணுகுதல் முறை முதலில் நடைமுறையற்றதாக இருக்கலாம். ஆயினும், விசேஷமாக, உங்கள் பிள்ளை கண்டுபிடிக்கப்படாத நிலைமை அல்லது மிகவும் சவாலான சமூக சூழ்நிலைமைகளால் பாதிக்கப்படும்போது இது மிகவும் பிரயோசனமான தீர்வாக இருக்கும்.

Dernières mises à jour: octobre 18 2008