பேர்டூஸிஸ் ( கக்குவான் இருமல்)

Pertussis (whooping cough) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகள் கக்குவான் இருமல் என்பது அதீத இருமல் வலியை ஏற்படுத்தும் பக்டீரியல் சுவாச சம்மந்தமான தொற்று. பிள்ளைகள் கக்குவான் இருமல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி படித்தறியுங்கள்.

கக்குவான் இருமல் என்பது என்ன?

பேர்டூஸிஸ் (பேர்-டூ-ஸிஸ்), என்பது கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுகிறது. இது நுரையீரல் மற்றும் மேல் சுவாச உறுப்புக்களின் தடத்தில் ஏற்படும் திடீர் தொற்றுநோயாகும்.

இந் நோய்க்கு மூன்று நிலைகள் உள்ளன:

உங்கள் பிள்ளையில் மூக்கு ஒழுகுதல் மற்றும் இலேசான இருமல் போன்ற தடிமல் அறிகுறிகள் காணப்படத் தொடங்கும்.

இரண்டாவது நிலையில், இருமல் மேலும் மோசமாகும். உங்கள் பிள்ளைக்கு தொடர்ச்சியான கடும் இருமல் இருக்கும். இவை கொத்தாக உருவாகியிருக்கும் திடீர் குறுகிய, விரைவான இருமல்கள்.

இருமல் உங்கள் பிள்ளையின் சுவாசித்தலைக் கடினமாக்கும். கொத்தாக உருவாகியிருக்கும் இருமலின் பின்னர் உங்கள் பிள்ளை சுவாசிக்கும்போது “ஹூப்” என்ற உரத்த சத்தத்தை நீங்கள் கேட்கலாம். உங்கள் பிள்ளையின் முகம் அடிக்கடி சிவப்பாக மாறிவிடும்.

தொற்றுநோய் மூக்கிலும் தொண்டையிலும் அதிக அடர்த்தியான சளியை உருவாக்கலாம்.

இருமல் உங்கள் பிள்ளையை வாந்தி எடுக்கச் செய்யலாம். அவன் பால், உணவு, அல்லது சளியை வாந்திபண்ணலாம்.

மூன்றாவது நிலை குணமடைதலையும் நிவாரணமடைதலையும் உட்படுத்துகிறது. உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து விடாப்பிடியான இருமல் இருக்கும். ஆனால் இது இரண்டாம் நிலையைவிட மிகவும் வீரியம் குறைந்ததாக இருக்கும்.

சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய்கள் சிறியதானதால் பேர்டூஸிஸ் நோய் குழந்தைகளுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கலாம். பேர்டூஸிஸ் நோயுள்ள சிறு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம்.

பேர்டூஸிஸ் நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும்

  • விடாப்பிடியான, கடுமையான கொத்துக்களாக உருவாகும் இருமல்
  • இருமலைத் தொடர்ந்து பால், உணவு, அல்லது சளியை வாந்திபண்ணுதல்
  • இருமும்போது முகத்தில் நிற மாற்றம்
  • சுவாசிக்கும்போது உரத்த “ஹுப்” சத்தம்.

பேர்டூஸிஸ் நோய்க்கான காரணங்கள்

இந்த நோய் போர்டெரில்லா பேர்டூஸிஸ் என்ற பக்டீரியா(கிருமி) வினால் ஏற்படுகிறது. எப்போதும் உங்கள் பிள்ளைக்குத் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் பெரும்பாலும் பேர்டூஸிஸ் நோயை தடுக்கலாம்.

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டால், நோய் தடுப்பாற்றல் (பாதுகாப்பு) காலப்போக்கில் குறையலாம். ஊக்குவிக்கும் தடுப்பூசி ஏற்றப்படாத பெரியவர்களும் தொற்றுநோய்க்காளாகி அதைப் பிள்ளைகளுக்குக் கடத்தலாம். பேர்டூஸிஸ்க்கு முழுமையான தடுப்பூசி பெறாத குழந்தைகள் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

வேறு கிருமிகளும் பேர்டூஸிஸ் நோய் போல தோன்றும் ஒரு நோயை ஏற்படுத்தலாம் . ஆனால் அது அந்தளவுக்கு கடுமையானதல்ல.

பேர்டூஸிஸ் நோயின் சிக்கல் நிலை

பேர்டூஸிஸ் நோய், விஷேசமாக சிறு குழந்தைகளுக்கு தீங்கிழைப்பதாக இருக்கலாம். சிக்கல் நிலை நியூமோனியா, சுவாசம் நின்றுபோதல், வலிப்பு, மற்றும் மரணம் ஆகியவற்றை உட்படுத்தலாம்.

பேர்டூஸிஸ் நோய்க்கான ஆபத்துக் காரணங்கள்

பேர்டூஸிஸ் நோய்க்கான தடுப்பூசி ஏற்றப்படாததுதான் மிக முக்கிய ஆபத்துக்கான காரணம். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வளர்ந்த பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுடனான கூட்டுறவும் கூட உங்கள் பிள்ளையை தொற்றுநோய் ஆபத்துக்குள்ளாக்கலாம். குழந்தைகள் தொற்றுநோயுள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மிக விரைவில் நோயால் பாதிக்கப்படலாம்.

பேர்டூஸிஸ் நோய்க்கு உங்கள் டாக்டர் என்ன செய்யலாம்?

மருத்துவர் உங்கள் குழந்தைக்கு பேர்டூஸிஸ் நோய் இருப்பதாக நினைத்தால் , மூக்கிலிருந்து வெளியேறும் பொருளில் சிறிதளவு சோதனைக்காக எடுத்துக்கொள்வார். சோதனை முடிவு தெரியவர 5 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம்.

அன்டிபயோடிக் உபயோகித்து சிகிச்சை

மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு பேர்டூஸிஸ் நோய் இருப்பதாகச் சந்தேகித்தால், பரிசோதனையின் முடிவு வருவதற்கு முன்பே அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கும்படி சிபாரிசு செய்யலாம். நோய் ஆரம்பித்த முதல் 3 நாட்களுக்குள்ளேயே, அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பித்தால் அது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

அன்டிபையோடிக் சிகிச்சை முறை மருந்துகளை முழுமையாக உட்கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக உங்கள் குழந்தையுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் அன்டிபையோடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்படி கேட்கப்படலாம்.

3 மாதங்களுக்குட்பட்ட சிசுக்களுக்களும், சுவாசிப்பதில், உணவு உண்பதில் அல்லது பானங்கள் குடிப்பதில் சிரமப்படும் குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம்.

உங்கள் குழந்தையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

சற்று ஈரமான காற்று

உலர் காற்று இருமலை மோசமாக்க காரணமாக இருக்கும்போது ஈரமான காற்று இறுக்கமான சளியை தளர்ச்சியாக்கும். இதற்கு உங்கள் குழந்தையின் படுக்கையறையிலுள்ள குளிர் நீராவி சாதனம் அதாவது கூல் மிஸ்ட் வெப்பரைசர் அல்லது ஈரப்பதமூட்டி உதவி செய்யும். குறைந்தது ஒரு நாளில் ஒரு தடவையேனும் தண்ணீரை மாற்றி, ஃபில்டர்களை சுத்தம் செய்யவும்.

சேலைன் கரைசல்

மூக்கிலும் தொண்டையிலும் கட்டியுள்ள சளியை அகற்ற உதவி செய்வதற்காக, மூக்கு சம்பந்தமானசேலைன் கரைசலை (சேலினெக்ஸ் அல்லது மற்ற பிராண்டுகள்) உபயோகிக்கவும். குமிழ் உறிஞ்சி மூலமாக மெதுவாக உறிஞ்சுவதும் உதவிசெய்யலாம்.

உங்கள் குழந்தை உறங்கும் நிலைமையையும் சரி செய்யுங்கள்.

துப்புதல் மற்றும் வாந்தி எடுத்தலைக் குறைப்பதற்காக உங்கள் குழந்தையை, பாலூட்டுவதற்கு முன்பும் பாலூட்டிய பின்பும் செங்குத்தாகத் தூக்கிப்பிடிக்கவும். இந்த நிலை சுவாசித்தலையும் இலகுவாக்கும்.

அடிக்கடி சிறிய கிளாஸ்களில் பானங்கைளை குடிக்கக் கொடுத்துக் கொண்டேயிருங்கள்

அடிக்கடி சிறிய அளவில் பானங்களை பருகிக்கொண்டேயிருக்கும்படி உங்கள குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் குழந்தை வாந்தியெடுப்பதாக இருந்தால் உடலில் நீரேற்றம் குறைவுபடாதபடி பார்த்துக்கொள்வது முக்கியம். பாலூட்டப்படும் குழந்தைகள் தொடர்ந்து பாலூட்டப்படவேண்டும்.

புகை சூழ்ந்துள்ள இடங்களைத் தவிர்த்திடுங்கள்

உங்கள் பிள்ளையை புகை சூழ்ந்துள்ள இடங்கள் மற்றும் எரிச்சலூட்டக்கூடிய சுற்றுப்புறங்களில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். சிகரெட் புகை இருமலை மேலும் மோசமானதாக்கலாம்.

மருத்துவ கவனிப்பை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகள் இருந்தால் உங்கள் குழந்தையின் வழக்கமான டாக்டரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு விடாப்பிடியான இருமல் இருக்கிறது, மோசமாகிக்கொண்டே போகிறது, அல்லது கொத்துக்களாக (கிளஸ்டர்) இருக்கிறது
  • பேர்டூஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட எவருடனாவது தொடர்பு வைக்க நேர்ந்தால்
  • உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் வந்திருந்தால்

பின்வரும் நிலைமைகள் இருந்தால் உங்களுக்கு மிகவும் அண்மையிலுள்ள அவசர சிகிச்சை நிலையத்துக்குச் செல்லவும் அல்லது 911 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்:

  • இருமல், உங்கள் பிள்ளையின் முகத்தை நீல நிறமாக மாற்றியுள்ளது அல்லது உங்கள் பிள்ளை சுவாசிப்பதை நிறுத்திவிடச்செய்கிறது.
  • இருமல் சுவாசிப்பதைச் சிரமப்படுத்துகிறது அல்லதுவேகமாக சுவாசிக்கச் செய்கிறது.
  • உங்கள் குழந்தை உங்களுக்கு எந்தவொரு பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை அல்லது உற்சாகமற்று (சோம்பலாக) காணப்படுகிறான்.
  • உங்கள் குழந்தை உங்களுக்கு எந்தவொரு பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை, உற்சாகமற்ற நிலையிலிருத்தல்(சோம்பலாக), அல்லது சோர்வடைதல்
  • உங்கள் குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்படுதல் (நிறுத்தமுடியாதபடியாக உடம்பு தொடர்ச்சியாக குலுங்கிக்கொண்டேயிருத்தல்)
  • உங்கள் குழந்தை பானம் எதுவுமே குடிக்கவில்லை, வாந்தியெடுக்கிறான், உடலில் நீரிழப்பு ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
  • உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் உச்ச நிலைக்கு ஏறிக்கொண்டே போகிறது
  • உங்கள் குழந்தை மிகவும் சுகவீனமடையந்தவளாக நடந்துகொள்கிறான்
  • உங்களுக்கு வேறு கேள்விகள் அல்லது கவலைகள் இருக்கின்றன

முக்கிய குறிப்புகள்

  • முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியளிக்கப்படாத பிள்ளைகளுக்கு, கக்குவான் இருமல் கடுமையானதாகவும் அபாயகரமான தொற்று நோயாகவும் இருக்கலாம்.
  • உங்கள் பிள்ளைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் பேர்டூஸிஸ் நோயை நீங்கள் தடுக்கலாம். உங்கள் உடல்நல பராமரிப்பாளரிடம் இதைப் பற்றிப் பேசவும்.
  • உங்கள் பிள்ளையுடன் நெருங்கிய உறவுக்குக்குள் வருபவர்கள் மருந்து உட்கொள்ளவேண்டும்.

Last updated: ਮਾਰਚ 05 2010