உங்களுடைய பிள்ளையின் மருத்துவமனைச் சந்திப்பின்போது அவளுக்கு அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்டது. அமைதிப்படுத்தும் மருந்து என்பது, உங்களுடைய பிள்ளையை தளர்வடைய, அமைதியாக இருக்க, அல்லது உறங்க வைக்க உதவும் ஒரு மருந்து.
உங்களுடைய பிள்ளை முழுமையாக விழிப்படைந்தவுடன் அல்லது அவளுக்கு அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட முன்னிருந்த நிலைக்குத் திரும்பியவுடன் வீடு திரும்புவதற்குத் தயாராக இருப்பாள். இதற்கு 1 அல்லது 2 மணி நேரங்கள் செல்லலாம்.
உங்களுடைய பிள்ளையின் அமைதிப்படுத்தும் மருந்தைப் பற்றிய முக்கிய தகவல்கள்
அமைதிப்படுத்தும் மருந்தின் பெயர்: | |
உங்களுடைய பிள்ளைக்கு அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட நேரமும் திகதியும்: | |
கொடுக்கப்பட்ட அமைதிப்படுத்தும் மருந்தின் அளவும் கொடுக்கப்பட்ட முறையும்: | |
உங்களுடைய பிள்ளையின் இன்றைய எடை: | |
உங்களுடைய பிள்ளைக்கு அமைதிப்படுத்தும் மருந்து கொடுத்த தாதி அல்லது மருத்துவரின் பெயர்: | |
தொலைபேசி எண்: |
அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் உங்களுடைய பிள்ளை தடுமாறும் நிலையை அல்லது உறுதியற்ற நிலையை உணரக்கூடும்
உங்களுடைய பிள்ளையின் கால்கள் தள்ளாடலாம். உங்களுடைய பிள்ளை இந்த நிலையை உணர்ந்தால், அவளைத் தானாகவே ஓட, நடக்க அல்லது தவழ அனுமதிக்கவேண்டாம். ஒரு நாள் வரையாக அவள் தலைச்சுற்று அல்லது உறுதியற்ற நிலையை உணரலாம்; சுறுசுறுப்பற்றவளாகவும் காணப்படலாம்.
உங்களுடைய பிள்ளை 1 நாள் வரையாக அமைதிப்படுத்தும் மருந்தின் பாதிப்பை உணரலாம். அவளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும். அவள் எரிச்சலடைபவளாக, கடுகடுப்புள்ளவளாக அல்லது அளவுக்கதிகமான சுறுசுறுப்புள்ளவளாகவும் மாறலாம்.
அமைதிப்படுத்தும் மருந்து கொடுத்த பின்னர் செய்யவேண்டியவை
உங்களுடைய பிள்ளையின் அமைதிப்படுத்தும் மருந்தின் பக்கவிளைவுகள் முழுமையாக நிவாரணமடையும் வரை, அவளின் நடவடிக்கைகளை 24 மணி நேரம் வரையாக ஒரு வளர்ந்தவர் கண்காணிக்கவேண்டும்; விசேஷமாக ஓடுதல், பந்து விளையாடுதல், படித்தல் போன்ற அவளின் கவனத்தையும் சமநிலையையும் தேவைப்படுத்தும் எதையாவது செய்யும்போது அவ்வாறு கண்காணிக்கவேண்டும். பெரும்பாலான பிள்ளைகள் அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட மறு நாளே தாங்கள் வழக்கமாகச் செய்யும் வேலை செய்வதற்குத் தயாராகிவிடுகிறார்கள்.
உங்களுடைய பிள்ளை பதின்ம வயதுடையவளானால், அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், குறைந்த பட்சம் 1 நாளுக்காவது அவள் வாகனங்களை ஓட்டக்கூடாது அல்லது இயந்திரங்களை இயக்கக்கூடாது.
உங்களுடைய பிள்ளைக்கு உணவூட்டுதல்
உங்களுடைய பிள்ளை முழுமையாக விழித்து எழும் வரை, அவளுக்கு உணவூட்ட வேண்டாம். அதிகளவு உணவை விரைவாக ஊட்டவேண்டாம். இது அவளை வாந்தி எடுக்கச் செய்யலாம்.
உங்களுடைய பிள்ளைக்கு முதலில் தெளிவான நீராகாரங்களைக் கொடுக்கவும். தெளிவான நீராகரங்கள் என்பது, சீனி கலக்கிய தண்ணீர், அப்பிள் ஜூஸ், ஜிஞ்சர் ஏல், பொப்சிக்கிள், புரொத், அல்லது தேனீர் என்பனவற்றைக் குறிக்கும். வாந்தி எடுக்காது தெளிவான நீராகாரங்களை உங்களுடைய பிள்ளையால் உட்கொள்ள முடியும் போது அவளின் வழக்கமான உணவை மெதுவாகக் கொடுக்கத் தொடங்கவும்.
உங்களுடைய குழந்தையால் ஒரு போத்தல் மூலமாக பானம் அருந்த முடிந்தால், ஃபோர்மூலா அல்லது தாய்ப்பாலைக் கொடுப்பதற்கு முன்பாக, 1 அல்லது 2 முறைகள் தெளிவான நீராகாரத்தைக் கொடுக்கவும்.
உங்களுடைய குழந்தையால் ஒரு போத்தல் மூலமாக பானம் அருந்த முடியாவிட்டால், உங்களுடைய குழந்தை முழுமையான விழிப்புடனிருக்கவும் ஒரு சிறிய உணவூட்டலுடன் தொடங்கவும் நிச்சயமாக இருக்கவும்.
உங்களுடைய பிள்ளையுடன் வாகனம் ஓட்டுதல்
உங்களுடைய பிள்ளை ஒரு மோட்டார் வண்டியில் செல்லும்போது வாகன இருக்கையை சற்றுப் பின்புறமாகச் சாய்க்கவும். உங்களுடைய பிள்ளையின் தலை நிமிர்ந்தும் சற்றுப் பின்புறமாகச் சாய்ந்தும் இருக்கவேண்டும். அவளுடைய தலை முன்பக்கமாகச் சாய்ந்தால், அவளுக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அவளுக்குத் தகுந்த முறையில் சீட் பெல்ட் இடப்பட்டிருக்கவேண்டும்.
உங்களுடைய பிள்ளையைக் கண்காணிப்பதற்காக வேறொரு வளர்ந்தவரை (சாரதியைத் தவிர) உங்களுடைய பிள்ளைக்கருகில் உட்காரவைக்கவும்.
அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்டபின்னர் உங்களுடைய பிள்ளை சாதாரணமாக உறங்காமல் இருக்கக்கூடும்
மருத்துவமனையை விட்டு வெளியே போகும்போது, முதல் 3 முதல் 4 மணி நேரங்களில் உங்களுடைய பிள்ளை உறங்கும் நேரங்களை அவதானிக்கவும். நீங்கள் அவளை எழுப்பும்போது அவள் சற்று விழித்தெழ வேண்டும். ஆனால், சில வேளைகளில், பிள்ளைகள் தூக்கக் கலக்கத்திலிருப்பார்கள்; அவர்களை எழுப்ப சிரமப்படவேண்டியிருக்கலாம். உங்களுடைய பிள்ளை ஒழுங்காக சுவாசிப்பதையும் அவளுடைய தோல் வழக்கமான நிறத்தில் இருப்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ளவும்.
உங்களுடைய பிள்ளை மருந்துவமனையில் உறங்கியதால் வழக்கம் போல உறங்கமாட்டாள். அவள் அதிகளவில் தூங்கலாம் அல்லது அதிகளவில் விழித்திருக்கலாம்.
உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருந்தால் எவரை அழைக்கவேண்டும்
பின்வரும் பிரச்சினைகளில் எதையாவது அவதானித்தாள், உதவிக்காக 911 ஐ அழைக்கவும்:
- உங்களுடைய பிள்ளைக்கு சுவாசிப்பதில் பிரச்சினைகள் இருக்கிறது.
- உங்களுடைய பிள்ளையின் சுவாசம் மேலோட்டமாக, மெதுவாக, அல்லது வழக்கத்தை விட வித்தியாசமானதாக இருக்கிறது.
- உங்களுடைய பிள்ளையின் தோலின் நிறம் அதிகளவு நீல நிறமாக அல்லது சாம்பல் நிறமாக இருக்கிறது
- உங்களுடைய பிள்ளையை உங்களால் தூக்கத்திலிருந்து விழித்தெழுப்ப முடியவில்லை.
இந்தப் பிரச்சினகள் மிகவும் அரிதானவை:
உங்களுடைய பிள்ளை இரு தடவைகளுக்கு மேலாக வாந்தி எடுத்தால் மருத்துவரை அல்லது தாதியை அழைக்கவும்
உங்களுடைய பிள்ளை இரு தடவைகளுக்கு மேலாக வாந்தி எடுத்தால், உங்களுடைய குடும்ப மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்களுடைய பிள்ளையை அருகிலுள்ள அவசர மருத்துவச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லவும். இந்தத் தகவல் தாளைக் கொண்டுவரவும். அதன் மூலமாக, உங்களுடைய பிள்ளையின் பெயர், அவளுக்கு அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட நேரம், அளவு என்பனவற்றை மருத்துவர் அல்லது தாதி அறிந்து கொள்வார்.
உங்களுக்கு கேள்விகள் அல்லது அக்கறைகள் (அவசரமற்றவை) இருந்தால் உங்களுடைய பிள்ளை, அமைதிப்படுத்தும் மருந்தைப் பெற்றுக்கொண்ட சிகிச்சைப் பிரிவை அழைக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- உங்களுடைய பிள்ளை அமைதிப்படுத்தும் மருந்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், 1 நாள் வரை வித்தியாசமாக உணரக்கூடும். விசேஷமாக, சமநிலை அல்லது கவனத்தை ஒருமுகப்படுத்துதல் தேவைப்படும் காரியங்களைச் செய்யும்போது உங்களுடைய பிள்ளையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.
- உங்களுடைய பிள்ளைக்கு முதலில் தெளிவான நீராகாரங்களைக் கொடுக்கவும். உங்களுடைய பிள்ளை வாந்தி எடுக்காது பானங்கள் பருகத் தொடங்கும்போது வழக்கமான உணவுகளைக் கொடுக்கத் தொடங்கவும்.
- உங்களுடைய குழந்தையால் ஒரு போத்தலிலிருந்து பானங்கள் அருந்த முடிந்தால், ஃபோர்மூலா அல்லது தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்பாக 1 அல்லது 2 முறைகள் தெளிவான நீராகாரங்களைக் கொடுக்க முயற்சி செய்யவும்.
- உங்களுடைய குழந்தையால் ஒரு போத்தல் மூலமாக பானம் அருந்த முடியாவிட்டால், உங்களுடைய குழந்தை முழுமையான விழிப்புடனிருக்கவும் ஒரு சிறிய உணவூட்டலுடன் தொடங்கவும் நிச்சயமாக இருக்கவும்.
- உங்களுடைய பிள்ளையுடன் நீங்கள் வாகனத்தை ஓட்டுவதாக இருந்தால், உங்களுடைய பிள்ளையைக் கண்காணிப்பதற்காக வேறொரு வளர்ந்தவரை அவளுக்கருகில் உட்காரவைக்கவும்.
- உங்களுடைய பிள்ளை உறங்கும் முதல் 3 அல்லது 4 மணி நேரங்களை அவதானிக்கவும். உங்களால் அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முடியும், அவள் ஒழுங்காகச் சுவாசிக்கிறாள், அவளுடைய தோல் அதன் வழக்கமான நிறத்தில் இருக்கிறது என்பனவற்றை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். சுவாசித்தலில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், உதவிக்காக 911 ஐ அழைக்கவும்.