பேசுவதில் பிரச்சினைகள் என்றால் என்ன?
பேசுவதில் பிரச்சினைகள் என்பது உங்கள் பிள்ளையின் பேச்சுத் திறமையில் தாமதம் அல்லது கஷ்டங்கள் என்பதைக் குறிக்கும். பாஷையை விளங்கிக் கொள்வது மற்றும் பேசுவதில் பிரச்சினைகள் இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வார்த்தைகளை உச்சரிப்பதில் அல்லது சரளமாகப் பேசுவதில் கஷ்டம் இருக்கலாம். பேசுவதில் பிரச்சினைகள், திக்கிப் பேசுதல் அல்லது மழலை போல பேசுதல் என்பனவற்றையும் உட்படுத்தும்.
பேசுவதில் பிரச்சினைகளுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
“வழக்கமான” பேச்சு முன்னேற்றத்தில் அநேக மைல்கற்கள் இருக்கின்றன. இந்த மைல்கற்கள் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடும். பொதுவாக, பேச்சு மைல்கற்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
எட்டு முதல் 13 மாதங்கள்
- பொருட்களைச் சுட்டிக்காட்டுதல்
- “இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக தலையை அசைத்தல்
- குட்-பை என கை அசைத்தல்
- வார்த்தைகளைப் போல சத்தங்களை உபயோகித்தல்
- பெரியவர்களின் சத்தங்களைப்போல பாவனை செய்தல்
12 முதல் 18 மாதங்கள்
- தான் விளங்கிக் கொள்ளும், ஒரு சொற்தொகுதியை உருவாக்கத் தொடங்குதல், உதாரணமாக, பெரியவர்கள் பெயர்களைச் சொல்லும்போது அந்தப் பொருட்களைச் சுட்டிக்காட்ட அவனால் முடியும்.
- ஒரு எண்ணிக்கையான தனிப்பட்ட வார்த்தைகள் மற்றும் சிறிய சொற்றொடர்களை விளங்கிக் கொள்ளுதல்
- ஏறக்குறைய 10 முதல் 20 வார்த்தைகளைப் பொருட்களுக்காக உபயோகித்தல்
18 முதல் 24 மாதங்கள்
- எளிமையான கேள்விகள் மற்றும் கட்டளைகளை விளங்கிக்கொள்ளுதல்
- இரண்டு வார்த்தைகளை இணைத்து ஒரு வசனமாக்கத் தொடங்குதல்
- உங்கள் பிள்ளை வெளிப்படுத்தும் சொற்தொகுதி, அல்லது பேசும்போது அவன் உபயோகிக்கும் வார்த்தைகள் 200 சொற்கள் வரையாக அதிகரிக்கும்.
- எதிர்மறையான வார்த்தைகளை உபயோகிக்கத் தொடங்குதல்: “ஜூஸ் வேண்டாம்”
24 முதல் 36 மாதங்கள்
இந்தக் காலப்பகுதியில், உங்கள் பிள்ளை மூன்று-வார்த்தை வாக்கியங்களை உபயோகிக்கத் தொடங்க வேண்டும். இந்தக் காலப்பகுதியில் அவனது வார்த்தைகளின் நீளம் அதிகரிக்கும். அவனது இலக்கணம் மேலும் துல்லியமாகும். வேறு சில மைல்கற்கள் பின்வருமாறு:
- “உள்ளே” மற்றும் “மேலே” போன்ற இடைச்சொற்களை உபயோகித்தல்
- “போ” என்ற வினைச்சொல்லுடன் “போங்கள்” என்பதைச் சேர்த்தல்
- துணை வினைச் சொற்களைச் சேர்த்தல்: “அவனால் விளையாட முடியும்”
- பன்மை வார்த்தைகளை உபயோகித்தல்: “நாய்கள்”
- “ஒரு” மற்றும் “அந்த” போன்ற சொற்களை வசனங்களில் சேர்க்கத் தொடங்குதல்
- சுட்டுப்பெயர்கள், எதிர்மறைச் சொற்களை உபயோகிக்க, மற்றும் வசனங்களை இணைக்கக் கற்றுக்கொள்ளுதல்: “அவன்”, “முடியாது” “மற்றும்”
உங்கள் பிள்ளை மேலும் சிக்கலான தேவைகளுக்காக பாஷையை பின்வருமாறு உபயோகிக்கவும் தொடங்குவான்:
- அநேக கருத்துக்களை விளங்கிக் கொள்ளுவான்: உள்ளே/வெளியே; பெரியது/சிறியது; போ/நில்; மிருகங்கள்; விளையாட்டுப் பொருட்கள்; மேல்/கீழ்
- இரண்டு-பகுதி வழிநடத்தல்களைப் பின்பற்றுதல்: உன் மேலாடையையும் கையுறைகளையும் எடு”
- புத்தகங்களிலுள்ள எளிய கதைகளை விளங்கிக்கொள்ளுதல்
- “ஏன்” என்ற கேள்வியைக் கேட்கத் தொடங்குதல்
- ஒரு கதை சொல்பவராக ஆகுதல்
- பின்வரும் சத்தங்களைச் சொல்ல முடியும்: ஹ, ப, ம, ட, மற்றும் க
- பிள்ளையின் பேச்சு 75% முதல் 100% வரை தெளிவாக இருக்கும்.
மூன்று முதல் ஐந்து வருடங்கள்
இப்போது உங்கள் பிள்ளை சொல்வனவற்றில் பெரும்பாலானவற்றை விளங்கிக்கொள்வான். அவனது வாக்கியங்களும் கதைகளும் மேலும் சிக்கலானதாகும். அவனது உரையாடல் திறமை முன்னேற்றமடையும். ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கு ஒருவரின் கவனத்தை எப்படித் திருப்பவேண்டும் என்பதை மற்றும் ஒரு உரையாடலில் எப்படி முறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் விளங்கிக்கொள்வான். அவனது சொற்தொகுதி, மூன்று வயதில் ஏறக்குறைய 1000 வார்த்தைகளிலிருந்து ஐந்து வயதில் 5000 அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளாக அதிகரிக்கும்.
மூன்று வயதில், ஒரு பிள்ளை, முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு அந்நியருக்குச் சொல்வது 75% விளங்கிக்கொள்ளப்படவேண்டும்.
அவனது இலக்கணம் மேலும் சிக்கலானதாகும்; உதாரணமாக:
- “மற்றும்”, “ஏனென்றால்”, “என்ன”, “எப்போது”, “ஆனால்”, “அது”, “ஆயின்”, “ஆகவே” என்பனவற்றை உபயோகித்து கருத்துக்களை வாக்கியத்தில் இணைத்தல்
- சுட்டுப் பெயர்கள் சரியாக உபயோகப்படுத்தப்படும்: நான், அவள், அவன், அவளுடைய, அவனுக்கு, எனக்கு, என்னுடையது, அவர்கள்
- கேள்விகள் கேட்பதற்காக வார்த்தைகளின் ஒழுங்கை மாற்றிக் கேட்டல்: “அவன் என்ன செய்கிறான்?” அதற்கு எதிராக “அவன் என்ன செய்கிறான் என்றால்”
- கேள்விகளில் துணை வினைச் சொற்களை உபயோகித்தல்: அவன் சுகவீனமாக இருக்கிறானா?”
- எதிர்மறைச் சொற்களின் மேலும் முன்னேற்றமடைந்த பதங்களை உபயோகித்தல்:
- சில விதிமுறைகளை அளவுக்கதிகமாகப் பொதுமைப்படுத்துதல்: “நான் ஓடியது”; ஒரு சோடிகள்”
மூன்று மற்றும் ஐந்து வயதுகளுக்கிடையில், எழுத்துக்களை உச்சரிக்கும் மற்றும் எழுத்துக்களைக் கலக்கும் உங்கள் பிள்ளையின் திறமை வளரும். பிள்ளைகளால் பின்வரும் குறிப்பிட்ட சத்தங்களை உச்சரிக்க முடியும்:
- 4 வயதில்: டபிள்யூ, பி, டி, எஃப், ஜி, ங்க், என்
- 5 வயதில்: எல், ஷ், ச்,எஸ், ஜெ
- 6 வயதில்: இஸட், ஆர்
காரனங்கள்
மரபியல்
பேச்சில் பிரச்சினைகள் அல்லது கற்றுக்கொள்வதில் கஷ்டங்கள், அல்லது முன்னேற்றமடைவதில் தாமதம் என்பனவற்றின் குடும்ப வரலாறு பாஷையைக் கற்றுக்கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தும்.
கேட்கும் திறன் இழப்பு
இலேசான அல்லது கடுமையான கேட்கும் திறன் இழப்பு, உங்கள் பிள்ளையின் பேச்சுத் தொடர்பைப் பாதிக்கலாம். உங்கள் பிள்ளையால் நன்கு கேட்க முடியவில்லை என நீங்கள் சந்தேகித்தால் அல்லது அவனுக்கு அநேக காதுத் தொற்றுநோய் இருந்திருந்தால், அவனது கேட்கும் திறனைப் பரிசோதிக்கும்படி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும். (இடைச்செவியழற்சியைப் பார்க்கவும்)
வேறொரு நிலைமை
பாஷைப் பிரச்சினைகள் ஓட்டிசம் அதாவது மன இறுக்கம் (மன இறுக்கம் ஐப் பார்க்கவும்) போன்ற வேறொரு நிலைமைக்கான ஒரு அடையாளமாக இருக்கலாம். பெருமூளை வாதம் போன்ற குறைபாடுகளும் பேச்சுத் திறமையைப் பாதிக்கலாம். வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு நிலைமையும் பேச்சைப் பாதிக்கலாம். தண்டு-மூளை வீக்கம், புதிதாகப் பிறந்த குழந்தையில் அல்லது குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையில் கடுமையான மஞ்சட் காமாலை என்பனவும் கேட்கும் திறன் இழப்பை ஏற்படுத்தலாம்.
உங்கள் பிள்ளையின் மருத்துவர் செய்யக்கூடியவை
பேசுவதில் பிரச்சினைக்கான காரணம் என்ன என்பதை உங்கள் மருத்துவர் மதிப்பீடு செய்வார். சிகிக்சை, பேசுவதில் பிரச்சினைக்கான காரணம் மற்றும் பேசுவதில் பிரச்சினை எவ்வளவு கடுமையானது என்பனவற்றைச் சார்ந்திருக்கும். மருத்துவர் உங்கள் பிள்ளையை பேச்சு மொழிப் பிரச்சினையை ஆராயும் மருத்துவர் அல்லது வேறு மருத்துவ நிபுணரிடம் அனுப்பிவைப்பார்
சிகிச்சை
முடிந்தால், அடிப்படையான காரணத்துக்குச் சிகிச்சை செய்யப்படவேண்டும்(உதாரணமாக கேட்குத் திறன் இழப்பு). பேசுவதில் பிரச்சினை வேறொரு ஒழுங்கின்மையின் பாகமாக இருந்தால் அது கவனிக்கப்படவேண்டும்(உதாரணமாக மன இறுக்கம்). குறிப்பிடத்தக்க பேச்சுப் பிரச்சினைகள் உள்ள எல்லாப் பிள்ளைகளும் பேசுவதில் பிரச்சினைக்கான காரணத்தை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவரைச் சந்திக்கவேண்டும்.
ஒரு பேச்சு மொழிப் பிரச்சினையை ஆய்வு செய்யும் மருத்துவர், உங்கள் பிள்ளை தனது மொழி ஆற்றலை முன்னேற்றுவிக்க உதவி செய்வார். வீட்டில் உங்கள் பிள்ளை பேசுவதற்கு எப்படி நீங்கள் உதவிசெய்யவேண்டும் என அவர் உங்களுக்குக் கற்றுத்தரக்கூடும். கற்றுக்கொள்வதின் கஷ்டங்கள் அல்லது காது கேட்பதில் நிரந்தரமான பிரச்சினையுள்ள ஒரு பிள்ளைக்கு விசேஷ கல்வி தேவைப்படலாம். மழலைப் பேச்சு அல்லது திக்கிப் பேசுதல் போன்ற ஒலியெழுப்புவதில் பிரச்சினைகளுள்ள பிள்ளைகளுக்கு பேச்சுச் சிகிச்சை தேவைப்படலாம்.
மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு எப்போது தொடர்பு கொள்ளவேண்டும்
உங்கள் பிள்ளையின் பேச்சு மற்றும் மொழி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும். உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், அடுத்த சந்திப்பின்போது அவனது மருத்துவருடன் பேசவும். நீங்கள் கவலையடைந்தால், முடிந்த அளவு விரைவாக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- வெவ்வேறு பிள்ளைகளில் பேச்சு முன்னேற்றம் மிகப் பெரிய அளவில் வேறுபடும்.
- பேச்சுத் தாமதத்துக்கான ஆபத்திலிருக்கும் பிள்ளைகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும் மற்றும் பேச்சு மொழியை ஆராயும் மருத்துவரைச் சந்திக்கவேண்டும்.
- பேச்சுத் தாமதமாகும் பிள்ளைகள் மற்றும் பேச்சுத்தொடர்பு கொள்வதில் கஷ்டமுள்ள பிள்ளைகள் கூடியளவு விரைவாக மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
- ஒலியெழுப்புவதில் கஷ்டங்கள் மற்றும் திக்கிப் பேசுதல் என்பன ஏறக்குறைய 5 வயதுவரை சாதாரணமானது .
- பேசுவதில் கஷ்டங்கள் உள்ள அநேக பிள்ளைகளுக்கு பேச்சுச் சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும்.