எச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தி எடுத்தல்

Spitting up and vomiting in babies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

எச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தியெடுத்தல் நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஆழமான விவரிப்புகளும் வழிகளும்.

எச்சில் உமிழ்தல்

அநேக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பாலூட்டப்படும்போது அல்லது அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் தங்கள் தாய்ப்பாலை அல்லது ஃபோர்மூலாவை உமிழ்ந்துவிட விருப்பமுள்ளவர்களாயிருப்பார்கள். சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் எப்போதாவது மாத்திரம்தான் எச்சில் உமிழ்வார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு பாலூட்டலின்போதும் எச்சில் உமிழ்வார்கள். எச்சில் உமிழ்தல் குழந்தையின் வாயிலிருந்து பிரயாசப்படாமலே வெளியே உருண்டு வரும். சில சமயங்களில் ஏப்பத்துடன் வெளியேறும்.

எச்சில் உமிழ்தல் காஸ்ட்ரோஈசோஃபெகல் அதாவது இரையக உணவுக்குழாயக அனிச்சையான செயல் எனவும் அழைக்கப்படும். வயிற்றின் மேல் முனையிலுள்ள வட்டத் தசைகள் சரிவர மூடப்பட்டிருக்காவிட்டால் இது சம்பவிக்கும். குழந்தை வளர்ந்து வரும்போது எச்சில் உமிழ்தல் குறைந்துகொண்டே வரும். பெரும்பாலும், குழந்தை ஒரு வயதை எட்டுமுன்னர் இது மறைந்துவிடும்

உங்கள் குழந்தைக்கு உதவிசெய்யும் வழிகள்

பின்வரும் காரியங்களை முயற்சி செய்வதன்மூலம் உங்கள் குழந்தை எச்சில் உமிழும் அளவைக் குறைக்கலாம்:

  • உங்கள் குழந்தைக்கு அகோரப் பசி எடுப்பதற்கு முன்பே அவளுக்கு பாலூட்டவும்.
  • நீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால் சொற்ப அளவு பாலை ஊட்டவும். அளவுக்கதிகமாகப் பாலூட்டுவதும் எச்சில் உமிழ்தலை மோசமாக்கும். உங்கள் குழந்தை பாற்புட்டியை முழுமையாக வெறுமையாக்க வேண்டியதில்லை.
  • நீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால், சூப்பானின் அளவு அளவுக்கதிகமாகப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இல்லாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அளவுக்கதிகமாகப் பெரிதாகவிருக்கும் சூப்பான் பாலை அதிக விரைவாகப் பாயச்செய்யும்; மிகவும் சிறிய சூப்பான் உங்கள் குழந்தை அதிகளவு காற்றை விழுங்கச் செய்யும்.
  • பாலூட்டும் சமயத்தை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; கவனச் சிதறல்களைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • இறுக்கமான டயபரைத் தவிருங்கள். ஏனென்றால் அவை அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் வயிற்றில் அழுத்தத்தை உண்டாக்கவேண்டாம்.
  • பாலூட்டும் சமயத்தில் உங்கள் குழந்தையின் வயிற்றிலிருக்கும் காற்றை வெளியேற்றுவதற்காக அவளை இரண்டு தடவைகள் ஏப்பம் விடச் செய்யுங்கள். பாலூட்டும்போது அவளை இடைமறிக்கவேண்டாம், ஆனால் அதற்குப்பதிலாக அவள் இடைநிறுத்தும்போது ஏப்பம் விடச் செய்யவும்.
  • ஒவ்வொரு பாலூட்டலின் பின்னரும் அவளைச் செங்குத்தாகப் பிடிக்கவும்.

எப்போது மருத்துவரைச் சந்திக்கவேண்டும்

பெரும்பாலும் எச்சில் உமிழ்தல் தீங்கற்றது; ஆயினும் எடை அதிகரிக்காதிருத்தல், மூச்சுத்திணறல், அல்லது உணவுக்குழாயில் அமிலச் சிதைவு போன்றவை ஏற்பட்டால் இது பிரச்சினையை உண்டாக்கலாம். உங்கள் குழந்தை எச்சில் உமிழும்போது பின்வரும் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், அவளை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு வரவும்:

  • எச்சில் உமிழ்தலில் இரத்தக் கோடுகள்
  • உங்கள் குழந்தையை மூச்சுத் திணறவைக்கும் அல்லது வாயை அடைக்கப்பண்ணும் எச்சில் உமிழ்தல்
  • உங்கள் குழந்தையை நீல நிறமாக மாறச் செய்யும் எச்சில் உமிழ்தல்
  • எடை அதிகரிப்பதில் பிரச்சினைகள்
  • வாந்தி அல்லது உந்தித் தள்ளும் வாந்தி

நித்திரை செய்யும் நிலையைப்பற்றிய ஒரு குறிப்பு

புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையை நேராகப் படுக்க வைப்பதுதான் திடீர் குழந்தை மரணத்துக்கான அறிகுறிகளைத் தவிர்ப்பதற்கு நீங்கள் அவளுக்கு உதவி செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் என்பதாகக் கருதப்படுகிறது. இது, கனடா குழந்தை மருத்துவ சங்கம், குழந்தைகளின் அமரிக்கன் அக்கடமி,மற்றும் வேறு அநேக அகில உலக குழந்தைகள் சங்கங்கள் என்பனவற்றால் சிபாரிசு செய்யப்படுகிறது. உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை நேராகப் படுக்கவைத்த பின்னரும் அவள் எச்சில் உமிழ்தலை விரும்பினால், நீங்கள் அதைக்குறித்துக் கவலையடையவேண்டிய அவசியமில்லை.நேராகப்படுக்கவைத்த புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மூச்சுத் திணறலின் அதிகரிப்பு இல்லை.

வாந்தி மற்றும் உந்தித் தள்ளூம் வாந்தி

வாந்தியெடுத்தல் என்பது எச்சில் உமிழ்தலைவிட அதிகம் வலிமை வாய்ந்தது. இது வயிற்றிலுள்ள உணவின் அளவில், வெறுமனே இரு மேசைக்கரண்டிக்குச் சற்று அதிகத்தை உட்படுத்தும். வாந்தியெடுத்தல் வயிற்றில் ஒரு வைரல் தொற்றுநோய், குழந்தை உட்கொண்ட ஆகாரத்தின் எதிர்விளைவு, அல்லது வேறு இரப்பைக்குடல் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாந்தியெடுத்தலுக்கு சிகிச்சையளித்தல்

வாந்தியெடுத்தலுக்கு கொடுக்கப்படும் ஆரம்ப சிகிச்சை உங்கள் குழந்தைக்கு சிறிய அளவில் உணவு கொடுப்பதில் உட்பட்டிருக்கிறது. நீங்கள் தாய்ப்பாலூட்டுபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை மார்புடன் செலவளிக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும். சொற்ப அளவிலான உணவூட்டுதலைச் சரிசெய்வதற்காக உங்கள் குழந்தைக்கு மிகவும் அடிக்கடி உணவு கொடுக்கவேண்டியிருக்கலாம்.

தற்காலிகமாக தாய்ப்பால் அல்லது ஃபொர்மூலாவுக்குப் பதிலாக, பீடியலைட் போன்ற ஒரு எலட்றோலைட் கரைசலைக் கொடுக்கவேண்டியிருக்கலாம். இந்த நிலைமையில், வாந்தியெடுத்தல் நிறுத்தப்பட்டபின்னர், உங்கள் குழந்தைக்கு எட்டு மணி நேரங்களுக்குத் தெளிவான திரவம் கொடுக்கவும். உங்கள் குழந்தைக்கு ஒழுங்கான இடைவேளையில் சிறிய அளவில் பாலூட்டவும்: தொடக்கத்தில் ஏறக்குறைய 5 மிலி (ஒரு தேக்கரண்டி). வாந்தியெடுக்காவிட்டால், நான்கு மணி நேரங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அளவை இரட்டிப்பாக்கவும். இந்த நிலைமையில் உங்கள் குழந்தை வாந்தியெடுத்தால், ஒரு மணி நேரத்துக்கு அவளின் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கவும். பின்னர் திரும்பவும் சிறிய அளவு உணவு கொடுப்பதில் தொடங்கவும்.

வாந்தியெடுத்தல் எப்போது கவலைக்குரியதாகும்

வைரல் தொற்றுநோய் இருந்தால், பெரும்பாலும் வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். வாந்தியில் பச்சைநிறப் பித்த நீர் இருந்தால், குடலில் அடைப்பு இருக்கிறது என்பதன் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடிக் கவனிப்பும் சிலவேளைகளில், அவசர அறுவைச் சிகிச்சையும் தேவைப்படலாம். வாந்தியெடுத்தல் அதிகமாகத் தோன்றினால், பச்சை நிறப் பித்தநீர் காணப்பட்டால், அல்லது வாந்தியில் இரத்தம் காணப்பட்டால், அல்லது வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் இருந்தால் உடனே உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். அத்துடன் உங்கள்புதிதாகப் பிறந்த குழந்தை வாய் உலர்வு, ஒரு நாளில் ஆறு டயபருக்குக் குறைவாக நனைத்தால், குழிவிழுந்த கண்கள், தாழ்ந்த உச்சிக்குழி, அல்லது தோல் உலருதல் போன்ற அறிகுறிகளைக் காண்பித்தால் மருத்துவரை அழைக்கவும்.

எச்சில் உமிழ்தல் அல்லது பலம் பிரயோகித்து வாந்தி எடுப்பது உந்தித் தள்ளும் வாந்தி எனப்படும். உங்கள் குழந்தை உந்தித் தள்ளும் வாந்தி எடுக்கத் தொடங்கினால், உங்கள் மருத்துவரை உடனே தொடர்பு கொள்ளவும். சிசுக்களில் சாதாரணமாகக் காணப்படும் நிலைமைகளான பைலோரிக் ஸ்ரெனொஸிஸ் என்ற நோயினது அறிகுறியாகவும் இருக்கலாம். வயிற்றின் கீழ்க் குழாய்ப்பகுதி ஒடுங்கி, வயிற்றிலிருந்து உணவு வெளியேறாமல் தடுக்கும்போது, பைலோரிக் ஸ்ரெனொஸிஸ் நோய் உண்டாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அறுவைச் சிகிச்சை உபயோகிக்கப்படுகிறது.


Last updated: அக்டோபர் 18 2009