முன்னங்கை எலும்பு முறிவு

Forearm fracture [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு முறிந்த முன்னங்கை வார்ப்பிடப்பட்டபின் நிவாரணமடைய 6-8 வாரங்கள் தேவைப்படும்.

முறிந்த முன்னங்கைஆரை எலும்பு உடைந்த முன்கை
முன்னங்கை என்பது முழங்கைக்கும் மணிக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. முன்னங்கை முறிவின்போது ஆர எலும்பு அல்லது அடிமுழ எலும்பு அல்லது இரண்டுமே கூட முறிவடையலாம்.

உங்கள் பிள்ளைக்கு எலும்பு உடைந்த அல்லது முறிந்த முன்னங்கை இருக்கிறது. முன்னங்கை என்பது முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

உங்கள் பிள்ளைக்கு அவசர நிலைப் பிரிவில் எலும்பு சரிப்படுத்தப்பட்டிருக்கலாம் ( திரும்பவும் சரியான இடத்தில் வைக்கப்படுதல்) அல்லது சரிப்படுத்தப்படாமலிருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு ஒரு வார்ப்பு (காஸ்ட்) தேவைப்படலாம்

எலும்பு நிவாரணமடைவதற்கு, உங்கள் பிள்ளைக்கு ஒரு வார்ப்பு தேவைப்படும் மற்றும் ஒரு தூக்கு கயிறும் (ஸ்லிங்) தேவைப்படலாம். எவ்வளவு காலத்துக்கு உங்கள் பிள்ளைக்கு வார்ப்பு தேவைப்படும் என்பது அவனது வயது மற்றும் நிவாரணமடையும் வேகம் என்பனவற்றைப் பொறுத்துள்ளது. அநேக பிள்ளைகள் 4 முதல் 8 வாரங்களுக்கு வார்ப்பை அணிந்துகொள்வார்கள்

வார்ப்பு உலர்ந்ததாக இருக்கவேண்டும். கையைப் பரிசோதித்து வார்ப்பு அணிவித்த மருத்துவமனைப் பணியாளர்கள் மேலதிக தகவல்களை உங்களுக்குத் தருவார்கள். மருத்துவமனைப் பணியாளர்கள் நீங்கள் எப்போது கவலைப்படவேண்டும் மற்றும் வார்ப்பு அல்லது கையில் பிரச்சினையுண்டு என குறிக்கும் எவற்றை அவதானிக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவிப்பார்கள்.

எலும்பு முறிவு மருத்துவமனை சந்திப்புத் திட்டங்கள்

காயப்பட்டபின் 7 முதல் 10 நாட்களின் பின்னர் உங்கள் பிள்ளை எலும்பு முறிவு மருத்துவமனைச் சந்திப்புத் திட்டத்துக்கு வரவேண்டும். இந்தச் சந்திப்புத் திட்டத்தில், உங்கள் பிள்ளையின் எலும்புகளின் நிலைமை மாறவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனுக்கு எக்ஸ்-கதிர்ப்படங்கள் எடுக்கப்படும்.

முதல் மருத்துவ சந்திப்புத் திட்டத்தின் திகதி மற்றும் நேரத்தை கீழே எழுதவும்:

 

காயப்பட்டபின் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மற்றொரு எக்ஸ்-கதிர்ப்படம் எடுப்பதற்காக உங்கள் பிள்ளையை திரும்பவும் மருத்துவமனைக்குக் கொண்டுவரவும்.

இரண்டாவது மருத்துவ சந்திப்புத் திட்டத்தின் திகதி மற்றும் நேரத்தை இங்கே எழுதவும்:

 

எலும்பு முறிவு மருத்துவமனையிலுள்ள மருத்துவர் அல்லது தாதியின் பெயரைக் இங்கே எழுதவும்:

மிகவும் அவசியமில்லாவிட்டால் உங்கள் பிள்ளையின் வார்ப்பு மாற்றப்படமாட்டாது.

எலும்பு முறிவு மருத்துவமனையில் வார்ப்பை அகற்றுதல்

3 முதல் 4 வாரங்களின் பின்னர், அதாவது தொடக்கத்தில் காயப்பட்டபின் 6 முதல் 8 வாரங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு மற்றொரு சந்திப்புத் திட்டம் தேவைப்படலாம்.இந்தச் சந்திப்புத் திட்டத்தில் உங்கள் பிள்ளையின் வார்ப்பு அகற்றப்பட்டு மற்றெரு எக்ஸ்-கதிர்ப்படம் எடுக்கப்படும்.

இந்த மருத்துவ சந்திப்புத் திட்டத்தின் திகதி மற்றும் நேரத்தை இங்கே எழுதவும்:

வார்ப்பு அகற்றப்பட்ட பின்னர் வீட்டில்

வார்ப்பு அகற்றப்பட்ட பின்னர், உங்கள் பிள்ளையின் தோல் உலர்ந்ததாக மற்றும் அரிப்புள்ளதாக மற்றும் அழுக்காகக் காணப்படலாம். வெந்நீர் மற்றும் சோப்பை உபயோகித்து மென்மையாகக் கழுவி கீறீம் பூசி ஈரலிப்பாக்கவும்.

உடற்பயிற்சி கைகளை பலப்படுத்தும்

வார்ப்பு அகற்றப்பட்டபின்னர் உங்கள் பிள்ளையால் தன் கைகளை அசைக்கத் தொடங்க முடியும். முதலில், மணிக்கட்டும் முழங்கையும் விறைப்பானதா இருக்கலாம். பின்பு காலப்போக்கில் கைகளை அசைக்கும்போது அசைவில் முன்னேற்றம் காணப்படும்.

உங்கள் பிள்ளையின் இந்தக் கை மற்றக் கையைவிட சிறியதாகவும் பலவீனமானதாகவும் இருக்கலாம். கை, வார்ப்பினுள் இருக்கும்போது, உபயோகிக்கப்படாததால் தசைகள் மெலிந்ததாக இருக்கிறது. உங்கள் பிள்ளை தன் பழைய நடவடிக்கைகளுக்குத் திரும்பும்போது, தசைகள் பெரியதாகவும் பலமுள்ளதாகவும் மாறும்.

மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய போட்டி விளையாட்டுகளைத் தவிர்க்கவும்

வார்ப்பு அகற்றப்பட்டபின்னர், 4 தொடங்கி 6 வாரங்களுக்கு உங்கள் பிள்ளை அதிக தாக்கமுள்ள, மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய போட்டி விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பிள்ளைக்கு படிப்படியாகத் தன் கை மீது நம்பிக்கை ஏற்பட்டு தன் பழைய நடவடிக்கைகளுக்குத் திரும்புவான்.

உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது எலும்பு முறிவு மருத்துவப்பிரிவிலிருக்கும் அட்வான்ஸ்ட் பிரக்டிஸ் நேர்ஸ் (APN) ஐத் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையின் முறிந்த அல்லது உடைந்த முன்னங் கைக்கு ஒரு வார்ப்பு தேவைப்படும். வார்ப்பு 6 முதல் 8 வாரங்களுக்கு அணியப்பட்டிருக்கவேண்டியிருக்கலாம்.
  • வார்ப்பு அணிவிக்கப்பட்டபின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளை மருத்துவமனைச் சந்திப்புத் திட்டத்துக்கு வரவேண்டும்.
  • வார்ப்பு அகற்றப்பட்டபின்னர் உங்கள் பிள்ளை அதிக தாக்கமுள்ள நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்.
Last updated: 十一月 06 2009