குப்புறப் படுக்கும் நேரம் (டமி டைம்): உங்கள் பிள்ளைக்கு உதவி செய்தல்

Tummy time: Helping your baby [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தலை உருக்குலைவதைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான நிலையை மேம்படுத்தவும்.

தரையில் குப்புறப் படுத்திருந்தபடி குழந்தை blocks உடன் விளையாடல்

குப்புறப் படுக்கும் நேரம் (டமி டைம்) என்றால் என்ன?

உங்கள் குழந்தை எப்போதுமே நிமிர்ந்து படுக்கவேண்டும். இது குழந்தைகளின் திடீர் படுக்கை மரண (SIDS) ஆபத்தைக் குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை மிக அதிக நேரம் நிமிர்ந்து படுத்திருந்தால், அது பொசிஷனல் பிலஜியோசெஃபலி அல்லது குழந்தை தட்டைத் தலை என்ற நிலைமையை ஏற்படுத்திவிடும். ஒரே நிலையில் குழந்தை மிக அதிக நேரத்தைச் செலவிடும்போது அவனது மண்டையோடு உருக்குலைவதால் இந்த நிலைமை ஏற்படும்.

தலை உருக்குலைவதைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான நிலையை மேம்படுத்தவும், உங்கள் குழந்தை விழித்திருக்கும்போது மற்றும் கண்காணிக்கப்படும்போது நீங்கள் அவளைக் குப்புறப் படுக்க வைக்கலாம். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மொத்தமாக 1 1/2 மணி நேரம் (90 நிமிடங்கள்) குப்புறப் படுத்திருக்கவேண்டும். உங்கள் குழந்தை பல்வேறுவகையான நிலைகளில் படுத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். “ நித்திரை செய்வதற்கு நிமிர்ந்து படுக்கவேண்டும் — விளையாடுவதற்கு குப்புறப் படுக்கவேண்டும்!” என்பதை நினைவில் வைக்கவும்.

உங்கள் குழந்தையின் குப்புறப் படுக்கும் நேரத்தின் நன்மைகள்

நெஞ்சின் கீழ் உருட்டப்பட்ட துவாய் ஒன்றுடன் தரையில் குழந்தை குப்புறப் படுத்திருந்தல்

உங்கள் குழந்தையை குப்புறப் படுக்க வைப்பதால் வரும் நன்மைகள் பின்வருமாறு:

  • தட்டைத் தலை அல்லது உருக்குலைந்த மண்டையோடு (பொசிஷனல் பிலஜியோசெஃபலி) ஏற்படுவதைத் தடுக்கிறது
  • உங்கள் குழந்தை தலையைக் கட்டுப்படுத்தும் திறமையை மேம்படுத்த உதவுகிறது
  • முதுகு, கழுத்து, தோள்பட்டைகள், முன்கைகள் மற்றும் கைகள் உட்பட, மேல் உடற்பகுதியை வலுப்படுத்துகிறது
  • தவழுதல், உட்காருதல், மற்றும் உருளுதல் போன்ற மொத்த இயக்க ஆற்றல்களின் மேம்பாட்டை முன்னேற்றுவிக்கிறது
  • நல்ல இயக்க ஆற்றல் மற்றும் விளையாடும் ஆற்றலின் மேம்பாட்டை முன்னேற்றுவிக்கிறது
  • சுற்றாடலை மாற்றுவதன் மூலம் மற்றும் உங்கள் குழந்தை தன்னைச் சுற்றியுள்ள உலகை எப்படிப் பார்க்கிறாள் என்பதன் மூலமும் உணர்ச்சிகளின் மேம்பாட்டை முன்னேற்றுவிக்கிறது.

குப்புறப் படுக்கும் நேரத்துக்கான நடவடிக்கைகள்

உங்கள் குழந்தை பல்வேறுபட்ட நிலைகளில் தன் நேரத்தைச் செலவு செய்கிறாள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள, பின்வரும் நடவடிக்கைகளை முயற்சி செய்யவும்:

  • குழந்தையின் தலையின் இரண்டு பக்கமும் அவள் பார்க்கக்கூடியவாறு விளையாட்டுப் பொருட்களை வைக்கவும். இது குழந்தை இரண்டு பக்கமும் தலையைத் திருப்ப உதவுவதோடு குழந்தை பார்ப்பதற்கு வினோதமான ஒன்றையும் அவளுக்குக் கொடுக்கிறது.
  • உங்கள் குழந்தையின் நெஞ்சுப் பகுதியை உருட்டப்பட்ட ஒரு துவாய், சிறிய மெத்தை, அல்லது உங்கள் முழங்கால்களில் வைக்கவும். இது உங்கள் குழந்தைக்கு மேலும் சௌகரியமாக இருக்கும். இது உடலின் மேற்பகுதி பலப்படுவதையும் தலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் முன்னேற்றுவிக்கும்.
  • நீங்கள் நிமிர்ந்து படுத்திருக்கும்போது உங்கள் குழந்தையை உங்கள் மார்பில் படுக்க வைக்கவும். இது உங்கள் குழந்தை தனது தலையைக் கட்டுப்பாட்டில் வைப்பதை முன்னேற்றுவிக்கவும் உடலின் மேற்பகுதியை ஒரு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான நிலையில் வைக்கவும் உதவிசெய்யும்.

உங்கள் குழந்தை தனது தலையை உயர்த்தவும் முன்னங்கைகளால் முன்னோக்கி உந்துவிக்கவும் தொடங்கும்போது பின்வரும் யோசனைகளை முயற்சி செய்யவும்:

  • உங்கள் பிள்ளை எடை மாற்றுதலை மற்றும் பொருட்களை எட்டிப் பிடிப்பதை ஊக்குவிப்பதற்காக முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை உபயோகிக்கவும். இது உங்கள் குழந்தை எழுந்து உட்காருவதற்கு, உருளுவதற்கு மற்றும் தவழுவதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொள்ள அவளது முன்னங்கைகள், கைகள், மற்றும் பின்புறத் தசைகளைப் பலப்படுத்தும்.
  • நீங்கள் மற்றும் உங்கள் குழந்தை இருவருமே குப்புறப்படுத்திருக்கும் போது பீக்- ஏ-பூ விளையாட்டை (அதாவது கையால் முகத்தை மறைத்து விளையாடுதல்) விளையாடவும். உங்களுக்கிடையில் ஒரு போர்வையை வைத்துக்கொண்டு, அதை இழுக்கும்படி உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்தவும். இந்த விளையாட்டு, உங்கள் குழந்தை தவழுவதற்கு, உட்காருவதற்கு, மற்றும் நல்ல இயக்க சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு அவளது தசைகளைப் பலப்படுத்த உதவி செய்யும். அது பாஷை, சமூக மற்றும் மூளையின் ஆற்றலை முன்னேற்றுவிக்கவும் உதவி செய்யும்.
தாய் புன்னகையுடன் நிமிர்ந்து படுத்திருந்தபடி குழந்தையைக் கைகளால் உயர்த்திப் பிடித்தல்

உங்கள் குழந்தைக்கு நல்ல முறையில் தலையைக் கட்டுபடுத்தவும் எழுந்து உட்காரவும் ஆற்றல் கிடைத்தவுடன் , “ஏரோப்பிளேன்” விளையாட்டை விளையாட முயற்சி செய்யவும். உங்கள் குழந்தையை இடுப்பு மற்றும் /அல்லது அரையில் பிடித்துத் தூக்கி, உங்கள் மடிக்கப்பட்ட கால்களில் வைத்து மேலும் கீழுமாக ஆட்டவும். இது, உங்கள் குழந்தையின் கழுத்து மற்றும் பின்புறத் தசைகளைப் பலப்படுத்தி, தனது தலையை மேலே தூக்க அவளுக்கு உதவி செய்யும்.

குழந்தைகளை எப்போதுமே மாறாமல் நிமிர்ந்து படுக்க வைக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம்: மோட்டார் வண்டிகளின் குழந்தை சீற்றில், படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள் போன்றவற்றில். குப்புறப் படுக்கவைக்கும் நேரத்தை அதிகரிப்பதற்காக, உங்கள் முழக்கால்கள் மற்றும் மார்புக்கு மேலாக வைப்பது உட்பட, பல்வேறுபட்ட நிலைகளில் உங்கள் குழந்தைகளைத் தூக்கிவைக்க முயற்சி செய்யவும்.

உங்கள் குழந்தையின் குப்புறப் படுக்கும் நேரத்தை உற்சாகப்படுத்துதல்

உங்கள் குழந்தை குப்புறப் படுப்பதை விரும்பாவிட்டால், குப்புறப் படுக்கும் நேரத்தை உற்சாகப்படுத்துவதற்கான சில வழிகள் பின்வருமாறு:

  • ஒரு விளையாட்டுப் பொருள், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, போன்ற வேடிக்கையான மற்றும் அக்கறையூட்டும் பொருட்களை அல்லது உங்கள் முகத்தை பிள்ளைக்குக் காட்டவும்.
  • குப்புறப்படுக்கும் நேரத்தைப் படிப்படியாக அதிகரிக்கவும். குறுகிய மற்றும் அடிக்கடி கொடுக்கப்படும் குப்புறப்படுக்கும் நேர அனுபவங்கள் உங்கள் குழந்தையை அந்த நிலைமைக்குப் பழக்கப்பட்டவளாக்கும். மற்றும் அந்த நிலைமையைப் பாதுகாப்பானதாக உணரவும் அனுமதிக்கும்.
  • நீங்கள் உங்கள் குழந்தைக்கு உடை மாற்றும் போது, அல்லது அவளைத் தூக்கி வைத்திருக்கும்போதெல்லாம் குறுகிய குப்புறப் படுக்கும் நேர அனுபவங்களைச் சேர்த்துக் கொள்ளவும்.
  • நிமிர்ந்து படுத்திருக்கும் உங்கள் குழந்தையை மெதுவாக அவளது வயிற்றுப் பக்கமாக நகர்த்தி விடவும். இது, வெறுமனே குழந்தைகளைக் குப்புறப் படுக்க வைப்பதுடன் ஒப்பிடும்போது திடுக்கிடுதலைக் குறைக்கும்.
  • குழந்தைகள் குப்புறப்படுத்து விளையாடும்போது, தங்கள் உடலின் மேற்பாகத் தசைகளை உபயோக்கிக்கக் கற்றுக் கொள்வதற்கு, உறுதியான தட்டையான மேற்பரப்பு இலகுவாயிருக்கும்.

உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருந்தால்

உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருந்தால், அவளைக் குப்புறப்படுக்கவைப்பது சாத்தியமாகாது. அந்தச் சமயத்தில் உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தை எப்படி உற்சாகப்படுத்தலாம் என்பதைப் பற்றி உங்கள் ஒக்குப்பேஷனல் தெரப்பிஸ்ட் இடம் ஆலோசனை கேட்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • குழந்தைகள் நிமிர்ந்து படுத்து நித்திரை செய்யவேண்டும்.
  • குழந்தைகள் ஒரு நாளில் மொத்தமாக 1 1/2 மணி (90 நிமிடங்கள்) நேரங்கள் குப்புறப் படுக்கவேண்டும். இதைப் பல குறுகிய காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  • குப்புறப் படுக்கும் நேரம் தலை உருக்குலைவதைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சியை மேம்படுத்தும்.
  • உங்கள் குழந்தை குப்புறப் படுக்கும் நேரத்தை மகிழ்ந்தனுபவிக்க அநேக வழிகள் இருக்கின்றன.
Last updated: மார்ச் 05 2010