மூக்கு-இரைப்பைக் (NG) குழாய் மூலமாக உணவூட்டுதல்: பொதுவன பிரச்சினைகள்

Nasogastric (NG) tube feeding: Common problems [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களுடைய பிள்ளைக்கு மூக்கு –இரைப்பைக் குழாயின் மூலமாக உணவூட்டும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது பற்றிக் கற்றுக்கொள்ளவும்.

உங்களுடைய பிள்ளையின் மூக்கு –இரைப்பைக் (NG) குழாயை உபயோகித்து உணவூட்டும்போது நீங்கள் எதிர்ப்படக்கூடிய பொதுவான பிரச்சினைகளைப் பின்வரும் அட்டவணை சுருக்கமாக விபரிக்கிறது:


பிரச்சினைஇது காரணமாகலாம்எப்படி கையாளுவதுஎப்படித் தடுப்பது
நீங்கள் மூக்கு –இரைப்பைக் குழாயை உட்சொருகும்போது உங்களுடைய பிள்ளைக்கு மூச்சு அடைத்தல், இருமல்,சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடல் வெளுறுதல் ஏற்படுகிறதுமூக்கு –இரைப்பைக் குழாய்
  • உடனடியாக மூக்கு –இரைப்பைக் குழாயை அகற்றிவிடவும்.
  • உங்களுடைய பிள்ளையை அல்லது குழந்தையை சற்று ஓய்வெடுத்து சுதாகரிக்க விடவும்
  • குழாயின் நீளத்தைத் திரும்பவும் அளக்கவும்.
  • அறிவுரைகளைப் பின்பற்றித் திரும்பவும் உட்செரு முயலவும்.
  • உங்களுடைய பிள்ளை நிவாரணமடையாவிட்டால் மருத்துவரை அல்லது 911ஐ உடனே அழைக்கவும்.
  • நீளத்தை அளந்து குழாயில் அடையாளமிடவும்.
  • குழாயை மென்மையாகவும் மெதுவாகவும் வைக்கவும்.
  • மூக்கு –இரைப்பைக் குழாய் கீழிறங்கும் போது விழுங்கும்படி உங்களுடைய பிள்ளையை உற்சாகப்படுத்தவும்.
  • நீங்கள் குழாயை உட்செருகும்போது உங்களுடைய குழந்தைக்கு ஒரு சூப்பானை சூப்பும்படி கொடுக்கவும்.
உணவூட்டுதலின்போது உங்களுடைய பிள்ளை வாந்தியெடுக்கிறான் அல்லது அவனின் வயிறு வீங்குகிறதுகுழாய்க்குள் அளவுக்கதிகமான ஃபோர்மூலா இருக்கிறது.
  • உணவூட்டுவதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்திவைத்துவிட்டு, திரும்பவும் மெதுவாக ஆரம்பிக்கவும்.
  • உங்களுடைய பிள்ளைக்கு தொடர்ந்து பிரச்சினைகள் இருந்தால், உங்களுடைய நல் உணவு வல்லுனரை அல்லது மருத்துவரை அழைக்கவும்
  • அறிவுறுத்தப்பட்ட வேகவீதத்தில் உணவூட்டலைக் கொடுப்பதற்காக உணவூட்டியைச் சரி செய்யவும்.
  • சரியான அளவு உணவுதான் கொடுக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.
நீங்கள் குழாயில் இட்ட அடையாளம் இனிமேலும் மூக்குத்துவார இடத்தில் இல்லைகுழாய் உங்களுடைய பிள்ளைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அதிக தூரத்துக்குக் தள்ளப்பட்டிருக்கலாம்.
  • குழாயில் இடப்பட்ட அடையாளத்தை உங்களால் பார்க்கமுடியாவிட்டால், குழாயை வெளியே இழுத்து திரும்பவும் வார்ப்பட்டை இடவும்
  • இரண்டு வழிமுறைகளை (மேலேயுள்ள பிரிவு C ஐப் பார்க்கவும்) உபயோகித்து குழாய் வைக்கப்பட்டிருக்கும் நிலையைச் சரிபார்க்கவும்.
  • இடப்பட்ட அடையாளம் பிள்ளையிலிருந்து அதிக தூரத்திலிருந்தால், குழாயை அகற்றிவிட்டு, திரும்பவும் அளந்து உட்செருகவும்.
  • அதை வார்ப்பட்டையிட்டு நன்கு பாதுகாப்பாக வைக்கவும்
  • குழாய் அசையாதபடி பாதுகாப்பாக வார்ப்பட்டையிடுவதற்கு நிச்சயமாக இருக்கவும்.
  • குழாய் வெளியே இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, அதன் வெளிப்பகுதியை பிள்ளையின் சட்டையின் உள்ளே வைக்கவும்.
உங்களுடைய பிள்ளைக்கு வயிற்றுப்போக்கு இருக்கிறது
  • உணவூட்டுதல் அதிக விரைவாக நடக்கிறது.
  • உங்களுடைய பிள்ளைக்கு ஒரு வயிற்றுத் தொற்றுநோய் இருகக்கூடும்.
  • சிகிச்சையைப் பற்றி உங்களுடைய பிள்ளையின் மருத்துவரிடம் கலந்து பேசவும்.
  • அந்த உபகரணங்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய உபகரணத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கவும்.
  • உபகரணங்களைக் கையாளுவதற்கு முன்பும் பின்பும் உங்களுடைய கைகளைக் கழுவவும்.
  • அறிவுரையின்படியே உணவூட்டப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.
  • ஃபோர்மூலா சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதிலும், உபகரணங்கள் ஒவ்வொரு முறை உபயோகித்த பின்னரும் நன்கு கழுவப்பட்டிருக்கவும் நிச்சயமாக இருக்கவும்.
வார்ப்பட்டையினால் உங்களுடைய பிள்ளையின் முகத்திலுள்ள தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
  • வார்ப்பட்டை அளவுக்கதிகமாக இருக்கிறது
  • வியர்வையும் எச்சிலும் வார்ப்பட்டையை ஈரமாக்குகின்றன.
  • உங்களுடைய பிள்ளை வார்ப்பட்டைக்குக்குக் கூருணர்வுள்ளவனாக இருக்கிறான்.
  • உதவக்கூடிய வேறு வகையான வார்ப்பட்டையை பற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது தாதியுடன் கலந்து பேசவும்.
  • தோலை நிவாரணமடைய அனுமதிப்பதற்காக, முகத்தின் வேறு பகுதிகளில் வார்ப்பட்டையை ஒட்டவும்.
  • குழாயை அதனிடத்தில் வைப்பதற்குத் தேவையான வார்ப்பட்டையை மாத்திரம் உபயோகிக்கவும்
  • மிகக் குறைந்தளவு ஒவ்வாமையுள்ள வார்ப்பட்டையை மாத்திரம் உபயோகிக்கவும்.
  • வார்ப்பட்டையைப் போடுவதற்கு முன்பாக, உங்களுடைய பிள்ளையின் தோலை வீரியமற்ற சோப்பினாலும் தண்ணீரினாலும் சுத்தம் செய்து நன்கு உலரவிடவும்.
  • ஈரமான அல்லது அழுக்கடைந்த வார்ப்பட்டையை உடனேயே அகற்றிவிடவும்.

மேலதிக தகவல்களுக்குத் தயவு செய்து மூக்கு –இரைப்பைக் (NG) குழாய்: உங்களுடைய பிள்ளையின் மூக்கு –இரைப்பைக் (NG) குழாயை எப்படி உட்செருகுவது மற்றும் மூக்கு –இரைப்பைக் (NG) குழாய்: உங்களுடைய பிள்ளைக்கு உணவூட்டுதல் ஐ ப் பார்க்கவும்

Last updated: دسمبر 07 2010