மென் இழை காயங்கள் என்பது என்ன?
மென் இழை காயங்கள் என்பது தோலமைப்பு, தசை, தசை நாண்கள், தசை நார்கள், அல்லது குறிப்பிட்ட சில மூட்டுக்களை சுற்றியுள்ள தோலுறைகளில் ஏற்படும் காயங்களை உட்படுத்தும்.
சுளுக்கு , தசை இழுபடுதல் மற்றும் நசுக்குக் காயங்கள்
- சுளுக்கு என்பது தசைநார்களின் ஏற்படும் காயம். தசைநார்கள் என்பது எலும்புகளை இணைக்கும் மென் இழைகள்
- தசை இழுபடுதல் என்பது தசைகள் மற்றும்/அல்லது அவற்றை இணைக்கும் அல்லது அசையாமல் பிணைத்து வைக்கும் தசை நாண்களில் ஏற்படும் காயங்களாகும்.
- நசுக்குக் காயங்கள் என்பது மென் இழையில் ஏற்படும் இரத்தக் கசிவு ஆகும்.
- மென் திசுக் காயங்களின் இந்த ஒவ்வொரு வகையும் சாதாரணமானவை. இவை பெரும்பாலும் வீரியமற்றவை. ஆனாலும் சில சமயங்களில் இவை கடுமையானதாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட ஒரே இடத்தில் அவை இரண்டுமே சம்பவிக்கலாம்.
மென் இழைக் காயங்களுக்கான அறிகுறிகள்
மென் இழை காயமுள்ள ஒருவருக்கு வலி அல்லது வீக்கம் இருக்கலாம். காயம் எவ்வளவு தீவிரமானது மற்றும் அது எங்கே ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பொறுத்து காயப்பட்ட உறுப்பு அல்லது உடலின் பாகத்தின் செயலைப் பாதிக்கும். கடுமையான மென் இழை காயங்கள் பிள்ளைகள் அல்லது விடலைப் (டீன்) பருவத்தினர் தங்கள் செயல்பாட்டை நிறுத்துத்துவதற்குக் காரணமாகலாம்.
தோல் மிகவும் மெல்லியதாக இருக்கும் பகுதிகள், கணுக்கால் போன்ற பகுதிகளில் ,தோலின் மேற்பரப்பிற்கு அருகில் அல்லது தோலுக்குக் கீழான பகுதிகளில் இருக்கும் நசுக்குக் காயங்கள், தோலின் நிறத்தைக் கடும் சிவப்பு அல்லது நீல நிறமாக மாற்றும். ஆழமான நசுக்குக் காயங்கள், தசை போன்ற இடங்களில் ஏற்படுபவை போன்றன, எந்தவொரு தோல் நிற மாற்றத்தையும் காட்டாமல் இருக்கலாம்.
மென் இழை காயத்திற்கான காரணங்கள்
சுளுக்கு மற்றும் தசை இழுபடுதல் என்பவை கடுமையான அல்லது திடீர் திருகுதல், நீட்டியிழுத்தல், அல்லது தசையை பலமாக இறுக்குதல் என்பவற்றால் ஏற்படுகிறது. இந்த விசைகள் தசையின் நார்கள், தசை நாண்கள், அல்லது தசை நார்களை நீட்டிவிடும் அல்லது கிழித்துவிடவும் கூடும். அவை தசை, தசை நாண்கள், அல்லது தசை இழைகளை அதனிடத்திலிருந்து விலகவும் செய்யக்கூடும்.
நசுக்குக் காயங்கள் பெரும்பாலும் நேரடியாக அடிக்கப்படுவதனாலோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதி அழுத்தப்படுவதனாலோ ஏற்படுகிறது.
மென் இழை காயங்களுக்கான காரணங்கள்
பெரும்பாலான மென் இழை காயங்கள் மேலோட்டமானவை. அவை பெற்றோரால், கற்பிப்பவரால், ஆசிரியரால், அல்லது பராமரிப்புக் கொடுப்பவர்களால் பராமரிக்கப்படலாம். ஆயினும், காயம் மிக மேலோட்டமானதாக இருக்கும்போது காயத்துக்குக்குக் காரணமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடலாம். ஆனால் இதைச் செய்வதற்கு முன்னர், உங்கள் பிள்ளை பெற்றோராலோ அல்லது பொறுப்புள்ள பராமரிப்பாளராலோ முதலில் சோதிக்கப்படவேண்டும். பின்னர் காயம் பராமரிக்கப்படவேண்டும். ஆயினும், பொதுவாக, பின்வரும் அறிவுரைகளை செயற்படுத்தவும்:
- காயப்பட்ட பகுதியை அசைக்காமல் வைத்திருக்கவும்.உங்கள் உடல் நல பராமரிப்பாளரின் அறிவுரைப்படி, மட்டை, தூக்கு, காயங்களுக்கு மருந்திடுதல், அல்லது ஊன்றுகோல் என்பவற்றை உபயோகிக்கவும்.
- காயப்பட்ட முதல் நாள் ஐஸ் கட்டி, அல்லது பையிலடைத்த ஐஸ் கட்டி உபயோகப்படுத்தலாம். அதிகமாகக் குளிரூட்டப்பட்ட மரக்கறிப் பை அல்லது நொறுக்கப்பட்ட ஐஸ், காயப்பட்ட பகுதியின் வடிவத்திற்கு எற்றவாறு தானாகவே அமர்ந்திருக்கும். தோலில் நேரடியாக ஐஸ் கட்டியை வைக்கவேண்டாம். முதலில் அதை ஒரு மெல்லிய துணியில் சுற்றவும். இந்த ஐஸ் பையை 10 முதல் 15 நிமிடங்கள் வரையாக ஒரு நாளுக்கு 6 முதல் 8 தடவைகள் ,அல்லது அறிவுறுத்தப்பட்டபடி, காயத்தின்மேல் வைக்கவும்.
- உங்கள் பிள்ளை எழுந்து நடமாடும் போது, அழுத்தமேற்றுதல் அல்லது நீளும் தன்மையுள்ள துணியால் கட்டுவது வீக்கத்தைக் குறைக்கும், ஆனால் அவை ஆதரவு அளிப்பதில்லை. ஓய்வெடுக்கும்போதும் உறங்கும் போதும் அதை அகற்றிவிட வேண்டும். துணி கட்டப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பகுதி மரத்துப்போகத்தொடங்கினால், அதை சிறிது தளர்த்தி விடவும். ஏனென்றால் துணி மிகவும் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கலாம்.
- காயப்பட்ட பின்னர் 1 முதல் 2 நாட்களுக்குக் காயப்பட்ட பகுதியை உங்களால் முடிந்தளவுக்கு உயரத்தில் தூக்கி வைக்கவும். இது வீக்கத்தைக் குறைக்க உதவும். குஷன் அல்லது தலையணையை ஆதாரமாக வைக்கவும்.
- முதல் நாளுக்குப் பின் வெப்பமூட்டும் மெத்தை அல்லது வெந்நீர்ப் பையை உபயோகித்து வெப்பமூட்டலாம். தோலை எரித்து விடக்கூடியளவு அதிகவெப்பமுள்ள எதையுமே உபயோகிக்காதிருக்கக் கவனமாயிருங்கள். இந்த சூடான பையை 10 முதல் 15 நிமிடங்கள் வரையாக ஒரு நாளுக்கு 6 முதல் 8 தடவைகள், அல்லது அறிவுறுத்தப்பட்டபடி, காயத்தின்மேல் வைக்கவும்.
- ஐபியூபுரோஃபின்(அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிரான்டுகள்) போன்ற மருந்து, வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உபயோகிக்கலாம். உங்கள் உடல் நல பராமரிப்பளிப்பவரின் அறிவுரைப்படி அல்லது மருந்து அட்டையிலுள்ள உபயோகிக்கும் முறையின் படி மருந்தை எடுத்துக்கொள்ளவும்.
உங்கள் உடல் நல பராமரிப்பளிப்பவர், காயத்தின் தன்மையின் அடிப்படையில், நீங்கள் பழைய செயல் நிலைக்குப் படிப்படியாக அல்லது வெவ்வேறு நிலைகளில் திரும்புவதைப் பற்றிப் பேசுவார். மேலோட்டமானதிலிருந்து மிதமாகவுள்ள காயத்துக்கு, சீக்கிரமாக நடமாடுவது மற்றும் கடினமற்ற வேலை செய்வது உங்கள் பிள்ளையை விரைவாக நிவாரணமடையச் செய்யும். மேலும் கடுமையான காயங்கள் நிவாரணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படலாம் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது காயத்தை மேலும் மோசமானதாக்கும்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:
- காயப்பட்டு சற்று நேரத்தின்பின்பு உங்கள் பிள்ளை காயப்பட்ட பகுதியை உபயோகிக்க முடியவில்லை
- காயப்பட்டு 4 அல்லது 5 நாட்களின் பின்பு உங்கள் பிள்ளை முன்னேற்றமடையத் தொடங்கவில்லை
- திரும்பவும் ஸ்போர்ட்ஸ் அல்லது வேறு நடவடிக்கைகளில் திரும்பவும் ஈடுபடுவதற்குமுன்னர் உங்கள் பிள்ளைக்கு மருத்துவ மதிப்பாய்வு தேவை.
- காயத்தைச் சுற்றி சிவந்த நிறம் அல்லது வீக்கம் அதிகரித்துக்கொண்டே போதல்
- காய்ச்சல் உண்டாகிறது.
- உங்களுக்கு ஏதாவது அக்கறைகள் அல்லது கேள்விகள் இருக்கிறது
பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:
- காயப்பட்டு சற்று நேரத்தின்பின்பு உங்கள் பிள்ளை காயப்பட்ட பகுதியை உபயோகிக்க முடியவில்லை
- காயப்பட்ட பகுதியில் உங்கள் பிள்ளை தொடர்ச்சியான மரத்துப் போதல், குளிர்ச்சி, அல்லது உணர்ச்சியின்மையை அனுபவிக்கிறான்.
- பாதிக்கப்பட்ட உடலுறுப்பின் பகுதி இனிமேலும் அதனது வழக்கமான வடிவத்தில் இல்லை.
- உங்கள் பிள்ளைக்கு தொடர்ந்த அல்லது கடுமையான வலி இருக்கிறது, அசெட்டபினோஃபென் அல்லது ஐபியூரோஃபின் போன்ற மருந்துகள் கொடுத்தும் நிவாரணமடையவில்லை.
முக்கிய குறிப்புக்கள்
- மென் இழை காயங்கள் என்பது தசை இழுபடுதல், சுளுக்கு, நசுக்குக் காயங்கள் என்பனவற்றை உட்படுத்துகிறது.
- பெரும்பாலான மென் இழை காயங்கள் மேலோட்டமானவை. இவை ஓய்வெடுத்தல், குளிர்ந்த பைகள், அழுத்தம் கொடுத்தல்,மற்றும் காயப்பட்ட உடல் பகுதியை உயரத்தில் தூக்கி வைத்தல் என்பனவற்றின்மூலம் நிவாரணமடையச் செய்யலாம். மருந்துக் குறிப்பில்லாத வலி மருந்துகளும் வலியைக் குறைக்க உதவும்
- உங்கள் பிள்ளை எவ்வளவு விரைவாக வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்பதைப் பற்றி உங்கள் உடல் நலப் பராமரிப்பாளர் உங்களிடம் கலந்து பேசுவார்.