HIV யும் கர்ப்பமும்

HIV and pregnancy [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நீங்கள் கர்ப்பத்தின் போது HIV-யால் தாக்கப்பட்டிருந்தால், உங்களது குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான அபாயத்தை குறிப்பிட்ட சில மருந்துகள் எவ்வாறு குறைக்கமுடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

HIV என்பது என்ன?

HIV என்பது ஹியூமன் இம்யூனோடிஃபிஷியன்ஸி வைரஸ் அதாவது மனித நோயெதிர்ப்புத் தொகுதியை மந்தமாக்கும் வைரஸ் என்பதாகும். HIV, நோயெதிர்ப்புத் தொகுதியின் குறிப்பிட்ட கலன்களை தொற்றிக்கொள்ளும் ஒரு வைரஸாகும். இது காலப்போக்கில் நோயெதிர்ப்புத் தொகுதியைப் பலவீனப்படுத்திவிடும். இது ஒரு நபருக்கு வேறு கடுமையான தொற்றுநோய்கள் வரக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

HIV தொற்றுநோயுள்ள ஒரு பெண் ( HIV- பொசிடிவ்) தன் குழந்தைக்கு அத்தொற்றுநோயை கடத்த முடியும். HIV யானது கர்ப்பத்தின்போது, பிரசவத்தின் போது அல்லது தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்குக் கடத்தப்படலாம். சில பெண்கள் கர்ப்பமாகி பரிசோதனை செய்யப்படும்வரை தங்களுக்கு HIV இருப்பதை அறியாதிருக்கிறார்கள்.

நீங்கள் HIV-பொஸிடிவ்வானவராக இருந்து கர்ப்பமடைந்திருக்கிறீர்கள் அல்லது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிடுகிறவரென்றால், உங்கள் குழந்தை HIV யைப் பெற்றுக்கொள்ளும் அபாயத்தைக் குறைப்பதெப்படி என்பதை இப்பக்கம் விளக்குகிறது.

நீங்கள் கர்ப்பினியாக முன்பும், கர்ப்பினியாயிருக்கும்போதும் அதற்குப் பின்னும் நல்ல பராமரிப்பைப் பெற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைக்கு HIV ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவாகும்.

நீங்கள் HIV-பொஸிடிவ்வானவரென்றால், நீங்கள் ஒரு HIV நிபுணரைப் பார்த்துவர வேண்டும். நீங்கள் கர்ப்பமடைந்திருக்கிறீர்கள் அல்லது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிடுகிரறீர்கள் என்றால், இது இன்னுமதிக முக்கியமாகும். உங்கள் HIV நிபுணர் பின்வருவனவற்றைச் செய்வார்:

  • பாதுகாப்பானதும் உங்களுக்கான மிகச் சிறந்த கூட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
  • மருந்துகள் வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் இரத்தத்திலிருக்கும் வைரசுகளின் எண்ணிக்கையை (வைரல் ளோட்) கண்காணித்து வருவார்.

உங்கள் கர்ப்பகாலத்தின்போது நீங்கள் ஒரு பிரசவமருத்துவரையும் (ஓப்ஸ்டட்ரிசியன்) பார்க்கவேண்டும். பிரசவகாலத்தின்போதும், பிரசவ வேதனைக் காலம், பிரசவம் மற்றும் பிள்ளை பிறந்த பின்வரும் சில வாரங்களுக்கும் பெண்களைப் பராமரிப்பதில் விசேஷ பயிற்சிபெற்ற மருத்துவரே ஒரு பிரசவ மருத்துவராவார்.

உங்கள் குடும்ப வைத்தியர் அல்லது உங்களின் நோயை அடையாளம் கண்ட கிளினிக், உங்களை ஒரு HIV நிபுணரிடமும் ஒரு பிரசவவைத்தியரிடமும் அனுப்புவார்கள்.

HIV க்காண மருந்து

HIV குணப்படுத்த முடியாது, ஆனால் உங்களை ஆரோக்கியமானவராக வைத்திருக்கக்கூடிய மருந்துகள் இருக்கின்றன. உங்கள் வைரஸ் தொகையை கட்டுப்படுத்திவைத்திருப்பதற்கு மருந்துகள் உதவுகின்றன. உங்கள் வைரஸ் தொகையைக் குறைவாக வைத்திருப்பது, உங்கள் குழந்தை HIV தொற்றைப் பெறுவதிலிருந்தும் பாதுகாக்கும்.

நீங்கள் கர்ப்பினியாகும் முன்பு HIV மருந்தை உட்கொள்பவரானால் என்ன செய்யவேண்டும்

உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஆனால் சில மருந்துகள் கர்ப்பத்தின்போது பாதுகாப்பனவையல்ல. நீங்கள் ஏற்கெனவே HIV மருந்தை எடுப்பவராக இருப்பதோடு கர்ப்பமடைய விரும்புகிறவராக அல்லது கர்ப்பமடைந்திருக்கிறீர்களா என்பதை அறிய விரும்புபவராக இருந்தால் அதை உங்கள் HIV நிபுணரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்குத் தேவையான மிகச் சிறந்த மருந்தை பரிந்துரைப்பார்.

உங்கள் குழந்தை HIV பெற்றுக்கொள்ளும் ஆபத்தை மருந்துகள் குறைக்கும்

கர்ப்பத்தின்போது HIV மருந்தை எடுப்பது நீங்கள் உங்கள் குழந்தைக்கு வைரஸைக் கடத்தும் அபாயத்தைக் குறைக்கும். கர்ப்பத்தின்போது ஒரு பெண் மருந்துகளை எடுத்தும் பிரசவ நேரம் வருகின்ற வேளையில் அவருடைய வைரஸ் தொகை குறைவாகவுமிருந்தால் குழந்தைக்கு வைரஸைக் கடத்தும் அபாயம் மிகவும் குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உங்கள் HIV நிபுணரும் பிரசவ மருத்துவரும் கர்ப்பகாலத்தின்போது உங்கள் வைரஸ் தொகையை கண்காணித்து வருவார்கள். இது உங்கள் மருந்துகள் வேலைசெய்கின்றன என்பதையும் உங்கள் குழந்தை தொற்றுநோயைப் பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும்.

HIV: மருந்து மற்றும் வைரஸ் தொகைமருந்து எடுக்காத இரத்தத்திலுள்ள பல HIV கலங்கள் மற்றும் மருந்து எடுக்கும் இரத்தத்திலுள்ள ஒரே ஒரு HIV கலம்
HIV மருந்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள HIV இன் எண்ணிக்கையை குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள வைரசுக்களின் எண்ணிக்கை, வைரஸ் லோட் எனப்படுகின்றது. வைரஸ் லோட் குறைவாக இருக்கும்போது உங்கள் பிள்ளைக்கு HIV ஐ கடத்தும் ஆபத்து பெரிதும் குறைகின்றது.

எப்போது மற்றும் எவ்வளவு காலம் நீங்கள் HIV மருந்து எடுப்பீர்கள் என்பது உங்கள் சூழ்நிலையைப் பொருத்ததாகும்

நீங்கள் HIV மருந்தை எடுக்கவேண்டிய நேரங்கள் பற்றி உங்கள் HIV நிபுணர் உங்களிடம் கலந்துரையாடுவார்.

  • உங்களுடைய சுய ஆரோக்கிகயத்திற்காக நீங்கள் மருந்தெடுக்க வேண்டியவராக இருப்பீர்களென்றால், குழந்தை பிறந்த பின்பும் நீங்கள் தொடர்ந்து மருந்து எடுக்கவேண்டும்.
  • வேறு பெண்களுக்கு அவர்களின் HIV தொற்றுநோயின் நிலையைப் பொறுத்து மருந்தெடுக்கும் தேவையில்லாதிருக்கலாம். உங்கள் சுய ஆரோக்கியத்திற்காக உங்களுக்கு HIV மருந்து தேவைப்படவில்லை என்றால், கர்ப்பகாலத்தின் மூன்றாவது மாதத்தின் பின் நீங்கள் மருந்தெடுக்க ஆரம்பிக்கவேண்டும். உங்கள் குழந்தை பிறக்கும் வரையில் மாத்திரமே நீங்கள் அதை எடுக்கவேண்டும். எப்போது மருந்தெடுப்பதை நிறுத்தவேண்டும் என்பது பற்றி உங்கள் HIV நிபுணரிடம் பேசுங்கள்.

HIV மருந்துகளில் பல கர்ப்பமாயிருக்கும்போது பாதுகாப்பானவையாகும்

சில HIV மருந்துகள் கர்ப்பகாலத்தின்போது மிகவும் பாதுகாப்பனவை. அவை, சைடொவுடைன் (AZT), லமிவுடைன் (3TC) மற்றும் லொவினபிர்/ரிடொனவிர் (கலெட்ர) ஆகியவற்றை உட்படுத்தும். கடந்த காலங்களில் வேறு மருந்துகள் உபயோகிக்கப்பட்டன மற்றும் தற்போது பெரும்பாலும் மிகப் புதிய மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன. சில மருந்துகள் கர்ப்பகாலத்தின் போது நிச்சயமாகவே பாதுகாப்பில்லாதவை. உங்கள் HIV நிபுணர் உங்களுக்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் மிகச் சிறந்த மருந்துகளை பரிந்துரைக்க உதவலாம்.

சாதாரண பிரசவமும் அறுவைச் சிகிச்சைப் பிரசவமும் (சீ-செக்ஷன்)

குழந்தை பிறக்கும்போது உங்கள் வைரஸ் தொகை 1000 க்கும் அதிகமாக இருந்தால், கருப்பை மேற்புறத் திறப்பின் மூலம் குழந்தையை எடுப்பது குழந்தைக்கு HIV கடத்தப்படும் அபாயத்தைக் குறைக்கும். பின்வருவனவற்றின் ஏதாவது ஒரு காரணத்தினால் வைரஸ் தொகை உயரலாம்:

  • மருந்து வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்தாவிட்டால்
  • நீங்கள் கர்ப்பகாலத்தின் பிற்பகுதியில் மருந்தை எடுக்க ஆரம்பித்திருந்தால்
  • நீங்கள் மருந்தை ஒழுங்காக எடுக்கவில்லை என்றால்

உங்கள் வைரஸ் தொகை 1000 க்கும் குறைவாக இருந்தால், கருப்பை மேற்புறத் திறப்பின் மூலம் குழந்தையை எடுப்பது குழந்தைக்கு எவ்வித பாதுகாப்பையும் தராது. சாதரண பிரசவத்தைவிட கருப்பை மேற்புறத் திறப்பின் மூலம் குழந்தையை எடுப்பது உங்களுக்கு பாதுகாப்பைக் குறைக்கும். இதன் காரணமாக, நீங்கள் பிரசவ வேதனை அடையும்போது உங்கள் வைரஸ் தொகை குறைவாக இருந்தால், நீங்கள் சாதாரணமான பிரசவத்தைப் பெறலாம்.

உங்கள் HIV நிபுணரிடமும் உங்கள் ஓப்ஸ்டட்ரிசியனிடமும், எந்தவிதமான பிரசவம் உங்களுக்கு மிகச் சிறந்தது என்பதுபற்றிப் பேசுங்கள்.

நீங்கள் பிரசவ வேதனை அடையும்போது என்ன செய்ய வேண்டும்

நீங்கள் பிரசவ வேதனைக்கு உள்ளாக ஆரம்பிக்கும்போதும் தொடர்ந்து மருந்துகளை எடுங்கள். உங்களுக்கு பிரசவ வேதனை தொடங்கிவிட்டதாக நீங்கள் சந்தேகித்த உடனேயெ நீங்கள் மருத்துவ மனைக்குச் செல்லவேண்டும். நீங்கள் எடுக்கும் மருந்துகளில் ஒன்று (AZT) நரம்புமூலம் (IV) உங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். IV என்பது நரம்பிற்குள் செலுத்தப்படும் மருந்தாகும். குழந்தை பிறப்பதற்கு முன் குறைந்தது 2 லிருந்து 4 மணி நேரங்களுக்கு முன் அதைப் பெற்றுக்கொள்வதே மிகச் சிறந்ததாகும்.

வாய் மூலம் மருந்து கொடுத்தல்மருந்தூசி ஒன்றின் ஊடாக குழந்தை மருந்து பெறுதல்

உங்கள் குழந்தை பிறந்ததும் எதை எதிர்பார்க்க வேண்டும்

குழந்தை பிறந்ததும் முதல் 24 மணி நேரங்களுக்குள் குழந்தைக்கு AZT கொடுக்கப்படவேண்டும். ஒரு நாளுக்கு 4 தடவைப்படி முதல் 6 வாரங்களுக்கு நீங்கள் இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டும். இது உங்கள் குழந்தை HIV தொற்றுநோயைப் பெற்றுக்கொள்ளும் அபாயத்தை மேலுமாக குறைக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கும் ஒரு HIV க்கான இரத்தப் பரிசோதனை தேவைப்படும்

உங்கள் குழந்தைக்கு முலைப்பாலூட்ட வேண்டாம். முலைப்பாலூட்டுவது HIV யை தாயிடமிருந்து பிள்ளைக்குக் கட்த்தும் ஒரு வழியாகும். உங்கள் குழந்தைக்கு ஃபோர்மூலாவே பாதுகாப்பன உணவாகும்.

மேலதிக தகவல்லுக்கு, தயவு செய்து "HIV யும் உங்கள் குழந்தையும்" ஐ வாசியுங்கள்

மேலதிக தகவல்களுக்கு

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது கருசனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அல்லது HIV கிளினிக்கைத் தொடர்புகொள்ளுங்கள். மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து பின்வருவனவற்றைக் காண்க:

மதரிஸ்க்

www.motherisk.org

CATIE: சமூக எயிட்ஸ் சிகிச்சைத் தகவல் பரிமாறுமிடம்

www.catie.ca

முக்கிய குறிப்புகள்

  • தங்கள் குழந்தைக்கு HIV யைக் கடத்தும் அபாயத்தைக் குறைக்க HIV உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளை எடுக்கவேண்டும்.
  • நீங்கள் மருந்துகளை எடுப்பதோடு உங்கள் வைரஸ் தொகையும் குறைவாக இருந்தால் பிரசவ நேரத்தின்போது உங்கள் குழந்தைக்கு HIV யைக் கடத்தும் அபாயம் மிகவும் குறைந்துவிடும்.
  • பிரசவத்தின்போது உங்கள் வைரஸ் தொகை 1000 மேலாக இருந்தால், கருப்பை மேற்புறத் திறப்பின் மூலம் குழந்தையை எடுப்பது உங்கள் குழந்தைக்கு HIV யைக் கடத்தும் அபாயத்தைக் குறைந்துவிடும்.
  • உங்கள் வைரஸ் தொகை 1000 குறைவாக இருந்தால், கருப்பை மேற்புறத் திறப்பின் மூலம் குழந்தையை எடுப்பது உங்கள் குழந்தைக்கு மேலதிக நன்மை ஒன்றையும் தரமாட்டாது. நீங்கள் குழந்தையை சாதாரணமாக பிரசவிக்கலாம்.
Last updated: டிசம்பர் 17 2009