புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் நிலைமைகள் மற்றும் பிறப்படையாளங்கள்

Skin conditions and birthmarks in newborns [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

புதிதாகப் பிறந்த குழந்தையின் பல்வேறு தோல் நிலைமைகள் பற்றியும் பிறப்படையாளங்கள் மற்றும் பிறப்படையாளங்கள் அகற்றும் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நாம் வர்த்தகத் தொலைக்காட்சியில் பார்ப்பதைப்போல,எப்போதுமே பிரகாசமான ஒளிவீசும் தோல் இருக்கமாட்டாது என்பதை நீங்கள் இப்போது அவதானித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையில், அவர்களுக்குப் பல பொதுவான தோல் நிலைமைகள் அல்லது பிறப்படையாளங்கள் இருக்கலாம். முதலில் இது உங்களுக்கு சற்று எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் நிலைமைகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் கொண்டிருக்கக்கூடிய மிகவும் பொதுவான தோல் நிலைமைகள் பற்றிய விபரிப்புகள் பின்வருமாறு:

  • கிறேடில் கப்: இது உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலையிலுள்ள தோல் உரிபடுதலாகும். பொருக்குகளை தளரச் செய்வதற்காக மினேரல் எண்ணை அல்லது பெற்றோலியம் ஜெலி வைத்து மசாஜ் செய்யும்போது வீரியம் குறைந்த கிறேடில் கப் இல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பேபி ஷம்பூ போட்டு பொருக்குகளைக் கழுவி விடலாம். பொருக்கு உரிதல் கடுமையானதாக இருந்தால் உங்கள் மருத்துவர் ஒரு விசேஷ ஷம்பூ அல்லது களிமருந்தை சிபாரிசு செய்யலாம். சிகிச்சையினால் பெரும்பாலும் ஒரு சில வாரங்களுக்குள் கிறேடில் கப் மறைந்துவிடும். சிகிச்சை செய்யப்படாவிட்டால் அது சில மாதங்கள் வரை நீடிக்கும்.
  • எரித்தீமா டொக்ஸிகம்: இவை சிவந்த ஒழுங்கில்லாத புள்ளிகளால் சூழப்பட்டிருக்கும் மஞ்சள்-வெள்ளை மேடுகள் ஆகும். இந்தப் புண்கள், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் தவிர உடலின் எப்பகுதியிலும் காணப்படும். இவை முதல் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் மறைந்துவிடவேண்டும். இது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் காணப்படும் மிகவும் சாதாரண அரிப்பு ஆகும்.
  • மிலியா: இவை புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நெற்றி, கன்னங்கள், மற்றும் மூக்கில் காணப்படும் சிறிய முத்துப்போன்ற வெள்ளைப் புள்ளிகளாகும். இவை வெள்ளைப் புள்ளிகள் போல காணப்படும். இவை உயர்ந்த மேடுகள் போல தோன்றினாலும் அவை உண்மையில் மிகவும் மிருதுவானவை. புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலில் சீபம் எனப்படும் எண்ணெய்ப்பசை நிறைந்த பொருள் உண்டாக்கப்படும்போது மிலியா உருவாகிறது. குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு வாரங்களுக்குள் அவனின் எண்ணெய்ச் சுரப்பிகள் மற்றும் துளைகள் முதிர்ச்சியடையும். அப்போது மிலியா மறைந்துவிடும். இந்த புள்ளிகளை இயற்கையாகவே மறையும்படி விட்டுவிடுவது மிகச் சிறந்தது.
  • மிலியறியா அல்லது வியர்க்குரு: இது திரவம் நிரப்பப்பட்ட சிறிய கொப்பளங்களைக் கொண்ட மேடு போன்ற அரிப்பாகும். திரவம் பால் வெள்ளை அல்லது தெளிந்த நிறமுடையதாயிருக்கும். சாதாரண தோலுக்குரிய வெளித்தள்ளலைக் கொண்டிருக்கும். வியர்வையை உண்டாக்கும் வியர்வைச் சுரப்பியிலேற்படும் தடையின் காரணமாக மிலியறியா உண்டாகிறது. இந்த அரிப்பு படிப்படியாகத் தானாகவே மறைந்துவிடும்.
  • புதிதாகப் பிறந்த குழந்தையின் பருக்கள்: இவை மஞ்சள் மையங்களைக் கொண்ட சிவப்புப் புள்ளிகளாகும். இவை நியோநேட்டல் அல்டிகேரியா எனவும் அழைக்கப்படும். புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலிலுள்ள துவாரங்கள் பயன்தரும் விதத்தில் வேலை செய்யாவிட்டால் இவை ஏற்படும். இவை தொற்றுநோய் போல தோற்றமளித்தாலும் அவை தொற்றுநோய் அல்ல. இவற்றிற்கு எந்த வகையான சிகிச்சைகளும் தேவைப்படாது. நியோநேட்டல் அல்டிகேரியா தானாகவே மறைந்துவிடும்.
  • புஸ்டுலார் மெலனொஸிஸ்: இவை தோலிலுள்ள சிறிய கொப்பளங்கள் ஆகும். இவை விரைவாக உலர்ந்து போகும் அல்லது கீழே விழுந்துவிடும். தோலினுள் சிறிய கடும் நிற உடற்புள்ளிகளை விட்டுச் செல்லும். இந்தப் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும். கடும்நிற தோலையுடைய புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல்களில் இவை மிகச் சாதாரணமாகக் காணப்படும்.

பிறப்படையாளங்கள்

சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் மறுக்களுடன் பிறக்கிறார்கள். இது முதலில் சற்று பயமுறுத்துவதைபோல இருக்கலாம். சில மறுக்கள் ஒரு சில வருடங்களில் மறைந்துவிடலாம். மற்றவை பிள்ளையின் வாழ்நாட்கள் முழுவதும் நிலைத்திருக்கலாம். மிகவும் சாதாரணமான மறு வகைகளின் பட்டியல் பின்வருமாறு:

  • கஃபே அவு லெயிற் மார்க்ஸ்: இவை கபில நிறப் படைகளென்பதால்- கஃபே அவு லெயிற் மார்க்ஸ் என்ப் பெயர்கொண்டுள்ள - இவை புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலின் எப்பகுதியிலாவது உருவாகலாம். இவை காலப்போக்கில் மறைந்து போகமாட்டாது. உங்கள் குழந்தைக்கு அநேக கஃபே அவு லெயிற் மார்க்ஸ் படைகள் இருந்தால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும். அது உங்கள் குழந்தைக்கு மேலும் ஆராச்சிகள் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • ஸ்ட்ரோபெரி பிறவி அடையாளம் (ஸ்ட்ரோபெரி இரத்தக் குழல் கட்டி)

    ஸ்ட்ரோபெரி ஹெமன்ஜியொமா: இது ஒரு கப்பிலரி ஹெமன்ஜியொமா அல்லது ஒரு ஸ்ரோபெரி அடையாளம் எனவும் அழைக்கப்படுகிறது. இது மென்மையான தோலினாலான சிவந்த கொப்பளம் ஆகும். இது நெல்மணி அளவு மிகவும் சிறியதாயிருக்கலாம் அல்லது ஒரு பேஸ்போல் பந்தளவு பெரியதாகவும் இருக்கலாம். தோலின் ஒரு பாகத்தில் அசாதாரண இரத்தோட்டம் இருக்கும்போது ஸ்ரோபெரி ஹெமன்ஜியொமா உருவாகலாம். இது தோலை வீக்கமடைந்து சிவந்த நிறமாக்கும். பெரும்பாலும் இவற்றின் அளவு பிறந்த பின்னர் பெரிதாகிக்கொண்டே போய் ஐந்து முதல் 10 வயதில் மறைந்து போகவேண்டும். ஸ்ரோபெரி ஹெமன்ஜியொமா கண்ணின் அருகே உண்டாகிக் கண்பார்வையில் குறுக்கிட்டால், அதற்குச் சிகிச்சை தேவைப்படும். முகப் பகுதியிலுள்ள எதாவது ஹெமன்ஜியொமா செயற்பாட்டைப் பலவீனப்படுத்தும்போது, உங்கள் மருத்துவர் இந்த ஹெமன்ஜியொமாவின் வளர்ச்சியைக் கண்காணித்து அது சரியான முறையில் மறைந்துவிடுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்.

  • கவெர்னொவஸ் ஹெமன்ஜியொமா: இது திசுக்களின் படைகளில் ஆழமாக உட்படும் மற்றும் இது ஒரு கட்டித் தன்மையுடையது என்பன தவிர இதுவும் ஸ்ரோபெரி ஹெமன்ஜியொமா போன்றதுதான். கவெர்னொவஸ் ஹெமன்ஜியொமா வாழ்க்கையின் முதல் வருடந்தில் வளரும் மற்றும் ஐந்துக்கும் பன்னிரெண்டுக்கும் இடைப்பட்ட வயதில் மறைந்துவிடும். சில வேளைகளில் அவை அறுவைச் சிகிச்சை முலமாக அகற்றப்படும்.
  • மச்சங்கள்: பிறப்பு முதல் இருக்கிற நிறம் கொடுக்கின்ற நேவி என்றும் அழைக்கப்படும் இவை வெளிர் நிறம் முதல் கடும் நிறம் வரை இருக்கலாம். அவற்றிலிருந்து முடியும் வளரலாம். பெரும்பாலும் மச்சங்கள் கவலைக்குரியனவல்ல. ஆயினும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் மச்சம் மிகவும் பெரிதானதாக, இரத்தக்கசிவு ஏற்படத் தொடங்கினால், அல்லது நிறம், வடிவம், அல்லது அளவில் மாற்றம் ஏற்பட்டால், தோல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே அது உங்கள் மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவேண்டும்.
  • மொங்கோலியன் புள்ளிகள்: இவை தோலின் கீழ் நசுக்கப்பட்ட காயத்தைப்போல் தோற்றமளிக்கும் பச்சை அல்லது நீலப் புள்ளிகள் ஆகும். இவைகறுப்பு, ஆசியா நாட்டவர், மத்தியதரைக் கடல்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது வேறு கறுப்பு நிறமுடைய குழந்தைகளின் புட்டம் அல்லது முதுகுப்பகுதியில் தோன்றும். பெரும்பாலும் மொங்கோலியன் புள்ளிகள் முதல் வருடத்துக்குள் மறைந்துவிடும்.
  • போர்ட்வைன் புள்ளிகள்: இவை தோலில் ஏற்படும் பெரிய, தட்டையான, கடும் சிவப்பு அல்லது ஊதாநிறப் புள்ளிகளாகும். இவை தோலின்கீழ் அளவுக்கதிகமான இரத்தக்குழாய்கள் இருப்பதினால் ஏற்படுகிறது. போர்ட்வைன் புள்ளிகள் காலப்போக்கில் மறைந்துவிட மாட்டாது.
  • தோல் டாக்ஸ்: இவை மென்மையான, சிறிய தோல் வளர்ச்சிகள் ஆகும். அவை கவர்ச்சியற்றவையாக அல்லது அசௌகரியமானதாக இருந்தால் மருத்துவரால் அகற்றப்படலாம்.
  • ஸ்பைடர் நேவி: இவை மெல்லிய, சிலந்தி வடிவிலுள்ள இரத்தக்குழாய்களாகும். இவை முதல் வருடத்தில் மறைந்துவிடும். பெரும்பாலும் இவை கவலைக்குரியனவல்ல. ஆயினும், உங்கள் மருத்துவரின் கவனத்துக்கு இவற்றைக் கொண்டுவரவும்.
  • ஸ்டோக் பைற்ஸ்: இவை கழுத்தில் அல்லது முகத்தில் தோன்றும் இளஞ்சிவப்பு நிற ஒழுங்கற்ற வடிவத்திலுள்ள படைகளாகும். இவை காலப்போக்கில் மறைந்துவிடும்.
Last updated: اکتوبر 18 2009