வல்பிரோயிக் அமிலம், டைவல்ப்ரோயிக்ஸ் (Valproic Acid, Divalproex )

Valproic acid and derivatives [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளை உட்கொள்ளவேண்டும். வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுக

உங்கள் பிள்ளை வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளை உட்கொள்ளவேண்டும். வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகள் சில குறிப்பிட்ட வகையான வலிப்பு நோய்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் தடுக்கிறது. டைவல்ப்ரோயிக்ஸ் உடலில் வல்பிரோயிக் அமிலமாக மாற்றப்படுகிறது. கீழ்காணும் தகவல்கள் இரண்டு மருந்துகளுக்கும் பொருந்துகிறது.

இந்த மருந்து அதன் வர்த்தக சின்னப் பெயர்களான, டெபகெனி அல்லது எப்பிவல் என்பவைகளால் அழைக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.

எனது பிள்ளைக்கு இந்த மருந்தை நான் எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு, டொப்பிரமேட் மருந்தை ஒழுங்காக, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாக கொடுக்கவும். மருந்தை ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் கொடுப்பதன்மூலம் வேளைமருந்தைத் தவறவிடாதிருக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, இந்த மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள்.
  • உங்கள் பிள்ளையின் வயிற்றிலேற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்காக இந்த மருந்தை உணவு அல்லது சிற்றுண்டிகளுடன் சேர்த்துக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை வல்பிரோயிக் அமிலத்தை திரவ வடிவில் உட்கொள்வதாக இருந்தால், மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாய் (ஸ்சிரிஞ்) மூலமாகக் கொடுக்கவும். உங்கள் பிள்ளைக்கு இந்தத் திரவத்தின் சுவை பிடிக்காவிட்டால் வேறு நீராகாரங்களுடன் அல்லது உணவுடன் கலந்து கொடுக்கலாம்.
  • உங்கள் பிள்ளை மாத்திரை அல்லது கப்சியூல் வடிவத்தில் இந்த மருந்தை உட்கொள்வதாக இருந்தால் மருந்து முழுமையாக விழுங்கப்படவேண்டும். நசுக்க அல்லது மெல்லக்கூடாது.

எனது பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை இந்த மருந்தின் ஒருவேளை மருந்தைத் தவறவிட்டால்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
  • அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒரு சமயத்தில் ஒருவேளை மருந்தை மாத்திரம் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடர்ந்திருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

  • வயிற்றில் அசௌகரியம், வாந்தி
  • பசியின்மை
  • தோற்படை
  • தலைமுடி உதிருதல்
  • கைகள் மற்றும் முன்னங்கைகளில் நடுக்கம்
  • வழக்கத்துக்கு மாறாக எடை அதிகரித்தல் அல்லது குறைதல்

உங்கள் பிள்ளையில் பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும்:

  • வழக்கத்துக்குமாறான இரத்தக் கசிவு மற்றும் நசுக்குக் காயம்
  • இரட்டைக் காட்சி
  • சிறுநீர் கடுமையான நிறத்தில் அல்லது சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தல்
  • வலிப்பு நோய் அதிகரித்தல்
  • வழக்கத்துக்கு மாறான களைப்பு அல்லது பெலவீனம்
  • கடுமையான வயிற்றில் தசைப்பிடிப்பு

நான் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

இந்த மருந்து உங்கள் பிள்ளைக்கு மயக்கம் போன்ற உணர்வு, சோர்வு, அல்லது வழக்கத்துக்கு மாறாக விழிப்புணர்வுக் குறைவு என்பனவற்றை ஏற்படுத்தும். விசேஷமாக, அவன்(ள்) முதன் முதலில் மருந்தை உட்கொள்ளும்போது அவ்வாறிருக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை அவன(ள)து ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.

மருத்துவ மனை அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்காக வைக்கப்படும் எல்லா மருந்துவச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன்மூலம் இந்த மருந்துக்கான உங்கள் பிள்ளையின் பிரதிபலிப்புகளைப் பரிசோதிக்கமுடியும்.

பல் அறுவைச் சிகிச்சை அல்லது ஒரு அவசர நிலைச் சிகிச்சை உட்பட, உங்கள் பிள்ளைக்கு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக, உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்கிறான்(ள்) என்பதை மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடன் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத) மருந்துகள் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும். உதாரணமாக, இந்த மருந்துடன் சேர்த்து, அநேக தடிமல் அல்லது ஒவ்வாமைக்கான மருந்துகளை உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் அதிகரித்துள்ளன.

இந்த மருந்தை அறை வெப்பநிலையில் வைக்கவும். நேரடி சூரிய ஒளி படும் இடம் மற்றும் குளியலறை போன்ற ஈரலிப்பான இடங்களில் இந்த மருந்தை சேமித்து வைக்கவேண்டாம்.

நீங்கள் உபயோகிக்காத மருந்துகளை எறிந்துவிடவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் பார்வை மற்றும் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமாக ஏதாவது மருந்துகளை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. வல்பிரோயிக் அமிலம் மற்றும் டைவல்ப்ரோயிக்ஸ் என்ற மருந்துகளை பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: 10月 27 2009