புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு

Skin care, nail care and dental care for babies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சிசுக்களில் தோல் பராமரிப்பு, நகப் பராமரிப்பு, மற்றும் பற்பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படித்துப் பார்க்கவும். பலன்தரும் சிகிச்சை தொடர்பான உபயோகமுள்ள குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

தோல் பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக மற்றும் மிருதுவானதாக இருக்கும். வருடத்தில் எந்நேரமும் விசேஷ கவனிப்பைத் தேவைப்படுத்தும். உங்கள் குழந்தை இன்னும் சூரியஒளிப் பாதுகாப்பு (சன் ஸ்கிரீன்) அணிய முடியாததினால் நேரடியான சூரிய ஒளியிலிருந்து அவனைப் பாதுகாத்து வைக்கவும். விசேஷமாக, வெப்பமான மாதங்களில் பகல் 11 மணிக்கும் பிற்பகல் 4 மணிக்கிடையிலும் அவ்வாறு செய்யவும். கோடை காலங்களில், அவனது முகத்தைப் பாதுகாப்பதற்காக, அகன்ற விளிம்புள்ள தொப்பி அணிவிப்பதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தைக்கு வெயிற்கொப்பளங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவ கவனிப்பை நாடவும்.

குளிர் காலங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை அனலாக வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உறைபனியால் விறைத்துப் போவதைத் தவிர்ப்பதற்கு முடிந்தளவுக்கு அவனது தோலை மூடிவைக்கவும். அவனது அறையிலுள்ள காற்றை ஈரலிப்பாக வைப்பதற்காக ஈரப்பதமூட்டியை உபயோகிக்கவும். ஆனால் பூஞ்சனம் உண்டாவதைத் தடுப்பதற்காகக் கருவியை சுத்தமாக வைத்திருக்கவும். பூஞ்சனம் காற்றின் மூலமாகப் பரவி சுவாச உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

நகப் பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் கைவிரல் நகங்கள் மிகவும் சிறிய, மென்மையான, மற்றும் மெல்லியனவாக இருந்தாலும், அவனுக்கு சொறியும் பழக்கம் இருந்தால் அது அவன் முகத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, அவனது கைவிரல் நகங்கள் நன்கு நேர்த்தியாக வெட்டப்பட்டிருப்பது முக்கியமானது. நக வெட்டியை உபயோகிக்கும்போது, அவனது விரல் வெட்டப்படாதிருப்பதற்காக, விரலின் மெத்தென்ற பகுதியை நகத்திற்கு வெளியே தள்ளிவைக்கவும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதலில் நகவெட்டியை உபயோகிக்கும்போது பயமாக இருக்கலாம். எனவே, நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், எமரி போர் ஒன்றை உபயோகிக்கவும். இது சொரசொரப்பான ஒரு பட்டை, இதைக்கொண்டு நகங்களை அரவி விடலாம்.

உங்கள் குழந்தையின் நகங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவாக வளரும். அவனது கைவிரல் நகங்கள் ஓரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைகள் வெட்டப்படவேண்டியிருக்கலாம்.

பற்பராமரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இதுவரை பற்கள் எதுவுமே இருக்காது. ஆயினும், ஒரு பற்பராமரிப்பு ஒழுங்கைத் தொடங்குவதற்குச் சரியான நேரம் இதுதான். உங்கள் குழந்தையின் கடைசிப் பாலூட்டலின் பின்னர் ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்ய முயற்சிக்கவும்.

சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பற்களுடன் பிறக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கும் இந்த நிலைமையானால், ஒரு மென்மையான குழந்தை பற்தூரிகையினால் பல் துலக்குவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இதை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவும்; முதலாவது மற்றும் கடைசிப் பாலூட்டல்களுக்குப் பின்பாக இதைச் செய்யவும்.ஆறு மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பற்பசை அவசியமில்லை, இது அளவுக்கதிகமான ஃபுளோரைட்டைக் கொடுக்கலாம்.

பற்சிதைவைத் தவிர்ப்பதற்கான இன்னொரு வழி, உங்கள் குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக அல்லது இரவு படுக்கையில் ஒரு போத்தலைக் கொடுப்பதைத் தவிர்ப்பதாகும். உங்கள் குழந்தைக்கு பற்களில் சிதைவு ஏற்படும்போது, இரவில் ஒரு போத்தல் பால் கொடுப்பது அவனது பற்களை நிரந்தரமாகச் சேதப்படுத்தும். இரவில் போத்தலுடன் படுக்கும் பழக்கம் குழந்தைக்கு இருந்தால், பாலுக்கு பதிலாக அதை தண்ணீரால் நிரப்பவும்.

Last updated: October 18 2009