தசை மின் அலை வரைவு என்றால் (எலெக்ரோமைஓகிராஃபி) என்ன?
தசை மின் அலை வரைவு என்பது தசைகளும் நரம்புகளும் ஒருமித்து எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையாகும். தசையிலிருந்தும், தசைக்கும் செய்திகளை நரம்புகள் கடத்துகின்றன. நரம்புகள் அல்லது தசைகள் பாதிக்கப்பட்டால், தசைகள் ஒழுங்காக இயங்காமல் போகலாம்.
தசை மின் அலை வரைவு பின்வருவனவற்றை மருத்துவருக்குத் தெரிவிக்கும்:
- உங்கள் பிள்ளைக்கு நரம்புகள் அல்லது தசைகளில் பிரச்சினையிருந்தால்
- தசைகள் ஏன் பலவீனமாக, விறைப்பாக, அல்லது வலியுள்ளதாக உணருகிறது
- பிரச்சினை எங்கே இருக்கிறது: பிரச்சினை தசைகளில், நரம்புகளில், அல்லது தசைகள் மற்றும் நரம்புகள் சந்திக்கும் இடத்தில் இருக்கலாம்.
தசை மின் அலை வரைவுப் பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கிறது என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது. உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளை உபயோகித்து என்ன சம்பவிக்கும் என்பதை அவனுக்கு விளக்குவதற்கு இந்தத் தகவலை உபயோகிக்கவும்.
மூளைமின்அலை வரைவு EMG பரிசோதனைக்குத் தயாராதல்
நீங்களும் உங்கள் பிள்ளையும் பரிசோதனைக்குத் தயாராவதற்கு விசேஷமாக எதையும் செய்யத் தேவையில்லை. பரிசோதனைக்கு முன்னர் உங்கள் பிள்ளை வழக்கம்போல உணவு உண்ணலாம் மற்றும் பானங்கள் குடிக்கலாம்.
தசை மின் அலை வரைவுப் பரிசோதனை மருத்துவமனையில் செய்யப்படும்
தசை மின் அலை வரைவுப் பரிசோதனை பெரும்பாலும் மருத்துவமனையில் செய்யப்படும். இது விசேஷ பயிற்சி பெற்ற மருத்துவர் அல்லது தாதிகளால் செய்யப்படும். பெரும்பாலான மருத்துவமனைகள் பரிசோதனையின்போது உங்கள் பிள்ளையுடன் தங்க உங்களை அனுமதிப்பார்கள்.
மூளைமின்அலை வரைவு EMG பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கிறது
பெரும்பாலும் பரிசோதனை 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
உங்கள் பிள்ளை ஒரு சௌகரியமான படுக்கையில் படுத்திருப்பான். மருத்துவர் கம்பி போல தோற்றமளிக்கும் ஒரு மெல்லிய ஊசியை 1 முதல் 4 வித்தியாசமான தசைகளில் குத்துவார். ஊசி ஒவ்வொரு தசையிலும் 30 செக்கன்டுகளுக்கு இருக்கும். உங்கள் பிள்ளையால் முடியுமானால், மருத்துவர் அல்லது தாதி அவனது தசைகளைத் தளர்த்த, பின் இறுக்கமாக்கச் சொல்லுவார். மருத்துவர் பரிசோதிக்கும் தசைகளின் எண்ணிக்கை, உங்கள் பிள்ளையின் பிரச்சினையைப் பொறுத்திருக்கும்.
ஊசி கணனியுடன் பொருத்தப்படும். கணனி ஒவ்வொரு தசையின் செயற்பாட்டையும் பதிவு செய்யும்.
மருத்துவரும் தாதியும் ஊசியை எப்போது மற்றும் எங்கே குத்துவார்கள் என்பதை எப்போதும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் சொல்லுவார்கள். தசைகளுக்குள் ஊசியைச் செலுத்துவது சிறிதளவு வலியைக் கொடுக்கலாம். அது உங்கள் பிள்ளைக்கு வழக்கமாக ஊசி போடுவதைப்போல இருக்கலாம்.
தசை மின் அலை வரைவு EMG பரிசோதனைக்குப் பின்னர்
உடனேயே உங்கள் பிள்ளை தன் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். பாரிசோதனக்குப் பின்னர் சிறிது நேரத்துக்கு பரிசோதிக்கப்பட்ட தசைகள் வலிக்கலாம்.
முக்கிய குறிப்புகள்
- நரம்புகளும் தசைகளும் எவ்வளவு நன்றாக ஒருமித்து வேலை செய்கின்றன என்பதைக் கண்டறிவதற்காக தசை மின் அலை வரைவுப் பரிசோதனை செய்யப்படுகிறது. தசைகள், நரம்புகள், அல்லது தசைகளும் நரம்புகளும் சந்திக்குமிடத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதைப் பரிசோதனை காண்பிக்கலாம்.
- பரிசோதனையின் போது 1 முதல் 4 நரம்புகளில் சிறிய ஊசிகள் குத்தப்படும். ஊசிகள் சிறிதளவு வலியைக் கொடுக்கலாம்.
- பரிசோதனை 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.