சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படம் (VCUG).

Voiding cystourethrogram (VCUG) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சிறுநீர் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதை காட்டும் பட (VCUG) பரிசோதனை, சிறுநீர் கழிக்கும் போது உங்களது பிள்ளையின் சிறுநீர்ப்பை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பார்க்க எக்ஸ்-ரே ஊடுகதிர்களை உபயோகிக்கிறது. VCUG-ன் போது என்ன எதிர்

VCUG என்றால் என்ன?

VCUG என்பது, உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்பதைக் காட்ட, ஊடுகதிர் படத்தை உபயோகிக்கும் ஒரு விசேஷ பரிசோதனையாகும்.

சிறுநீர்த் தொகுதி (பெண்)சிறுமி ஒருத்தியின் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி அமைவிடம்

VCUG என்பது "வொய்டிங் சிஸ்ரோயுறேத்றோகிராம்" என்பதன் சுருக்கமாகும். "வொய்டிங்" என்பது சிறுநீர் கழித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. "சிஸ்ரோ" என்பது சிறுநீர்ப்பையைக் குறிக்கிறது. "யுரேத்திரோ" என்பது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெறுமையாக்கும் குழாயான யுரேத்திராவைக் குறிக்கிறது. "கிராம்" என்பது படத்தைக் குறிக்கிறது. ஆகவே, VCUG என்பது சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படமாகும்.

சிறுநீரைத் தெளிவாகத் தெரியச் செய்விக்கக்கூடிய கொன்ட்ராஸ்ட் மீடியம் என்றழைக்கப்படும் ஒரு விசேஷ திரவம் இந்தப் பரிசோதனையில் உபயோகிக்கப்படும்.

பரிசோதனைக்காக உங்கள் பிள்ளையைத் தயார் செய்தல்

இந்தத் தகவலை கவனமாக வாசித்து, உங்கள் பிள்ளைக்கு விளக்கிச் சொல்வதற்கு நேரமெடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும், எதை எதிர்பார்க்கவேண்டும் என தெரிந்து வைத்திருக்கும் பிள்ளைகள் குறைந்த மனக்கலக்கமுள்ளவர்களாயிருப்பார்கள். உங்கள் பிள்ளை விளங்கிக் கொள்ளக்கூடிய, உங்களுக்குத் தெரிந்த வார்த்தையில் பரிசோதனையைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள். உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை விபரிக்க உங்கள் குடும்பத்தவர் உபயோகிக்கும் வார்த்தைகளை உபயோகியுங்கள்.

பரிசோதனையின் ஒரு பாகமாக, கதீற்றர் என்றழைக்கப்படும் ஒரு சிறு குழாய், உங்கள் பிள்ளையின் சிறுநீர்வடிகுழாயினுள்ளே வைக்கப்படும். கதீற்றர் குழாய் உட்செலுத்துவது அசௌகரியத்தை உண்டாக்கும். ஆனால் உங்கள் பிள்ளை பதட்டமடையாமல் ஒய்வாக இருக்கும்போது மேலும் சௌகரியமுள்ளவனாக உணருவான்(ள்). உங்கள் பிள்ளைக்கு மெதுவாக, ஆழமான சுவாசம் எடுக்க நீங்கள் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவன்(ள்) ஓய்வெடுக்க உதவி செய்யலாம். உங்கள் பிள்ளையை, பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை ஊதுவது, பலூன் ஊதுவது, அல்லது குமிழிகள் ஊதுவதுபோல பாவனை செய்ய வைக்கலாம். நீங்கள் மருத்துவமனைக்கு வருவதற்குமுன்பு இந்த சுவாசப் பயிற்சிகளை வீட்டில் பயிற்சி செய்யவும்.

சில சமயங்களில், சிறு பிள்ளைகள் பரிசோதனையின்போது சௌகரியமான எதையாவது பற்றிப்பிடித்துக்கொள்வதற்காக, மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டுவர விரும்புவார்கள். உங்கள் பிள்ளை ஒரு பஞ்சடைக்கப்பட்ட விளையாட்டுப்பொருள் அல்லது ஒரு கம்பளிப் போர்வையை வீட்டிலிருந்து கொண்டுவர விரும்பக்கூடும்.

பரிசோதனை நேரம் முழுவதும் பெற்றோரில் ஒருவர் பிள்ளையுடன் கூட இருக்கலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் கதீற்றர் குழாய் பொருத்தப்படும் நேரத்தில் அறையில் தங்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைக்கு எக்ஸ் – ரே படம் எடுக்கப்படும்போது, நீங்கள் அறையைவிட்டு வெளியேறவேண்டும்.

மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பவல்லுனர்கள், சுத்தம் செய்வதற்காகவும் கதீற்றர் குழாயை உட்செலுத்துவதற்காகவும், உங்கள் பிள்ளையின் அந்தரங்க உறுப்புகளைத் தொட வேண்டிய தேவை இருக்கிறது என்று உங்கள் பிள்ளைக்கு நீங்கள் விளக்கிச் சொல்லவேண்டிய தேவை இருக்கலாம். பரிசோதனை உங்கள் பிள்ளைக்கு நன்மையளிக்கும் என்பதால், நீங்கள் அவனை(ளை)த் தொடுவதற்கான அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்பதை அவனு(ளு) க்கு விளக்கிச் சொல்லுங்கள்.

இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் பரிசோதனையைச் செய்வார்கள்

தொழில்நுட்பவல்லுனர்கள் கதீற்றர் குழாய் உட்புகுத்துவதற்கும் எக்ஸ் – ரே படம் எடுப்பதற்கும் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் ஆவர். சிலவேளைகளில், ஊடுகதிர்வீச்சியல் மருத்துவரும்கூட பரிசோதனையின்போது அறையில் இருப்பார். ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் எக்ஸ் – ரே படங்களை ஆய்வு செய்வார்.

சிறுநீர்த் தொகுதி (ஆண்)சிறுவன் ஒருவனின் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி அமைவிடம்

எக்ஸ் – ரே தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளைக்கு பரிசோதனையில் என்ன செய்யப்படும் என்பதை விளக்குவதன் மூலம் அவனை(ளை) பரிசோதனைக்குத் தாயார்படுத்துவார். தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளையின் ஆணுறுப்பை அல்லது சிறுநீர்வடிகுழாயின் திறந்த பகுதியைக் கவனமாகக் கழுவுவார். பின்பு தொழில்நுட்பவல்லுனர் ஒரு வளையக்கூடிய கதீற்றர் குழாயை திறந்த பகுதியில் வைப்பார். கதீற்றர் குழாய் என்பது சிறுநீர் வடிகுழாயினூடாக சிறுநீர்ப்பைக்குட் செல்லும் ஒரு நீண்ட, மெல்லிய, மென்மையான குழாயாகும். தொழில்நுட்பவல்லுனர் அதைச் செய்யும்போது ஒவ்வொரு படியாக உங்களுக்கு விளக்கமளிப்பார்.

உங்கள் பிள்ளைக்கு ஒரு இருதய நிலைமை இருந்தால்

உங்கள் பிள்ளை எந்தச் சோதனை அல்லது சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முன்பும் அன்டிபையோடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். உதாரணமாக, இருதய சிக்கல்கள் உள்ள பிள்ளைகள் பல் மருத்துவரிடம் போவதற்கு முன் அன்டிபையோடிக் மருந்துகள் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அன்டிபையோடிக் மருந்து என்பது தொற்றுநோயை அழிக்கும் ஒரு மருந்தாகும். உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்துகள் தேவைப்பட்டால், தயவு செய்து, உங்கள் பிள்ளைக்கு VCUG செய்யச் சொன்ன மருத்துவரிடம் இதை சொல்லவும். உங்கள் பிள்ளை VCUG பரிசோதனைக்குப் போவதற்குமுன் மருத்துவர் அவனு(ளு)க்காக இந்த மருந்துகளை வரவழைப்பார்.

VCUG பரிசோதனைகள் வழக்கமாக மருத்துவமனையில் செய்யப்படும்

VCUG பரிசோதனைகள், டயக்னோஸ்டிக் இமேஜிங் இலாகாவில் செய்யப்படுகிறது. இது எக்ஸ் – ரே டிபாட்மென்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இலாகா எங்கிருக்கிறது என்று நீங்கள் நிச்சயமற்றிருந்தால், பிரதான வரவேற்பறையில் விசாரிக்கவும்.

பரிசோதனை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். பரிசோதனைக்குப் பின்பு, நிழற்படம் தயாராகும்வரை 15 நிமிடங்களுக்கு நீங்கள் இந்த இலாகாவில் தங்கியிருக்கவேண்டியிருக்கும்.

பரிசோதனையின்போது

டயக்னோஸ்டிக் இமேஜிங் இலாகாவில் நீங்கள் சரி பார்க்கப்பட்டபின் உங்கள் பிள்ளைக்கு, உடை மாற்றும் அறை ஒன்றினுள் வைத்து ஒரு மருத்துவமனை மேலாடை அணிவிக்கப்படும். அதன்பின் உங்கள் பிள்ளை எக்ஸ் –ரே பட அறைக்குக் கொண்டுபோகப்படுவான். பெற்றோர்களுள் ஒருவர் மாத்திரம் பிள்ளையுடன் போகலாம்.

எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப் பட அறையினுள்

நீங்களும் உங்கள் பிள்ளையும் எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சு பட அறையினுள் சென்றவுடன் தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளையின் உள்ளாடை அல்லது டயபரை அகற்றும்படி உங்களைக் கேட்பார். அதன் பின்பு உங்கள் பிள்ளை எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்பட மேசையில் படுக்கவைக்கப்படுவான். உங்கள் பிள்ளை பாதுகாப்பாக இருக்கிறான் என்பதை உறுதிசெய்ய அவனி(ளி)ன் வயிற்றிக்குக் குறுக்காக அல்லது கால்களில் ஒரு பாதுகாப்புப் பட்டை போடப்படும்.

மேசைக்கு மேலிருக்கும் புகைப்படப் பெட்டி படங்களை எடுக்கும். பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கிறது என்பதை பார்க்க தொழில்நுட்பவல்லுனர் ஒரு தொலைக்காட்சித் திரையை உபயோகிப்பார்.

சிறந்த முடிவுகளைப் பெறுவதற்காக, தொழில்நுட்பவல்லுனர் எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப் படங்களை எடுக்கும்போது உங்கள் பிள்ளை முடிந்தளவு அமைதியாகப் படுத்திருக்கவேண்டும். உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதற்காக நீங்கள் அவனி(ளி)ன் கைகளை மெதுவாக அவன(ள)து மார்புக்கு மேலாகத் தூக்கிப் பிடிக்கலாம் மற்றும் அவனி(ளி)ன் கவனத்தை நீங்கள் உங்கள் பக்கமாகத் திருப்பலாம். உதாரணமாக, நீங்கள் வாசிக்கலாம் அல்லது பாடலாம்.

கதீற்றர் குழாயை உட்புகுத்துதல்

உங்கள் பிள்ளையின் அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்து கதீற்றரை உட்புகுத்துவதன்மூலம் எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படத் தொழில்நுட்பவல்லுனர் பரிசோதனையைத் தொடங்கலாம். கதீற்றர் குழாய் தானாகவே சிறுநீர்ப்பையை வெறுமையாக்கும்.

பின்பு கதீற்றர் குழாய் கொன்ற்ராஸ்ட் மீடியமுள்ள குழாயுடன் இணைக்கப்படும். இந்தக் கொன்ற்ராஸ்ட் மீடியம் ஒரு குழாயினூடாக சிறுநீர்ப்பையினுள் விழும். இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய் பற்றிய ஒரு தெளிவான படத்தை தொழில்நுட்பவல்லுனர் பெற்றுக்கொள்ள உதவும். கொன்ற்ராஸ்ட் சிறுநீர்ப்பையினுடே செல்வதை உங்கள் பிள்ளை உணர்ந்து கொள்வான். இது குளிச்சியாக உணரவைக்கும், ஆனால் அது அசௌகரிய உணர்வைக் கொடுக்காது.

கொன்ற்ராஸ்ட் மீடியம் சிறுநீர்ப்பையினுள் பாயும்போது, எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படத் தொழில்நுட்பவல்லுனர் சில எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப் படங்களை எடுப்பார். உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பை நிரம்பியவுடன், அவன் படுக்கை சிறுநீர்த்தட்டில் அல்லது டயபரில் சிறுநீர் கழிக்கும்படி கேட்கபடுவான்(ள்). உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது கதீற்றர்குழாய் இலகுவாகத் தானாகவே வெளியே வந்துவிடும். உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது தொழில்நுட்பவல்லுனர் சில எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படங்களை எடுப்பார். பரிசோதனையில் இவைதான் மிகவும் முக்கியமான படங்களாகும்.

உங்கள் பிள்ளை சிறுநீர் கழித்து முடிந்தவுடன் மற்றும் படங்கள் எடுத்து முடிந்தவுடன் பரிசோதனைகள் முடிவுக்கு வந்துவிடும். எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படத் தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளை மேசையிலிருந்து எழுந்திருக்க உதவி செய்வார்; மற்றும் அவன்(ள்) சுத்தமாகவும் உலர்வாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வார்.

பரிசோதனை செய்யப்பட்டு முடிந்தபின்

எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படத் தொழில்நுட்பவல்லுனர் உங்கள் பிள்ளை தன் சொந்த உடைகளை உடுத்துவதற்காக உடைமாற்றும் அறைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று சொல்லுவார். பின்பு உங்களுக்கு காத்திருக்கும் அறையில் இருக்கை கிடைக்கும். எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப்படங்கள் சரிபார்க்கப்பட்டபின் நீங்கள் எப்போது வெளியே போகலாம் என்பதை தொழில்நுட்பவல்லுனர் உங்களுக்குச் சொல்லுவார்.

பரிசோதனைக்குப்பின் மருத்துவமனையில் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய திட்டம் இருந்தால், தயவுசெய்து தொழில்நுட்பவல்லுனரிடம் சொல்லவும். உங்கள் பரிசோதனையின் முடிவுகள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்பதில் அவர் நிச்சயமாயிருப்பார். பரிசோதனைக்குப்பின் நீங்கள் மருந்துவரை சந்திக்கவில்லை என்றால் , பரிசோதனை முடிவுகள் ஒரு வாரத்துக்குள் உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் அனுப்பிவைக்கப்படும்.

வீட்டில் உங்கள் பிள்ளைக்கு அதிக தெளிவான நீராகாரங்கள் கொடுங்கள்

பரிசோதனைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது முதலில் சில தடவைகள், எரிச்சல் உணர்வு போன்ற அசௌகரியங்களை உணருவான்(ள்). மறுநாள் அல்லது அதற்குப்பின்னர், உங்கள் பிள்ளைக்கு அதிகளவு தண்ணீர் அல்லது அப்பிள் ஜுஸ் போன்ற தெளிவான நீராகாரங்களைக் கொடுக்கவும். தெளிவான நீராகாரங்களைப் பருகுவது உங்கள் பிள்ளைக்கு இருக்கும் ஏதாவது அசௌகரியங்களைக் குறைக்க உதவி செய்யும்.

பரிசோதனையின் விளைவுகள் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவு செய்து தொழில்நுட்பவல்லுனரைக் கேட்கவும். 24 மணி நேரங்களுக்கு மேலாக உங்கள் பிள்ளை அசௌகரியமாக உணர்ந்தால் உங்கள் குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • VCUG என்பது எக்ஸ்–ரே ஊடுகதிர்வீச்சுப் படங்களை உபயோகித்து உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்பதை அறிதல் ஆகும்.
  • பரிசோதனையின்போது, உங்கள் பிள்ளையின் சிறுநீர்வடிகுழாயில் ஒரு சிறுநீர் கதீற்றர் குழாய் புகுத்தப்பட்டிருக்கும்
  • பரிசோதனை அசௌகரிய உணர்வைத் தரலாம். பரிசோதனைக்கு வருவதற்குமுன்பு வீட்டில், உங்கள் பிள்ளைக்கு தளர்வாக இருப்பதற்கான பயிற்சிகளைப் (ரீலக்ஸ் எக்ஸசைஸ்) பயிற்றுவிப்பதன் மூலம் அவனை(ளை) முடிந்தளவு சௌகரியமாக உணர உதவி செய்யலாம்.
Last updated: نومبر 10 2009