வாய்ப்புண்/கோல்ட் சோர் (அக்கி)

Cold sores (herpes simplex) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

வாய்ப்புண் என்றால் என்ன?

வாய்ப்புண் என்பது உதடுகளில் மற்றும் உதடுகளைச் சுற்றி உண்டாகும் சிறிய கொப்பளங்கள். கொப்பளங்கள் திரவத்தால் நிறைந்திருக்கும். வாய்ப்புண், காய்ச்சல் கொப்பளங்கள் என்றும் அழைக்கப்படும். வாய்ப்புண் ஒரு வைரசினால் உண்டாகும் ஒரு சாதாரண நிலைமை. வாய்ப்புண்களை குணமாக்கமுடியாது. உங்கள் பிள்ளை, அவற்றை குறைவான தடவைகள் மற்றும் மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதிக்கு கொண்டிருக்கத் தேவையான படிகளை எடுக்கலாம்.

பெரும்பாலான பிள்ளைகளுக்கு, இந்த வைரஸ் வாயைச் சுற்றி மாத்திரம் புண்களை உண்டாக்கும். புண்கள் வலியுள்ளவையாக இருக்கும்; ஆனால் மறைந்துவிடும். அவை அடிக்கடி திரும்பவும் வரும். இந்த வைரசினால் சில பிள்ளகள் மிகவும் நோயாளியாகிறார்கள். குறிப்பாக ஆபத்திலிருப்பவர்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் பிள்ளைகள், மற்றும் எக்ஸிமா உள்ள பிள்ளைகள் ஆவார்கள்.

வாய்ப்புண்ணுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

முதற் தொற்றுநோய்தான் பெரும்பாலும் மிகவும் மோசமானது. பிள்ளையின் முரசுகள், மேல்வாய், மற்றும் நாக்கு போன்றவை சிவப்பு நிறமாகவும் வீக்கமுள்ளதாகவும் மாறும். அவை கொப்பளங்களால் மூடப்படும். பிள்ளைக்கு பெரும்பாலும் அதிக காய்ச்சல் இருக்கும். அவன் மிகவும் எரிச்சலடைபவனாக இருப்பான். வலியின் காரணமாக உணவு உண்ண அல்லது பானம் அருந்த மறுத்துவிடலாம். வழக்கமாக அறிகுறிகள் 7 முதல் 14 நாட்களுக்கு நீடிக்கும். சில பிள்ளைகளுக்கு வலிக்கான மருந்துகள் தேவைப்படும். மிகவும் அரிதாக,வலி மற்றும் உடல் நீர் வறட்சிக்கான உதவி பெறுவதற்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தேவைப்படுத்தலாம்.

வைரஸ் நரம்பு உயிரணுக்களில் செயலற்றதாகிவிடலாம். அது திரும்பவும் வாய்ப்புண் வடிவில் பின்வருமாறு தொடங்கலாம்: உங்கள் பிள்ளையின் தோலில் கொப்பளங்கள் தோன்றுவதற்கு 4 முதல் 12 மணி நேரங்களுக்கு முன்பாக, நோய் தொற்றப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு கூச்ச உணர்வு ஏற்படும். அந்தப் பகுதியில், ஒரு கொப்பளம் அல்லது ஒரு சில சிறிய கொப்பளங்கள், சிவந்த மற்றும் வீங்கமடைந்த தோலால் சூழப்பட்டுக் காணப்படும். கொப்பளங்கள் அரிப்புள்ளதாக அல்லது வலியுள்ளதாக இருக்கும். அவை ஒரு சில நாட்களில் வெடித்துவிடும். தெளிவான திரவம் பின்பு ஒரு பொருக்கை உண்டாக்கும். ஒரு வாரத்துக்குள் புண், வடுவை உண்டாக்காமல், தானாகவே நிவாரணமடைந்துவிடும்.

பெரும்பாலும் கொப்பளங்கள் வாயைச் சுற்றி அல்லது உதடுகளில் காணப்படும். சிலவேளைகளில், தோலின் மற்றப் பாகங்கள், கண்கள், மற்றும் விரல்களிலும் காணப்படும்.

காரணங்கள்

ஹேர்ப்பிஸ் சிம்ப்லெக்ஸ் டைப் 1 என்றழைக்கப்படும் ஒரு வைரஸ் வாய்ப் புண்ணை உண்டாக்குகிறது. வேறொரு வகையான வைரஸ், ஹேர்ப்பிஸ் சிம்ப்லெக்ஸ் டைப் 2, பெரும்பாலும்இன உறுப்பு சார்ந்த ஹேர்ப்பிஸுக்குப் பொறுப்பாக இருக்கிறது. ஆனால் இதுவும் முகத்தில் புண்கள் உண்டாகவும் காரணமாக இருக்கிறது.

பிள்ளைகள் பெரும்பாலும், தொற்றுநோயுள்ள ஒருவரின் உமிழ்நீர் அல்லது திறந்திருக்கும் புண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைக்கும்போது அவர்களும் தொற்றுநோய்க்குள்ளாகிறார்கள். உங்கள் பிள்ளைக்கு ஒரு வாய்ப்புண் இருந்தால், குழந்தைகள், எக்ஸிமாவுள்ள பிள்ளைகள், அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்களுடனான நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும். ஆயினும், வெளிப்படையான வாய்ப்புண் இல்லாமல் வைரசைக் காவும் ஒருவர் மற்றவர்களுக்குத் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.

உங்கள் பிள்ளை தொற்றுநோய்க்காளானவுடன், வைரஸ் தோலின் நரம்பு உயிரணுக்களுக்குள் செயலற்ற நிலையில் அமர்ந்திருக்கும். அளவுக்கதிகமான களைப்பு, ஒரு பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதி, உதடுகளில் தோல் வெடிப்பு, காய்ச்சல், மாதவிலக்கு, மன உளைச்சல், அல்லது சூரிய வெளிச்சம் படுதல் என்பன ஒரு திடீர் கிளர்ச்சியைத் தூண்டலாம். அநேகமானவர்களுக்கு ஒரே வகையான தூண்டுதலினால் திரும்பத் திரும்ப வாய்ப்புண் உண்டாகிறது.

வாய்ப்புண்ணுக்குப் பரிகாரமே இல்லை. உங்கள் பிள்ளைக்கு வாழ்நாள் முழுவதுமே புண்கள் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இடைவெளிகள் வேறுபடலாம். சிலருக்கு மாதத்துக்கு ஒரு முறை போன்று மிகவும் அடிக்கடி வாய்ப்புண் வரலாம். சிலருக்கு மாத்திரம் வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் வரலாம்.

சிக்கல்கள்

பின்வரும் சிக்கல்கள் நிகழலாம் ஆனாலும் மிக அரிதாக நிகழும்:

  • உடல் நீர் வறட்சி மற்றும் கடுமையான வலி
  • கண் தொற்று நோய்கள்
  • பெரும்பாலும் எக்ஸிமா போன்ற தோல் வியாதியுள்ளவர்களுக்கு, கடுமையான தோல் தொற்று நோய்கள்,

மிகவும் பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு அல்லது பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதியுள்ளவர்களுக்கு, மூளை அல்லது ஈரல் போன்ற வேறு உறுப்புகளிலும் தொற்றுநோய் உண்டாகலாம். இவை கடுமையான நோய் அல்லது மரணத்தை ஏற்படுத்தலாம்.

வாய்ப்புண்ணுக்கு உங்கள் மருத்துவர் என்ன செய்யலாம்

வலி நிவாரண மருந்துகள் எழுதிக் கொடுக்கப்படலாம். தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அன்டி-வைரல் மருந்துகள் உதவி செய்யக்கூடும். பொதுவாக, வாய்ப்புண்கள் சிகிச்சையளிக்கப்படாமலே 3 முதல் 7 நாட்களுக்குள் நிவாரணமடைந்துவிடும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் தோலின் மேல் தேய்க்கும் ஒரு சிகிச்சையை மருந்துக்குறிப்பெழுதிக் கொடுக்கக்கூடும். ஆனால், தொற்று நோயின் முதல் அறிகுறியிலேயே இந்த மருந்து தேய்க்கப்பட்டிருந்தால் மாத்திரம் அது பலனளிக்கும்.

நோயைத் தடுத்தல்

வாய்ப்புண்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, உடலின் மற்றப் பாகங்களுக்கு அவை பரவாதிருக்க, அல்லது இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, உங்கள் பிள்ளை பின்வரும் படிகளை எடுக்கலாம்:

  • கொப்பளங்கள் இருக்கும்போது முத்தம் கொடுப்பது மற்றும் மற்றவர்களுடனான தோல் தொடர்பு என்பனவற்றைத் தவிர்க்கவும்.
  • வைரசைப் பரப்பக்கூடிய, உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் லிப் பாம் என்பனவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
  • கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்.
  • உடலின் மற்றப் பாகங்கள், விசேஷமாகக் கண்கள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளைத் தொடுவதில் கவனமாக இருக்கவும்.
  • அளவுக்கு மீறிய மன உளைச்சல், தடிமல் அல்லது காய்ச்சலை வருவித்தல், போதியளவு நித்திரையின்மை, மற்றும் சூரிய வெளிச்சம் அளவுக்கதிகமாகப் படுதல் போன்ற நோய்த் தூண்டிகளைத் தவிர்க்கவும்.
  • சன்புளொக் பூச்சு உபயோகிக்கவும்.

எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்

பின்வருவனவற்றுள் எதையாவது நீங்கள் அவதானித்தால் ஒரு மருத்துவரைப் பார்க்கவும்:

  • கண்ணில் அல்லது கண்ணைச் சுற்றி கொப்பளங்கள் அல்லது வலி
  • உச்சநிலையில் காய்ச்சல்
  • குழப்பம் அல்லது நடவடிக்கைகளில் மாற்றம்
  • உங்கள் பிள்ளை மிகவும் சுகவீனமுற்றிருப்பதைப் போல தோன்றினால் அல்லது நன்கு பானங்கள் பருகாமல் இருந்தால்
  • குழந்தை அல்லது பிள்ளைக்கு ஒரு பலவீனமான நோய் எதிர்ப்புத் தொகுதியிருக்கும்போது உடலில் எங்காவது கொப்பளங்கள் தோன்றினால்

முக்கிய குறிப்புகள்

  • வாய்ப்புண்கள் மிகவும் சாதாரணமானவை மற்றும் தொற்றக்கூடியவை
  • வாய்ப்புண்களுக்கு பரிகாரமே இல்லை. அவை தடுக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம்.
  • முதற் சம்பவம் பெரும்பாலும் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
  • உங்கள் பிள்ளைக்கு, ஒரு அன்டிவைரல் மருந்து அல்லது அவனது தோலின்மேல் தடவுவதற்கு பூசு மருந்து தேவைப்படலாம்
Last updated: 3月 05 2010