இளம் சிவப்புக் கண் நோய் (விழிவெண்படல அழற்சி)

Pink eye (conjunctivitis) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகள் கக்குவான் இருமல் என்பது அதீத இருமல் வலியை ஏற்படுத்தும் பக்டீரியல் சுவாச சம்மந்தமான தொற்று. பிள்ளைகள் கக்குவான் இருமல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி படித்தறியுங்கள்.

இளம் சிவப்புக் கண் நோய் என்பது என்ன?

இளம் சிவப்புக் கண் நோய் என்பது கண்ணின் வெள்ளைப்பகுதியை(ஸ்க்ளீரா) மூடியிருக்கும்மெல்லிய சவ்வில் (கண்ஜங்டிவா) ஏற்படும் வீக்கம் ஆகும். இந்தச் சவ்வு இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும்.

இளம் சிவப்புக் கண்ணோய் பெரும்பாலும் வைரசினால் உண்டாகிறது. பக்டீரியா தொற்றியினால் அல்லது ஒரு ஒவ்வாமை செயல்ப்பாட்டினால் உண்டாகலாம்.

இளம் சிவப்புக் கண் நோய் கண்ஜங்டிவிற்றிஸ் என்றும் அழைக்கப்படலாம்.

இளம் சிவப்புக் கண் நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும்.

உங்கள் பிள்ளைக்கு பின்வரும் அடையாளங்கள் இருக்கலாம்:

  • கண் மற்றும் கண் இமையின் உட்பகுதி சிவந்திருத்தல்
  • இலேசாக கண்ணிமைகள் வீங்கியிருத்தல்
  • கண்களில் அரிப்பு
  • கண்களிலிருந்து தெளிவான அல்லது மஞ்சள்-பச்சை கலந்த நிறத்தில் நீர் வெளியேறுதல்

வைரல் இளம் சிவப்புக் கண் நோய் வழக்கமாக இரண்டு கண்களையும் பாதிக்கும். உங்கள் பிள்ளைக்கு வேறு தடிமல் அறிகுறிகளும் இருக்கலாம். உங்கள் பிள்ளை நித்திரையிலிருந்து எழுந்திருக்கும்போது அவனது கண்கள் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும். கண்ணிலிருந்து வெளியேறும் நீர் பெரும்பாலும் தெளிவானதாக இருக்கும்.

பக்டீரியாவினால் உண்டாகும் இளம் சிவப்புக் கண் நோய் பெரும்பாலும் முதலில் ஒரு கண்ணை மாத்திரம் பாதிக்கும். மஞ்சள் அல்லது பச்சை நிற நீர் வெளியேறுவதை நீங்கள் பார்க்கமுடியும். இந்த வெளியேறும் நீர் கண்ணிமைகளில் பொருக்கை ஏற்படுத்தும்.

உங்கள் பிள்ளைக்குச் சுற்றுச்சூழலிலுள்ள ஏதாவது பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும்போது, இளம் சிவப்புக் கண் நோய் ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்கு ராக்வீட் மகரந்தம், புல், மர மகரந்த தூள்கள் மற்றும் மிருகங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை இருக்கலாம். இது இரு கண்களையும் பாதிக்கும். கண்ணிலிருந்து நீர் வெளியேற்றம் சிறிதளவிலிருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு கண்களில் அரிப்பு மற்றும் கண்களிலிருந்து நீர் வெளியேற்றம் இருக்கலாம்.

தொடு வில்லை (கொன்டாக்ட் லென்ஸ்) அணியும் பதின்ம வயதினர் தொடு வில்லைகளை அகற்ற வேண்டும். ஒரு உடல்நல பராமரிப்பளிப்பவர் அல்லது கண் பராமரிப்பு நிபுணரை அணுகி, கண்களின் சிவப்பு நிறம் தொடுவில்லை அணிவதுடன் சம்பந்தப்பட்டதா என கண்டறியவேண்டும்.

உங்கள் பிள்ளையின் இளம் சிவப்புக் கண் நோய்க்கு எப்படி சிகிச்சையளிக்கலாம்

வைரஸ் இளம் சிவப்புக் கண் நோய் 1 முதல் 2 வாரங்களுக்கு நீடிக்கும். அதற்கு மருத்துவச் சிகிச்சை தேவையில்லை. அது தானாகவே நிவாரணமடைய வேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோடிக் கண் சொட்டு மருந்து அல்லது பூசு மருந்து கொடுப்பதன்மூலம் பக்டீரியா இளம் சிவப்புக் கண் நோய்க்குச் சிகிச்சை செய்யவும். சிகிச்சை தொடங்கிய 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் பெரும்பாலும் முன்னேற்றமடையும். வழக்கமாக பக்டீரியா இளம் சிவப்புக் கண் நோய்க்கு 5 முதல் 7 நாட்கள் வரை சிகிச்சை செய்யப்படும்.

உங்கள் பிள்ளையின் ஒவ்வாமை இளம் சிவப்புக் கண் நோய்க்கு, (வாய் மூலமாக) ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்து (ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து) அல்லது ஒவ்வாமை அறிகுறிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தைக் கொடுப்பதன் மூலம் சிகிச்சை செய்யவும். சிகிச்சை பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் கலந்து பேசவும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

நோய்க்கிருமி தொற்றுவதைத் தடைசெய்யுங்கள்

வைரஸ் மற்றும் பக்டீரியாவால் ஏற்படும் இளம் சிவப்புக் கண் நோய் மிகவும் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது. அவை பின்வரும் வழிகளில் இலகுவாகப் பரவும்:

  • தொற்றுநோயுள்ள கண்களைத் தொட்டபின்னர் உங்கள் கண்களைத் தொடுதல்
  • கண்களைத் தொட்ட கைகளைத் தொட்டபின்னர் உங்கள் கண்களைத் தொடுதல்
  • தலையணைகள், துவாய்கள், முகம் துடைக்கும் துணிகள், அழகு சாதனங்கள், அல்லது முக அலங்கரிப்பு பொருட்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம்

வைரஸ் மற்றும் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விழிவெண்படல அழற்சியுடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது முகம் அல்லது கண்களைத் தொட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக கைகளை சோப் மற்றும் தண்ணீரினால் நன்றாகக் கழுவவும். அல்க்கஹோல் சேர்ந்த ஹான்ட் ரப்பை உபயோகிக்கவும். ஹான்ட் ரப் கண்ணுக்குள் செல்வதைத் தவிர்க்கவும்.

கண்களை சுத்தப்படுத்துதல்

கண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் அல்லது ஒட்டுந்தன்மை சூடான அழுத்தத்தினால் துடைக்கப்படும்போது சில பிள்ளைகள் சற்று நிவாரணமடைந்ததைப் போல உணருகிறார்கள். ஒரு சுத்தமான, சூடான, உலர்ந்த துவாய் அல்லது முகம் துடைக்கும் துணியினால் மென்மையாகத் துடைத்து கண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் அல்லது பொருக்கை அகற்றவும். ஒவ்வொரு துடைப்புக்கும் சுத்தகமான அழுத்தும் பகுதியை உபயோகிக்கவும். துடைப்பானை உடனே அகற்றிவிடவும் அல்லது சலவைக்குப் போடவும். இதைச் செய்தவுடன் உங்கள் கைகளைக் கழுவவும்.

நீங்கள் சேலைன் அல்லது மற்ற வலி குறைக்கும் கண் சொட்டு மருந்துகளால் கூட கண்ணைக் கழுவி அரிப்பைக் குறைக்கலாம். உங்கள் மருந்தாளுநரிடம் (ஃபார்மசிஸ்ட்) ஆலோசனை கேட்கவும்.

இளம் சிவப்புக் கண்நோய் எரிச்சலூட்டுவதாயிருக்கலாம். ஆனால் வழக்கமாக வலியற்றதாயிருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு வலி தீர்க்கும் மருந்து தேவைப்படாது.

தொற்று நோய் பரவுவதைக் குறைத்தல்

வைரல் இளம் சிவப்புக் கண் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் வைரஸ் தடிமலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப்போலவே நோயை மற்றவர்களுக்குக் கடத்தக் கூடும். இந்த வைரஸ் இருமுதல் அல்லது தும்முதல் மூலமாகப் பரவும். வைரல் இளம் சிவப்புக் கண் நோய் 2 வாரங்கள் வரை நீடிக்கலாம். அந்தக் காலப்பகுதி முழுவதும் உங்கள் பிள்ளையைப் பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கோ அனுப்பாதிருக்கத் தேவையில்லை.

பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட இளம் சிவப்புக் கண் நோய் உள்ள பிள்ளைகள், கண் சொட்டு மருந்து அல்லது பூசு மருந்து இடத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குப் பின்பு பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கோ திரும்பலாம். உங்கள் பிள்ளையைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய காலப்பகுதியைப்பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் உங்கள் உடல் நல பராமரிப்பளிப்பவரிடம் கேட்கவும்.

மேற்குறிப்பிடப்பட்ட நல்ல சுகாதாரப் பயிற்சிகளைப் பின்பற்றுவதன் மூலம் தொற்று நோய் பரவுவதைக் குறைக்க உதவி செய்யவும்.

ஒவ்வாமை இளம் சிவப்புக் கண் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொற்றுநோயைப் பரப்புபவர்கள் அல்ல. உங்கள் பிள்ளை படசாலைக்கு அல்லது பகல் நேரப் பராமரிப்பு நிலையத்துக்குத் திரும்பலாம்.

எப்போது மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை பின்வரும் சந்தர்ப்பங்களில் அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளையில் இளம் சிவப்புக் கண் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால்
  • உங்கள் பிள்ளையில் அறிகுறிகள் 7 முதல் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால்

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளையின் கண்பார்வையில் ஏதாவது மாற்றம் இருந்தால்
  • கண் வலி
  • வெளிச்சத்துக்கு கூருணர்வு
  • கண்ணிமை வீக்கம் அதிகரித்தல்

சில வேளைகளில், கண் சிமிட்டுவதாலோ அல்லது கண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரைத் துடைத்து விடுவதனாலோ மங்கலான பார்வையை தெளிவாக்கப்படுவதை உங்கள் பிள்ளை அவதானிக்கக்கூடும். இளம் சிவப்புக் கண்ணோய், தொடர்ச்சியான மங்கலான பார்வை அல்லது கண் பார்வை குறைந்துகொண்டே போதல் என்பனவற்றோடு ஒரு போதும் தொடர்புடையதல்ல.

முக்கிய குறிப்புகள்

  • இளம் சிவப்புக் கண் நோய் பெரும்பாலும் சாதாரண தடிமலுடன் தொடர்புடைய வைரஸ்தொற்று நோயினால் உண்டாகிறது. பக்டீரியா தொற்று அல்லது ஒவ்வாமையினாலும் உண்டாகலாம்.
  • பக்டீரியாவினால் ஏற்பட்ட இளம் சிவப்புக் கண் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அன்டிபையோடிக் கண் சொட்டு மருந்து அல்லது பூசு மருந்தை எடுக்கவேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் சிவப்புக் கண்நோய்க்கு இந்த மருந்துகள் தேவையில்லை
  • வைரஸ் மற்றும் பக்டீரியாவினால் ஏற்பட்ட இளம் சிவப்புக் கண்நோய் தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. நல்ல கைகழுவும் பழக்கம் மற்றும் அல்ககோல் கொண்ட ஹான்ட் ரப்ஸ் உபயோகிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
  • இளம் சிவப்புக் கண் நோய், பிள்ளையின் கண்பார்வையில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தாது.
  • உங்கள் பிள்ளையின் கண் பார்வையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், தொடர்ந்து கண் சிவந்திருந்தால், கண் வலி, அல்லது கண்ணிமையில் வீக்கம் ஆகியவற்றின்போது மருத்துவ கவனிப்பை நாடவும்.
Last updated: 3月 05 2010