இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் (EP) செய்தல் என்றால் என்ன (இவோக்ட் பொடென்ஷல்)
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச்செய்யும் பரிசோதனை (EPs) ஒன்று உங்கள் பிள்ளைக்குச் செய்யப்படுகின்றது. இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனைகளில் மூன்று முக்கிய வகைகளும் இரண்டு துணைவகைகளும் இருக்கின்றன:
- பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை, வெளிச்சம் (ஃபிலாஷ்) மற்றும் வடிவமைக்கப்பட்டவை உட்பட
- தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை EPs (SEP), மேல் அவயவம் மற்றும் கீழ் அவயவம் உட்பட
- ஒரு மூளைத்தண்டு செவித்திறனால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை EPs (BAEP)
பரிசோதனையின் ஒவ்வொரு வகையும் இந்த இதழில் பின்னர் விளக்கப்படும்.
சிலசமயங்களில், மூன்று வகையான இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனைகளும் ஒரே சமயத்தில் நடைபெறும். வேறு சமயங்களில், இவற்றுள் ஓரேயொரு பரிசோதனை மாத்திரம் செய்யப்படும். எந்தப் பரிசோதனை அல்லது பரிசோதனைகள் செய்யப்படவேண்டும் என்பதை உங்கள் பிள்ளையின் மருத்துவர் தீர்மானிப்பார்.
பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் (VEP) பரிசோதனைகள்
கண்ணிலிருந்து மூளையின் பார்வைக்குரிய புறப்பகுதிவரைச் செல்லும் நரம்புகளைப் பரிசோதனை செய்வது, பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை ஆகும். மூளையின் பார்வைக்குரிய புறப்பகுதிவரைச் செல்லும் நரம்புகள் என்பது நீங்கள் பொருட்களைப் பார்க்கச் செய்யும் மூளையின் பகுதியாகும்.
பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் பரிசோதனையின் போது
பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் பரிசோதனையில் இரண்டு வகைகள் உண்டு. அவை: “ஃபிலாஷ்” பரிசோதனை மற்றும் “வடிவமைக்கப்பட்ட” பரிசோதனை என்பன. உங்கள் பிள்ளைக்கு இரு பரிசோதனைகளும் நடைபெறலாம். உங்கள் பிள்ளையின் வயது மற்றும் அவன் எவ்வளவு நன்றாகப் பார்க்கிறான் என்பதைப் பொறுத்து, எப்படிப் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்பதில் மிகச் சிறிய மாற்றம் ஏற்படலாம்.
பரிசோதனையின்போது, கிறீமால் நிரப்பப்பட்டுச் சல்லடைத் துணியால் மூடப்பட்ட சிறிய உலோக வட்டங்கள் உங்கள் பிள்ளையின் தலையில் வைக்கப்படும். இந்த உலோக வட்டங்கள் மின்வாய்கள் எனப்படும்.
ஃபிலாஷ் இயக்கத்திறன் பரிசோதனக்கு உங்கள் பிள்ளை மிகவும் சிறிய சிவப்பு வெளிச்சத்தை கண்களுக்கு மேலாகப் பாய்ச்சக்கூடிய பெரிய கண்ணாடியை அணிந்திருப்பான். உங்கள் பிள்ளை சிவப்பு நிற வெளிச்சத்தை முதலில் ஒரு கண்ணாலும், பின் மற்றக் கண்ணிலும் , கடைசியாக இரு கண்களாலும் பார்ப்பான். உங்கள் பிள்ளை இந்த வெளிச்சங்களைப் பார்க்கும்போது, மின்வாய்கள் மூளை பிரதிபலிக்கும் விதங்களைப் பதிவு செய்யும். இந்த வெளிச்சம் மிகவும் பிரகாசமாயிருப்பதால், உங்கள் பிள்ளை அதை மூடப்பட்ட கண்களால் கூடப் பார்க்க முடியும். உங்கள் பிள்ளை வெளிச்சத்தை தனது கண்மடல்களால்கூடப் பார்க்கமுடியும்.
பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் வடிவமைக்கப்பட்ட பரிசோதனையின்போது, உங்கள் பிள்ளை ஒரு தொலைக்காட்சியின் முன்பாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பான். கறுப்பு மற்றும் வெள்ளை சதுரங்களுக்கிடையில் அசையும் ஒரு சதுரங்கப்பலகை அமைப்பைத் தொலைக்காட்சித் திரை காண்பிக்கும். உங்கள் பிள்ளை திரையின் நடுவேயுள்ள ஒரு புள்ளையை உற்றுப் பார்க்கும்படி கேட்கப்படுவான். அப்போது அவனது மூளை பிரதிபலிக்கும்விதத்தை மின்வாய்கள் பதிவு செய்யும். இந்தப் பரிசோதனையின்போது, உங்கள் பிள்ளை அசையாதிருந்து திரையை உற்றுப்பார்க்கவேண்டியிருக்கும்.
தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் (SEP) பரிசோதனை
தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை, மேல் அவயவத்திலிருந்து (மணிக்கட்டு) அல்லது கீழ் அவயவத்திலிருந்து(கணுக்கால்) இலிருந்து, மூளையின் தொடுதலுணர்வின் புறப்பகுதி வரை செல்லும் நரம்புகளைப் பரிசோதிக்கும். மூளையின் தொடுதலுணர்வின் புறப்பகுதி வரை செல்லும் நரம்புகள் என்பது நீங்கள் பொருட்களைத் தொடும்போது அவற்றை உணரச் செய்யும் மூளையின் பகுதியாகும்
தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதளையின்போது
உங்கள் பிள்ளை சௌகரியமாக அவன(ள)து படுக்கையில் மல்லாந்து படுத்திருப்பான்(ள்). உங்கள் பிள்ளை பரிசோதனையின்போது அசையாதிருப்பதை உறுதி செய்வதற்காக அவனு(ளு)க்கு குளோரல் ஐதரேற்று என்றழக்கப்படும் மருந்து கொடுக்கப்படும். இது உங்கள் பிள்ளை இளைப்பாற உதவிசெய்வதற்காக கொடுக்கப்படும் மிகவும் வீரியம் குறைந்த மயக்க மருந்தாகும்.
பரிசோதனையின்போது, கிறீமினால் நிரப்பட்டு சல்லடைத் துணியால் மூடப்பட்ட சிறிய உலோக வட்டங்கள் உங்கள் பிள்ளையின் தலையில் வைக்கப்படும். இந்த சிறிய உலோக வட்டங்கள் மின்வாய்கள் எனப்படும்.
தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனையின்போது மேல் அவயவத்துக்கான மின்வாய்கள் உங்கள் பிள்ளையின் தலை, கழுத்து, மற்றும் தோளில் வைக்கப்படும்.
தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனையின்போது கீழ் அவயவத்துக்கான மின்வாய்கள் உங்கள் பிள்ளையின் முதுகு மற்றும் முழங்காலின் பின் பகுதியில் வைக்கப்படும்.
உங்கள் பிள்ளை, மணிக்கட்டு அல்லது கணுக்காலிலுள்ள ஒரு விசேஷ பட்டை வடிவத்திலுள்ள மின்வாயிலிருந்து ஒரு கூச்சம் அல்லது ரீங்கார சத்தத்தை உணரலாம். ஒவ்வொரு முன்னங்கை அல்லது காலை ஒவ்வொன்றாகப் பரிசோதனை செய்வோம்.
இந்தப் பரிசோதனை உங்கள் பிள்ளைக்குத் தீங்கு செய்யாது. ஆனால், கூச்சம் அல்லது ரீங்கார சத்தத்தினால் உங்கள் பிள்ளை அசௌகரியமாக உணரக்கூடும்.
முளைத்தண்டு செவித்திறனால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் (BAEP) பரிசோதனைகள்
ஒரு மூளைத்தண்டு செவித்திறனால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை காதிலிருந்து மூளைத்தண்டுவரைச் செல்லும் நரம்பைப் பரிசோதிக்கிறது. மூளைத்தண்டு என்பது முதுகெலும்புத் தண்டை மூளையின் மற்றப் பாகங்களுடன் இணைக்கும் மூளையின் பாகமாகும். மூளைத்தண்டானது இதயத்துடிப்பு, சுவாசித்தல், விழித்திருத்தல், மற்றும் மூளையிலிருந்து உடலின் மற்றப்பாகங்களுக்கு செய்திகளைக் கொண்டு போதல் மற்றும் கொண்டு வருதல் என்பனவற்றைக் கட்டுப்படுத்துகிறது. காதுகள் மற்றும் மூளையை இணைக்கும் நரம்புகள் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதை இந்தப் பரிசோதனை அறிவிக்கும்.
ஒழுங்காக, செவித்திறன் பரிசோதனையைச் செய்யமுடியாத பிள்ளைகளின், செவித்திறன் பிரச்சினையைப் பரிசோதிப்பதற்கும் இந்தப் பரிசோதனை உதவுகிறது.
மூளைத்தண்டு செவித்திறனால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனையின் போது
உங்கள் பிள்ளை சௌகரியமாக படுக்கையில் அவன(ள)து படுக்கையில் படுத்திருப்பான்(ள்). உங்கள் பிள்ளை பரிசோதனையின்போது அசையாதிருப்பதை உறுதி செய்வதற்காக அவனு(ளு)க்கு குளோரல் ஐதரேற்று என்றழக்கப்படும் மருந்து கொடுக்கப்படும். இது உங்கள் பிள்ளை இளைப்பாற உதவிசெய்வதற்காக கொடுக்கப்படும் மிகவும் வீரியம் குறைந்த மயக்க மருந்தாகும்.
பரிசோதனையின்போது, கிறீமினால் நிரப்பட்டு சல்லடைத் துணியால் மூடப்பட்ட சிறிய உலோக வட்டங்கள் உங்கள் பிள்ளையின் தலையில் வைக்கப்படும். இந்த சிறிய உலோக வட்டங்கள் மின்வாய்கள் எனப்படும்.
உங்கள் பிள்ளை இரு காதுகளிலும் காதுகேட்கும்கருவியைப் பொருத்தியிருப்பான். காதுகேட்கும்கருவியினூடாக உங்கள் பிள்ளை விரைவான “கிளிக்” என்ற சத்தங்களை, முதலில் ஒரு காதிலும், பின்னர் மற்றக் காதிலும், கடைசியாக இரு காதுகளிலும் கேட்பான்(ள்). இந்தச் சத்தங்களுக்கு உங்கள் பிள்ளையின் மூளை எப்படிப் பிரதிபலிக்கிறது என மின்வாய்கள் பதிவு செய்யும்.
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் பரிசோதனை ஒன்று ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்
உங்கள் பிள்ளைக்கு இந்த மூன்று வகையான இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் பரிசோதனைகளும் தேவைப்பட்டால், அது 1½ முதல் 2 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் பரிசோதனைக்காகத் தயாராதல்
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனைக்காக உங்கள் பிள்ளையை தயார் செய்யும்போது அவனால் ஏறக்குறைய30 நிமிடங்கள் அசையாமல் படுத்திருக்கமுடியுமானால், நீங்கள் எதுவுமே செய்யவேண்டியதில்லை.
உங்கள் பிள்ளையினால் 30 நிமிடங்களுக்கு அசையாமல் படுத்திருக்கமுடியாவிட்டால், அவனு(ளு)க்கு மிகவும் வீரியம் குறைந்த மயக்கமருந்து தேவைப்படும். ஒரு மயக்க மருந்து என்பது பரிசோதனையின்போது உங்கள் பிள்ளை அசையாது படுத்திருப்பதற்காகக் கொடுக்கும் மருந்தாகும்.
உங்கள் பிள்ளைக்கு மயக்க மருந்து தேவைப்பட்டால், பரிசோதனைக்கு 8 மணிநேரத்துக்கு முன்னர் அவன்(ள்) திடமான உணவை உட்கொள்ளக்கூடாது. 6 மணிநேரத்துக்கு முன்னர் வரை பால் அல்லது ஃபொர்மூலா கொடுக்கலாம். 4 மணிநேரத்துக்கு முன்னர் வரை தாய்ப்பால் குடிக்கலாம். 2 மணிநேரம் வரை அப்பிள் ஜூஸ் அல்லது தண்ணீர், அல்லது ஜெல்-ஓ சாப்பிடலாம்.
தயவு செய்து, பரிசோதனைக்குப் பின்னர் 6 மணிநேரம் வரை உங்கள் பிள்ளையை கவனமாகக் கண்காணிக்கவும். உங்கள் பிள்ளைக்கு, தண்ணீர் மற்றும் அப்பிள் ஜூஸ் போன்ற தெளிவான திரவங்களின் ஒரு சிறிய உறிஞ்சல் மாத்திரம் கொடுக்கவும். உங்கள் பிள்ளை சாப்பிடவேண்டும் என உணர்ந்தால் அவனுக்கு ஒரு ஒழுங்கான உணவைக் கொடுக்கலாம். பிள்ளை நன்கு விழித்த்தும் அவன் தன்னுடைய வழக்கமான செயற்பாடுகளுக்கு திரும்பலாம்.
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனயினால் பக்கவிளைவு எதுவுமில்லை
இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனையினால் பக்கவிளைவு எதுவுமில்லை. உங்கள் பிள்ளைக்கு மயக்க மருந்து தேவைப்பட்டால், அவன்(ள்) பரிசோதனைக்கு பின்னர் 4 முதல் 6 மணிநேரம் வரை நித்திரை மயக்கம், எரிச்சல் குணம், அல்லது ஆட்டம் காண்பவனாக இருப்பான்.
முக்கிய குறிப்புகள்
- இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனைகள் என்பது வித்தியாசமான நரம்புகளினூடாக செய்திகள் எவ்வளவு நன்றாக மூளைக்குச் செல்கின்றது என்பதை அறிந்துகொள்ளச் செய்யப்படும் பரிசோதனையாகும்.
- மூன்று வகையான இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனைகள் இருக்கின்றன. அவையாவன: பார்வைக்குரிய இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை (VEP), தொடுதல் உணர்வினால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை(SEP), ஒரு மூளைத்தண்டு செவித்திறனால் இயக்கத்திறனை வெளிக்கொண்டுவரச் செய்யும் பரிசோதனை (BAEP) என்பன.
- உங்கள் பிள்ளையால் பரிசோதனை நடைபெறும் சமயத்தில் அசைவில்லாது இருக்கமுடியாவிட்டால் அவனு(ளு)க்கு மயக்கமருந்து கொடுக்கப்படவேண்டும்.
- ஒவ்வொரு பரிசோதனையும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அவை வலியிள்ளதாக இருக்கமாட்டாது.