உங்கள் குழத்தையைத் தூக்கி வைத்திருத்தல்
உங்கள் குழந்தை நீங்கள் நினைப்பது போல நொருங்கக் கூடிய நிலையில் இருப்பவனல்ல. குழந்தைகள், அநேக இயற்கையான அனிச்சைச் செயற்பாடுகளுடன் நேர்த்தியாக, நீண்டு சுருங்கும் தன்மையுடையவர்கள். ஆயினும், பாதுகாப்புக்காக மாத்திரமல்ல, உங்கள் குழந்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்து கொள்வதற்காகவும் அவனை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
திடுக்கிடும் அனிச்சைச் செயல் என்று அறியப்படும் தன்மையோடுதான் எல்லாக் குழந்தைகளும் இந்த உலகத்துக்கு வருகிறார்கள். திடுக்கிடும் அனிச்சைச் செயலானது, உரத்த சத்தங்கள் அல்லது திடீர் அசைவுகள் உங்கள் குழந்தையை தன் முதுகை வில்லைப்போல் வளைக்க, தன் கைகள் மற்றும் கால்களை உதற, மற்றும் அழவைக்கிறது. இந்த அனிச்சையான செயல் பெரும்பாலும் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். உங்கள் குழந்தை திடுக்கிடுவதைத் தவிர்ப்பதற்கு, அவனை மெதுவாகத் தூக்கி, அவனது முழு உடலையும் சேர்த்து அணைத்து வைத்திருங்கள். அவனது கைகளையும் கால்களையும் தொங்க விடுவது அவனைப் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்யும் மற்றும் அவனைத் திடுக்கிட வைக்கும்.
உங்கள் குழந்தையையை நேராக நிமிர்த்திப் பிடிக்கும்போது அவனின் தலையைத் தாங்கிப்பிடிப்பதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தையின், தலை மற்றும் கழுத்தை ஒரு கையாலும், அவனது கீழ்ப்பாகம் மற்றும் துடைகளை மற்றக் கையாலும் தாங்கிப் பிடித்தால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உணருவான். மேலதிக பாதுகாப்புக்காக உங்கள் குழந்தையை உங்கள் உடலுடன் சேர்த்து அணைத்துப் பிடியுங்கள்.
உங்கள் குழந்தையை நித்திரை செய்ய வைப்பதற்காக கீழே படுக்க வைக்கும்போது, அவன் விழித்து எழுந்திருப்பது அல்லது திடுக்கிடுவதைத் தவிர்ப்பதற்காக அவனை மென்மையாக மற்றும் மெதுவாகக் கீழே இறக்கவும். உங்கள் குழந்தையின் தலையை முதலில் கீழே இறக்கவும், பின் படிப்படியாக உடலின் மற்றப்பாகங்களைக் கீழே வைக்கவும். ஒரு கையை மெதுவாக எடுக்கவும்; பின்பு மற்றக் கையை எடுக்கவும். இந்த நிலையில் அவன் விழித்தெழமாட்டான் என்பது நம்பிக்கை. உங்கள் குழந்தைக்கு, அவனைக் கீழே படுக்கவைக்கும்போது திடுக்கிடும் பழக்கம் இருந்தால், அவனைக் கீழே படுக்க வைக்குமுன்னர் பல மடிப்புத் துணிகளால் சுற்றிக் கட்டி முயற்சி செய்து பார்க்கவும். உங்கள் குழந்தையைத் மெதுவாகத் தட்டிக் கொடுத்து, மற்றும் அவனுடன் மென்மையான தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டு சிலநிமிடங்கள் அவனுடன் தங்கியிருங்கள். அவன் அமைதியடையும்வரை அவனுடன் தங்கியிருக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு ஆடை அணிவித்தல்
உங்கள் குழந்தைக்கு ஆடைகள் வாங்கும்போது விவேகமாகத் தெரிவு செய்யுங்கள். கழுத்துவரை உயர்ந்த கம்பளி ஆடைகள், உடலுடன் ஒட்டிய சட்டைக்கைகள், ஆடையில் அதிகளவு பட்டன்கள் மற்றும் ஸிப்புகளுள்ள ஆடைகள் என்பனவற்றைத் தவிர்க்கவும். உடம்பை நெளிந்து கொடுக்கும் அல்லது வீண்சந்தடி ஏற்படுத்தும் குழந்தைகளுக்கு எந்த வகையான உடைகளையும் அணிவிப்பது கஷ்டம். இந்தச் செயற்பாட்டை, இருப்பதைவிட அதிக கடினமானதாக்க வேண்டாம்.
நீங்கள் வெளியே போகத் திட்டமிடும்போது, அந்தக் காலநிலையில், ஒரு வயது வந்தவருக்குத் தேவைப்படும் ஆடைகளின் அடுக்குக்குக் சமமான அடுக்கு ஆடைகளை உங்கள் குழந்தைக்கும் அணிவிக்கவும். கோடை காலங்களில் உங்கள் குழந்தைக்கு அதிகளவு ஆடை உடுத்தாதீகள். குளிர் காலத்தில் உங்கள் குழந்தையின் தலை சூட்டை இழப்பதைத் தவிர்ப்பதற்கு அவனுக்கு ஒரு தொப்பி தேவைப்படும்.
உங்கள் குழந்தைக்கு ஆடை அணிவிக்கும்போது அவனைக் கீழே படுக்கவைக்கவும். இது எல்லா வேலைகளையும் செய்வதற்கு உங்கள் இரு கைகளுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும். முதலில் சிறிது காலத்திற்கு, உங்கள் குழந்தைக்கு ஆடை அணிவிக்கும்போது நீங்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் தூண்டும்போது அவன் ஆடையின் கையினூடாகத் தன் கையைப் போட இயலுவதற்கு இன்னும் சிறிது காலம் செல்லும். ஆடையின் ஒவ்வோரு கையினூடாக அவன் தன் கையைப் போடுவதற்கு, அதேபோல தன் கால்களையும் போடுவதற்கு நீங்கள் அவனை வழிநடத்த வேண்டியிருக்கும்.
உங்கள் அயல்வீட்டுக்காரர் சொல்கிறார் என்பதற்காக நீங்கள் உங்கள் குழந்தைக்கு காலணி அணிவிக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், அவன் நடக்கத் தொடங்கும்வரை அவனுக்குக் காலணி தேவையில்லை. உங்கள் குழந்தையின் பாதத்தின் வில் போன்ற வளர்ச்சியை காலணிகள் தடுக்கக்கூடும். தற்காலத்துக்கு பூட்டீஸ் மற்றும் சிறிய காலுறைகளை உபயோகிக்கவும்.