வளர்ச்சியடைவதில் பிரச்சினைகள்

Growth problems in children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

வளர்ச்சியடைவதிலுள்ள பிரச்சினைகள் எவை?

ஒரு பிள்ளையின் வளர்ச்சியை அநேக காரணிகள் பாதிக்கின்றன. வளர்ச்சியும் முன்னேற்றமும் பின்வருவனவற்றால் செல்வாக்குச் செலுத்தப்படலாம்:

  • பாரம்பரியம்
  • உணவுப் பழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து
  • நித்திரை செய்யும் வழக்கம்
  • என்டோக்ரின் செயற்பாடு (ஹோர்மோன்கள்)
  • தீராத நோய் இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்.

ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமான வேகத்தில் வளருகிறது. உங்கள் பிள்ளையின் வளர்ச்சியை அதே வயதிலுள்ள மற்றப் பிள்ளைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட முயற்சிக்கவேண்டாம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையின் வளர்ச்சியை ஒழுங்காகக் கண்காணிக்கவேண்டும். இது வளர்ச்சிக்கான வரைபட அட்டை மற்றும் உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்பவர்களது உதவியுடன் செய்யப்படலாம்.

பிள்ளையின் வளர்ச்சி கூர்ந்து அவதானிக்கப்படாவிட்டால், வளர்ச்சியின் ஒழுங்கின்மை கவனிக்கப்படாது விடப்படலாம். வளர்ச்சியின் ஒழுங்கின்மை பிள்ளை தகுந்த உயரம் மற்றும் எடையை எட்டுவதைத் தடைசெய்யும். இது பிள்ளையின் வேறு அம்சங்களான மனரீதியான, உடல்ரீதியான, அல்லது உணர்ச்சிரீதியான வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தும்.

வளர்ச்சி ஒழுங்கின்மைகளின் வகைகள்

வளர்ச்சியில் குறைவுபடுதல்

“வளர்ச்சியில் குறைவுபடுதல்” என்பது வளர்வதில் ஒழுங்கின்மை அல்ல. அது, சம வயது மற்றும் அதே பாலினப் பிள்ளைகளைவிட எடை அல்லது எடை அதிகரிப்பதன் வேகம் குறிப்பிடத்தக்களவு குறைவாகவுள்ள பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு லேபிள்.

வளர்ச்சியில் குறைவு படுதல் பின்வரும் அநேக காரணங்களினால் ஏற்படலாம்:

  • உணவு உண்பதில் பிரச்சினை
  • நோய், வறுமை
  • போஷாக்கின்மை
  • பெற்றோர் மற்றும் பிள்ளைக்கிடையில் மோசமான பரஸ்பரத் தொடர்பு

காரணம் எதுவாக இருப்பினும், வளர்ச்சியில் குறைவுபடும் பிள்ளைகள் மெதுவான அல்லது தாமதமான வளர்ச்சிக்கான ஆபத்திலிருக்கிறார்கள்.

குள்ளமான தோற்றம்

“குள்ளமான தோற்றம்” என்பதும் ஒரு விவரிக்கும் லேபிள் ஆகும். இது வளர்ச்சியின் ஒழுங்கின்மையல்ல. அது, சம வயது மற்றும் அதே பாலினப் பிள்ளைகளைவிட உயரம் அல்லது உயரம் அதிகரிப்பதன் வேகம் குறைவாகவுள்ள பிள்ளைகளைக் குறிக்கிறது.

குள்ளமான தோற்றமும், வளர்ச்சியில் குறைவுபடுவதற்கு இருப்பதைப்போன்ற அதே காரணங்களைக் கொண்டிருக்கலாம். மிகப் பொதுவாக, இது பரம்பரையுடன் தொடர்புடையதாயிருக்கிறது; நோயுடனல்ல. சில பிள்ளைகள் மிகவும் மெதுவாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட வயதில் வளர்ச்சியை நிறுத்துவார்கள். அதன்மூலம் அவர்கள் சாதாரண உயரத்தை எட்டுவார்கள். மற்றப் பிள்ளைகள் வெறுமனே ஒரு பெற்றோரின் இறுதி உயரத்தை மரபு வழியாகப் பெற்றுக்கொள்வார்கள்.

குள்ளமான தோற்றமுள்ள பிள்ளைகள் நீங்கள் விரும்புவதைப்போல அதிக அளவு உணவை உண்ணமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஒரு துரித வளர்ச்சி நிலையை அடையும்வரை அது அவர்களுக்குத் தேவைப்படாது. அதிக உணவை உண்ணும்படி அவர்களைத் திணித்தால் அது அவர்களின் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆனால் உயரத்தையல்ல.

என்டோக்ரின் நோய்கள்

என்டோக்ரின் தொகுதி என்பது உடலின் இரசாயனத் தூதுவர் தொகுதி. இது உடல்முழுவதும் இயக்குநீரை அதாவது ஹோர்மோனைக் கொண்டு செல்கிறது. இயக்குநீர்கள், வளர்ச்சி உட்பட உடலின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க உதவி செய்கிறது. உட்சுரப்புத் தொகுதியில் சீர்குலைவு ஏற்படும்போது வளர்ச்சி தடைப்படலாம். உட்சுரப்புத் தொகுதியின் சீர்குலைவு பின்வருவனவற்றை உட்படுத்தும்:

வளர்சிக்கான இயக்கு நீரின் குறைபாடு: ஒரு பிள்ளைக்கு வளர்ச்சிக்கான இயக்குநீர் மிகவும் குறைவாக இருக்கும்போது அல்லது இல்லாமலே இருக்கும்போது இந்த அரிதான நோய் ஏற்படும். வளர்ச்சிக்கான இயக்குநீர், அடிமூளைச் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான இயக்குநீர், உடலிலுள்ள இரசாயன செயற்பாடுகளினால் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது, இல்லாவிட்டால் அல்லது போதியளவு இல்லாவிட்டால், வளர்ச்சி மந்தமாகும் அல்லது முற்றாகத் தடைப்பட்டுவிடும்.

தைரொயிட் சுரப்புக் குறைவு: இது, இரத்தத்தில் தைரொயிட் இயக்குநீரின் அளவு மிகக் குறைந்தளவில் இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலைமை. இந்த இயக்குநீர் போதியளவு இல்லாதிருக்கும்போது, குழந்தைகள் மந்தமான மூளை வளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். வளர்ந்த பிள்ளைகளுக்கு மந்தமான வளர்ச்சியும் மந்தமான வளர்சிதை மாற்றமும் இருக்கும்.

டேர்னர் சின்ட்ரம்

டேர்னரின் சின்ட்ரம் உள்ள பெண் பிள்ளைகளில் குள்ளமான தோற்றம் காணப்படுகிறது. ஒரு பெண் பிள்ளை X குரோமோசோம் இல்லாமல் அல்லது சிதைவடைந்த நிலையில் பிறக்கும்போது டேர்னரின் சின்ட்ரம் தோன்றுகிறது. டேர்னரின் சின்ட்ரம் உள்ள பெண் பிள்ளைகளின் சூலகங்கள் தகுந்த முறையில் வளர்ச்சியடையாததினால் அவர்களால் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. அவர்கள் வேறு உடல்ரீதியான அறிகுறிகளையும் காண்பிக்கலாம்.

வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

நீளம் அல்லது உயரத்தின் அளவுகள் சாதாரண வளர்ச்சி வேகத்தைவிட மந்தமாக இருப்பதைக் காட்டும்போது, ஒரு குழந்தை அல்லது பிள்ளையின் வளர்ச்சியில் பிரச்சினை இருப்பது அவதானிக்கப்படலாம்.

வளர்ச்சியில் பிரச்சினைகள் இருப்பதற்கான வேறு காரணங்கள்

பெரும்பாலும் ஆரோக்கியம் மற்றும் போஷாக்கின் குழப்பம் ஏற்படுவது எப்போதும் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான வேறு காரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • மூளை, இதயம், சிறுநீரகங்கள், அல்லது நுரையீரல் என்பனவற்றில் கடுமையான நிலைமைகள்
  • குடல் வீக்க நோய்
  • டவுண் சின்ட்ரோம் போன்ற குரோமோசோமின் அசாதாரண நிலை
  • குஷிங் சின்டிரம் (கோர்டிசொல் அளவுகள் அசாதாரணமாக அதிகமாக இருத்தல்)
  • அரிதான மரபியல் நோய்க்கூட்டறிகுறிகள்

உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் எப்படி உதவி செய்யலாம்

உங்கள் பிள்ளையின் வளர்ச்சியை ஒழுங்காகக் கண்காணிப்பதன் மூலம் உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவி செய்யலாம். தகுந்த வளர்ச்சி மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • பிறப்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று வயது வரை படுக்கை நிலை நீளம்
  • எழுந்து நிற்கக்கூடிய பிள்ளைகளின் எழுந்து நிற்கும்போதுள்ள உயரம்
  • எடை
  • இரண்டு வயதுவரை தலையின் சுற்றளவு

எடை மதிப்பீட்டை மாத்திரம் உபயோகிப்பது உதவியாயிருக்காது. இது ஏனென்றால், ஓரு உயரமான, மிகவும் மெலிந்த பிள்ளையை, பருமனான அல்லது நல்ல உடற்கட்டுள்ள பிள்ளையிலிருந்து வேறுபடுத்திக் காட்டாது.

வளர்ச்சியை நிறுத்திக்கொண்ட அல்லது மந்தமான வளர்ச்சியுள்ள பிள்ளைக்கு, காரணத்தைத் தீர்மானிப்பதற்காக, மேலதிக பரிசோதனைகள் தேவைப்படலாம். ‘வளர்ச்சியில் குறைவுபடுதல்’ எனும் நிலை பிள்ளைக்கு இல்லை என கண்டுபிடிக்கப்பட்டால், மருத்துவர் உங்கள் பிள்ளையை, நாளமில்லாச் சுரப்பு மருத்துவரிடம் (என்டோகிரினோலஜிஸ்ட்) பரிந்துரை செய்வார். இந்த மருத்துவ நிபுணர் வளர்ச்சிக் குறைப்பாடுக்குச் சாத்தியமாகக்கூடிய காரணங்களை ஆராய்வார். இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்-ரேக்கள், மற்றும் உடல் அல்லது மூளை ஸ்கான் என்பன வளர்ச்சிக் குறைப்பாடுக்குக்கான காரணங்களைத் தீர்மானிக்க உதவி செய்யலாம்.

சிகிச்சை

ஒரு குறிப்பிட்ட நோய் கண்டுபிடிக்கப்பட்டால், பிள்ளையின் இறுதியான உயரத்தை அதிகரிப்பதற்கான, குறிப்பிட்ட மருந்துத் தெரிவுகள் கிடைக்கலாம். தைரொயிட் சுரப்புக் குறைவு போன்ற என்டோக்ரின் ஒழுங்கின்மையினால் ஏற்படும் வளர்ச்சிப் பிரச்சினைகள், தையிரொயிட் மாற்றீடு மாத்திரைகளினால் சிகிச்சை செய்யப்படலாம். வளர்ச்சிக்கான இயக்குநீர்க் குறைபாடு அல்லது டெர்னர் சின்ட்ரம் உள்ள பிள்ளைகளுக்கு வளர்ச்சிக்கான இயக்குநீர் ஊசி மருந்து கொடுக்கப்படலாம்.

வளர்ச்சிப் பிரச்சினைகள் உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய நீங்கள் என்ன செய்யலாம்

பின்வரும் ஒவ்வொரு சமயங்களிலும் உங்கள் பிள்ளையின் எடை மற்றும் உயரத்தை அளவிடவும்:

  • பிறப்பிலிருந்து 1 முதல் 2 வாரங்கள்
  • 1, 2, 4, 6, 9, 12, 18, மற்றும் 24 மாதங்களில்
  • 4 மற்றும் 6 வயதுகளுக்கிடையில் வருடத்துக்கு ஒரு முறை

வளர்ந்த பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்கும் வருடத்துகொருமுறை அளவெடுக்கப்படவேண்டும்.

ஒரு பிள்ளையில் வளர்ச்சிக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டவுடன், இசைத் திறமை அல்லது வாசிப்பதில் பிரியம் போன்ற பிள்ளையின் வேறு சிறப்புப் பண்புகள் வலியுறுத்தப்படவேண்டியது முக்கியம். பெற்றோர்கள், தங்கள் பிள்ளையின் சுய-மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும். சுய-மதிப்புக்கான உணர்வு, ஆற்றல்கள் மற்றும் செயற்பாடுகளினால் மேம்பாடடையலாம். இந்தக் குள்ளமான தோற்றத்தைப்பற்றி விமரிசிக்கும் நண்பர்களுக்கு எப்படி மிகச் சிறந்த முறையில் பதில் செல்லலாம் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளையுடன் கலந்து பேசுவதும் முக்கியமானதாக இருக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளையின் மருத்துவரை ஒழுங்காகச் சந்திக்கவேண்டும். ஆயினும், கவலைகப்படும்படியான ஓரு அடையாளம் அல்லது அறிகுறியை நீங்கள் கண்டுபிடித்தால், உடனே மருத்துவரைச் சந்திக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • ஒரு பிள்ளையின் வளர்ச்சி ஒழுங்காகக் கண்காணிக்கப்படவேண்டும். இது வளர்ச்சிக்கான ஒரு அட்டவணை வரைபடம் மற்றும் பிள்ளையின் மருத்துவரின் உதவியுடன் செய்யப்படலாம்.
  • மோசமான உணவு நேரங்கள் அல்லது நோய் வளர்ச்சியை மந்தமாக்கலாம். ஆயினும் இது ஒரு வளர்ச்சிக்கான ஒழுங்கின்மையாக இல்லாதிருக்கலாம்.
  • வளர்சிக்கான ஒழுங்கின்மை பிறக்குபோதே இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் ஏற்படலாம். வளர்ச்சிக்கான ஒழுங்கின்மை மருந்தினால் சிகிச்சை செய்யப்படலாம் அல்லது சிகிச்சை செய்யப்பட முடியாமலுமிருக்கலாம்.
Last updated: 三月 05 2010