Enoxaparin (எனோக்ஸாபரின்): வீட்டிலேயே ஊசி போடுதல்

Enoxaparin: Injecting at home [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளைக்கு enoxaparin ஊசி போடுவது எப்படி என்பதற்கான வழிகாட்டி.

முக்கிய குறிப்புகள்

  • Enoxaparin என்பது ஒரு இரத்த உறைவுத் தடுப்பி (anticoagulant - இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்து).
  • தேவையற்ற இரத்தக் கட்டிகள் உருவாகுவதை அல்லது இருக்கும் கட்டிகள் பெரிதாவதைத் தடுக்க Enoxaparin உதவுகிறது.
  • உங்கள் பிள்ளைக்குத் தேவைப்படும் காலம் வரைக்கும் இது கொடுக்கப்படும்.
  • Enoxaparin மருந்தை தொடை அல்லது மேல் கையில் (நான்கு முதல் ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு) ஊசி மூலம் செலுத்தலாம்.
  • இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது: பல்வேறு-டோஸ் உள்ள போத்தல் மற்றும் முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள்.
  • பல்வேறு-டோஸ் உள்ள போத்தலைப் பயன்படுத்தினால், சரியளவு சிரிஞ்களுக்கான பரிந்துரை உங்களுக்கு வழங்கப்படும். அவை இன்சுலின் சிரிஞ்சுகள் என்று அழைக்கப்படுகின்றன மற்றும் 30 அலகுகள் (3/10 மிலீ), 50 அலகுகள் (1/2 மிலீ) மற்றும் 100 அலகுகள் (1 மிலீ) ஆகிய அளவுகளில் கிடைக்கின்றன. சிரிஞ்சின் அளவு பரிந்துரைக்கப்படும் டோஸ் அளவைப் பொறுத்தது.
  • Enoxaparin மருந்தை குளிரூட்ட தேவையில்லை மற்றும் அறை வெப்பநிலையில் வைக்கப்படலாம்.
  • பல்வேறு-டோஸ் உள்ள போத்தலை ஒருமுறை திறந்தவுடன், 28 நாட்கள் வரைக்கும் பயன்படுத்தலாம்.
  • இன்சுலின் சிரிஞ்சில் 1 யூனிட் = 1 மிகி enoxaparin.

Enoxaparin என்றால் என்ன?

Enoxaparin என்பது ஒரு இரத்த உறைவுத் தடுப்பி (anticoagulant) ஆகும். இரத்தத்தில் உள்ள செல்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும் சாதாரண வழியை மாற்றுவதன் மூலம் இது செயல்படுகிறது. இது தேவையற்ற இரத்தக் கட்டிகள் உருவாகுவதை அல்லது இருக்கும் இரத்தக் கட்டிகள் பெரிதாவதைத் தடுக்க உதவுகிறது.

Enoxaparin, ஊசி மூலம் செலுத்துவதற்குரிய தெளிவான ஒரு திரவமாக வருகிறது.

வீட்டிற்குச் செல்வதற்கு முன்னர் எதிர்பார்க்க வேண்டியது என்ன

  1. உங்கள் பிள்ளை ஏன் enoxaparin எடுத்துக்கொள்கிறார் என்பதை விளக்கும் தகவல்கள் உங்களுக்குத் தரப்படும்.
  2. உங்கள் பிள்ளைக்கு enoxaparin ஊசி மருந்தை எப்படிக் கொடுப்பது என்று தாதி அல்லது மருந்தாளர் உங்களுக்குக் கற்பிப்பார். நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு enoxaparin கொடுக்கக் கற்றுக்கொள்ள அவர்கள் உங்களுக்கு உதவுவர். மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் ஒரு மருந்தகத்திலிருந்து நீங்கள் எடுக்கும் சிரிஞ்சுகளிலிருந்து சற்று வித்தியாசமாகத் தோன்றலாம் என்பதைத் தயவுசெய்து நினைவிற் கொள்ளவும்.
  3. உங்களுக்கு enoxaparin மருந்துக்குரிய பரிந்துரைச் சீட்டு வழங்கப்படும்.
  4. பல்வேறு-டோஸ் உள்ள போத்தல் மற்றும் இன்சுலின் சிரிஞ்சுகள் அல்லது முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகளுக்கான பரிந்துரைச் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். இன்சுலின் சிரிஞ்சுகள் 30 அலகுகள் (3/10 மிலீ), 50 அலகுகள் (1/2 மிலீ) மற்றும் 100 அலகுகள் (1 மிலீ) ஆகிய அளவுகளில் வருகின்றன. உங்களுக்குத் தேவைப்படும் சிரிஞ்சின் அளவு உங்கள் பிள்ளையின் மருந்தளவைப் பொறுத்தது.
  5. உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழு மருத்துவமனைப் பின்தொடர்தல் சந்திப்புகளை ஏற்பாடு செய்யும். திகதிகள் மற்றும் நேரங்கள் குறித்து உங்கள் விடுவிப்பு (discharge) அறிவுறுத்தல்களில் இருக்க வேண்டும் அல்லது தொலைபேசி மூலம் அல்லது தபால் மூலம் சந்திப்புகள் பற்றிய அறிவிப்பை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

உங்கள் பிள்ளை எவ்வளவு காலத்துக்கு enoxaparin எடுக்க வேண்டும்?

உங்கள் பிள்ளையின் சிகிச்சைக்கான காரணத்தைப் பொறுத்து, உங்கள் பிள்ளை எவ்வளவு காலம் enoxaparin எடுக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளையின் இரத்த உறைவுக்கான (thrombosis) குழு தீர்மானிக்கும்.

உங்கள் பிள்ளையின் சிகிச்சையை எப்போது நிறுத்துவது என்பதைத் தீர்மானிக்க, இந்த இரத்த உறைவுக்கான குழு அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ, எக்கோ கார்டியோகிராம் அல்லது சி.டி ஸ்கேன் போன்ற பின்தொடர்தல் இமேஜிங் சோதனைகளைச் செய்யலாம்.

இரத்தப் பரிசோதனை முடிவுகளைக் குறித்துவைத்தல்

இரத்தப் பரிசோதனை எங்கே, எப்போது செய்யப்படும் என்பது பற்றி உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவுடனும் இரத்த உறைவுக்கான குழுவுடனும் நீங்கள் கலந்தாலோசிப்பீர்கள்.

Enoxaparin மருந்தைச் சேமித்தல்

Enoxaparin மருந்தைக் குளிரூட்டத் தேவையில்லை மற்றும் அறை வெப்பநிலையில் (25 ° C க்கும் குறைவாக) வைக்கப்படலாம். நீங்கள் பல்வேறு-டோஸ் உள்ள போத்தலைத் திறந்தவுடன், அதை 28 நாட்கள் வரைக்கும் பயன்படுத்தலாம். 28 நாட்களுக்குப் பிறகு, அதில் மருந்து இருந்தாலும் கூட, அந்தப் போத்தலை எறிந்துவிட வேண்டும்.

முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள் ஒற்றைப் பயன்பாட்டுக்கு மட்டுமே உரியவை.

எவ்வளவு கொடுக்க வேண்டும்

டோஸ்களை 10 மணி நேர இடைவேளையில் மற்றும் 14 மணி நேரத்துக்குப் பிந்தாமல் கொடுக்கலாம்.

Enoxaparin பல்வேறு வீரியங்களில் கிடைக்கிறது. கீழே உள்ள வீரியம் குறித்த தகவல் 100 mg/mL (3 மிலீ) பல்வேறு-டோஸ் உள்ள போத்தல்களுக்குப் பொருந்தும்.

Enoxaparin பொதுவாக இன்சுலின் சிரிஞ்சுகளைப் பயன்படுத்திச் செலுத்தப்படுகிறது, அவை சருமத்தில் ஊசி போடுவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்சுலின் சிரிஞ்சில் அளவு "அலகுளில்" அளவிடப்படுகிறது என்பதையும், இன்சுலின் சிரிஞ்சில் ஒரு அலகு 1 மி.கி enoxaparin மருந்திற்குச் சமம் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு ஒவ்வொரு டோஸுக்கும் _______ மிகி enoxaparin பரிந்துரைக்கப்படும். இந்த டோஸ் இன்சுலின் சிரிஞ்சில் _______யூனிட்டுகள் என்பதற்குச் சமம்.

பல்வேறு-டோஸ் உள்ள போத்தலில் இருந்து enoxaparinஐ உள்ளிழுத்தல்

உங்கள் பிள்ளைக்கு enoxaparin கொடுப்பதற்கு முன்பாக, நீங்கள் முதலில் புட்டியிலிருந்து மருந்தை உள்ளிழுக்க வேண்டும். மருந்துப் போத்தலில் உள்ள திகதியைச் சரிபார்த்து அது காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தேவைப்படுவன:

  • Enoxaparin போத்தல் (100 mg/mL)
  • இன்சுலின் 30 யூனிட் (3/10 மிலீ), 50 யூனிட் (1/2 மிலீ) அல்லது 100 யூனிட் (1 மிலீ) டோஸ் அளவைப் பொறுத்து சிரிஞ்ச். இன்சுலின் ஊசிகளை மட்டுமே பயன்படுத்தவும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய ஊசி மற்றும் சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆல்கஹால் ஸ்வாப்
  • பஞ்சுப் பந்து
  • கூரிய பொருட்களுக்கான கொள்கலன்

முன்னெச்சரிக்கை

Enoxaparin மருந்தின் செறிவு 100 மிகி/மிலீ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மேலும் உங்கள் பிள்ளையின் டோஸுக்குச் சரியான அளவு சிரிஞ்சைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சரிபார்க்கவும். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். சிரிஞ்சின் அளவு சரியானதுதானா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் மருந்தகத்தை அல்லது உங்கள் பிள்ளையின் இரத்த உறைவு தொடர்பான குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வெளி நோயாளருக்கான இன்சுலின் ஊசிகள்: Enoxaparin டோசிங்வெவ்வேறு அளவிலான சிரிஞ்ச்களில் மூன்று வெவ்வேறு அளவுகளில் எனோக்ஸாபரின் இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள்
உங்கள் பிள்ளைக்குப் பரிந்துரைக்கப்படும் ஊசி அவரது enoxaparin டோஸ் அளவைப் பொறுத்தது. சிரிஞ்சுகள் மிகவும் ஒத்ததாக இருப்பதால், உங்கள் பிள்ளைக்கு enoxaparin கொடுப்பதற்கு முன்பு உங்களிடம் உள்ள சிரிஞ்ச் வகையை இருமுறை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

Enoxaparin மருந்தை உள்ளிழுப்பதற்கு:

  1. உங்கள் கைகளைக் கழுவவும்.
  2. மருந்துப் போத்தலில் உள்ள ரப்பர் ஸ்டொப்பரை ஆல்கஹால் துணியால் சுத்தம் செய்யவும். ஆல்கஹால் உலர 30 வினாடிகள் காத்திருக்கவும்.
  3. ஊசி மற்றும் சிரிஞ்சிலிருந்து மூடியை அகற்றவும். மருந்துப் போத்தலில் உள்ள ரப்பர் ஸ்டொப்பர் வழியாக ஊசியை 90 டிகிரி கோணத்தில் செலுத்தவும்.
  4. சிரிஞ்ச் இருக்கும்போதே போத்தலைத் தலைகீழாகச் சரிக்கவும். ஊசியின் முனை கரைசலில் இருப்பதை உறுதி செய்யவும்.
  5. தேவையான எண்ணிக்கையை விடச் சற்று அதிகமாக இருக்கும் வரை சிரிஞ்சின் plunger -ஐ மெதுவாகக் கீழே இழுக்கவும். மருந்தை வெளியே இழுப்பதில் சிக்கல் இருந்தால், போத்தலில் சிறிது காற்றைச் செலுத்தி, மீண்டும் முயற்சிக்கவும்.
  6. சிரிஞ்சில் காற்றுக் குமிழ்கள் ஏதாவது உள்ளதா என்று சோதிக்கவும். காற்று குமிழ்கள் மேலே மிதந்து வருவதற்காகச் சிரிஞ்சைத் தட்டவும்.
  7. விரும்பிய அளவிற்கு plunger -ஐ மெதுவாக மேலே தள்ளவும். நீங்கள் அதிகமாக வெளியே தள்ளிவிட்டால், சிரிஞ்சைச் சரியான கொள்ளளவுக்குக் கொண்டு வருவதற்கு மீண்டும் இழுக்கவும். காற்றுக் குமிழ்களை மீண்டும் சரிபார்க்கவும்.
  8. சிரிஞ்சிலிருந்து மருந்துப் போத்தலை வெளியே எடுக்கவும். வெளிப்படும் ஊசி எந்த மேற்பரப்பிலும் தொடாதபடி பார்த்துக் கொள்ளவும். இது இப்போது உங்கள் பிள்ளைக்குச் செலுத்தப்படத் தயாராக உள்ளது.

முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள்

முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகள் பல அளவு வீரியங்களில் வருகின்றன.

  • 30 மிகி /0.3 மிலி
  • 40 மிகி /0.4 மிகி
  • 60 மிகி /0.6 மிகி
  • 80 மிகி g/0.8 மிகி
  • 100 மிகி/மிகி

உங்கள் பிள்ளை மேலே உள்ள டோஸ் அளவுகளில் ஒன்றைப் பெற்றால் மற்றும்/அல்லது கையாளுவதை எளிமையாக்க முன்னரே-நிரப்பப்பட்ட ஊசி ஒன்று அவருக்குப் பரிந்துரைக்கப்படலாம்.

குறிப்பு: முன்னரே-நிரப்பப்பட்ட சிரிஞ்சுகளில் உள்ள ஊசி அளவு இன்சுலின் சிரிஞ்சுகளை விடப் பெரியது மற்றும் மிகச் சிறிய பிள்ளைகளுக்கு ஏற்றதாக இருக்காது.

Enoxaparinஐ எங்கே செலுத்த வேண்டும்

இன்சுலின் சிரிஞ்சுடன் தோலடியில் போடும் ஊசி (90 டிகிரி கோணம்)தொண்ணூறு டிகிரி கோணத்தில் ஊசி செலுத்தப்பட்டு தோல், தோலடி திசு மற்றும் தசையின் குறுக்குவெட்டு
இன்சுலின் சிரிஞ்சுடன் தோலடியில் போடும் ஊசி (45 டிகிரி கோணம்)45 டிகிரி கோணத்தில் ஊசி செலுத்தப்பட்டு தோல், தோலடி திசு மற்றும் தசையின் குறுக்குவெட்டு

Enoxaparin தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு அடுக்கில் செலுத்தப்படுகிறது. இது தோலடியிலுள்ள (SC) அடுக்கு என்று அழைக்கப்படுகிறது. ஊசி போடுவதற்கான பாதுகாப்பான பகுதிகள்: தொடைகள் மற்றும் மேல் கைகள். பிட்டப்பகுதியைப் பயன்படுத்த வேண்டாம்.

  • தொடையில் ஊசி போடும் இடம்குழந்தையின் உடலின் கீழ் பகுதியில் ஊசி போடுவதற்கான குறி இருப்பது

    தொடைகள்: மேல் முன் பக்கம் மற்றும் தொடையின் வெளிப்புறப் பகுதிகளில் மட்டும். தொடையின் உட்புறம் அல்லது தொடையின் பின்புறத்தைப் பயன்படுத்த வேண்டாம். தொடையை மூன்றாகப் பிரிக்கவும்; ஊசி போடும் இடம் நடுவில் மூன்றாவது பிரிவில் உள்ளது.

  • மேற் கையில் ஊசி போடும் இடம்குழந்தையின் மேல் உடலில், மேல் கையில் ஊசி போடுவதற்கான அடையாளத்துடன்

    மேல் கைகள்: கையின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள கொழுப்புப் பகுதியில். இந்தப் பகுதி நான்கு முதல் ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு மட்டுமே. மேல் கையை மூன்றாகப் பிரிக்கவும்; ஊசி போடும் இடம் நடுவில் மூன்றாவது பிரிவில் உள்ளது.

  • வயிற்றில் ஊசி போடும் இடம்குழந்தையின் மேல் உடல், அடி வயிற்றில் குறிகள் இருப்பது

    வயிறு: தொப்பைக் குழியிலிருந்து வலது, இடது அல்லது அடிப்பகுதியில் குறைந்தது 2 அங்குலங்கள் தூரத்தில் ஊசி போடவும். இடுப்புப் பட்டைக்கு அருகில் உள்ள பகுதிகளைத் தவிர்க்கவும்.

உங்கள் பிள்ளைக்கு ஊசி போடும்போது

  1. ஊசி போடுவதற்குத் தயாராவதற்கு மேல் கையை பஞ்சு மற்றும் சோப்பு நீரில் சுத்தம் செய்தல்

    ஊசி போடும் இடத்தைத் தெரிவு செய்யவும். சோப்பு மற்றும் தண்ணீரால் தோலைச் சுத்தம் செய்யவும் (நீங்கள் ஆல்கஹால் துணியைப் பயன்படுத்தத் தேவையில்லை). நீங்கள் ஒவ்வொரு தடவை ஊசி போடும் போதும், ஊசி போடும் இடத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். உதாரணமாகக், காலையில் இடது தொடையிலும், இரவில் வலது தொடையிலும் ஊசி போட்டுக் கொள்ளலாம்.

  2. ஊசி போடும் இடத்தில் மேல் கையின் தோலை கிள்ளுதல்

    கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் தோல் மற்றும் கொழுப்பின் நன்கு வரையறுக்கப்பட்ட மடிப்பை மெதுவாக நசுக்கி விடவும்.

  3. தொண்ணூறு டிகிரி கோணத்தில் மேல் கைக்குள் ஊசியைச் செருகுதல்

    சிரிஞ்சின் தண்டை டார்ட் பாணியில் பிடித்து, ஊசியை தோல் வழியாக நேரடியாக செங்கோணத்தில் (90 டிகிரி கோணத்தில்) கொழுப்பு அடுக்கினுள் உட்செலுத்தவும். தோலடியில் கொழுப்புக் குறைவாக உள்ள பகுதிகளில் ஊசியை 45 டிகிரி கோணத்தில் உட்செலுத்தலாம்.

  4. தொண்ணூறு டிகிரி கோணத்தில் செருகப்பட்ட ஊசியின் உலக்கையில் விரலை வைப்பது

    கையை plungerஐ நோக்கும் நிலைக்கு நேராக நகர்த்தவும். ஊசி முனை உட்செலுத்தப்பட்ட பின்னர் அதை நகர்த்த வேண்டாம்.

  5. நோவைக் குறைக்க மருந்தை மெதுவாகக் கொடுங்கள், plungerஐ அது செல்லக்கூடிய வரைக்கும் உறுதியாகத் தள்ளுங்கள்.
  6. நீங்கள் ஊசியை வைத்த அதே கோணத்தில் மெதுவாக வெளியே இழுக்கவும். நீங்கள் ஊசியை வெளியே எடுக்கும்போது, தோல் பிடிப்பை விட்டுவிடுங்கள்.
  7. ஊசி போட்ட பிறகு பஞ்சுப் பந்தை மேல் கையில் பிடித்தல்

    கண்டலுக்கான வாய்ப்பைக் குறைக்க ஒவ்வொரு ஊசியையும் தொடர்ந்து, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஊசி போடும் இடத்தில் ஒரு பஞ்சுப் பந்தைக் கொண்டு உறுதியான அழுத்தத்தைப் பிரயோகிக்கவும். அந்தப் பகுதியைத் தேய்க்க வேண்டாம், ஏனெனில் இது சருமத்தை எரிவடையச் செய்யலாம்.

  8. ஊசி மற்றும் சிரிஞ்சை ஒரு மூடியுடன் கூடிய தடிமனான, பிளாஸ்டிக் போத்தல் அல்லது கூர்மையான பொருட்களை இடும் கொள்கலனில் போடவும். இது பாதுகாப்புக்காகச் செய்வது. கொள்கலன் நிரம்பியதும், அதை உங்கள் உள்ளூர் மருந்தகத்திற்குக் கொண்டு செல்லவும். அவர்கள் அதை உங்களுக்காகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியும். இதை உங்கள் வழக்கமான குப்பையில் போட வேண்டாம்.

உங்கள் பிள்ளை enoxaparin மருந்தை உட்கொள்ளும்போது

உங்கள் பிள்ளைக்கு இரத்தக் கசிவு மற்றும் கண்டற்காயம் இலகுவாக ஏற்படக்கூடும்.

  • உங்கள் பிள்ளை செய்ய அனுமதிக்கப்படும் செயற்பாடுகள் எவை என்பதைப் பற்றி உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவிடம் கேட்கவும். மற்றவருடன் தொடர்புபடும் விளையாட்டுகள் பரிந்துரைக்கப்படவில்லை.
  • உங்கள் பிள்ளை நீண்ட காலமாக இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மருத்துவ எச்சரிக்கை வளையல் அணிய வேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவுடன் இதைப் பற்றி நீங்கள் கலந்தாலோசிக்கலாம்.

உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவை அல்லது இரத்த உறைவு தொடர்பான குழுவை எப்போது அழைக்க வேண்டும்?

பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் பிள்ளையின் உடல்நலப் பராமரிப்புக் குழுவை அல்லது இரத்த உறைவு தொடர்பான குழுவை அழைக்கவும்:

  • அவரின் தலையில் அடிபட்டால் அல்லது அவர் கீழே விழுந்தால்
  • அவருக்குப் பெரிய அல்லது விளக்க முடியாத கண்டற்காயங்கள் இருந்தால்
  • நிறுத்துவதற்குக் கடினமான இரத்தக்கசிவு மூக்கில் இருந்தால்
  • கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மலம் கழிவதாக இருந்தால்
  • பல் துலக்கும்போது ஈறுகளில் இருந்து புதிதாக இரத்தப்போக்கு ஏற்படுவதானால்
  • ஏதாவது மருத்துவ அல்லது பற்சிகிச்சை நடைமுறைகள் அல்லது அறுவைச் சிகிச்சைகள் செய்வதாக இருந்தால்
Last updated: February 02 2024