சொறி சிரங்கு (ஸ்கேபீஸ்)

Scabies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளில் புடைப்பு மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் இந்தத் தோல் தொற்றுநோய்க்கான காரணங்களை இலகுவாக விளங்கிக்கொள்ள உதவும் ஒரு கண்ணோட்டம்.

சொறி சிரங்கு (ஸ்கேபீஸ்) என்றால் என்ன?

சொறி சிரங்கு என்பது நுண்ணுயிர்களால் ஏற்படும் ஒரு அரிப்புள்ள தோல் நிலமை. பெண் நுண்ணுயிர் தோலைத் தோண்டி முட்டைகளையிடும். இது கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். சொறி சிரங்கு மிக இலகுவாகப் பரவும். ஒரு நபரில் எவ்வளவு அதிகளவு நுண்ணுயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு நன்றாக இன்னொருவருக்குப் பரவும். சொறி சிரங்குகள் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மிகச் சுலபமாகப் பரவும். சொறி சிரங்குகள், பிள்ளைகளில் எக்ஸிமா அல்லது சிரங்குகள் (இம்பெடிகோ) போலவும் தோற்றமளிக்கலாம்.  

சொறி சிரங்கு நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

ஸ்கேபீஸ்புயம், தோள் மற்றும் அக்குளில் சிரங்குள்ள குழந்தை
ஸ்கேபீஸ் சொறியானது இரண்டாம் படி நோய் தொற்றுக்கு வழி நடத்தலாம் இது முடிந்த அளவு விரைவில் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

நுண்ணுயிர்கள் உங்கள் பிள்ளையின் தோலைத் துளைத்துச் சென்றபின், அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கு 3 முதல் 6 வாரங்கள் செல்லலாம். அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இரவில் மோசமாகும் கடுமையான அரிப்பு
  • தோலில் மெல்லிய, சாம்பல் நிறமான மேடான வரிகள், பெரும்பாலும் விரல்களுக்கிடையிலுள்ள தோல்கள் அல்லது மணிக்கட்டை ச் சுற்றி, முழங்கைகள், அக்குள்கள் அல்லது பிறப்புறுப்பு போன்ற இடங்களில் காணப்படும்.
  • குழந்தைகளில், புண்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கழுத்து, முகம் மற்றும் உச்சந்தலை போன்ற இடங்களில் காணப்படலாம்.
  • சொறியினால் புண்கள், கொப்பளங்கள், அல்லது பொருக்குகள்
  • உடலில் வீக்கக் கட்டிகள்

சொறி சிரங்கு நோய்க்கான காரணங்கள்

சொறி சிரங்கு நோய் நுண்ணுயிர்களால் ஏற்படுகிறது. பெண்நுண்ணுயிர்கள் தோலைத் துளைத்து முட்டைகளை இடுகிறது. சொறி சிரங்கு நோய் பெரும்பாலும், கைகளைக் கோர்த்தல் அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற, நேரடியான தோலுடன் தோல் தொடர்பின் மூலமாகப் பரவுகிறது. துவாய்கள் அல்லது படுக்கைவிரிப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் பரவுகிறது. அடைகாக்கும் காலங்களிலும், அறிகுறிகள் இல்லாதிருக்கும்போது, சொறி சிரங்கு நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. நுண்ணுயிர்கள் மனிதரில் மாத்திரம்தான் இனப்பெருக்கம்செய்ய முடியும். செல்லப்பிராணிகளால் சொறி சிரங்கு நோயைப் பரப்பமுடியாது.

ஆபத்துக்கான காரணிகள்

சொறி சிரங்கு நோய்இருப்பதுதானே உங்கள் பிள்ளைக்கு மோசமான சுகாதார பழக்கங்கள் இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தாது. நெரிசலான வீடுகளில் வசிக்கும், படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும், அல்லது நெரிசலான பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் நேரத்தை செலவழிக்கும் பிள்ளைகள் சொறி சிரங்கு நோய்க்கான அதிக ஆபத்திலிருக்கிறார்கள்.

சிக்கல்கள்

சொறிவது, தோலை மேலும் சேதமாக்கி மேலதிக தொற்றுநோயில் விளைவடையும். இந்தத் தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால், அது சிரங்கில் (இம்பெடிகோ), தோலில் ஒரு பக்டீரியாத் தொற்றுநோயில் விளைவடையும். தொடக்கத்திலேயே சொறி சிரங்கு நோய் கண்டுபிடிக்கப்படாத பிள்ளைகளுக்கு ஒரு இரண்டாம் பட்சத் தொற்றுநோய் ஏற்படலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளை அடிக்கடி சொறிவதை நீங்கள் அவதானித்தவுடனேயே உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தவும். சொறி சிரங்கு நோய்க்கான வேறு அறிகுறிகள் அல்லது அடையாளங்களை நீங்கள் கண்டால் உடனே மருத்துவரைச் சந்திக்கவும்.

சொறி சிரங்கு நோய்க்கான சிகிச்சை

சொறி சிரங்கு நோய் சிகிச்சை செய்யப்படாமல் நிவாரணமடையாது. சொறி சிரங்கு நுண்ணுயிர்களக் அழிக்கக்கூடிய ஒரு கிறீம் அல்லது லோஷனை உங்கள் பிள்ளையின் மருத்துவர் எழுதிக் கொடுக்கக்கூடும். கிறீம் 5% பெர்மெத்திரினைக் கொண்டிருக்கலாம். வழக்கமாக, உங்கள் மருத்துவர் சொறி சிரங்கு நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக உங்கள் பிள்ளையின் உடலில் கிறீமை ஒரு முறை தடவி 8 மணி நேரங்களுக்கு விட்டுவிடும்படி ஆலோசனை கூறலாம். கிறீமை உங்கள் பிள்ளையின் உடல் முழுவதும் பூசவும், விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகள், மணிக்கட்டுகள், அக்குள்கள், மற்றும் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேஷ கவனம் செலுத்தவும். உங்கள் பிள்ளையின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் கிறீமைப் பூசவேண்டாம். நுண்ணுயிர்கள் திரும்பவும் தோன்றினால், 1 அல்லது 2 வாரங்களுக்குப் பின்னர் கிறீமைத் திரும்பவும் பூச வேண்டியிருக்கலாம்.

உங்கள் பிள்ளையின் தோலில் அரிப்பைக் குறைப்பதற்காக, உங்கள் மருத்துவர் அன்ரிஹிஸ்ரமைன் அல்லது சொறி நீக்கி கிறீமையும் எழுதிக் கொடுக்கலாம். நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்கு அரிப்பு நீடிக்கலாம்.

சிகிச்சைக் காலம் முடிவடைந்தவுடனே உங்கள் பிள்ளை பகல்நேரப் பராமரிப்பு நிலையத்துக்கு அல்லது பாடசாலைக்குச் செல்லலாம். நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கவேண்டும்.

சொறி சிரங்கு நோயைத் தடுத்தல்

உங்கள் பிள்ளைக்குச் சொறி சிரங்கு நோயிருந்தால்,குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தினருக்கும் உங்கள் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும் கிறீமினால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். உடைகள், துவாய்கள், மற்றும் படுக்கை விரிப்புகளை வெந்நீரில் துவைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • சொறி சிரங்கு ஒரு சிறிய நுண்ணுயிரினால் ஏற்படும் ஒரு சாதாரணமான, அதிகளவில் தொற்றக்கூடிய தோல் நோய்.
  • தொடர்பு கொண்ட 3 முதல் 6 வாரங்களில் தோல் நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடங்கும்.
  • சொறி சிரங்கு நோய் நேரடி உடல்ரீதியான தொடர்பினால் விரைவாகப் பரவும்.
  • சிகிச்சையளிக்கப்படாத சொறி சிரங்கு பக்டீரியா தொற்றுநோய்க்கு வழிநடத்தும்.
  • திரும்பவும் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் எல்லாருக்கும் சிகிச்சையளிக்கப்படவேண்டும்.
Last updated: March 05 2010