மல வாசலினூடாக லொரஸெபம் (Lorazepam By Rectum)

Lorazepam by rectum [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை லொரஸெபம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் பிள்ளை லொரஸெபம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். லொரஸெபம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

லொரஸெபம் என்பது ஒரு வலி நீக்கும்(செடடிவ்) மருந்தாகவும் தசையின் அழுத்தக் குறைப்பி (மசில் ரிலக்ஸசன்ட்) ஆகவும் உபயோகிக்கப்படுகிறது. இது வலிப்பு நோய்க்கு சிகிச்சை செய்வதற்காகவும் உபயோகிக்கப்படுகிறது.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்?

  • உங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட படியே துல்லியமாக இந்த மருந்தை உபயோகிக்கவும்.
  • இந்த மருந்தை எப்போதும் போதியளவு கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள்.
  • இந்த மருந்தை குளிர்ச் சாதனப் பெட்டியில் வைக்கவும் மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக வைக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

  • இந்த மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்க உணர்வு, சோர்வு, அல்லது வழக்கத்தைவிடக் குறைந்த விழிப்புணர்வைக் கொடுக்கலாம்.

நான் எப்போது மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்?

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:

  • குழப்பம்
  • விரைவான சுவாசம்
  • கடுமையான நித்திரை மயக்கம்
  • சுவாசிப்பதில் கஷ்டம்
  • நடுக்கம்
  • தெளிவற்ற பேச்சு
  • கடுமையான பெலவீனம்

நிர்வாகத்துக்கான அறிவுரைகள்:

  1. உலோக மூடியை இழுப்பதன் மூலம் சிறு குப்பியைத் திறக்கவும்.
  2. உங்கள் மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த பீச்சாங்குழாயில்(ஸ்ரிஞ்) அடையாளமிடப்பட்ட அளவின்படி துல்லியமான அளவுமருந்தைக் கவனமாக அளக்கவும், அல்லது மிலி அளக்கவும்
  3. அதே பீச்சாங்குழாயில் சம அளவு குழாய்த் தண்ணீரை எடுக்கவும்.
  4. பீச்சாங்க்குழாயை சில முறைகள் மெதுவாக தலை கீழாகக் கவிழ்ப்பதன் மூலம் அதனுள் உள்ளவற்றை நன்கு கலக்கவும்.
  5. கே-வை ஜெலி அல்லது மூக்கோ வினால் பீச்சாங்குழாயின் வெளிப்பகுதியை உராய்வு நீக்கவும்.
  6. ஒரு வெப்பமானியைப் போல பீச்சாங்குழாயை மலவாசலினுட் (3.5 செமீ முதல் 5செமீ வரை அல்லது 1 1/2 முதல் 2 அங்குலங்கள்) செலுத்தவும்.
  7. குண்டிப் பகுதியை ஒருமித்து அழுத்தி பிடித்துக்ககொண்டு, தண்டை மெதுவாக அழுத்துவதன் மூலம் லொரஸெபம் மருந்தை உட்செலுத்தவும். பீச்சாங்குழாயை வெளியே எடுத்தபின் தொடர்ந்தும் குண்டிப் பகுதியை சிலநிமிடங்களுக்கு அழுத்தவும்.
  8. 5 நிமிடங்களுக்குள் வலிப்பு நோய் நிறுத்தப்படவில்லை எனின் உங்கள் மருந்துவரால் அறிவுறுத்தப்பட்டிராவிட்டால், உங்கள் பிள்ளையை மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரவும்.

லொரஸெபம் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான லொரஸெபம் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid )தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது லொரஸெபம் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. லொரஸெபம் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: மார்ச் 12 2010