ஹோல்ற்றர் மொனிற்றர் கருவிகள்

Holter monitors [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஹோல்ற்றர் மொனிற்றர் கருவி என்பது உங்கள் பிள்ளையின் இதயத்துடிப்பை 24 மணி நேர காலப்பகுதிக்கு பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும்.

ஹோல்ற்றர் மொனிற்றர் கருவி என்றால் என்ன?

ஒரு ஹோல்ற்றர் மொனிற்றர் கருவி என்பது உங்கள் பிள்ளையின் இதயத்துடிப்பைப் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது உங்கள் பிள்ளையின் இதயத்தின் மின்சார நடவடிக்கைகளை பதிவு செய்யும், மின்முறை இதயத்துடிப்பு பதி கருவி (ECG) போன்ற ஒரு கருவியாகும். ஒரு ஹோல்ற்றர் மொனிற்றர் கருவி இந்த வேலையை 24 முதல் 48 மணி நேரங்கள் (1 அல்லது 2 நாட்கள்) வரை செய்யும். உங்கள் பிள்ளைக்கு அறிகுறிகள் தோன்றும்போது நீங்கள் அழுத்தக்கூடியதாக அதில் ஒரு நிகழ்வு பொத்தான் இருக்கிறது.

ஹோல்ற்றர் மொனிற்றரைப் பொருத்துதல்

முதலில் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் உங்கள் பிள்ளையின் மர்பை அற்ககோலால் சுத்தம் செய்வார். இது, பதிவு செய்யப்படுவது தெளிவாக இருப்பதை உறுதி செய்ய உதவும். பின்பு தொழில்நுட்ப வல்லுனர் உங்கள் பிள்ளையின் மார்பில் மின்வாய்கள் எனப்படும் 5 ஒட்டும் தாள்களை ஒட்டுவார். மின்வாய்கள் மின்கம்பிகளால் மொனிற்றர் கருவியுடன் இணைக்கப்படும்.

தொழில்நுட்ப வல்லுனர் மின்வாய்கள் விழுந்து போகாதபடி அவற்றை வார்ப்பட்டையினால் மூடிவிடுவார். உங்கள் பிள்ளை மொனிற்றர் கருவியை சட்டைப் பையில் அல்லது ஒரு வார்ப்பட்டையில் கொண்டு செல்லுவான். வார்ப்பட்டை தோளுக்கு மேலாக அல்லது இடையைச் சுற்றி இருக்கும்.

ஹோல்டர் மொனிட்டர்உடுப்பின் கீழ் கண்காணிப்புக்கருவி மற்றும் மின்வாய்கள் பொருத்தப்பட்ட பிள்ளை scooterஇல்
ஹோல்டர் மொனிட்டர் என்பது, 24 மணி நேரங்களுக்கு உங்கள்  பிள்ளையின் இதயத் துடிப்பை பதிவு செய்யும் கருவி.  குளிப்பு, முழுகுதல் அல்லது நீச்சல் போன்றவை தவிர மற்ற எல்லா தினசரி நடவடிக்கைகளையும் பிள்ளைகள் தொடரவேண்டும். உடலை இயக்க வைக்கும் செயற்பாடுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன.

உங்கள் பிள்ளை ஹோல்ற்றர் மொனிற்றரை அணிந்திருக்கும்போது

உங்கள் பிள்ளை மொனிற்றர் கருவியை அணிந்திருக்கும்போது, அவன் வழக்கமாகச் செய்யும் செயல்களில் ஈடுபடவேண்டும். உங்கள் பிள்ளைக்கு முடியுமானால், ஓடுதல் அல்லது போட்டி விளையாட்டுகள் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். உங்கள் பிள்ளை மொனிற்றர் கருவியை அணிந்திருக்கும்போது ஷவர் குளியல், நீச்சல், அல்லது குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாட்குறிப்பேடு வைத்திருத்தல்

உங்களுக்கு ஒரு நாட்குறிப்பேடு கொடுக்கப்படும். உங்கள் பிள்ளை நாள் முழுவதும் என்ன செய்கிறான் என்பதை எழுதுவதற்கு அதை உபயோகியுங்கள். மொனிற்றர் கருவியிலிருக்கும் நிகழ்வு பொத்தானை உபயோகித்தால் அதற்கான காரணத்தையும் அதில் எழுதுங்கள்.

நிகழ்வு பொத்தானை உபயோகித்தல்

மொனிற்றர் கருவியிலுள்ள நிகழ்வு பொத்தான் பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிட உபயோகிக்கப்படுகிறது:

  • மார்பு வலி
  • தலை சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வு
  • அதிகமாக மூச்சு வாங்குதல்
  • விரைவான அல்லது அசாதாரண இதயத்துடிப்பு (படபடப்பு)
  • இதய நோய் மருந்துகளை உட்கொள்ளுதல்

பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்று சம்பவித்தால்:

  1. மொனிற்றர் கருவியிலுள்ள நிகழ்வு பொத்தானை அழுத்தவும்.
  2. நேரத்தை சரி பார்க்கவும்.
  3. என்ன சம்பவித்தது என்பதை நாட்குறிப்பேட்டில் எழுதவும்.

நிகழ்வு பொத்தான் நிகழ்வு நேரத்தைப் பதிவேட்டில் பதிவு செய்யும். பின்னர் நாம் அதைப் பார்க்கும்போது , எப்போது உங்கள் பிள்ளை மருந்து உட்கொண்டான் அல்லது அறிகுறிகளை கொண்டிருந்தான் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

உங்கள் பிள்ளை அறிகுறிகளைக் கொண்டிருந்தால்

அறிகுறிகளைக் கையாளுவதற்கு உங்கள் மருத்தவரின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். தேவைப்பட்டால், மருத்துவரை அழையுங்கள் அல்லது உங்கள் பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

  • ஒட்டும் தாள் சரியான இடத்தில் உறுதியாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக அதை அவ்வப்போத் சரி பாருங்கள். தளர்வாயிருந்தால், ஓரங்களில் அழுத்திவிடுங்கள்.
  • உங்கள் பிள்ளை என்ன செய்தான் என்பதையும், அவனுக்கு இருக்கும் ஏதாவது அறிகுறிகளையும் நாட்குறிப்பேட்டில் எழுதி வைக்கவும்.
  • உங்கள் பிள்ளை இதய நோய் மருந்து உட்கொள்ளும்போது அல்லது அவனுக்கு அறிகுறிகள் தோன்றும்போது நிகழ்வு பொத்தானை அழுத்தவும்.
  • உங்கள் பிள்ளை போட்டி விளையாட்டுகளில் ஈடுபடும்போது மொனிற்றர் கருவியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • மொனிற்றர் கருவி ஈரமாவதைத் தவிருங்கள்.

மொனிற்றர் கருவியை 7 நாட்களுக்குள் கொண்டுவரவேண்டும்

பதிவு செய்யும் காலம் முடிவடைந்தவுடன் ஒட்டும்தாள் மற்றும் வார்ப்பட்டையை நீங்கள் எடுத்து விடலாம். ஒட்டும்தாள் மற்றும் வார்ப்பட்டையை நீங்கள் குப்பையில் எறிந்து விடலாம். எல்லா மின்கம்பிகளும் மொனிற்றர் கருவியுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மொனிற்றர் கருவியிலிருந்து மின்கலங்களை வெளியே எடுக்கவேண்டாம்.

7 நாட்களுக்குள் நீங்கள் மொனிற்றர் கருவியையும் நாட்குறிப்பேட்டையும் கொண்டுவரவேண்டும். உங்கள் பிள்ளைக்கு மொனிற்றர் கருவி போடப்பட்டவுடன் எப்படி மற்றும் எப்போது அதைக் கொண்டுவரவேண்டும் அல்லது திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது பற்றி உங்களுடன் சேர்ந்து நாங்கள் திட்டம் போடுவோம். மொனிற்றர் கருவிகள் விலை உயர்ந்தவை மற்றும் மற்ற நோயாளிகளுக்குக் கொடுப்பதற்காக அவை எங்களுக்குத் தேவைப்படும். ஆகவே, தயவுசெய்து உங்கள் மொனிற்றர் கருவியைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

மொனிற்றர் கருவி மற்றும் நாட்குறிப்பேட்டை எப்போது திரும்பவும் கொண்டுவரவேண்டும் என்பதை கீழே எழுதவும்:

அவற்றை எங்கே கொண்டுவர வேண்டும் அல்லது எப்படித் திரும்பி அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதை கீழே எழுதவும்:

ஹோல்ற்றர் சோதனையின் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல்

உங்கள் பிள்ளையின் இருதய நோய் மருத்துவர் (இருதய நோய் நிபுணர்) அவனின் ஹோல்ற்றர் சோதனை முடிவுகளை தெரியப்படுத்துவார். சோதனை பற்றிய உங்கள் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிப்பார்கள்.

முக்கிய குறிப்புகள்

  • ஹோல்ற்றர் மொனிற்றர் கருவி என்பது உங்கள் பிள்ளையின் இதயத்துடிப்பை 24 அல்லது 48 மணி நேரங்களுக்கு (1 அல்லது 2 நாட்கள்) பதிவு செய்யக்கூடிய ஒரு சிறிய கருவியாகும்.
  • உங்கள் பிள்ளை மொனிற்றர் கருவியை அணிந்திருக்கும்போது , அவன் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யவேண்டும். அவன் நீச்சல், குளித்தல், ஷவர் குளியல் என்பனவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் பிள்ளை மொனிற்றர் கருவியை அணிந்திருக்கும்போது நோய் அறிகுறிகள் தோன்றினால் அல்லது மருந்து உட்கொண்டால், நிகழ்வு பொத்தானை அழுத்தவும் மற்றும் நாட்குறிப்பேட்டில் பதிவுகளை எழுதவும்.
  • 7 நாட்களுக்குள் மொனிற்றர் கருவி மற்றும் நாட்குறிப்பேட்டைக் கொண்டுவரவும் அல்லது அனுப்பி வைக்கவும்.
Last updated: 3月 05 2010