காந்த அதிர்வு விம்பங்கள் (மக்னடிக் ரிசொனன்ஸ் இம்மேஜிங் MRI )

Magnetic resonance imaging (MRI) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மக்னடிக் ரிசொனன்ஸ் இம்மேஜிங்க் (MRI) என்பது மூளையில் உள்ள ஒழுங்கற்ற அமைப்பு முறைகளை காட்டும் ஒரு நியுரோஇமேஜிங் தொழில்நுட்பம். பிள்ளைகளுக்கான MRI ஸ்கான்கள் பற்றி படித்தறியுங்கள்.

MRI என்பது என்ன?

மக்னடிக் ரிசொனன்ஸ் இம்மேஜிங்க் (MRI) என்பது எக்ஸ் – ரேக்கள் இல்லாமல் உடலின் உட்பகுதிகளைப் படம் பிடிக்கும் ஒரு வழியாகும். படம் பிடிப்பதற்கு MRI ஒரு சக்திவாய்ந்த காந்தத்தை உபயோகிக்கின்றது. இது ஒரு MRI ஸ்கான் என அழைக்கப்படுகிறது.

MRI ஸ்கான் ஓரளவு இரைச்சலானது ஆனால் வலியேற்படுத்தாது. பல குறுகிய MRI ஸ்கான்கள் ஒரு முழுமையான MRI ஆய்வை ஏற்படுத்தும். ஒரு முழுமையான MRI ஆய்வு முழுமையடைவதற்கு மிகக் குறைந்ததான 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரங்கள் வரை எடுக்கலாம்.

MRI க்குத் தயாராதல்

உங்கள் பிள்ளையில் இருக்கும் ஏதாவது உலோகம் பற்றி MRI குழுவிடம் தெரிவியுங்கள்

MRI சக்திவாய்ந்த காந்த வயல்களை உட்படுத்திச் செய்யப்படுவதால், சில உலோகத்தாலான இம்பிளான்டுகள் பிள்ளைக்கு சேதத்தை விளைவிக்கக்கூடும். உலோகக் கோல்கள், பிளேட்டுகள், ஸ்குரூக்கள், உறுப்புக் கவ்விகள், கிளிப்புகள் போன்றவற்றை உட்படுத்தும் அறுவைச் சிகிச்சைகள், செயல் முறைகள் அல்லது காயங்கள் அல்லது உடலில் துவாரமேற்படுத்திப் போடப்படும் பொருட்கள் ஆகியவை உங்கள் பிள்ளைக்கு இருந்தால் MRI குழுவிடம் அதைத் தெரிவிக்கவும். பிள்ளைக்கு ஏதாவது இம்பிளான்டுகள் இருந்தால் அந்தக் கருவியின் வகை மற்றும் உற்பத்தியாளர் பற்றிய தகவலை MRI குழுவிடம் தயவுசெய்து கொடுத்துவிடவும். சில சமயங்களில் பிள்ளைக்கு MRI பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய ஒரு எக்ஸ் –ரே தேவைப்படலாம். உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து MRI க் குழுவுடன் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பிள்ளைக்கு தூக்க கலக்க மருந்து அல்லது பொது மயக்க மருந்து தேவைப்படலாம்

சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஆடாமல் அசையாமல் இருக்கக்கூடிய அளவுக்கு உங்கள் பிள்ளை வயதுடையவன் என்றால், MRI ஆய்வுக்காகத் தயாராவதற்கு அவன் விசேஷமாக ஒன்றும் செய்யவேண்டிய அவசியமிருக்காது.

முழு ஆய்வின்போதும் உங்கள் பிள்ளையால் அசையாமல் இருக்க முடியவில்லை என்றால், அவனுக்கு ஒரு விசேஷ “நித்திரை மருந்து” தேவைப்படலாம். உங்கள் பிள்ளை ஒரு வெளி நோயாளியாயிருந்து, செயற்பாட்டின் போது நித்திரை செய்ய வேண்டியவன் என்றால், சந்திப்புத் திட்டத்திற்கு முன் எப்போது அவனுக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற தகவலை MRI யூனிட் உங்களுக்குத் தரும்.

செயற்பாட்டிற்காக உங்கள் பிள்ளை நித்திரைசெய்ய வேண்டியிருந்தால், நித்திரை மருந்தை உங்கள் பிள்ளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, தாதி அல்லது மயக்க மருந்து நிபுணர் முழுமையான மருத்துவ மதிப்பீடு ஒன்றை செய்வார். அது பாதுகாப்பனதல்லவென்றால் உங்கள் பிள்ளையின் சந்திப்புத் திட்டம் பின்போடப்படும் அல்லது ரத்துசெய்யப்படும்.

மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து “தூக்கக் கலக்க மருந்து” அல்லது "பொது மயக்க மருந்து" ஐ வாசித்துப் பாருங்கள்.

உங்கள் பிள்ளையின் ஆய்வுத் திகதியையும் நேரத்தையும் இங்கே எழுதுங்கள்:

 

MRI படிப்பிற்கு உங்கள் பிள்ளை ஒரு ஊசி தேவைப்படலாம்

கொன்டிராஸ்ட் ஊடகம் என்று அழைக்கப்படும் ஒரு விசேஷ திரவத்துடன் செய்யும்போது சில MRI ஸ்கான்கள், மருத்துவருக்கு அதிக தகவல்களைத் தரும். இத் திரவம், IV மூலம் கையிலுள்ள ஒரு நரம்பிற்குள் செலுத்தப்படும். IV யானது ஒரு சிறிய ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. தேவையேற்பட்டால் MRI ஸ்கானுக்கு முன்பாக IV உட்செலுத்தப்படும்.

கொன்டிராஸ்ட் ஊடகமானது பொதுவாக பாதுகாப்பானது ஆனால் மிகச் சிறிய சந்தர்ப்பங்களில் ஒரு எதிர்விளைவைத் தோற்றுவிக்கலாம். பிள்ளைக்கு எதிர்விளைவு ஏற்படுகின்றதா என்பதை காண்பதற்காக MRI செயற்பாட்டின் போதும் அதற்குப் பின்னரும், மருத்துவக் குழு பிள்ளையை கவனமாக அவதானிக்கும். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும்போது அதை வெற்றிகரமாக சமாளிக்க மருத்துவக் குழுவிற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. MRI எடுக்கப்படுவதற்கு முன் மருத்துவக் குழுவின் ஒரு அங்கத்தவர், ஆபத்துக்கள் பற்றி உங்களுடன் பேசுவார்.

MRI குழு அங்கத்தவர்கள்

MRI ஆய்வில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 அல்லது 4 பேரைக்கொண்ட ஒரு குழு உட்பட்டிருக்கும்:

  • ஒரு மருத்துவ ரேடியேஷன் டெக்னோலொஜிஸ்ட், MRI ஸ்கானை செய்வார்
  • ஸ்கான்களுக்காக ஒரு தாதி உங்கள் பிள்ளையைத் தயார் செய்வார். உங்கள் பிள்ளைக்கு தூக்கக் கலக்க மருந்து தேவை என்றால், ஒரு தாதி அதை கொடுப்பார். பிள்ளை பொது மயக்க மருந்தைப் பெறப் போகிறது என்றால் தாதி மயக்க மருந்து நிபுணருக்கு உதவியாக இருப்பார்.
  • மயக்க மருந்து நிபுணர், பொது மயக்க மருந்தைக் கொடுக்கும் மருத்துவராவார்.
  • ஒவ்வொரு MRI ஸ்கானும், ஆய்வு முழுமையானதா என்று நிச்சயிக்க ஒரு மருத்துவரால் சோதிக்கப்படும். அநேகமான சந்தர்ப்பங்களில் ஒரு ரேடியோலொஜிஸ்டும் இருப்பார். இவர் MRI ஸ்கான் போன்ற படங்களை பற்றிய விஷேசித்த ஒரு மருத்துவர்

MRI பற்றி உங்கள் பிள்ளைக்கு என்ன சொல்லவேண்டும்

MRI ஸ்கானின்போது என்ன நடக்கும் என்பதை உங்கள் பிள்ளையிடம் துல்லியமாக சொல்லுங்கள். அவன் எதைப் பார்ப்பான், கேட்பான் மற்றும் உணருவான் என்பதை விளக்குங்கள். MRI ஸ்கானின்போது என்ன நடக்கும் என்பதன் விபரங்கள் இதோ. MRI ஸ்கான்கள் வலியேற்படுத்தாது என்பதை மறந்துவிடாதீர்கள்!

MRI க்கு முன் என்ன நடக்கும்

  • உங்கள் பிள்ளை அறைக்குள் செல்லுமுன், பணியாளர் சில கேள்விகளைக் கேட்பார். MRI ஸ்கானரின் சக்திவாய்ந்த காந்தத்தின் அருகிலிருக்கும்போது உங்கள் பிள்ளைக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். MRI செய்வதை முடியாத காரியமாக்கக்கூடிய சில உலோகக் கருவிகள் மற்றும் இம்பிளான்ட் உலோகப் பொருட்களும் இருக்கின்றன.
  • சில்லறைகள், பேனாக்கள், செல் ஃபோன்கள், வாலட்கள் மற்றும் பாங்க் கார்டுகள் உட்பட தன் பாக்கேட்டில் உள்ள அனைத்தையும் உங்கள் பிள்ளை அகற்றிவிடவேண்டும். தனது கைக்கடிகாரத்தையும் அவன் கழற்றிவிடவேண்டும். எந்தவித அழகு சாதனப் பொருட்களையோ அல்லது நகைகளையோ உங்கள் பிள்ளை அணியக்கூடாது.
  • உங்கள் பிள்ளை ஒரு மருத்துவ மனை உடையை அணிந்துகொள்வான்.

MRI யின்போது என்ன நடக்கும்

  • MRI ஸ்கானர் நடுவில் ஒரு அகலாமான சுரங்கத்தைக்கொண்ட ஒரு பெரிய வட்டமான இயந்திரமாகும்.
  • உங்கள் பிள்ளை கட்டிலில் படுத்திருப்பான். தொழில்நுட்பவியலாளர், MRI ஸ்கான் எடுப்பதற்கான சரியான நிலையில் பிள்ளையை படுக்கவைப்பார்.
  • எல்லாம் தயாராகியபின், கட்டில் சுரங்கத்திற்குள் செல்லும். பிள்ளையின் உடலின் பெரும்பகுதி சுரங்கத்திற்குள் சென்றுவிடும்.
  • MRI ஸ்கான் எடுக்கப்படும் முழுநேரமும் பிள்ளை ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும்.
  • இயந்திரம் ஸ்கான்செய்யும்போது, தட்டுவது அல்லது அடிப்பது போன்ற பெரிய சத்தங்களை உண்டுபண்ணும். அறையில் உள்ள அனைவரும் தங்கள் காதுகளைப் பாதுகாப்பதற்காக காது அடைப்பான்களை அல்லது ஹெட் ஃபோன்களை அணிவார்கள்.
  • ஸ்பீக்கர் ஒன்றின் உதவியுடன் தொழில்நுட்பவியளாலர் உங்கள் பிள்ளையுடன் பேசுவார். MRI ஸ்கான் முடிவடைந்தபின், பிள்ளை கட்டிலில் இருந்து இறங்க அவர் உதவி செய்வார்.
  • சில வகையான ஸ்கான் இயந்திரங்களில் பொழுதுபோக்கு சாதனங்களும் பொருத்தப்பட்டிருப்பதால், ஸ்கான் நடைபெறும்போது உங்கள் பிள்ளை ஒரு திரைப்படத்தைப் பார்க்கலாம்.
  • ஆய்வின்போது உங்கள் பிள்ளை நித்திரை செய்யவேண்டிய அவசியமில்லையென்றால் மற்றும் நீங்கள் விரும்பினால் அந்த அறையில் நீங்கள் தரித்திருக்கலாம். நீங்கள் அந்த அறையில் இருக்க விரும்பினால் உலோகத்தாலான இம்பிளான்டுகள் உங்களுக்கிருக்கின்றதா என நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்.

MRI ஆய்வின் பின் என்ன நிகழும்

MRI ஆய்வின் பின்னர், மருத்துவ மனையில் வேறு சந்திப்புத் திட்டங்கள் இருந்தாலேயன்றி வெளிநோயாளிகள் வீட்டுக்குப் போகலாம். உங்கள் பிள்ளை தூக்கக் கலக்க மருந்தை அல்லது பொது மயக்க மருந்தை பெற்றிருந்தால், அவன் விழிக்கும்வரை நீங்கள் தரித்திருக்கவேண்டும். அப்படியானால் வழக்கமாக நீங்கள் மருத்துவ மனையில் இருக்கவேண்டிய மொத்த நேரம் 3 அல்லது 4 மணித்தியாளங்களாகலாம்.

MRI ஸ்கானின் அறிக்கையொன்றை உங்கள் மருத்துவர் பெற்றுக்கொள்வார். MRI ஆய்வின் முடிவுகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களுடன் பேசுவார்.

உங்கள் பிள்ளையின் சந்திப்புத் திட்டத்தை நீங்கள் ரத்துசெய்யத் தேவைப்பட்டால் என்ன செய்வது

உங்கள் பிள்ளையின் MRI சந்திப்புத்திட்டத்தை நீங்கள் ரத்து செய்யவேண்டிவந்தால், இப்பிரிவைக் கூடிய விரைவில் அழையுங்கள்

உன்ங்கள் பிள்ளைக்கு மோசமான தடிமல் மற்றும் இருமல் இருந்தால், பிள்ளையின் சந்திப்புத் திட்டத்தை நீங்கள் மாற்றவேண்டும். பெரும்பாலும், முழு MRI ஆய்வின்போதும் உங்கள் பிள்ளை அசையாமலிருக்க முடியாது போகும். உங்கள் ஆரம்ப சந்திப்புத் திட்டத்தை மற்றொரு நோயாளி பெற்றுக்கொள்வார். MRI ஆய்வுக்கான தேவை மிகவும் அதிகம்.

உங்கள் பிள்ளையின் சந்திப்புத் திட்டத்திற்கு நீங்கள் வரத் தாமதித்தால், அச் சந்திப்புத் திட்டத்தை நாங்கள் பின்போட அல்லது ரத்துசெய்ய நேரலாம்.

உங்களுக்கு கேள்விகள் ஏதேனுமிருந்தால் யாரை அழைப்பது

உங்களுக்கு கேள்விகள் ஏதுமிருந்தால், MRI நிலையத்தை அழையுங்கள்

முக்கிய குறிப்புகள்

  • ஒரு MRI என்பது உடலின் உட்பகுதியை எக்ஸ் – ரேக்கள் இன்றி படம்பிடிக்கும் முறையாகும். இது வலி ஏற்படுத்தாது.
  • உங்கள் பிள்ளையின் உடலில் ஏதாவது உலோகம் இருந்தால் MRI குழுவினரிடம் முன்கூட்டியே தெரிவியுங்கள்
  • ஒரு நிழல்ப்பட நிபுணர் MRI படிப்பைப் பார்த்துவிட்டு உங்கள் மருத்துவருக்கு அறிக்கையொன்றை அனுப்புவார். MRI யின் முடிவுகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் பேசுவார்.
Last updated: November 17 2009