Nasogastric (மூக்கு வழியாக இரைப்பைக்குள் உட்செலுத்தப்படும் - NG) குழாய் உங்கள் பிள்ளைக்கு உணவளித்தல்

Nasogastric (NG) tube: Feeding your child [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

Nasogastric குழாய் மூலம் உங்கள் பிள்ளைக்கு உணவளிப்பது எப்படி, குழாயை எப்போது சுத்தப்படுத்துவது மற்றும் உபகரணங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த வழிகாட்டி.  

முக்கிய குறிப்புகள்

  • உணவு மற்றும் மருந்து கொடுத்து முடித்த ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் குழாயை நன்கு அலசிக் கழுவிச் சுத்தப்படுத்தவும்
  • உணவுப் பை மற்றும் குழாய்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் கழுவிச் சுத்தம் செய்யவும்.
  • ஒவ்வொரு முறையும் NG குழாய் இருக்கும் இடத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.  

பின்வரும் தகவல்கள் உங்கள் பிள்ளைக்கு அவரின் nasogastric (NG) குழாய் மூலம் உணவளிப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.  வீட்டில் இருக்கும்போது, NG குழாய் மூலம் உணவளிப்பது புவியீர்ப்பு விசை மூலம் செய்யப்பட வேண்டும்.  

உங்கள் பிள்ளைக்கு NG குழாய் மூலம் உணவளித்தல்

Connect tubes and roller clamp on infusion tubing for attaching a feeding bag to a child’s NG tube
  1. பின்வரும் உபகரணங்களைச் சேகரிக்கவும்:
    • அடாப்டர்கள்
    • 5 அல்லது 10 மிலி சிரிஞ்ச்
    • தயாரிக்கப்பட்ட திரவ உணவு
    • உணவுப் பை
    • உட்செலுத்தும் குழாய்
    • IV pole
  2. உங்கள் கைகளைக் கழுவவும்.
Two millilitres of liquid in a syringe attached to an NG tube
pH test papers and a pH colour guide
  1. குழாயை வைக்கும் இடத்தைச் சரிபார்க்கவும்:
    • குழாயைத் தூய்மையாக்குவதற்கு வெறுமையான 10 மிலி சிரிஞ்ச்யை அடாப்டருடன் இணைத்துக் காற்றை மெதுவாக உட்செலுத்தவும். பின்னர் சுமார் 2 மிலி வயிற்று உள்ளடக்கங்களை எடுக்க plunger -ஐப் பின்னோக்கி இழுக்கவும்.
    • இரைப்பைத் திரவத்துடன் pH சோதனைத் தாளை ஈரப்படுத்தி, கொள்கலனில் உள்ள லேபிளுடன் நிறத்தை ஒப்பிடவும். பெரும்பாலான பிள்ளைகளுக்குத் துண்டுகளில் நிறம் 4 -க்கும் குறைவாக இருக்க வேண்டும். வயிற்று அமிலத்தை அடக்குவதற்குரிய மருந்துகளை எடுக்கும் அல்லது அவ்வேளையில் உணவளிக்கப்பட்ட பிள்ளைகளுக்குத் துண்டுகளில் நிறம் 6 -க்கும் குறைவாக இருக்க வேண்டும். என்ன நிறத்தை எதிர்பார்க்க வேண்டும் என்று உங்கள் பிள்ளையின் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் கேளுங்கள்.
  2. NG குழாய் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், அதை அகற்றிவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும். pH பரிசோதனை செய்யச் சிறிது வயிற்றுத் திரவத்தைப் பின்னால் இழுப்பதில் சிக்கல் இருந்தால், பின்வருவனவற்றை முயற்சிக்கவும்:
    • ஒரு பெரிய சிரிஞ்சைப் பயன்படுத்தி, குழாய் சரிந்து விழுவதைத் தடுக்க மெதுவாகப் பின்னால் இழுக்கவும்.
    • 1 முதல் 2 மிலி காற்றை NG குழாய் வழியாக வயிற்றுக்குள் தள்ளி மெதுவாக சிரிஞ்சைப் பின்னோக்கி இழுக்கவும்.
    • வயிற்றிலுள்ள குழாயின் நிலையை மாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு உங்கள் பிள்ளையை அவரது வலது அல்லது இடது பக்கமாகப் படுக்க வைப்பதன் மூலம் அவரது நிலையை மாற்றவும்.
உட்செலுத்தும் குழாய் மீது கவ்வியை மூடுதல்An open clamp and a closed clamp on infusion tubing
குழாயை மூடுவதற்கு உட்செலுத்தும் குழாயின் கவ்வியில் உள்ள சக்கரத்தைக் கீழ்ப்புறமாக உருட்டவும். குழாயை மீண்டும் திறக்கச் சக்கரத்தை மீண்டும் மேற்புறமாக உருட்டவும்.
உணவுப் பையைக் கையாளுதல்Pouring formula into feeding bag and closing the seal on the feeding bag
  1. உட்செலுத்தும் குழாயைக் கவ்வியால் (clamp) மூடவும்.
  2. தயாரிக்கப்பட்ட திரவ உணவை உணவுப் பையில் ஊற்றி, மூடியை இறுக்கமாக மூடி அந்தப் பையை IV கம்பத்தில் தொங்கவிடவும்.
  3. உணவுக் கரைசலானது, உட்செலுத்தும் குழாயிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றுவதற்காகக் கவ்வியைத் திறக்கவும். குழாயின் முடிவுப் பகுதியில் இருந்து திரவம் வெளியே சொட்டுவதைக் கண்டவுடன் கவ்வியை மூடவும்.
  4. உங்கள் பிள்ளையின் NG குழாயுடன் இந்தக் குழாயை இணைக்கவும். உங்கள் பிள்ளையின் NG குழாயில் உள்ள காற்று பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
  5. விரும்பிய ஓட்ட விகிதத்தைப் பெறுவதற்குப் போதுமான அளவுக்குக் கவ்வியைத் திறக்கவும். இதைச் செய்வதற்குத் திரவ உணவு எவ்வளவு வேகமாகச் சொட்டுகிறது என்பதைப் பார்க்கவும் - வேகமான சொட்டு என்றால் ஊட்டம் விரைவாகச் செல்லும்
  6. உணவளித்து முடிந்ததும், கவ்வியை மூடி, NG குழாயிலிருந்து உட்செலுத்தும் குழாயை அகற்றவும் அதை வேறாக வைக்கவும்.
  7. NG குழாயை மூடவும்.
  8. உங்கள் பிள்ளை உணவளிப்பதற்கான தனது குழாயை தனக்குள்ளேயே வைத்திருந்தால், ஊட்டங்களுக்கு இடையில் எஞ்சியிருக்கும் திரவ உணவை நீக்குவதற்கு 5 மிலி தண்ணீரால் குழாயை அலசிக் கழுவிச் சுத்தப்படுத்தவும். குழாயை மூடுவதற்கு இணைக்கப்பட்டுள்ள பிளக்கைப் பயன்படுத்தவும்

    உங்கள் பிள்ளை அவரின் உணவுக் குழாயை எப்போதும் உள்ளே வைத்திருக்காவிட்டால், உணவளித்த பின்னர் 30 நிமிடங்களுக்குக் குழாயின் நுனியை உயர்த்திப் பிடிக்கவும், இதனால் அது பிள்ளைக்குள் வடிந்து செல்லும். டேப்பை அகற்றி மெதுவாகக் குழாயை அகற்றவும்.

குழாயை எப்போது கழுவ வேண்டும்

NG குழாயை அலசிக் கழுவவும்:

  • ஒவ்வொரு ஊட்டத்தின் முடிவிலும்
  • மருந்து கொடுத்த பின்னர்

உங்கள் உபகரணங்களைச் சுத்தம் செய்தல்

  • உணவுப் பை மற்றும் குழாய்களை வெதுவெதுப்பான சோப்பு நீரால் கழுவவும். நன்றாக அலசிக் கழுவுவதற்கு, நீரைக் குழாய் வழியாகச் செலுத்தி sink -இல் பாய்ந்தோட விடவும். குழாய் மற்றும் பையைக் காற்றில் உலர அனுமதிக்கவும். ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒரு முறை பை மற்றும் உட்செலுத்தும் குழாய்களை உங்கள் வழக்கமான குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டுப் புதிதாக ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
  • சிரிஞ்சுகளை வேறாக எடுத்து வெதுவெதுப்பான சோப்பு நீரில் கழுவவும். வெதுவெதுப்பான, தெளிவான நீரில் நன்கு அலசிக் கழுவிக் காற்றில் உலர விடவும். ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒருமுறை ஒரு புதிய சிரிஞ்சைப் பயன்படுத்தவும். பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகளை உங்கள் வழக்கமான குப்பைத் தொட்டிக்குள் எறிந்து விடவும்.
  • சிரிஞ்சுகள் மற்றும் உணவுப் பைகளை வழக்கமான குப்பைத் தொட்டிகளுக்குள் அப்புறப்படுத்தலாம்.

மேலதிகத் தகவல்களுக்குத் தயவுசெய்து Nasogastric (NG) குழாயைப் பார்க்கவும்:  உங்கள் குழந்தையின் NG குழாயை எவ்வாறு செருகுவதுலும் Nasogastric (NG) குழாய் மூலம் உணவளித்தலும்:  பொதுவான பிரச்சினைகள்.  

Last updated: ஜனவரி 25 2024