கூகைக்கட்டு நோய்

Mumps [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

கூகைக்கட்டு நோய் என்பது வைரஸ் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பி தொற்று நோயாகும். தாடையைச் சுற்றி வலி, காய்ச்சல் மற்றும் வீக்கம் ஆகியன பொதுவானவை. பிள்ளைகள் கூகைக்கட்டு நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

கூகைக்கட்டு நோய் என்பது என்ன?

கூகைக்கட்டு நோய்என்பது, பரமைக்ஸோவைரஸ் என்ற வைரஸினால் உண்டாகும், கடுமையான நோயாகும். இது உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகளை வீக்கமடையச் செய்யும். இவை ஒவ்வொரு காதின் கீழ், முன் பக்கமாகவும் கீழ்த் தாடையின் ஓரமாகவும் அமைந்துள்ளன.

தொற்றிக்கொள்ளும் தன்மை

கூகைக்கட்டு நோயானது, இருமும்போது, தும்மும்போது, அல்லது வெறுமனே பேசிக்கொண்டிருக்கும்போது, காற்று மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவும். உங்கள் பிள்ளை, தொற்றுநோய்த்துளிகளுள்ள இடத்தை தொட்டபின், தன் கண்கள், வாய், அல்லது முகத்தை தொடும்போது அவளுக்கு வைரஸ் தொற்றிக்கொள்ளலாம்.

உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகள் வீங்கத் தொடங்குவதற்கு 1 முதல் 2 நாட்கள் தொடங்கி, வீங்கியபின்னர் 5 நாட்கள் வரையாக கூகைக்கட்டு நோய் மிகவும் தொற்றக்கூடியதாக இருக்கும். விசேஷமாக, குழந்தைகளிடமிருந்தும் முழுமையாக நோய் எதிர்ப்புத்திறனளிக்கப்படாத சிறிய பிள்ளைகளிடமிருந்தும், உங்கள் பிள்ளையை தனிமைப்படுத்தி வைக்கவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளையில் , நோய் பரப்பும் தன்மை முற்றாக அற்றுப்போகும்வரை நீங்கள் இதைச் செய்யவேண்டியிருக்கலாம்.

நோய்தடுப்பு செய்தல் திட்டத்தின் பலனாக, வளர்ச்சியடைந்த நாடுகளில், பிள்ளைப் பருவத்தில் கூகைக்கட்டு நோய் வருவது அசாதாரணம். பெரும்பாலும், சின்னமுத்து-கூகைகட்டு-ரூபெல்லா ஜெர்மானிய மணல்வாரி (MMR) நோய்களுக்கான தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு இந்நோய் வரலாம். இரண்டாவது செயலூக்கி (பூஸ்டர்) MMR போடப்படாத, 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் கூகைக்கட்டு நோய் வருவது மிகவும் சாதாரணம்.

கூகைக்கட்டு நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும்

கூகைக்கட்டு நோயுள்ள 5 பிள்ளைகளில் ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. 3 பிள்ளைகளில் ஒருவருக்கு வீக்கம் இருப்பதில்லை. நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள் சில:

  • வயிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளுள் ஒன்று அல்லது பலவற்றில் வீக்கம்
  • காதின் முன்பக்க மற்றும் தாடையின் ஓரத்தில் குறுக்காகச் செல்லும் கன்ன உமிழ்நீர்ச் சுரப்பிகளில் ஒன்று அல்லது இரண்டிலும் வீக்கம்.
  • இருமல் அல்லது காய்ச்சல் போன்ற சுவாசத்துக்குரிய அறிகுறிகள்
  • தலைவலி, உடல் சோர்வு, மற்றும் இலேசான காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தகாத அறிகுறிகள்

3 பிள்ளைகளில் ஒருவருக்கு வீக்கமில்லாமல் இருக்கலாம், ஆனால் சுவாச உறுப்புப் பாதையில் தொற்று இருக்கலாம். கூகைக்கட்டு நோயை ஒரு மருத்துவரின் பரிசோதனைதான் தீர்மானிக்கமுடியும்.

கூகைக்கட்டு நோயின் அறிகுறிகள்

கூகைக்கட்டு நோய் பிள்ளைகளில் மிகவும் கடுமையற்றதாக இருக்கும். பெரியவர்களுக்கு மிகவும் கடுமையானதாக மற்றும் மிகவும் சிக்கலானத்தாக இருக்கும், ஆனால் பிள்ளைகள் தேவையற்ற விளைவுகளை அனுபவிக்கலாம்.

  • ஒரு சிக்கல் விரை வீக்கம் (விரையழற்சி) ஆகும். இது வலி, விரையில் வீக்கம், தொடும்போது வலி, குமட்டல், வாந்தி, மற்றும் காய்ச்சல் போன்றவற்றை உள்ளடக்கும். இந்த வலி பல வாரங்களுக்கு நீடிக்கலாம். பருவ வயதையடைந்த பின் விரையழற்சிநோய் மிகவும் சாதரணமானது.
  • சில பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூட்டுக்கள், தொண்டையிலுள்ள கேடயச் சுரப்பிகள் , மார்பு(கள்) , அல்லது சிறு நீரகம் என்பனவற்றில் வீக்கம் உண்டாகலாம். இது அபூர்வமானது.
  • கூகைக்கட்டு நோய், முதுகுத் தண்டு-மூளை வீக்கம் உட்பட, நடு நரம்புத்தொகுதியில் பாதிப்பைஉண்டாக்கலாம் மற்றும் இயங்குவதில் பிரச்சினை(செரிபெல்லர் அட்டக்ஸியா) அல்லது, ஒரு அல்லது இரு காதுகளிலும் செவிட்டுத்தன்மை என்பவற்றையும் ஏற்படுத்தலாம். கூகைக்கட்டு நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, செவிட்டுத் தன்மைதான் பெரும்பாலும் ஏற்படக்கூடிய சிக்கலாகும்.

கூகைக்கட்டு நோய்க்கான அபாயகரமான காரணிகள்

நோய்தடுப்புக்காக MMR தடுப்பூசி போடப்படாத பிள்ளைகளுக்கு, கூகைக்கட்டு நோய் பாதிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

கூகைக்கட்டு நோயுள்ள பிள்ளைக்கு உங்கள் மருத்துவர் செய்யக் கூடியதென்ன

உங்கள் பிள்ளையை மருத்துவர், உடற் பரிசோதனை செய்வதன் மூலம், கூகைக்கட்டு நோய் இருப்பதைக் கண்டுபிடிப்பார். மருத்துவர் இரத்தப் பரிசோதனை செய்யும்படி அல்லது மூக்கு அல்லது தொண்டையில் வைரஸ் தொண்டை ஒற்றிப் பரிசோதன செய்யும்படியும் கட்டளையிடலாம்.

கூகைக்கட்டு நோயுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

கூகைக்கட்டு நோய்க்கு எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையுமில்லை. உங்கள் பிள்ளையை சௌகரியமாக வைப்பதன்மூலம் அவளை ஆதரிக்கலாம்.

காய்ச்சலைக் கண்காணித்து சிகிச்சை செய்தல்

காய்ச்சலுக்காக, அல்லதுவலிக்காக , அசெட்டமினோஃபின் (டைலெனோல்,டெம்ப்ரா, அல்லது மற்ற பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின், அட்வில்அல்லது மற்ற பிரான்டுகள்) கொடுக்கப்படலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெடில் சாலிசிக் அசிட் அல்லது அஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்

நீராகாரங்கள்

உடல்நீரேற்றத்தைப் பராமரிப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு தண்ணீர் அல்லது வேறு நீராகாரங்களைக் அடிக்கடி கொடுக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு படுக்கை ஓய்வு கொடுங்கள் மற்றும் தனிமைப்படுத்தி வையுங்கள்

உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகளை வீக்கமடைந்த பின்,5 நாட்களுக்கு, உங்கள் பிள்ளை பாடசாலைக்கோ அல்லது பகல் நேரப் பராமரிப்பு நிலையத்துக்கோ செல்லமுடியாது. . உங்கள் பிள்ளைக்குக் கூகைக்கட்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி பொதுசன உடல்நல பிரிவிற்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் உங்களோடு தொடர்பு கொள்வார்கள் .

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்திருக்கிறது.
  • உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வீக்கம் 7 நாட்களுக்குமேல் தொடர்ந்திருக்கிறது; பெரும்பாலானவர்களுக்கு ஒரு பக்கக் கன்னம் வீங்கி சில நாட்களின்பின் மறு கன்னமும் வீங்கும்.
  • வீக்கத்தில் வலி அதிகரித்துக் கொண்டே போகும்.

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள், அல்லது தேவைப்பட்டால், 911 ஐ அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளையின் நடத்தை அல்லது உடல் திறமையில் மாற்றம், அல்லது வலிப்பு.
  • உங்கள் பிள்ளையின் வலியை, அசெட்டமினோஃபின் அல்லது ஐபியூபுரோஃபென் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை
  • வீக்கம் கடுமையாக வலிக்கிறது.

கூகைக்கட்டு நோயைத் தடுத்தல்

உங்கள் பிள்ளை நோய்த்தடுப்பாற்றலைப் பெற்றுக்கொள்வதற்காக, சின்னம்மை-கூகைக்கட்டு-ஜெர்மானிய மணல்வாரி நோய் (MMR)ஆகியவற்றுக்கான நோய்த்தடுப்பூசியில் 2 டோசுகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு சாத்தியமாகக்கூடிய 2 கால அட்டவணைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • 12 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள், அல்லது
  • 15 மாதங்கள் மற்றும் 4 முதல் 6 மாதங்கள்

முக்கிய குறிப்புகள்

  • கூகைக்கட்டு நோய் என்பது குறிப்பிட்ட ஒருசிகிச்சை இல்லாத ஒரு வைரஸ் ஆகும்.
  • கூகைக்கட்டு நோய் விரைவாகத் தொற்றக்கூடிய ஒரு நோய். எனவே உங்கள் பிள்ளையைத் தனிமைப்படுத்த வேண்டும்
  • உமிழ்நீர் சுரக்கும் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பிகள் வீக்கமடைதல், சுவாசித்தலில் ஏற்படும் அறிகுறிகள் ஆகியவவை இந்த நோயின் அடையாளங்கள், அல்லது இந்த அறிகுறிகள் ஏதுமில்லாதிருக்கலாம்.
  • நோய்த்தடுப்பாற்றல் கொடுப்பதன் மூலம் கூகைக்கட்டு நோயைத் தடுக்கலாம்
​​​
Last updated: 3月 05 2010