அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்கிறீர்கள். வீட்டில் பெரும்பாலும் முதல் சில நாட்களுக்கு உங்கள் பிள்ளைக்கு வலி இருக்கலாம். உங்கள் பிள்ளையின் வலி பற்றிய சில தகவல்களை இந்த சிற்றேடு உங்களுக்குக் கொடுக்கும். உங்கள் பிள்ளை வலியிலிருக்கும்போது அவனை எப்படிப் பராமரிக்கலாம் எனவும் இந்தச் சிற்றேடு உங்களுக்குத் தெரிவிக்கும்.
முக்கியமான தகவல்களைக் கீழே எழுதவும்
உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிலையம்:
தொலைபேசி எண்:
தொடர்பு கொள்ளவேண்டிய நபர்:
உங்கள் பிள்ளையின் வலியைப் பற்றி நீங்கள் எதைத் தெரிந்திருக்கவேண்டும்
பெரும்பாலான பிள்ளைகளுக்கு அறுவைச்சிகிச்சைக்குப்பின்னர் சிறிதளவு வலியாவது இருக்கும். இது அறுவைச்சிகிச்சைக்குப் பிந்திய-வலி என அழைக்கப்படும். உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு வலி இருக்கும், மற்றும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது, உங்கள் பிள்ளை மற்றும் அவனுக்குச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் வகையைப் பொறுத்திருக்கும். உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய-வலி பற்றி நீங்கள் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய சில காரியங்கள் பின்வருமாறு:
- பெரும்பாலும் உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் வலி இருக்கும்
- எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியான வலியை உணரமாட்டார்கள்.
- அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய நாட்களில், வலி குறைந்துகொண்டே போகவேண்டும், மோசமாக அல்ல.
- வலி நிவாரண மருந்துகள் உங்கள் பிள்ளையின் வலியைக் குறைக்க உதவலாம்.
- உங்கள் பிள்ளையைத் தேற்றுவது அவனை ஆசுவாசப்படுத்தும் மற்றும் வலியைக் குறைக்கும்.
- உங்கள் பிள்ளையின் கவனத்தைச் சிதறவைப்பதும் வலியைக் குறைக்க உதவும்.
- தேற்றுவதும் கவனச்சிதறலும் உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுப்பதைப்போல முக்கியமானது.
உங்கள் பிள்ளை வலியில் இருப்பதை அறிந்துகொள்ளுதல்
சிலவேளைகளில் உங்கள் பிள்ளை வலியைப் பற்றிச் சொல்லுவான். அவன் வலி, நோவு, பூ..பூ, புண் அல்லது அவுச்சி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பான். உங்கள் பிள்ளை வலியுள்ள பகுதியை சுட்டிக் காட்டுவான், அல்லது அந்த இடத்தை பேணிப்பாதுகாப்பான். உங்கள் பிள்ளை வலி இருக்கிறது என முறையிடாவிட்டால், அவனுக்கு எவ்வளவு வலி உள்ளது என அவனிடம் கேட்கவும்.உங்கள் பிள்ளை பெரியவனானால், மருத்துவமனையிலிருக்கும் தாதி உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக 0 முதல் 10 வரையுள்ள வலி அளவுகோலை உபயோகித்திருக்கலாம். நீங்களும் அதையே செய்யலாம். 0 முதல் 10 வரையிலுள்ள அளவுகோலினால் உங்கள் பிள்ளையின் வலியையும் அளவிடுமாறு அவனைக் கேட்கவும். 0 என்பது வலியில்லை, மற்றும் 10 என்பது மிகவும் மோசமான வலியாகும். 0 முதல் 3 வரை மிகவும் வீரியம் குறந்த வலியாகும், 4 முதல் 6 வரை நடுத்தர அளவு வலி, 7க்கு அதிகமானது வீரியமான வலியாகும்.
மருத்துவமனையிலுள்ள தாதிகளும் கூட உங்கள் பிள்ளைக்கு சிறிதளவு வலி இருக்கிறதா அல்லது அதிகளவு வலி இருக்கிறதா என்று கேட்டு, ஒரு வலி அளவுகோலை உபயோகித்திருக்கக்கூடும்
சில பிள்ளைகள் அவர்களது வலியைப் பற்றிப் பேசமாட்டார்கள்
உங்கள் பிள்ளைக்கு வலியைப் பற்றிப் பேசவோ அல்லது அதைப்பற்றி உங்களிடம் சொல்லவோ முடியாமலிருக்கலாம். உங்கள் பிள்ளையைக் கவனமாக கவனித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பாருங்கள். பெரும்பாலும், தங்களுடைய பிள்ளைக்கு வலி இருக்கிறதா என்பது பெற்றோர்களுக்குத் தெரியும்.
உங்கள் பிள்ளைக்கு வலி இருக்கிறதா என்பதை அறிய எதை எதிர்பார்க்க வேண்டும்
உங்கள் பிள்ளை முகத்தைச் சுளிக்கிறனா, அல்லது தனது காலால் உதைக்கிறானா என்பதை அவதானியுங்கள். அவன் தன் பற்களைக் கடிக்கிறானா? உங்கள் பிள்ளை தன் கால்களைத் தனது வயறுவரை இழுக்கிறானா? உங்கள் பிள்ளை வழக்கத்துக்கு மாறாக முனகுகினால், அல்லது அழுதால், அல்லது இருக்கமாக இருந்தால் அவனுக்கு வலி இருக்கலாம்.
உங்கள் பிள்ளையின் வலிக்கு வீட்டில் நிவாரணமளித்தல்
நீங்கள் உங்கள் பிள்ளையுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், உங்கள் பிள்ளைக்கு வலி ஏற்படும்போது நீங்கள் எப்படி உதவிசெய்யலாம் என்பது பற்றி மருத்துவர், அல்லது முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது தாதி உங்களுக்குச் சொல்லுவார்.
பொதுவாக, உங்கள் பிள்ளை வீடு திரும்பிய நாளில் வலி இருந்தால், நீங்கள் அவனுக்கு அந்த நாள் முழுவதும், தேவைப்பட்டால் அடுத்த சில நாட்களுக்கும் ஒழுங்காக வலி நிவாரண மருந்து கொடுக்கலாம்.
உங்கள் பிள்ளை வீடு திரும்பிய முதற் சில நாட்களுக்கு வலி நிவாரண மருந்தை ஒழுங்காகக் கொடுப்பது அவனது வலியைக் குறைக்க உதவலாம்.
வலி நிவாரண மருந்தைக் கொடுக்கத் தாமதிக்கவேண்டாம்
உங்கள் பிள்ளைக்கு அதிகளவு வலி உண்டாகும்வரை காத்திருக்காது அவனுக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கும்போது அது சிறப்பாக வேலை செய்யும். நீங்கள் தாமதித்தால் வலி, நிவாரணமடைய அதிக நேரம் எடுக்கும்.
முதற் சில நாட்களின் பின்னர், உங்கள் பிள்ளைக்கு வலி குறையும்போது, அவனுக்குத் தேவைப்பட்டால் மாத்திரம் மருந்து கொடுக்கவும். உங்கள் பிள்ளை வலிக்கிறது என்று சொல்லும்போது அவனுக்கு மருந்து தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவன் நடந்துகொள்ளும் விதமும் அவனுக்கு வலி இருக்கிறதா என சொல்லும்.
அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா)
ஓரே மருந்துக்கு 3 வித்தியாசமான பெயர்கள் உள்ளன. உங்கள் பிள்ளைக்கு வீரியம் குறைந்த வலி இருந்தால், ஒவ்வொரு 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை நீங்கள் அசெட்டமினோஃபென் மருந்தைக் கொடுக்கலாம்.
உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவு, அவனது வயது மற்றும் எடையில் தங்கியுள்ளது. உங்கள் பிள்ளையின் வயது மற்றும் எடைக்குச் சரியான மருந்தின் அளவு, அல்லது வேளை மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக மருந்துப் போத்தலின் பக்கத்தில் அல்லது பெட்டியின் எழுத்தப்பட்டிருக்கும் வழிகாட்டுதலை வாசித்துப் பார்க்கவும்.
அசெட்டமினோஃபென் மருந்து உங்கள் பிள்ளைக்குப் பாதுகாப்பானது. பெட்டி அல்லது போத்தலில் விபரிக்கப்பட்டபடி, உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தைக் கொடுக்கும்போது எந்தப் பெரும் பக்க விளைவுகளும் இருக்காது. பக்க விளைவுகள் என்பது மருந்துகள் தாமே ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஆகும்.
ஒபிஓயிட்டுகள்: கோடெய்ன், மோர்ஃபைன், ஒக்ஸிகோடொன்
இவை ஒபிஓயிட்டுகள் என்றழைக்கப்படும் வித்தியாசமான வகையான மருந்துகளாகும். வீட்டில், உங்கள் பிள்ளைக்கு நடுத்தர அளவிலான வலி இருந்தால், அவனுக்கு ஒரு ஒபிஓயிட் கொடுக்கலாம். ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரங்களுக்கு ஒரு தடவை கோடெய்ன் கொடுக்கலாம். 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மோர்ஃபைனும், தேவைப்பட்டால் 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை ஒக்ஸிகோடொனும் கொடுக்கலாம்.
உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவு அவனது எடையில் அளவைப் பொறுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டிய சரியான மருந்தின் அளவைக் கண்டுபிடிப்பதற்காக மருந்துப் போத்தலின் பக்கத்தில் அல்லது பெட்டியின் எழுத்தப்பட்டிருக்கும் வழிகாட்டுதலை வாசித்துப் பார்க்கவும். உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் சரியான அளவை அவனின் மருத்துவர், அல்லது முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது தாதியிடமும் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதற் சில நாட்களுக்கு உங்கள் பிள்ளைக்கு கொடுப்பதற்கு ஒபிஓயிட் பாதுகாப்பான மருந்தாகும்.
உங்கள் பிள்ளை விழித்து எழும்புவதற்கு இலகுவாக இருக்கவேண்டும்
உங்கள் பிள்ளை ஒரு ஒபிஓயிட் உட்கொண்டிருந்தால் அது அவனை நித்திரை செய்யவைக்கும். ஆனால் அது அவனை விழுத்து எழுப்புவதற்கு இலகுவாக்கவேண்டும். உங்கள் பிள்ளையை விழித்து எழுப்புவதில் உங்களுக்குக் கஷ்டம் இருந்தால், உங்கள் மருத்துவரை அழைக்கவும் அல்லது உடனே அவசரச் சிகிச்சைப்பிரிவுக்குப் போகவும்.
கழிப்பறைக்குப் போதல்
உங்கள் பிள்ளை சில நாட்களுக்கு ஒபிஓயிட் மருந்துகள் உட்கொண்டால், அவனுக்கு மலம் கழித்தலில் கஷ்டம் இருப்பதை உணருவான். இது மலச்சிக்கல் என்றழைக்கப்படும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக,உங்கள் பிள்ளைக்கு தண்ணீர், ஜூஸ், மற்றும் பால் போன்ற நீராகாரங்களை அதிகளவில் கொடுக்கவும். பழங்கள் மற்றும் மரக்கறிகளை உண்பது, விசேஷமாக, அப்பிள், பியர்ஸ், ஓரேஞ், கரட், மற்றும் செலாரிக் கீரை போன்றவற்றைப் பச்சையாக உண்பதும் அதற்கு உதவு செய்யும். பெரும்பாலும் அதிகளவு நீராகாரங்கள் மற்றும் இந்த வகையான உணவுகள் உங்கள் பிள்ளை இலகுவாக மலங்கழிக்க உதவி செய்யலாம்.
சிலவேளைகளில்,உங்கள் அறுவை மருத்துவர் உங்கள் பிள்ளை இலகுவாக மலங்கழிக்கச்செய்ய உதவி செய்யக்கூடிய மருந்துகளை எழுதிக் கொடுக்கலாம்.
ஒபிஓயிட்டுகள் மற்றும் அசெட்டமினோஃபென்
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதற் சில நாட்களுக்கு, உங்கள் பிள்ளைக்கு நடுத்தர அளவிலான வலி இருந்தால், ஒபிஓயிட் மற்றும் அசெட்டமினோஃபென் இரண்டையுமே நீங்கள் அவனுக்குக் கொடுக்கலாம்.
நடுத்தர அளவிலான வலியுள்ள ஒரு சிறு பிள்ளைக்கு, நீங்கள் திரவ ஒபிஓயிட் மற்றும் திரவ அசெட்டமினோஃபெனைக் கொடுக்கலாம்.
வளர்ந்த பிள்ளைக்கு, நீங்கள் ஒபிஓயிட் மற்றும் அசெட்டமினோஃபென் இரண்டுமே சேர்ந்த ஒரு சேர்வைக் குளிகையைக் கொடுக்கலாம்.
வித்தியாசமான வலிகளுக்கு வித்தியாசமான மருந்துகள்
உங்கள் பிள்ளை எந்த வலி நிவாரண மருந்து உட்கொள்ளவேண்டும் என்பது அவனுக்கு எந்தளவுக்கு வலி இருக்கிறது என்பதில் தங்கியிருக்கவேண்டும். உதாரணமாக:
- வீரியம் குறைந்த வலி: அசெட்டமினோஃபென் மருந்து கொடுக்கவும். இது டைலெனோல், அல்லது டெம்ப்ரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒரே மருந்துகளுக்குள் ஒன்றை மாத்திரம் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
- நடுத்தரமான வலி: உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோஃபெனும் ஒபிஓயிடும் கொடுக்கவும்.
- வீரியமுள்ள வலி: மருத்துவமனையை அல்லது உங்கள் மருத்துவரை அழைக்கவும்.
வேறு வலி நிவாரண மருந்துகள்
தாதி, முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு வீட்டில் உபயோகிப்பதற்காக வேறு வலி நிவாரண மருந்துகளைத் தரலாம். உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் வேறு மருந்துகளை எழுதித் தந்தால், அவற்றை எப்படி மற்றும் எப்போது உட்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிக் கேளுங்கள். நீங்கள் வேறு மருந்துகளைத் தனியே உபயோகிக்கலாம் அல்லது அசெட்டமினோஃபென் மருந்துடன் சேர்த்து உபயோகிக்கலாம் என்பது பற்றி தாதி, முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.
இந்த மருந்துகள் உங்கள் பிள்ளைக்கு உதவிசெய்யாவிட்டால், முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, மருத்துவர், அல்லது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பவும், அல்லது நீங்கள் மருத்துவமனையை விட்டுச் சொல்வதற்கு முன்னால் உங்களுக்கு உதவி செய்யும்படி, உங்கள் தாதி அல்லது முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதியிடம் உங்களுக்கு உதவி செய்யும்படி கேட்கவும்.
எனது பிள்ளைக்கான வலி நிவாரண மருந்து பின்வருமாறு:
வலிமருந்தின் பெயர்:
எவ்வளவு கொடுக்கவேண்டும்(வேளை அளவு):
எவ்வளவு அடிக்கடிக் கொடுக்கவேண்டும்:
வலிமருந்தின் பெயர்:
எவ்வளவு கொடுக்கவேண்டும்(வேளை அளவு):
எவ்வளவு அடிக்கடிக் கொடுக்கவேண்டும்:
வலிமருந்தின் பெயர்:
எவ்வளவு கொடுக்கவேண்டும்(வேளை அளவு):
எவ்வளவு அடிக்கடிக் கொடுக்கவேண்டும்:
உங்கள் பிள்ளையின் பாதுகாப்பு மற்றும் வலி நிவாரண மருந்து
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதற் சில நாட்களுக்கு, உங்கள் பிள்ளையின் வலியைக் குறைப்பதற்கு வலி நிவாரண மருந்து உபயோகிப்பது ஒரு பாதுகாப்பான வழியாகும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதற் சில நாட்களுக்கு, உங்கள் பிள்ளை வலியை உணராமல் இருப்பதற்கு மேலும் மேலுமாக அவனுக்கு மருந்து கொடுப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. உங்கள் பிள்ளையின் வலி மறைந்தபின்னரும் அவனுக்கு மருந்துகள் தேவைப்பட்டால் அதில் எந்த ஆபத்தும் இல்லை. பெரும்பாலான பிள்ளைகளுக்கு, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதற் சில நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்துக்குக்கூட வலி நிவாரண மருந்து தேவைப்படும்.
சில நாட்களில், உங்கள் பிள்ளைக்கு வலி குறையும்போது, வீரியம் குறைந்த வலிக்காக அவனுக்கு வழக்கமான அசெட்டமினோஃபென் மருந்து மாத்திரம் கொடுக்கவும்.
மருந்தில்லாமல் வலியைக் குறைத்தல்
அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் போலவே உங்கள் பிள்ளையை அவனுக்கேற்ற சிறந்தமுறையில் ஆறுதல் படுத்தவும். அவனைக் கட்டிப்பிடித்து, அரவணைத்து, தாலாட்டி, அல்லது அரவணைத்துக் கொள்ளவும். ஒரு வளர்ந்த பிள்ளை அவன் முதுகைத் தடவிக் கொடுக்கலாம், அல்லது இசையைக் கேட்க அல்லது சுவாசித்தல் மற்றும் ஊதும் பயிற்சியைச் செய்ய உற்சாகப் படுத்தலாம்.
வலியைக் குறைக்கும் கவனச் சிதறல்கள்
உங்கள் பிள்ளையின் கவனத்தை அவனது வலியிலிருந்து திசை திருப்பிவிடவும். சில பிள்ளைகள் பின்வருவனவற்றால் கவனத்தை திசை திருப்பிவிடுவார்கள்:
- தொலைக்காட்சி பார்த்தல், வீடியோ, டிவிடிக்கள் அல்லது கணனி விளையாட்டுகள்
- கதை சொல்லுதல்
- குமிழ்கள் ஊதுதல்
- உங்களுடன் விளையாடுதல்
- அவர்களுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுப் பொருளுடன் விளையாடுதல்
உங்கள் பிள்ளை எப்படி உணருகிறான் என்பதைக் கண்டுபிடித்தல்
உங்கள் பிள்ளையின் வலியைக் குறைப்பதற்கு நீங்கள் உதவி செய்தபின்னர், முன்பிருந்ததைவிட வலி உண்மையிலேயே குறைந்திருக்கிறதா எனச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
அதை நீங்கள் பின்வருமாறு சோதித்துப்பார்க்கலாம்
- உங்கள் பிள்ளைக்கு வலி நிவாரண மருந்து கொடுத்து 1 மணி நேரத்தின் பின்னர் அவனுக்கு எவ்வளவு வலி இருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்கவும்.
- 0 முதல் 10 வரையுள்ள அளவுகோலில் வலி எப்படி இருக்கிறது என்பதை, அல்லது "சிறிதளவு வலி, அதிகளவு வலி" இருக்கிறதா என்பதை அல்லது அவனது நடவடிக்கைகளை கவனமாக அவதானிக்கவும்.
- உங்கள் பிள்ளைக்கு இன்னமும் வலி இருந்தால், உங்கள் மருத்துவரை அழைக்கவும் அல்லது நீங்கள் சரியான அளவு மருந்து கொடுக்கிறீர்களா என்பதைச் சரிபார்ப்பதற்காக உங்கள் பிள்ளை இருந்த சிகிச்சைப் பிரிவை அழைக்கவும்.
- உங்கள் பிள்ளையின் வலிக்கு, தாதி, முதிர்ச்சியடைந்த பயிற்சிசெய்யும் தாதி, அல்லது மருத்துவரிடம் சிறிது வீரியம் கூடிய மருந்து கொடுக்கும்படி கேட்கவும்.
- உங்கள் பிள்ளையைத் தேற்றி அவனது கவனத்தை வலியிலிருந்து திசை திருப்ப முயற்சிக்கவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
வலி நிவாரண மருந்து மற்றும் தேற்றுதல் உங்கள் பிள்ளையின் வலியைக் குறைக்காவிட்டால், அல்லது உங்கள் பிள்ளையின் வலி மோசமாகிக்கொண்டே போனால், உங்கள் மருத்துவரின் அலுவலகத்தை அழைக்கவும்.
உங்கள் மருத்துவரின் பெயரைக் கீழே எழுதவும்:
உங்கள் மருத்துவரின் தொலைபேசி இலக்கத்தைக் கீழே எழுதவும்: