சப்பொஸிட்டோரி (மலவாய்ச் செருகு மருந்து) பற்றிய அறிவுரைகள்

Suppository instructions [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளைக்கு சப்பொஸிட்டோரி (மலவாய்ச் செருகு மருந்து) கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

    உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும்.

  1. கைகழுவுதல்

    சப்பொஸிட்டோரி மிகவும் மென்மையாக இருந்தால், மேலுறையை அகற்றுவதற்கு முன்னர், குளிர்ச்சாதனப்பெட்டியில் 30 நிமிடங்கள் வைத்து அல்லது குளிர்ந்த தண்ணீரை அதன்மீது பாயவிட்டுக் குளிர்ச்சியூட்டவும்.

  2. சப்பொஸிட்டோரியில் மேலுறை(மென்தகடு அல்லது பிளாஸ்டிக்) இருந்தால், அதனை அகற்றவும்.

  3. எறிந்துவிடக்கூடிய கையுறை அல்லது விரலுறையை நீங்கள் விரும்பினால் அணிந்து கொள்ளவும். இவை பெரும்பாலும் உங்கள் மருந்துக்கடையில் கிடைக்கும்.

  4. குழந்தை சரிந்து படுத்தபடி ஒரு காலை மேலே தூக்கி இருக்கும்போது குழந்தையின் மலவாசலினுள் செருகும் மருந்தை உட்செலுத்தல்

    உங்கள் பிள்ளையின் கீழ்க்கால் நேராகவும் மேற்கால் வயிற்றை நோக்கி மடிந்திருக்கும்படியும் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுக்கவைக்கவும். சப்பொஸிட்டோரியை உங்கள் விரலினால் மலவாசலினூடாக, உங்கள் பிள்ளையின் தொப்புளை இலக்காக நோக்கி உட்செலுத்தவும். சப்பொஸிட்டோரி மலவாசல் திறப்பினுள் 1/2 முதல் 1 அங்குலம் வரை உட்செலுத்தப்பட்டிருக்கவேண்டும். அது அதிக ஆளமாக உட்செலுத்தப்பட்டிருந்தால் வெளியே பாய்ந்து வந்துவிடும்.

  5. சப்பொஸிட்டோரி இலகுவாக நழுவி உள்ளே செல்லாவிட்டால், அதன் முனையை குளிர்ந்த நீரால் ஈராமாக்கி விடலாம் அல்லது கே-வை ஜெலி அல்லது மூக்கோ போன்ற உராய்வு நீக்கி உபயோகிக்கப்படலாம். உராய்வு நீக்கி "தண்ணீரில் கரையக்கூடியது" என்ற லேபிளைக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோலியம் ஜெலி (வசிலின்)யை உபயோகிக்கவேண்டாம். சரியான உராய்வு நீக்கியை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்கள் மருந்தாளரைக் கேட்கவும்.

  6. கைகளால் பிட்டங்களை ஒன்று சேர்த்துப் பராமரிப்பாளர் பிடித்திருக்கும்போது, குழந்தை சரிந்து படுத்தபடி ஒரு காலை மேலே தூக்கிவைத்திருத்தல்

    சப்பொஸிட்டோரியை உட்செலுத்திய பின்னர், உங்கள் பிள்ளையின் புட்டத்தை ஒரு சில செக்கன்டுகளுக்கு ஒன்றுசேர்த்து பிடித்துக் கொள்ளவும்.

  7. சப்பொஸிட்டோரி திரும்பி வெளியே வருவதைத் தடுப்பதற்காக, உங்கள் பிள்ளையை ஏறக்குறைய 15 நிமிடங்கள் வரை படுத்த நிலையில் வைத்திருக்கவும்.

  8. உபயோகித்த எல்லாப் பொருட்களையும் எறிந்து விடவும்.

  9. கைகழுவுதல்

    உங்கள் கைகளைக் கழுவவும்.

  10. ஒரு சப்பொஸிட்டோரியின் ஒரு பகுதியை (1/2, 1/4, போன்றவை) உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதானால் நீளவாக்கில்(ஒரு முனையிலிருந்து மறு முனை வரை) வெட்டவும். நடுப்பகுதியில் குறுக்காக வெட்டவேண்டாம். இதைச் செய்வதில் உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தால் உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

  11. சில சப்பொஸிட்டோரிகள் ஒரு குளிர்ச்சியான இடத்தில் அல்லது குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கப்படவேண்டும். தகுதியான சேமிப்புக்கான அறிவுரைகள் பற்றி உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

    எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

    உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

    • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
    • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
    • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

    பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது சப்பொஸிட்டோரி பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. சப்பொஸிட்டோரி பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: 3月 17 2010